Thursday, December 30, 2010

பதிவுலகில் பெண்பதிவர்களுக்கு பிரச்சினை பிரச்சினை பிரச்சினை!

பதிவுலகில் பெண்பதிவர்களுக்கு அந்தப்பிரச்சினை, இந்தப்பிரச்சினை என்று பேசுவது இந்தப் பெண் பதிவர்கள் பிரச்சினையை முற்றுப்புள்ளி வைத்து முடிக்க முடியாத ஒரு நிலைமையைத்தான் உருவாக்குது. என்னைப்பொறுத்தவரையில் இன்றைய நிலையில் பதிவுலகில் ஆணும் பெண்ணும் சமமாகத்தான் இருக்காங்க. பதிவுலகில் பெண் பதிவர்கள் பலர் மிகத்தரமாக எழுதுகிறார்கள், தங்களுக்கென்று ஒரு மிகச்சிறந்த இடத்தை பெற்றுள்ளார்கள். அதனால் ஆண்பதிவர்கள், பெண்பதிவர்கள் என்று தேவையில்லாமல் பிரித்து பேச வேண்டிய அவசியமே இல்லை!

பதிவுலகில் ஒரு சில சமயங்களில் பெண்கள் தாக்கப்படுவதை எல்லோரும் கவனித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கோம். ஏன் ஆண் பதிவர்களும்தான் தாக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு சூழலில் பாதிக்கப்பட்ட பதிவருக்கு பல பதிவர்கள் துணைநிற்கிறார்கள், தைரியம் கொடுக்கிறார்கள், தங்களால் ஆன உதவியை செய்கிறார்கள். தவறு செய்தவர்களை கண்டிக்கிறார்கள், வார்த்தைகளாலேயே, இல்லை பதிவுகளாலேயே தண்டிக்கிறார்கள். ஆனால், சில காலம் சென்ற பிறகு, அது நடந்து முடிந்த ஒண்ணுனு அதை விட்டுவிட்டு , மறந்துவிட்டு நாம் முன்னோக்கி நடக்க வேண்டும்! பல மாதங்களுக்குப் பிறகு நடந்து முடிந்த பல பிரச்சினைகளை கிளறிக்கிளறி எடுப்பது தவறு செய்து தன் தவற்றை உணர்ந்த சில ஆண்பதிவர்களை மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லிச் சொல்லி அவமானப்படுத்துவது போல எனக்குத் தோனுது.

தவறு செய்த பதிவர்கள், தண்டிக்கப்பட்டுவிட்டார்கள், இப்போ திருந்தி பழசை மறந்து மேலும் நல்லா எழுத முயலுகிறார்கள். அப்படி ஒரு சூழலில் திரும்பத் திரும்ப அவர்கள் செய்த தவறுகளை கிளறி எடுப்பது போல் அதைப்பற்றிப் பேசி அதை கிளறி எடுப்பதை முதலில் நாம் தவிர்ப்பது நல்லது. ஆண் பதிவர்களுக்கு எந்தவிதத்திலும் பெண் பதிவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதில் எதற்கு யாருக்கும் சந்தேகம் வருதுனு தெரியவில்லை.

என் பார்வையில் வம்பில்லாமல் தன் கருத்தைத் தரமாக நாகரிகமாக, தைரியமாக சொல்லும் பெண்பதிவர்கள் பலர், பதிவுலகில் ஆண்களைவிட சிறப்பான இடத்தில் இருக்காங்க. அவர்கள் தரம் புரிந்து அவர்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடும் பதிவர்களும், நாகரிகமாக, அர்த்தமாக, நட்பு குறையாமல் எதிர்கருத்தையும் வைக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல் எழுதும் பெண்பதிவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் தன் கருத்துக்களை நாகரிகமாகத் தெரிவித்து நாளுக்கு நாள் மேலே போய்க்கொண்டுதான் இருக்காங்க. அதை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.

எந்தப்பதிவருமே (ஆணென்ன பெண்னென்ன இதில்) வம்பில்லாமல் எழுதும்போது அவர்கள் எந்த ஒரு பிரச்சினையிலும் மாட்டுவதில்லை. அப்படியில்லாமல் கொஞ்சம் மற்றவரை சீண்டுவதுபோல், அவமானப்படுத்துவதுபோல் எழுதப்படும் ஆண்பதிவர்கள் பதிவுகளும், அந்தப் பதிவர்களும்தான் சில சமயம் தாக்கப்படுகிறார்கள். இதுபோல தாக்கப்படும் பதிவர்களில் ஆண்களும் உண்டு. ஆண் என்று யாருக்கும் ஸ்பெஷல் ப்ரிவிலேஜ் கொடுக்கப்படவில்லை!

என்னைக் கேட்டால் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இருந்துகொண்டு இணையத்தில், இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் வரவில்லை என்பதுபோல பேசும் பெண்ணியவாதிகள்தான், பெண்களை மேலே வளரவிடாமல் தடுப்பவர்கள்.

மேலும் இவர்கள் எழுதும் எழுத்தில் இருந்து ஆண்பதிவர்கள் தங்களுக்கு உதவனும் என்று வேண்டுகிறார்களா? இல்லை கட்டளையிடுகிறார்களா? இல்லை உதவுவதில்லைனு குறை கூறுகிறார்களா? என்பது அவர்கள் எழுதும் தொணியில் சரியாக விளங்கவில்லை!

சரி, Happy New Year to everyone! :)

Wednesday, December 29, 2010

மிஷ்கின் என்ன கொஞ்சம் லூசா?

நட்பு என்பது என்றுமே நிரந்தமானது இல்லை என்பதே என் கணிப்பு, என் நம்பிக்கை என் அனுபவம். இன்றைய நண்பன், நாளை எதிரியாகிறானோ இல்லையோ நண்பனா இருக்கனும்னு அவசியம் இல்லை! அதுக்காக நட்பாயிருந்தபோது ஒருவர் தன் நண்பரிடம் அவரை நம்பிச் சொன்ன அவருடைய குடும்ப, பர்சனல் மேட்டர்கள் மற்றும் வீக்னெஸையெல்லாம் நட்பு முறிந்த பிறகு, "பழைய நண்பனை" ப்பத்தி எல்லாத்தையும் ஊரறியச் சொல்லி அவமானப்படுத்துவது படு மட்டமான செயல். மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் அதை செய்யமாட்டான்!

மிஷ்கின், சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து, புத்தகத்தை பத்தி "சரோஜாதேவி புத்தகம்" போலனு சொன்னது என்ன மாதிரியான ஒரு செயல்னு எனக்கு மொதல்ல தெரியலை. போஸ்ட் மாடெர்ன் எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தை விமர்சிப்பவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா இருக்கலாம். அவங்க (மிஷ்கின்) பேசுறதெல்லாம் நமக்கெங்க புரியப்போதுனு விட்டுட்டேன். சாரு நிவேதிதா அதற்ககாக இப்போ மிஷ்கினை பழிக்குப் பழிவாங்குவதால்தான் அது ஒரு "insulting remark" என்று எனக்குத் தெரிகிறது. நான் என்னவோ எனக்கு புரியாத வினோதமான "பாராட்டோ" என்ன "எழவோ"னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். சீரியஸாத்தாங்க சொல்லுறேன்!

சரி, மிஷ்கின் என்ன ஒரு மாதிரியான எக்ஸெண்ட்ரிக்கா (eccentric) இல்லை லூசா? ஒரு மேடையில், அந்த எழுத்தாளர் இருக்கும்போதே இதுபோல எப்படி அவர் எழுதிய ஒரு புத்தகத்தை காமெண்ட் அடிக்கலாம்? புத்தகத்தைப்பத்தி இவர் வேறு எங்கேயாவது விமர்சித்தால்க்கூட பரவாயில்லை. புக் ரிவியூ எழுதும்போது சொன்னால்க்கூடப் பரவாயில்லை. இப்படி அதை வெளியிடம் இடத்தில், மேடையிலே போய் நாலு நல்ல வார்த்தை சொல்லாமல் எவனாவது ஒரு கேவலமான "காமெண்ட்" கொடுப்பார்களா? எனக்கு உண்மையிலேயே புரியலை. மிஷ்கின்க்கு எங்கே என்ன பேசுறது எப்படிப் பேசுறதுனே தெரியாதா? அப்படிப்பட்ட ஒரு ஆளை என்ன எழவுக்குப்பா இதுபோல மேடையில் ஏத்துறீங்க? இல்லை உங்களுக்கே அந்தாளு லூசுனு தெரியாதா?

இப்போ சாரு, மிஷ்கினை என்னதான் அதைச்சொல்லி இதைச் சொல்லி கேவலப்படுத்தினாலும், மிஷ்கின் சொன்ன அந்த காமெண்ட்டை சாரு ஒருபோதிலும் அழிக்கவே முடியாது. "என்னை அவமானப்படுத்திட்டடா நீ! நான் உன்னை எவ்வளவு அவமானப்படுத்துறேன் பாரு! "னு இவர் செய்றவேலை சிறுபிள்ளைத்தனம்னு சொல்வதைவிட ஒரு மஹா மட்டமான ஒரு செயல்னு சொல்லனும்!

சாரு, ஒருவனுடைய தவறுகளை மன்னிக்கக் கத்துக்கிட்டா நல்லது. பழிக்குப் பழி வாங்குவதால் அவரை அவரே இன்னும் கொஞ்சம் இறக்கிக்கொள்வது போல தான்.

ஆமா, இதைக்கேக்க மறந்துட்டேன், ஒரு வேளை மிஷ்கின் குடிபோதையில் நிதானமில்லாமல் இதுமாதிரி எதுவும் உளறிவிட்டாரா? அப்படித்தான் என்றால், போதையில் உளறியதையெல்லாம் சாரு எதுக்கு சீரியஸா எடுத்துக்கிட்டு..

ஆக மொத்தத்தில் கேவலமா இருக்கு சாரு செய்கிற இந்த செயலும். ஆமா சாரு இப்போ என்னத்தை செஞ்சிட்டாருனு கேக்கனுமே? . இந்த தொடுப்பைப் பாருங்கப்பூ!

Tuesday, December 28, 2010

சாருவைப் போல கமலும் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்!

சாருவின் மன்மதன் அம்பு விமர்சனம் எப்படி இருக்குமோ? என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஆமாம், சமீபத்தில் என் கணிப்பின்படி சாரு ஒரு "unpredictable critic"தான்! எந்தப்படத்தை எப்படி விமர்சிப்பார் இவருனு இவருக்கே தெரியுமா என்னனு தெரியலை. ஆமா சாருவின் ரசிகர்களுக்காவது தெரியுமா?னு கேக்கிறீங்களா? தெரியாட்டினாலும் தெரிஞ்ச மாதிரி நடிக்கத் தெரியும்!

சாரு ஒரு ஆத்திகவாதி என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்பவர். மனிதக் கடவுள்களையே வணங்கும் அளவுக்கு ஒரு Believer! நம்ம கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதி என்று தெரிந்து இருந்தாலும் , கமலஹாசன் என்கிற கலைஞனை என்றுமே சாரு மட்டம் தட்டியதில்லை.

ஆனால் இன்னைக்கு என்னடானா இந்துமதவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி, கமலை இறக்குகிறார், கண்டிக்கிறார். என்ன ஆச்சு இவருக்கு?

சாரு, எப்படிப்பட்டவர் என்று பார்பப்தைவிட, அவர் விமர்சனத்தில் என்ன சொல்கிறார்,
(இங்கே க்ளிக் செய்யவும்) அதில் உண்மை இருக்கானு பார்ப்போம்.

இன்னொரு வரி: ’காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட நின்றவன் உதவிட வேண்டும்’ இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெண் கடவுளை நோக்கி “சம்போகத்துக்குப் பிறகு உன் கணவர் உன் அந்தரங்க உறுப்பைக் கழுவி விடுகிறாரா?” இதே கேள்வியை கமல் மற்ற மதத்தின் கடவுள்களை நோக்கிக் கேட்பாரா? கடவுளை இழிவு படுத்தினால் கடவுளுக்கு ஒன்றும் நட்டமில்லை; ஆனால் அந்தக் கடவுளை வணங்கும் கோடானுகோடி மக்களை இழிவு செய்ததாகாதா? நாத்திக வாதம் என்பது மனித குலத்தின் மீதான அதீத அன்பினால் பிறப்பதே தவிர மனிதர்களை இழிவு படுத்துவதல்ல; பெரியார் செய்தார் என்றால் அவர் மனித இனத்தின் மீதான அன்பினால் செய்தார். மனிதர்களை இழிவு படுத்துவதற்காக அதைச் செய்யவில்லை. கமலோ மனிதர்களையும் மனித நம்பிக்கைகளையும் இழிவு படுத்துகிறார். மிகவும் கண்டிக்கத்தக்க செயல் இது.


திரு. சாரு நிவேதிதா புரிந்து கொள்ளவேண்டியது என்னனா..

கமல், செய்யும் இந்தச்செயலுக்குக் காரணம் (அதான்.. இந்து மதக்கடவுள்களை விமர்சிப்பது), தான் பிறந்த மதம் இந்துமதம், அதில் உள்ள குறைகளை விமர்சிக்க தனக்கு அதிக உரிமை இருக்கிறது, என்கிற எண்ணத்தில்தான் இப்படி விமர்சிக்கிறார். அதுவும் கமல் இந்து மதக்கடவுள்களை தாக்கி கவிதை எழுதும்போது அவர் மனதில் கொள்ளுவது இந்துமத வெறிபிடித்து அலையும் இந்து மதவாதிகளேயொழிய, அவர் சாடுவது ஒரு சாதாரண இந்துவையோ அவர்கள் நம்பிக்கையையோ அல்ல.

சினிமா என்கிற வியாபாரத்தில் கமல்ஹாசன் இந்த முட்டாள்த்தனத்தை இனிமேல் தவிர்க்கனும்...

நான் முன்பே சொன்னதுபோல கமலஹாசன் இந்துமதவாதிகளையும் இந்துத்தவாக்களையும் தாக்குவது, மெஜாரிட்டியான இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வது போல் முடியுது.. அதனால கமல் தலையில் அவரே மண் அள்ளிப்போட்டுக்கொள்வது போல ஆயிடுது. ஒரு வியாபாரி என்றுமே தன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை (மூட நம்பிக்கையையும்தான்) கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அவனைப் புறக்கணித்தால் அவன் பொழைப்பு அவ்வளவுதான். அதனால் நாதிகவாதி கமல்ஹாசனை தண்டிக்கவோ கண்டிக்கவோ வேண்டியதில்லை! கமல், தலையில் அவரே மண்ணள்ளிப்போட்டுக்கிறார்னு பரிதாப்படனும்.

ஏன் என்று தெரிய்லை மன்மதன் அம்பு பதிவுலகில் பல விமர்சகர்களிடம் (கமல் அபிமானிகளிடம் கூட) பயங்கர அடி வாங்கியுள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் அடி வாங்குவதால் காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான் இப்போ ஆயிடுச்சு என்றாலும், கமலுக்கு தானே அதிமேதாவித்தனம் செய்து இப்படி நம்ம படத்தை ஒப்பேத்திவிட்டோமா என்கிற எண்ணம் வரவே வராமலே போகலாம். அவரோட டைப் அப்படி!

சாருவைப்போல கமல் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்..


கமல் இந்தக்கவிதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் அது வேற விசயம். வெளியிட்டுவிட்டாரா? இல்லையா? இல்லைனா சாருவைப்போல ஒரு தளம் ஆரம்பித்து தன் கவிதைகளை வெளியிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் கமல் ஒரு பிரபலப் பதிவராகி இருப்பார் இன்னேரம்! அதை விட்டுப்புட்டு, இதுபோல் கவிதைகளை சினிமாவில் கலந்து இந்துக்களிடம் விற்க முயல்கிறார். அதுதான் கமல் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை அவர் தொடர்ந்து செய்யாமல் இருக்கனும்.

சமீபத்தில் கமல்ஹாசன் உ போ ஒ படத்தால் (இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல காட்டி) இஸ்லாமியர்களிடம் கெட்ட பெயர் வாங்கினார். எனக்குத் தெரிய ஒரு இஸ்லாமிய நண்பர், பெரிய கமலஹாசன் விசிறியா இருந்தவர், உ போ ஒ அப்புறம் கமலைப் பார்க்கும் விதமே மாறிவிட்டது. இப்போ அடுத்த படத்தில் இந்துமதக்கடவுளையும் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி பல இந்துக்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளார். அதனால மொத்தத்திலே இஸ்லாமியர்களோட சேர்ந்து இந்துக்களும் இவரை வெறுக்கும் அளவுக்கு வந்து நிக்கிது.

தயாரிப்பாளர்களே! தயவு செய்து உலக நாயகன் கமலை காப்பாத்துங்க...

அடுத்து கமலை வச்சு படம் எடுக்கிறவர்கள்தான் கமலையும் அவர் படத்தையும் காப்பாத்தனும்! எப்படினா...மொதல்ல படம் ஆரம்பிக்கும் முன்னாலேயே, இதுமாதிரி தேவையில்லாத மத சமமந்தமான வம்பை எல்லாம் கமல் விலைக்கு வாங்கக்கூடாது! அதையெல்லாம் (அவர் பகுத்தறியிற மேட்டரையெல்லாம்) கமல் அவர் வீட்டோட வச்சுட்டு வரனும் (ரிலிஜன் பர்சனல்னு இவர்தானே ஊருக்கு உபதேசம் செய்கிறார்?) னு கமலிடம் ஒரு அக்ரீமெண்ட் போட்டாத்தான் இவரை காப்பாத்த முடியும் போல இருக்கு! செய்வார்களா?

Monday, December 27, 2010

சன் டி வி யின் ஈனப்பொழைப்பு!

தொழிலதிபர் கலாநிதி மாறன் என்பவர்தான் பெரிய மேதைனு சொல்றானுக. என்ன் படிச்சு மேதையானார்னு தெரியலை இவரு! "தொழில் தர்மம்" "ப்ரஃபெஷனலிசம்" னா என்னனே தெரியாத ஒரு தொழிலதிபர் இவருனு எனக்கு இப்போத்தான் தெரியுது!!

சன் குழுமத்தை ஏன்ப்பா இப்படி ஆளாளுக்கு திட்டுறானுக? ஒரு தமிழன் தமிழ் மீடியாவை தன் கையில் வைத்து டாமினேட் செய்வதில் என்ன பெரிய தப்பு? என்றெல்லாம் நான் நினைப்பதுண்டு.

ஆனால் சும்மா ஏன் திட்டுறானுக நம்ம ஆட்கள்?னு நேத்துத்தான் புரிந்தது இந்த மரமண்டைக்கு!

நேற்று சன் டி வியில் 40 ஆண்டுகள் டைரக்டர்கள் விழாவின் ஒளிபரப்பின்போதுதான் விளங்கியது, சன் டி வி எவ்வளவு கேவலமான ஈனப்பொழைப்பு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்று!

பாலசந்தர்- ரஜினி பேட்டி இதில் இடம்பெற்றதாக சொன்னார்கள். அதேபோல் அதை ஒளி பரப்பப்போவதுபோல், "அடுத்து வருவது" என்று பாலச்சந்தர்- ரஜினி பேட்டியில் உள்ள ஒரு கேள்விகளை இரண்டு நாட்கள் 8 மணி நேரம் போட்டு போட்டு எழவைக்கூட்டி விட்டு, கடைசியில் அதை காட்டாமலே முடித்துவிட்டார்கள் இந்த 40 ஆண்டுகள் டைரக்டர் விழா ஒளிபரப்பை!

அதை ஒளிபரப்பப் போவதில்லைனா, என்ன மயிறுக்கு அதை போட்டுப் போட்டுக்காட்டிக்கிட்டு இருக்கார்கள்?

தொழில் அதிபர் கலாநிதிமாறன் இதுபோல் பொய் ஒளிபரப்பு செய்து பொழைப்பு நடத்துவதுக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாம்! இதெல்லாம் ஒரு பொழைப்பு! கேவலமாயில்லை?!

எனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1

தோழர் பாலா இந்த தொடரை எழுதச்சொல்லிக்கேட்டு ரொம்ப நாளாச்சு. எழுதலாம் எழுதலாம்னு காலம் கடந்து போயிடுச்சு. நான் வள வளனு எழுதாமல் எந்த ரஜினி படமெல்லாம் பிடிக்கும்னு சொல்லிடலாம்னு எழுத ஆரம்பிக்கிறேன்.

பொதுவாக சினிமா பற்றி கரைத்துக்குடித்த, உலக சினிமா பத்தி பத்தி பேசும் மேதாவிகளுக்குப் பிடிக்காத படங்கள் எல்லாம் எனக்குப்பிடிக்கும். தரமே இல்லாத இயக்குனர்கள்னு இவர்கள் சொல்லும் இயக்குனர்கள் வாசு, சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்றவர்கள் இயக்கிய ரஜினி படங்கள் என்னை நெறையவே கவர்ந்ததுண்டு. பிடிக்கிறதை பிடிக்கும்னு சொல்வது என்னுடைய இஷ்டம், என் உரிமை, யார் என்னை கேக்கமுடியும்?

இதெல்லாம் ஒரு படமா? இதுல பிடிக்க என்ன இருக்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கூறி அதை என்னால் நியாப்படுத்த முடியாது. எனக்கு நீல நிறம்ம் பிடிக்கும்னா, ஏன் னு கேட்டால் என்ன சொல்றது?

* 10. எந்திரன்

150 கோடி செலவழிச்சு எடுத்த பிரமாண்டமான படம். பயங்கரமான ஹைப்! இருந்தும் இந்தப்படம் என்னை ஏமாற்றவில்லை, அதுவே இதன் பிரதான வெற்றி.

பொதுவா பெரிய பட்ஜெட்னு வரும்போது எளிதாக சொதப்பிவிடுவதுதான் வழக்கம். ஆனா நம்ம ஷங்கர் இன்னொரு முறை வெற்றிவாகை சூடிட்டார்! என்னைக்கேடால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பதிலா ஏ ஆர் ரகுமானுக்கு எந்திரன் இசைக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கனும் .

அப்புறம் நம்ம ஐஸ்..யப்பா! நடிகைகளை ரசிப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காத மேட்டர். நெஜம்மாதாங்க. ஆனா 37 வயசான நம்ம ஐஸை ரசிக்காம இருக்க முடியலை. நம்ம ஐஸை ராவணனில் பார்க்கும்போது ஏதோ வடக்கத்திக்காரி மாதிரி தெரிஞ்சது, ஓவெர் ஆக்ஷன்..சுத்தமாப் பிடிக்கலை. ஆனா எந்திரனில் நம்ம ரஜினியோட பார்க்கும்போது, நம்ம ஊர் மாமி மாதிரி ஐஸும் அழகாயிடுச்சு. ஐசுக்கு குரல் கொடுத்தவங்களுக்குத்தான் க்ரிடிட்ல பாதியைக் கொடுக்கனும்.

ரஜினினு எடுத்துக்கிட்டா எந்திரன்ல சிட்டி 1 தான் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர், அடுத்து நம்ம சனா, பாடல்கள் கேட்கவும் பார்க்கவும், கொஞ்சம் தத்துவம்.

சிட்டி-2 மாதிரி ரஜினியை ஏற்கனவே பார்த்தாச்சு 3 முகம், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஜான் கேரக்டர்ஸ். ஆனால் சிட்டி-1 கேரக்டர் ஒரு புதிய மனிதன் பூமிக்கு வந்த கதை!

அப்புறம் எந்திரனில் கடைசியில் வரும் க்ராஃபிக்ஸ்லாம் நமக்கு பிடிக்கலைங்க.

* 9. சிவாஜி

ஷங்கர் நிச்சயமா ஒரு ரஜினி ரசிகரா இருந்து இருக்கனும் நான் நம்புறேன். இல்லைனா சிவாஜில உருவாக்கிய ஒரு ரஜினியை அவர் உருவாக்கியிருக்க முடியாது. சிவாஜில பிடிச்சதுனு சொல்லப்போனால் நம்ம மொட்டைபாஸு ரஜினிதான் பெஸ்ட்டு! அப்புறம் விவேக் ரஜினி காமெடி, ஸ்ரேயா ரஜினி ஜோடிப்பொருத்தம், பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும். ரஜினி பொதுவாக டூயட்ல ரொம்ப ஷையாத்தான், ஜெண்டிலாத்தான் நடிப்பார், நம்ம ஷங்கர் என்ன மாயம் பண்ணீனாருனு தெரியலை ரஜினி காதல் சக்கரவர்த்தி மாதிரி கிளப்பிட்டாரு, டூயட் மற்றும் காதல் சீன்களில். பிடிக்காததுனு பார்த்தா அந்த கனல் கண்ணனோட ஒரு ஃபைட், அப்புறம் அந்த கார்ச்சேசிங். சிவாஜி, காலத்தால் அழியாத ஒரு காவியம்தான். படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச ச்க்கண்ட் பெஸ்ட்னு கேட்டால், அந்த முதலிரவு சீன்ல ரஜினி, சிவாஜியா, எம் ஜியாரா, கமலா கடைசியில் சூப்பர் ஸ்டாரா கிளப்புவது.


* 8. படையப்பா

கே எஸ் ரவிக்குமார் ரஜினியோட வேலை செய்யும்போது மட்டும், எப்படி இவ்ளோ திறமையானவரா மாறிவிடுகிறார்னு தெரியலை. படையப்பால பெரிய ப்ளஸ் என்னனா ஒரு மாதிரியான ஒரிஜினல் ஸ்டோரி.

படத்தில் ரொம்ப பிடிச்சது, கிக்கு ஏறுதே பாடல் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள். அப்புறம் சிவாஜி- ரஜினி காட்சிகள்.

பிடிக்காதது என்னனா, சுத்தி சுத்தி வந்தீக பாட்டு படமாக்கியவிதம் பிடிக்கலை. படையப்பா நிச்சயம ஒரு சிறப்பான படம்தான்.

young ரஜினியைவிட வயதான தாடிவச்ச ரஜினிதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரஜினி :)

* 7. பாஷா

பாஷால எனக்கு முதல் பாதிதான் (மாணிக்கம்) சூப்பரா இருந்துச்சு. அப்புறம் மறுபடியும் ஜெயில்ல இருந்து ரகுவரன் வந்த பிறகு மறுபடியும் நல்லாயிருந்துச்சு. பாஷா ரஜினி சுமாராத்தான் பிடிச்சது எனக்கு.

ரொம்பப் பிடிச்ச சீன்னா, அந்த காலேஜ் பிரின்ஸிபல்ட்ட பேசி சீட் வாங்கிற சீன் (ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி), அப்புறம் ஆனந்த் ராஜ்ட்ட அடி வாங்குறது, திருப்பிக் கொடுக்கிறது (உள்ளே போ! ஒரு ஹீரோட்ட என்ன வில்லத்தனம்!), ரெண்டாம் பாதியில், நக்மாவை மணவரையில் பாஷாவப் போயி, அழைத்து வருவது, அதைத்தொடர்ந்து தங்கமகன் பாடல் ஆரம்பம்.

எஸ் பி எம் ரஜினியை வைத்து பலபடங்களில் சாதித்ததை சுரேஷ் கிருஷ்ணா சில படங்களில் சாதித்துவிட்டார்.

பிடிக்காதது.. பாஷால பிடிக்காத சீன்னு எதுவும் பெருசா இல்லை.

மீதி அடுத்த பதிவில்.. இதென்ன வள வள னு போகும்போல இருக்கு :(

Saturday, December 25, 2010

தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!

தமிழன் என்று தலைகுனிய வேண்டிய சில சூழல்கள் இன்று இருந்தாலும், தமிழன் என்று நான் பெருமைப்படவும் பல விசயங்கள் நம்மிடம் இன்னும் இருக்கின்றன..

நான் ஒரு பெங்காளி அம்மாவிடம் பேசிக்கொண்டுயிருக்கும்போது தமிழர்கள் “உயிர்போன உடலை” எரிப்பதும் உண்டு, புதைப்பதும் உண்டு என்று சொன்னேன். உடனே, அந்தம்மா, “ஹிந்துக்களா?” என்றது அதிசயமாக. “ஆமாம் ஹிந்துக்களும் புதைப்பதுண்டு!” என்றேன். உடனே அந்தம்மா “பெங்காளிகளில் ஹிந்துக்களைப் புதைப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை” என்றது. “ஹிந்து முறைப்படி எரிப்பதுதானே நம்ம கலாச்சாரம்?” என்ற கேள்வியைத் தொடுத்தது. “தமிழர்களை ஹிந்துக்கள்னு ஒரு வட்டத்தில் கொண்டுவருவது கஷ்டம்” என்று சொல்லி முடித்தேன்.

“சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழியை ஒரு வாதத்தில் சொன்ன போது, என்னுடன் எதிர் வாதம் செய்த தமிழ் நண்பர், வாத எதிர் வாதத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அது “பல துளி பெரு வெள்ளம் நு வருவதுதான் சரிங்க” என்றார். “ஆமாங்க, இப்போத்தான் இந்தப் பழமொழி ரொம்ப அர்த்தமுள்ளதாக இருக்கு” என்றேன். விவாதம் என்கிற விதண்டாவதத்தில் கிடைக்கும் இலாபம் இதுபோல் இரண்டு தமிழர்கள் ஒரு சில உண்மைகளை உரையாடி தெளிவுபடுத்திக் கொள்வதுதான். விவாதத்தில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் அர்த்தமற்றது! ஒரு தமிழரிடம் இருந்து இன்னொரு தமிழர் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே முக்கியம்!

“அன்னை வேளாங்கன்னி” மற்றும், “ஏர்வாடி தர்ஹா” போன்ற கிறித்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு இடங்களுக்கு தமிழர்கள் (இந்துக்கள்) போய் வழிபடுவது, வேண்டுதல்கள் செய்வதெல்லாம் சர்வ சாதாரணமாகத்தான் இருந்தது, இன்னும் இருக்கிறது. தமிழன் என்னைக்குமே மதவெறி பிடித்து அலையவில்லை! எம்மதமும் சம்மதம் என்றுதான் வாழ்ந்துகொண்டு இருந்தான். ஆனால் சமீப காலமாகத்தான் “ராமர் கோயில்” “பாபர் மசூதி”னு பல பிரச்சினைகளை வட இந்தியர்களும், நம்ம ஊர்ல “எங்கே பிராமணன்”னு எழுதிக்கொண்டு தேடிக்கொண்டு திரியும் ஒரு சில விஷப் பார்ப்பணர்களும் உருவாக்கி தமிழர்களை மதவெறியர்களாக்கி ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

அந்தக் காலத்தில் “சங்கராபரணம்”, “ஷோலே” வேறு மொழிப் படங்கள் தமிழ் நாட்டில் சக்கப்போடு போட்டன. சிவாஜி, எம் ஜி ஆர் நடித்த படங்கள் எல்லாம் தமிழ் நாட்டில்தான் நல்ல வருமானம் கொடுத்தன. வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு பெருசா எதுவும் சாதிக்கவில்லை! ஆனால் இன்றைக்கு, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், அந்நியன், எந்திரன் போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு பலகோடி ரூபாய்களை ந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் ஈட்டுகிறது. முக்கியமாக எந்திரன் (ரோபோ) என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் 2010 ல் #1 படமாக வசூலில் சாதனை புரிந்து இருக்கு!

பி சுஷீலா. ஆர்க் என்கிற சைட்ல பி சுஷீலா பாடிய ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களுக்கு நம்ம மக்கள் பொறுமையாக பாடல்களைக்கேட்டு லிரிக்ஸை எழுதிக் பிரசுரிச்சு இருக்காங்க. இதேபோல் தெலுகு, கன்னடப் பாடல்களுக்கெல்லாம் ஆந்திர, கன்னட மக்கள் நம்மைப்போல் லிரிக்ஸ் எழுதி பிரசுரிக்கவில்லை! என்ன சினிமாப்பாட்டுத்தானே என்ற அலட்சியம் வேண்டாம். பல நல்ல தமிழ்க்கவிதைகளும் இந்தப்பாடல்களில் அடங்கும்.

நாம் தமிழர் என்று பெருமைப்படும் பல விசயங்கள் இன்னும் நம்மிடம் இருக்கத்தான் செய்யுது என்பது ஆறுதலளிக்கும் விசயம். அம்புட்டுத்தான்!

Friday, December 24, 2010

இன்றைய பதிவுலகில் வினவு, மாற்று, அடுத்து?

சமீபத்தில் பதிவுலகில்தான் எத்தனை மாற்றங்கள்! நெறைய பதிவுகள் எழுதும் "பெரிய" பதிவர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள். அதாவது தமிழ்மணம் போன்ற திரட்டிகளான பதிவுலகக் குடும்பத்தில் இருந்து பிரிந்து என் வலைதளமும் நானும் என்று தனிக்குடித்தனம் போய்விட்டார்கள் பல “பெரிய” பதிவர்கள்.

இன்னொரு அதிசயம் என்னனா புதிதாக வரும் பதிவர்கள் வெகு சீக்கிரமே பாப்புளர் ஆகிவிடுகிறார்கள! வலைதளம் ஆரம்பித்து இரண்டு-ஆறு மாதங்களில் எங்கேயே மேலே போயிடுறாங்க! இதெப்படி சாத்தியம்? ஒருவேளை இவர்கள் முன்பே வேறு பெயரில் இருந்த பதிவர்களா? பேரு மட்டும்தான் வேறயா, பதிவர் பழையவர்தானோ? என்கிற பல சந்தேகங்கள் எனக்கு வராமல் இல்லை!

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் தூக்கப்பட்டு, வாசகர் பரிந்துரைக்குமட்டும் பழக்கப்பட்டுப்போன ஒரு சூழலில் சூடான இடுகைகள் மறுபடியும் வந்துவிட்டன! இப்போது வாசகர் பரிந்துரை மற்றும் சூடான இடுகைகளுக்கு சம மதிப்பு உள்ளதுபோல இருக்கு! வாசகர் பரிந்துரைக்கு 10 பதிவர்கள் உதவி போதும் முகப்பில் தெரிய! சூடான இடுகைக்கு மேட்டர் சூடோ இல்லையோ தலைப்பு சூடா இருக்கனும்.

இதுபோக ஒரு பெரிய முன்னேற்றம் என்னனா தமிழில் டாப் 20 வலைபதிவுகள் என்ற தமிழ்மண மதிப்பீடு பல பதிவர்களை ரொம்பவே ஊக்குவிக்குது. இதை வாரா வாரம் மாற்றுவதால் பலருக்கும் இதில் இடம்பெற வாய்ப்புக் கிடைப்பது பெரிய விசயம். தமிழ்மணத்தின் இந்த ஒரு புதிய முயற்சி உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று. இந்த ரேட்டிங் தமிழ்மணத் திரட்டியை பயண்படுத்தும் பதிவர்களுக்கு மட்டுமே மற்றும் தமிழ்மணம் மூலமாக வாசகர்கள் பெறும் ஹிட்ஸை பொறுத்தே என்பது தெரிந்து இருந்தாலும், இது பதிவுகத்தையும், பதிவர்களையும் நெறைய தரமான எழுத்து எழுத ஊக்குவிக்குது. மேலும் தமிழ்மண திரட்டியின் தரத்தை ஒரு படி மேலே தூக்கி வைத்துள்ளது என்பதும் உண்மைதான்.

தனிநபராக எழுதி வந்த பதிவர்கள் பலர் ஒன்றுகூடி குழுமமாக எழுத ஆரம்பித்த முதல் வலைதளம் “வினவு”. வினவின் முன்னேற்றம் மற்றும் பெரிய ஆக்கிரமிப்பு பற்றி பலருக்கு வயிறெரிந்ததென்னவோ உண்மைதான். வினவு பதிவரசியலில் இறங்கி சில பதிவர்களை தாக்கியதால் அவர்களுக்கு பல நண்பர்களும் பல எதிரிகளும் உருவாகி நிற்கிறது இன்றைய நிலையில்.

இப்போது வினவு குழுமம் போலவே “மாற்று” என்று இன்னொரு குழுமம் உருவாகி உள்ளது. வினவுவுடைய வெற்றிப் பாதையில் இன்று மாற்று உருவாகியதுபோல இன்னும் வெகுவிரைவில் பல வலைதளங்கள் குழுமமாக இயங்கப்போவது என்னவோ உண்மைதான்.

இதுபோல் பலபதிவர்கள் ஒரே முகமூடிபோட்டு “வினவு” “மாற்று” என்று ஒரே பேரில் இயங்கும்போது, அதில் அவர்கள் தியாகமும் இருக்கு பல வசதிகளும் அவர்களுக்கு உண்டு! இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?

Thursday, December 23, 2010

டாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி

டாக்டர் ஷாலினி விகடனில் எழுதும் கட்டுரையை அவர் தளத்தில் நான் மேலோட்டமாக வாசிக்கிறேன். என்னால் இதை வாசிக்கவே முடியவில்லை..இதில் எனக்கு பெரிய பிரச்சினை என்னனா, அவர் சொல்லும்/எழுதும் விதம்...

"விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன."

"பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்."

இவர் எழுதற விதம், "பெண்கள் இப்படி இருந்து இருக்கலாம்", ஆணகள் இப்படி யோசித்து இருக்கலாம்" என்று இல்லாமல், ஒரு மாதிரியான தியரி அல்லது ஸ்பெக்குலேஷனை ஏன் இப்படி உறுதியாக நடந்ததுபோல வார்த்தைகள் போட்டு அதாவது "ஆரம்பித்தன" ஆரம்பித்தார்கள்" போன்ற வார்த்தைகள் போட்டு எழுதுறாருனு புரியலை.

இவர் எழுதுவது கதையல்ல! கட்டுரைதானே? நான் அந்தக் காலத்தில் வாழவில்லை, இவரும் வாழ்ந்திருக்கமாட்டார். வாழ்ந்தவர்கள் எழுதிய நாட்குறிப்பும் நம்மிடம் இல்லை என நம்புகிறேன். ஆக இவர் எழுதுவது ஒரு மாதிரியான தியரிதான். அவைகள் உண்மையாக இருக்கனும்னு அவசியம் இல்லையே?

இவர் எழுதுகிற எழுத்து நடை, ஏதோ இதையெல்லாம் இவர் கண்கூடாகப் பார்த்தது போல இருக்கு. எப்படி இவரால் இதுமாதிரி "கதை" சொல்ல இயலும்னு எனக்கு குழப்பம்!

I could not resist to make this response when I read that "ஆண்குறி சின்னங்கள்"

நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா? இல்லை என்னைப்போல் உணருகிறவர்கள் யாரும் இருக்காங்களா?

மன்மதன் அம்பு /பாணம்-விமர்சனங்கள்


கமல் எழுதி கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப்படத்துக்கு அதுக்குள்ளே ஆண்லைன்ல விமர்சனங்கள் நெறையவே வந்துவிட்டன.

sify: (இங்கே க்ளிக் செய்யவும்):

Excellent (நல்லாப் பாராட்டி எழுதி இருக்காங்க)

Behindwoods: (இங்கே க்ளிக் செய்யவும்):

Not a good review only 2.5 stars out of 5 (ஒரு நெகடிவ் விமர்சனம், கமலை இவர்களுக்கு பிடிக்காதுனு பொதுவா ஒரு குற்றச்சாட்டு உண்டு).

Rediff:
(இங்கே க்ளிக் செய்யவும்)

*** (3 ஸ்டார்கள்) கொடுத்து இருக்காங்க. இது நல்ல ரேட்டிங்தான்! ஆனால் விமர்சனம் பரவாயில்லாமல் தான் இருக்கு. 3 ஸ்டார்கள் கொடுத்து ஆஹா ஓஹோனு புகழக்கூட செய்யலாம்.

---------------------

தெலுங்கு விமர்சனம் (மன்மத பாணம்) ஒண்ணு வந்து இருக்கு!

Great andhra review:
(இங்கே க்ளிக் செய்யவும்)

இந்த விமர்சனம் மோசமா இருக்கு. இந்த க்ரேட் ஆந்திரா தளம் ஒண்ணும் பெரிய தரமான "தளம்" இல்லைதான்.

ஆக, இதுவரை வந்த விமர்சனங்கள் எதுவும் ரொம்ப மோசமாகவும் இல்லை, ஆஹா ஓஹோனு புகழவும் இல்லை. படம் எப்படி போகுதுனு அடுத்த வாரம் சொல்றேன்.

அப்புறம் கமல் படத்துக்கு எல்லாம் நான் விமர்சனம் எழுதுற தகுதியை இழப்பதால் அந்த ஏரியாவுக்குப் போவதில்லை. தள்ளி நின்று இதுபோல் வேடிக்கை பார்ப்பதுதான் என் வழக்கம்!

Wednesday, December 22, 2010

மறுபடியும் மதவாதிகளுக்கு வெற்றி!

"மன்மதன் அம்பு" படத்தில், கவிஞர் கமலஹாசன் எழுதி, பின்னணிப்பாடகர் கமலஹாசன் பாடிய, அந்தப்பாடலில் வரும் ஒரு சில வரிகளால், கமலஹாசன் இந்துமத நம்பிக்கையை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி, கடைசியில் அந்தப்பாடலை வெற்றிகரமாக கழட்டிவிட்டார்கள் மதவாதிகள்.

முதலில் செண்சார் போர்ட் இதைக் கண்டுக்கவில்லை என்றதும் "யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன், இந்தப்பாடல் இந்தப் படத்தில் இடம்பெறும்" என்றார் கமலஹாசன். கடைசியில் இவர்கள் அக்கப்போர் தாங்காமல், பணம் போட்டுப் படத்தை எடுத்த தயாரிப்பாளர் எதுக்கு வம்பு னு அந்த பாட்டை தூக்கிடலாம்னு செய்த முடிவை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டார், கமல்.

நம்ம நாட்டைப்பொறுத்தவரை இன்றுவரை மைனாரிட்டியான பகுத்தறிவுவாதிகளை, மைனாரிட்டியான மதவாதிகள் இதுபோலப் பிரச்சினைகளை உண்டாக்கி வீழ்த்துவது எளிது. கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் 80 விழுக்காடுகளுக்கு மேல் உள்ள இந்தியாவில் இந்து மதவாதிகள் சாதாரண இந்துக்களுக்கு ராமா, கிருஷ்ணா, மயிறு, மட்டைனு எதையாவது சொல்லி மதப்பற்றை உண்டாக்கி, பொதுமக்களைத் தூண்டிவிட்டு அவர்கள் காரியத்தை சாதிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.

சினிமா என்பது வியாபாரம்னா, ஒரு நடிகன் என்பவன் ஒரு வியாபாரிதான். அதனாலதானோ என்னவோ தன் பிள்ளை டாக்டராகனும், விஞ்ஞானியாகனும், இஞ்சினியராகனும் என்று ஆசைப்படுவனல்ல சினிமா கலைஞன். தன் மகள்/மகனை சினிமாத்துறையில் நடிகனாகவோ, நடிகையாகவோ, இயக்குனராகவோ ஆக்கி கோடி கோடியா சம்பாரிக்கனும்னு நினைப்பவன்ந்தான் முயல்பவந்தான் சினிமாவில் இருக்கும் கலைஞன் . இதில் புரட்சித் தமிழர் சத்யராஜிலிருந்து பகுத்தறிவுவாதி கமலஹாசன் வரை யாரும் விதிவிலக்கல்ல!

சினிமாக் கலைஞன் தன் தொழிலில் வெற்றியடையனும்னா அவனுக்கு பொதுமக்களான ஆத்திகர்களின் ஆதரவு இல்லாமல் முடியாது என்பதை திரும்பத் திரும்ப கற்றுக்கொண்டுதான் வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹிந்துக்கள்தான் வெகுஜன பொதுமக்கள்! அவர்கள் நம்பிக்கையை அனுசரித்துத்தான் சிவாஜி, எம் ஜி ஆர், ரஜினி, கமல் எல்லாருமே போனார்கள், போகிறார்கள். கலைக்கூலியாக வேலை செய்யும் சினிமா கலைஞன், தன் சொந்த கருத்தான பகுத்தறிவு கருத்துக்களை திரைப்படம் மூலமாக அவ்வளவு எளிதில் நம் மக்களிடம் விற்க முடியாது! அது எப்போது சாத்தியம் என்றால், நம் நாட்டில் பகுத்தறிவுவாதிகள் 70 விழுக்காடுகளுக்கு மேலே ஆகும்போது! அது என்னைக்கு நடக்கப் போகுதுனு எனக்குத் தெரியலை!

ஒரு படத்திற்கு "பூஜை போடனும்னு" தயாரிப்பாளர் நினைத்தால் பூஜை போடும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நடிகன் கலந்துகொண்டுதான் ஆகனும். இல்லை, நான் நாத்திகன் என்பதெல்லாம் அவர் தனிப்பட்ட விசயம். கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுப்பவர்கள் பொதுவாக இறை நம்பிக்கையுடன், சில மூடப்பழக்க வழக்கங்களுடந்தான் இருக்காங்க! அதுபோக படம் வெற்றியடையனும் என்பதற்காகவும், போட்ட காசை எடுக்கனும் என்பதற்காகவும் அவர்கள் சில வியாபார, மார்க்கட்டிங் யுக்தியை கடைபிடித்துத்தான் வருகிறார்கள்.

சினிமாவை விடுங்க! இப்போ எல்லாம் பதிவுலகில்கூட பகுத்தறிவுவாதிகளுக்கு பஞ்சமாகிக்கொண்டு வருகிறது. பதிவுலகில் எத்தனை பதிவர்கள் பகுத்தறிவை அள்ளி எறியிறாங்க, சொல்லுங்க? சமீபகாலமாக மதபோதனைகளையோ அல்லது கடவுள் எதிர்ப்பு கொள்கைகளையோ தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் போகக் கற்றுக்கொண்டார்கள் பதிவுலக வியாபாரிகள் பலர்! போங்கப்பா நாத்திகமாவது ஆத்திகமாவது எனக்கு பொழைப்பு ஓடினால் போதும்னு நினைக்கும் பதிவர்கள் பலர் இருக்காங்கனு சொன்னால், அது யாரு யாருனு கேக்காதீங்கப்பா!

Tuesday, December 21, 2010

காதலிப்பது எளிது- நெஜம்மாவே ஒரு உண்மைக்கதை!

அடுத்தவாரம் கணேஷுக்கும் ராஜிக்கும் திருமணம்!

"வனிதா! கல்யாணத்திற்கு உனக்கு மட்டும்தான் அழைப்பு! காமேஷ்க்கு இல்லை!" என்று தெளிவாக சொல்லிவிட்டாள் ராஜி. அவளால் தன் கல்யாணத்தில் காமேஷை பார்க்கும் தைரியம் இல்லை.

--------------

ராஜியின் தோழி வனிதா, இப்போது காமேஷுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால் இரண்டு வருடம் முன்புவரை, இதே காமேசும் ராஜியும் காதலர்கள்.

அடுத்த வாரம் ராஜி மணக்கப்போகும் கணேஷை, டேட் செய்யும் முன்னால் காமேஷும், ராஜியும் லிவிங் டுகெதரில் ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் . சும்மா சொல்லக்கூடாது ராஜிக்கு காமேஷின் காதலும் காமமும் இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் காமேஷ் அன்றுவரை அவளை மணந்துகொள்ள தயாராயில்லை. மேலும் காமேஷ்க்கு இன்னும் ஒரு நிரந்தர வேலை இல்லை. வேலையில்லை என்பதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலையும்யில்லை. ஆனால் நாளாக ஆக ராஜிக்கு காமேஷ் வாழ்நாள்பூராம் இப்படியே லிவிங் டுகெதரிலேயே வாழ்ந்துவிடுவான் போல என்கிற பயம் வர ஆரம்பித்தது.

ராஜி அப்பொழுதுதான் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்து இருந்தாள். ஹெல்த் இண்சூரன்ஸ் மற்றும் எல்லாவிதமான பெனிஃபிட்ஸும் கவர் ஆனது. ராஜிக்கு கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் காமேஷ், கல்யாணம் என்கிற விசயத்துக்கு ரெடி இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தாள். அதாவது காமேஷ் ஒரு "டிப்பெண்டபில்" பார்ட்னெர் இல்லைனு சந்தேகமே இல்லாமல் விளங்கியது. மற்றபடி காமேஷிடம் எந்தக்குறையும் இல்லை. உண்மையிலேயே இப்போது ராஜி மணக்கப்போகும் கணேஷுக்கும் ராஜிக்கும் நெறையவே டேஸ்ட் வித்தியாசம் உண்டு. ஆனால் கணேஷ் இஸ் ரெடி ஃபார் பிக் கம்மிட்மெண்ட்ஸ். அவனை நிச்சயம் நம்பலாம், ராஜியைவிட ரொம்ப மெச்சூராக நடந்துகொளவான்.

-----------

இரண்டு வருடம் முன்னால், காமேஷிடம் கடைசியாக ராஜி, "நம்ம திருமணம் எப்போது?" என்று கேட்டாள்.

"எனக்கு இன்னும் ஒரு நிலையான வேலை இல்லை ராஜி. ஹவ் கேன் ஐ?" என்றான் காமேஷ்.

"அப்போ நீங்க வெளியேறுறீங்களா இல்லை நான் வெளியேறவா? ஐ டோண்ட் வாண்ட் டு லிவ் வித் யு ஃபார் எவெர்! ஐ வாண்ட் டு கெட் மேரிட் அண்ட் ஹாவ் கிட்ஸ். ஐ லவ் யு பட் ஐ வாண்ட் யு டு மேரி மி! நீங்க அதுக்கு தயாரா இருப்பதுபோல தெரியலை" என்றாள் ராஜி முடிவாக.

"ஐ ஹாவ் டு கோ நவ்" என்று வேலைக்கு கிளம்பினான் காமேஷ். அவனுக்குக் கோபமே வராது.

அதன்பிறகு காமேஷ், இன்னொரு அப்பார்ட்மெண்ட் பார்த்து வெளியேறினான். ராஜிக்கு முதலில் பயங்கர கஷ்டமாக இருந்தது. பிரிந்தபிறகு ஏதாவது பில் பேமெண்ட் சம்மந்தமாக காமேஷ் கால் பண்ணினால் அவளுக்கு அழுகையே வந்துவிடும். ஷி ரியல்லி லவ்ட் ஹிம்! ஈவென் ஆஃப்டெர் "ப்ரேக் அப்" ஷி லவ்ட் ஹிம். ஈவன் டுடே ராஜி லவ்ஸ் ஹிம்!

---------------------------

காமேஷுடன் "ப்ரேக் அப்" க்கு பிறகுதான் கணேஷை சந்தித்தாள், ராஜி. கணேஷ் அப்போதுதான் அவன் முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தான். ராஜியும், கணேஷும் ஒரு வருடம் டேட் பண்ணினார்கள். பிறகு ராஜி, கணேஷ் வீட்டிற்கு ஷிப்ட் ஆனாள், தே லிவ்ட் டுகெதெர் ஃபார் ஒன் யியர். அடுத்த ஆறுமாதத்தில் கணேஷிடம் கல்யாணப்பேச்சை எடுத்தாள், ராஜி. கணேஷ், உடனே "சரி" என்றான்.

கணேஷுக்கு அவன் முதல் மனைவி வித்யாவுடன் குழந்தைகள் எதுவும் இல்லை. அவங்க டிவோர்ஸும் பிரச்சினை இல்லாமல் முடிந்தது. ஆனால் கணேஷுக்கு ஒரு மகள் இருந்தாள். கணேஷுடன் அவன் மகள் வாழவில்லை. யாருக்குப் பிறந்த மகள் அவள்?

கணேஷ் ஹை ஸ்கூலில் ஜூனியர் (11ம் வகுப்பு) படிக்கும்போது அவனுக்கு வத்சலா என்கிற செக்ஸியான ஒரு கேர்ல் ஃப்ரெண்டு இருந்தாள். வத்சலாவுடன் மிகவும் நெருங்கிப் பழகினான், கணேஷ். இருவரும் அடிக்கடி வரம்பு மீறியாதால் வத்சலா "ப்ரக்ணெண்ட்" ஆகிவிட்டாள். அப்போது அவளுக்கு வயது 16. கணேஷுக்கும் வயது 16 தான். இந்த விசயம் வெளியே வந்தது, கணேஷ் அம்மா கணேஷை தண்டிக்கும் வகையில் அவனிடம் 5 வருடம் பேசவே இல்லை. வத்சலா, கணேஷ் இருவரும் பள்ளி கவுண்சலரிடம் பேசினார்கள். அந்த குழந்தையை வத்சலாவும்க்கு "அபார்ஷன்" செய்ய இஷ்டமில்லை! அதே சமயத்தில் அந்த குழந்தையை "அடாப்ட்" செய்ய வெகு நாட்கள் குழந்தையில்லாத ஒரு தம்பதிகள் ரெடியாக இருந்ததால், குழந்தை பிறந்த உடனேயே "அடாப்ஷனுக்கு" வத்சலா-கணேஷ் குழந்தையைக் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு கணேஷுக்கு எதுவுமே தெரியாது. வத்சலாவை மறந்தே போய்விட்டான். கணேஷும் வத்சலாவும், அவர்கள் குழந்தையும் வேறு வேறு பாதையில் போய்விட்டார்கள். ஒருவருக்கொருவர் எந்தவிதமான சம்மந்தம்மோ தொடர்போ அதன் பிறகு இல்லை!

கணேஷ்க்கு ஒரு 3 மாதங்கள் முன்னால் ஒரு தெரியாத நபரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது . அடுத்த முனையில் ஒரு 17 வயது பெண் பேசினாள். அவள், தன் பெயர் அகதா என்றும், கணேஷ்தான் அவளுடைய பயாலஜிக்கல் அப்பா என்றும் சொன்னாள். "ஜஸ்ட் ஐ வாண்ட்டெட் டு ஸே ஹாய் டு யு அஸ் யு ஆர் மை பயாலஜிக்கல் ஃபாதர்" என்று முடித்துவிட்டாள் அந்தப் பெண். அவளிடம் பேசிமுடித்த கணேஷ் ஐந்து நிமிடங்கள் ஷாக் ஆகி இருந்தான். பிறகு அருகில் இருந்த ராஜிடம் எல்லாவற்றையும் சொன்னான். "கண்க்ராஜுலேஷன்ஸ்! யு ஆர் எ டாட் நவ்" என்றாள் ராஜி கிண்டலாக. அவளுக்கு கணேஷ் மூஞ்சியை பார்த்தால் சிரிப்பா வந்தது.

குறிப்பு: இது நெஜம்மாவே அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக்கதைதான். பேரையெல்லாம் தமிழ்ப் பெயராக மாற்றியுள்ளேன்.

Monday, December 20, 2010

இதெல்லாம் பெரிய அநியாயம்ங்க , மீனு அவர்களே!

வலையுலக மக்களே! எனக்கிழைக்கப்பட்டது நியாயமானு சொல்லுங்க! நான் ஒண்ணும் பெரிய எழுத்தாளன் எல்லாம் இல்லை! ஆனால் எதையாவது எழுதுவது பொழுதுபோக்கு!

அதுபோல் எழுதிய ஒரு கட்டுரைதான் கமலஹாசன் என்கிற வி்யாபாரி என்கிற நான் எழுதிய ஒரு சிறுகட்டுரை.

இந்தக்கட்டுரையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு இருக்கார், "மீனு" என்கிற இன்னொரு தமிழர். அதை இங்கே பார்க்கவும்!

ஆனால் இந்த மீனு என்பவர், என்னுடைய பேரையோ , இந்த ரிலாக்ஸ் ப்ளீஸ் தளத்தையோ, அல்லது இதற்கான ஒரிஜினல் தொடுப்பையோ கொடுக்கவே இல்லை! விவாதத்தில் இந்த கட்டுரையை யார் எழுதியது என்று கேட்கும் கேள்விக்குக்கூட இந்த "காப்பி-பேஸ்ட் மீனு வாயைத் திறக்கவில்லை! இதெல்லாம் என்னங்க அநியாயம்? இந்த அளவுக்குக்கூட வலையுலக நாகரிகம் தெரியாமல் இருக்காங்க நம்ம மக்கள்?

இவங்களை நெனச்சு சிரிக்கிறதா இல்லை அழுவுறதானு தெரியலை!

அவர் என்ன போதை மருந்து தயாரிச்சாரா, சார்?

அந்த போலிஸ் ஸ்டேஷனில்தான் டாக்டர் ராமனை பிடிச்சு வந்து அடச்சு வச்சிருந்தாங்க. அங்கே இருந்த காண்ஸ்டபில் முருகனுக்கு ஒரே குழப்பம். இந்த ஆளப் பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கான்..என்னத்துக்காக இந்த ஆளை பிடிச்சு உள்ள போட்டு இருக்காங்க? அடக்க முடியாமல், மெதுவா ஏட்டு நல்லசிவத்திடம் போனாரு..

"சார் நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கவா? என்ன சார் இது ..படிச்சவர் மாதிரி இருக்காரு. இவரைப் பிடிச்சு உள்ள போட்டு இருக்காங்க." என்று மெதுவா ஆரம்பிச்சாரு காண்ஸ்டிபில் முருகன்.

"யாரய்யா பத்தி கேக்கிற?" என்றார் ஏட்டு நல்லசிவம்.

"அவர்தான் சார்.. நேத்து பிடிச்சுட்டுவந்து எஃப் ஐ ஆர் எல்லாம் போட்டாங்களே, டாக்டர் ராமனா என்னவோ?"

"ஆமாயா அவர் டாக்டர் ராமன் தான். ஏதோ மருந்து தயாரிச்சாராம்யா.. அதான் பெரிய இடத்தில் இருந்து இந்த "டாக்டரை" பிடிச்சு வுள்ள போட்டு இருக்காங்க!"

"என்ன மருந்து சார்? போதை மருந்து எதுவுமா?"

"இல்லய்யா... ஏதோ எயிட்ஸுக்கு மருந்தாம். இவரா 10 விஞ்ஞானிகளோட சேர்ந்து காட்டுக்குள்ள ஒரு ஆய்வகம் கட்டி அதில் கிலோக் கணக்கிலே தயாரிச்சு இருக்காருய்யா.."

"அதுல என்ன சார் தப்பு? எயிட்ஸ்னால நம்ம நாட்டிலே எவ்வளவு பேர் சாகிறாங்க இல்லையா?"

"புரியாமல் பேசாதேய்யா! கோடிக்கணக்கான டாலர்கள் செலவழிச்சு, ஒரு அமெரிக்க நிறுவனம் தயாரிச்ச ஒரு எயிட்ஸ் மருந்தை, இவருபாட்டுக்கு இஷ்டத்துக்கு தயாரிச்சு, அதை ஏழை எயிட்ஸ் நோயாளிகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சுட்டாராம்யா. அதெல்லாம் தப்புயா"

"இவருக்கு எப்படி சார் இந்த மருந்து தயாரிக்கத் தெரியும்?"

"அதெல்லாம் ஏதோ ஒரு ஜேர்னல்ல இல்ல பேட்டெண்ட்ல பிரசுரிச்சு இருப்பாங்கலாம். அதை வச்சு இவரா இவர் நண்பர்களுடன் சேர்ந்து சின்ன ஆய்வுக்கூடம் ஆரம்பிச்சி கிலோக்க்கணக்குல தயாரிச்சுட்டாராம்."

"தயாரிச்சு எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசுக்கு வித்தாரா, சார்?"

"இல்லைய்யா, நீ வேற! ஏழை எயிட்ஸ் நோயாளிகளுக்குத்தான் கொண்டுபோய் ஃப்ரியாத்தான் சப்ளை பண்ணி இருக்கார்"

"நோயாளிகள் அந்த மருந்தை சாப்பிட்டுவிட்டு நல்லானாங்களா சார்?"

"அவங்களுக்கு நோய் குணமாற மாதிரி இருக்காம். நோய் சரியாகிற மாதிரி இருக்காம்யா. அந்த மருந்து வேலை செய்யுதாம்யா"

"இதுல என்ன சார் பெரிய தப்பு? அவர் என்ன கஞ்சாவா வித்தார்?"

"இது ஒரு மாதிரியான குற்றம்யா..இதெல்லாம் சட்டப்படி தப்புயா, முருகா! பேட்டண்ட் ரைட்ஸ் அது இதுனு இருக்காம்யா"

"என்ன சார் நீங்க? சட்டமாவது கழுதையாவது.. அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு இதை போட்டு க்கொடுத்தவனை தூக்கி உள்ள போடனும் சார்"

"என்னய்யா சொல்ற?'

"இவர் தயாரிச்சு, ஏழை நோயாளிகளுக்கு கொடுக்கிறதை, எப்படி சார் அமெரிக்க நிறுவனம் கண்டு பிடிச்சது?"

"அதெல்லாம் தெரியாதுய்யா எனக்கு."

"சார், அவர்ட்ட நான் கொஞ்சம் பேசலாமா?"

"சரிய்யா! எதையாவது உளறி வைக்காதீர்"

------------------------------

"உங்க பேருதான் ராமனா சார்? நான் காண்ஸ்டபில் முருகன் சார்!"

"அப்படியா? வணக்கம் முருகன்"

"என்ன சார் அநியாயம் இது? உங்களை யார் சார் காட்டிக்கொடுத்தது?"

"யார் காட்டிக்கொடுப்பா? பொறுப்பான ஒரு தமிழனாத்தான் இருக்கும்..நான் நிரபராதி எல்லாம் இல்லங்க முருகன்"

"ஏன் சார், நீங்க பாட்டுல ஒரு பெரிய கம்பெணில வேலை பார்த்து லட்ச லட்சமா சம்பாரிக்கலாமே சார்? ஏன் இப்படி வந்து.."

"அதிலெல்லாம் திருப்தி இல்லைங்க முருகன்."

"சார்?"

"என்ன முருகன்?"

"என் தூரத்து சொந்தம் ஒருத்தரு.. இந்த வியாதிதான் சார், எயிடுசு. ரொம்ப மோசமான நெலம சார். சாகக் கெடக்கிறாரு சார்.. உங்க கிட்ட ஏதாவது மருந்து இருக்கா? ரொம்ப ஏழை சார் அவரு.."

" என் நண்பன் அட்ரெஸ் தர்றேன். அவர்ட்ட போயி வாங்கிக்கோங்க. ஆனால் இது ஆறு மாத சப்ளைதான். அதுக்கப்புறம் மருந்து தயாரிக்க முடியுமானு தெரியலை."

"ரொம்ப நன்றி சார்... சார்! கவலைய விடுங்க சார். உங்கள வெளிய கொண்டு வர நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன், சார்."

டாக்டர் ராமன் புன்னகைத்தார்.

Sunday, December 19, 2010

இணையதள விவாதத்தில் பயங்கரம்! மேதாவிகள் கவனிக்கவும்!

ஹலோ! யார் சார் நீங்க? என்னது? நீங்க ரொம்ப நாகரிகமாக கருத்தை சொல்ற பெரிய மனிதரா? பெரிய ஈகோயிஸ்டா? இல்லை உண்மையிலேயே பெரிய ஆள், அதனால் வந்த ஈகோதானா?

அதாவது உலகத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்னால் எதை வேணா விளக்க முடியும்னு நெனைக்கிற பெரிய மேதாவியா சார் நீங்க? அதாவது எந்ததொரு விவாதத்திலுமே "எனக்கு இது தெரியலைங்க"னு நீங்க சொன்னதை பார்க்கவே முடியாதா? உங்க விவாதத்தில் தேடித் தேடிப்பார்த்தாலும் அந்த வரியைமட்டும் நீங்க சொல்லி பார்க்கவே முடியாதா? அதாவது எல்லாம தெரிந்தவன்னு நினைத்துக்கொண்டு வாழும் படித்த முட்டாளா நீங்க? என்ன என்ன? நீங்க எல்லாம் தெரிந்தாவர் அப்புறம் உங்களுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியமா?

இது ஒரு வியாதி சார். இதுபோல உங்களுக்கு ஒரு வியாதி இருப்பதால் தயவு செய்து எந்த விவாதத்திலும் கலந்துக்காதீங்க, சார். நீங்க ஒண்ணு பண்ணுங்க! உங்க கருத்தை உங்க தளத்தில் சொல்லிவிட்டு, எதிர்கருத்தை வரவேற்காமல் உங்க சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டு போயிக்கிட்டே இருங்க. உங்கள ஒருபய ஒண்ணும் பண்ண முடியாது சார்!

இணையதள விவாதம் உங்களுக்கு வேணாமே, ப்ளீஸ்? ஏன் சொல்றேன்னா, நீங்க எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும், பதிவுலகில் நீங்க ஒரு சாதாரண சகபதிவர்தான். உங்களுக்காக, உங்க தகுதி, உங்க படிப்பறிவு, உங்க அகம்பாவம் எல்லாம் புரிந்து நடந்துக்க ஒரு சில "பெரிய மனிதர்கள்" நிச்சயம் இருப்பாங்க என்பது உண்மைதான். ஆனால் எல்லாரும் அப்படியல்ல! உலகம் மிகப்பெரியது! ஒருசிலர் வேறுமாதிரியாக உங்களை மடக்கலாம், உங்க குறைகளை அறிந்து அவைகள் மூலம் உங்களை வேறுமாதிரியாக தாக்கலாம். உங்களுக்கே தெரியாமல் இருக்கும் உங்க குறைகளை உலகறியக்காட்டி உங்க உண்மையான முகத்தை காட்டிவிடலாம். அதுக்குத்தான் சொல்றேன் சார். ஆமா, ஆமா உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். சார், சொல்றதைக் கேளுங்க! இந்த பயங்கரமான இனையதளத்தில் விவாதத்துக்கு வந்தால் உங்களை மாதிரி பெரியவாளுக்கு பல பிரச்சினைகள் உண்டு, சார். இல்ல சார், உங்கள் நிலை மாறி வரும் பின்விளைவுகளை உங்களால் தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் உங்களிடம் இல்லைனு உங்களுக்கே இவ்ளோ நாள் தெரியாமல் இருந்து இருப்பீங்க.

என்ன? "அதெப்படி எனக்குத் தெரியாமல் இருக்கும்? எனக்கு எல்லாம் தெரியும்!" னு சொல்றீங்களா? இல்லை சார், "எனக்கு எல்லாமே தெரியுமே!" னு நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் முட்டாள் சார் நீங்க! பச்சையா சொன்னா நீங்க எல்லாம் தெரிந்த "கடவுளாவே" இருந்தாலும் உங்களுக்கு தெரியாதது நெறையா இருக்கும், சார். ஆமா, உங்க அறியாமையை வெளியே சொல்லாமல் நீங்க உங்களையே ஏமாத்திக்கிட்டு திரியலாம்தான். ஆனால் இணைய தளத்தில் விவாதம்னு வந்துட்டா, நீங்க உங்க பொன்வாயைத் திறக்கும்போது யாராவது உங்க முகத்திரையை கிழிச்சுடுவானுக, சார். அப்புறம் நீங்க என்னதான் அந்த அயோக்கியனை திட்டினாலும், பழிவாங்கினாலும் உங்க முகச்சாயம் வெளுத்தது வெளுத்ததுதான். புரியுதா சார்? இல்லையா?

என்ன சொல்றீங்க?

* நீங்க ஒரு அறிவியல் நிபுணரா? நோபல்பரிசு வாங்க தகுதியானவவரா?

* நீங்க ஒரு நாத்திக பகுத்தறிவு வாதியா?! கடவுளையே தூக்கி எறிந்தவரா?

* நீங்க என்ன ஒரு பெரிய நிலையில் இருக்கிறீங்கனு தெரிந்தால் எல்லாரும் மயக்கம்போட்டு விழுந்துருவாங்களா?

எல்லாம் நல்லாப் புரியுது சார்.

நீங்க ஒரு பெரிய மேதாவிதான்! ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சினைதான்.
அது என்னனா, நீங்க உங்களையே ஏமாற்றிக்கொண்டு வாழும் ஒரு பரிதாபத்திற்குரிய ஒரு ஆள், சார். நீங்க புரிந்துகொள்ள வேண்டியது , "எனக்கு எல்லாமே தெரியாது!" "என்னால் எல்லாவற்றையும் விளக்க முடியாது!" "என்னால் விளக்க முடியாதது இந்த உலகில் நெறையா இருக்கு" "கேவலம் நானும் ஒரு பலவீனமுள்ள மனுஷந்தான்!" என்பவைகள்தான்.

உங்களால் அப்படி உங்களைப்பற்றி சாதாரணமா நினைக்க முடியவே முடியாதா? நல்லது, அப்போ இணையதளத்தில் விவாதத்திற்கு வராதீங்க! வந்தாலும் வாயைத் திறக்காதீங்க! சும்மா வேடிக்கை பாருங்க! கீழே தொரைநாட்டு மொழியில் சொல்லி இருக்கது உங்களைப்போல மேதாவிகளுக்குத்தான்!

Never argue with a stranger in the internet
– They will learn about your weakness and drag you down from your high level to lowest level to which you never wanted to go, then beat you with their experience!

Friday, December 17, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே (4)

* காதல் பொய்யானதா?

காதலர்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசும்போது பேசுகிற சில வசனங்கள் காலப்போக்கில் பொய் ஆவதுண்டு. அந்த உண்மைகள் அந்த நிமிடத்திற்குத்தான் உண்மை என்பது என் நம்பிக்கை. மற்றபடி காதல், காதல் தான்! உண்மையாவது பொய்யாவது.


* ஆமா இந்த சொர்க்கம் நரகம்னு சொல்றாங்களே, சொர்க்கம் ஒரே இன்பமயமா இருக்குமா?

துன்பம்னு இருப்பதால், நமக்கு நடப்பதால்தான் சந்தோஷம் என்பதே "சொர்க்கமா இருக்கு". பசினு ஒண்ணு வருவதாலேதான் உணவு உண்ணும்போது "சொர்க்கமாக" இருக்கு. வெயில் கொளுத்தும்போதுதான், "நிழல்" சொர்க்கமா இருக்கு. எந்தக்குறையுமே இருக்காது சந்தோஷம் மட்டும்தான் எப்போதுமே இருக்கும்னா? செம போர் அடிக்காதா? நான் சொர்க்த்துக்கு போகமாட்டேன் என்று "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" னு இப்படி சொல்லல! நம்புங்க!

* பொய்களிலேயே பல வகை இருக்கு இல்லையா? ஹார்ம்லெஸ் லை, ஹார்ம்ஃபுல் லை? அப்போ உண்மையிலும் அப்படி ரெண்டு வகை இருக்கா?

அப்படித்தான்போல, ஹானஸ்ட் ட்ரூத் னு சொல்றாங்க, வெர்ரி ட்ருலி னு சொல்றாங்க இல்லையா? இல்லைனா "உண்மை" க்கெல்லாம் எதுக்குங்க அடைமொழி?

* ஒரு சில கேள்விகளைவிட, அதற்கு சொல்லப் படுகிற பதில்கள் ரொம்ப நம்மைக் குழப்புமா?

சர்க்கரை என்பது என்ன?னா ஒரு இனிப்புப் பொருள். சாப்பிட்டால் இனிக்கும்னு சொல்லலாம்.

அதை விட்டுப்புட்டு அது ஒரு மூலக்கூறு! அதுல ஒரு குளுக்கோஸும், ஒரு ஃப்ரக்டோஸும் சேர்ந்து இருக்கு அப்படி னு சொன்னா, கேள்வியே பரவாயில்லைனு தானே தோனுது?

* கடவுள் ஏன் கல்லானார்?

அல்லாவுக்கு உருவமில்லை! அவரும் கடவுள்தான்னு சொல்றாங்க. நம்ம கடவுளை கல்லாக்கியது மனுஷந்தான். கல்லுக்கு உணர்ச்சியில்லை! கடவுளுக்கும் உணர்ச்சி இல்லை! அதான் மனிதன் கடவுளை கல்லாக்கிவிட்டான் போல இருக்கு!

* கொஞ்ச வயதில் திமிருடன் வீராப்பும் வீம்பும் பேசும் மனிதன் ஏன் வயதான காலத்தில் தத்துவம் பேசுறான்?

அழகு, இளமை, திமிர், அறியாமை, ஹார்மோண்ஸ் எல்லாமே இளவயதில் அதிகம் இருக்குமாம். வயதாக ஆக, எல்லாமே குறைய ஆரம்பிக்கும்போது தன் இயலாமை, நிலையாமை தெரிய ஆரம்பிக்குமாம். அப்போத்தான் மனிதன் தத்துவம் பேச ஆரம்பிக்கிறான்னு சொல்றாங்க. ஒண்ணுமட்டும் கவனிச்சுப் பாருங்க, தோல்விகள்தான் ஒருவரை பண்படுத்துவது, ஆனால் நம்ம வெற்றிக்காக்த்தான் அலைகிறோம்!

* குழந்தைக்கும், ரொம்ப வயதானவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

வயசானவங்க வாழ்க்கையில் நெறைய பொய் சொல்லியிருப்பாங்க! குழந்தைக்கு பொய்னா என்னனே தெரியாது. அதனால்தானோ என்னவோ குழந்தை அழகா இருக்குதுங்க! அறியாமைதான் ஒருவரை நேர்மையா இருக்க வைக்குதா?னு தெரியலை.

* ஆமா, கேட்ட கேள்வியையே ரிப்பீட் பண்ணிக்கொண்டு இருக்கீங்களா?

எனக்கு நெஜம்மாவே தெரியலை! இருக்கலாம்! ஆனாலும் பதில் வேறயாவும் இருக்கலாம். ஒரு கடிதம் எழுதுறேன்னு வச்சுக்கோங்க, சரியா "சேவ்" பண்ணாமல் ஆட்டுமேட்டிக்கா டெலீட் ஆயிருச்சுனா, அதே கடிதத்தை என்னால் திரும்ப எழுத முடியவே முடியாது. எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? :)

Thursday, December 16, 2010

நந்தலாலா முழுநீள விமர்சனம்-கின்னஸ்க்கு பரிந்துரை!

ஒரு படத்துக்கு விமர்சனம் எப்படி எழுதனும் என்பதற்கெல்லாம் நான் பெரிய "அத்தாரிட்டி" எல்லாம் கிடையாது. ஆனால் குறைந்த வரிகளில் அழகாக ஒரு படத்தை விமர்சிப்பவர்களே நல்ல விமர்சகர்கள்னு நான் நினைக்கிறேன். திரு சாரு நிவேதிதாவின் எழுத்தில் என்னைக்குமே ஒரு அழகு, நயம் உண்டு. சாரு, மிஷ்கினின் நந்தலாலா திரைப்படம் ஜப்பானியப் படத்தழுவலாக இருப்பதை பெரிது படுத்தாமல் , அந்தப் படத்திற்கு விமர்சனம் வரிந்துகட்டிக்கொண்டு எழுதி புகழோ புகழுனு புகழ்ந்து தள்ளியிருக்கார், மனுஷன்.

ஒரு படத்தை நல்லா விமர்சிக்கனும்னு முடிவு செஞ்சிட்டா நிச்சயம் மேலே தூக்கிவச்சு புகழலாம். சாரு மனதாற தன் இதயத்தில் இருந்து மிஷ்கின் ஒரு சிறந்த கலைஞன், இளையராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார், படம் சிறப்பான ஒண்ணுனு பாராட்டுவது அவருடைய பெரியமனுஷத்தனம்னுதான் சொல்லனும். இந்தக்காலத்தில் திட்டுறது எளிது, புகழ்றதுதான் கஷ்டம். ஆனால் இவ்வளவு அனுபவசாலியான விமர்சகர், இதை ஒரு 50 வரிகளில் சொல்ல முடியாதா? புகழ்ந்து தள்ளனும் என்பதற்காக ஒரு சிறுகதையைவிட நீளமாகவாக விமர்சனம் எழுதுவாங்க?

பொதுவாக தமிழன் மனநிலை என்னனா எதையுமே வளவளனு எழுதி எரிச்சல் தருமளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் பிடிக்காது. அந்த வகையில் சாருவின் இந்த முழ்நீள நந்தலாலா விமர்சனம் ஒரு நெகட்டிவ் விமர்சனம்தான். நந்தலாலாவையும், மிஷ்கினையும், இளையராஜாவையும் புகழ்ந்தே கவிழ்த்திவிட்டார் நம்ம சாரு!

எனக்குத்தெரிய உயிர்மையில் சாரு நிவேதிதா நந்தலாலாவிற்கு எழுதிய விமர்சனம்தான் உலகத்திலேயே அதிக நீளமான விமர்சனம். நம்ம அண்ணன் உண்மைத்தமிழனை சந்தேகமே இல்லாமல் பீட் பண்ணி விட்டார் சாரு. ஒண்ணு செய்யலாம் உலகத்திலேயே அதிக நீளமான விமர்சனம் இதுதான் என்று இதை கின்னஸ்க்கு பரிந்துரை செய்யலாம்! யாராவது இதை செய்யுங்கப்பூ!

என் கூற்று தவறு, இதைவிட நீளமான விமர்சனம் இருக்குனு சொன்னால் , என் முகத்தில் அறைவதுபோல அதற்கான தொடுப்பு பின்னூட்டத்தில் கொடுங்கப்பூ! நன்றி, வணக்கம்.

Wednesday, December 15, 2010

சாரு எழுத்து வர வர கழுதைபோல போகுதா?

எழுத்தாளர்கள் பொதுவாக வயதாக ஆக சிறப்பாக, தரமாக எழுதமுடியாமல் போய்விடுமா? தி ஜானகிராமன் கடைசியில் எழுதிய நாவலான நளபாகம் அவர் எழுதிய நாவல்களிலேயே ரொம்ப மட்டமானதுனு சொல்லலாம். வயதாக ஆக அவர் எழுத்தில் அவ்வளவு சுவை இல்லை, வெறும் பர்வேஷந்தான் இருந்தது என்றார்கள், பலர். அதேபோல்தான் சாண்டில்யன் போன்றவர்களும், சாண்டில்யன் வய்தான பின்னால் எழுதிய நாவல்கள் அவர் பழைய நாவல்கள் யவன ராணி, கடல் புறா, மன்னன் மகள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. ஏன் ஜெயகாந்தன், பாலகுமாரன் யாருமே இதுக்கு விதிவிலக்கல்ல! அப்போ சாருவுடைய "பொற்காலம்" அதுக்குள்ளே முடிந்துவிட்டதா? சாருவும் அந்த நிலையை அடைந்துவிட்டாரா? இல்லைனா இவர் எழுதிய சீரோ டிக்ரீயை விட தரமான படைப்புக்கள் இன்னும்வர இருக்க்கின்றதா?

சமீபத்தில் சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழாதான் பதிவுலகில் விசயமா இருக்கு. இருந்தாலும் அவர் கதைகள் தரம் குறைந்துவிட்டதாக பலர் தைரியமாக விமர்சிக்கிறார்கள். இன்னும் சீரோ டிக்ரியைப் பத்தியேதான் அவர் ஜால்ரக்கள் பெருமையாகப் பேசுகிறார்கள். சாரு ஒரு தனித்துவம் வாய்ந்தவர்தான்.. சாருக்கு தொண்டர்களும் அதிகம், எதிரிகளும் அதிகம். பதிவுலகில் அவருக்கு கிடைக்காத புகழும் கிடையாது, அதேபோல் அவருக்கு வராத அவமானங்களும் கெடையாது. சாரு உண்மையை எழுதுறாரோ இல்லையோ, அவர் எழுத்துக்கு இன்றுவரை எந்தக்குறைச்சலும் இல்லை என்பதை யாருமே மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் அவரைச் சொல்லி நெறையாப் பேர் காலத்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுகிறோம். ஆனால் எழுத்தாளனுக்கு முக்கியம், அனுபவம், கற்பனைத்திறன்! அவர் கற்பனைத் திறன் எந்த லெவெலில் இருக்கு? என்பதென்னவோ பெரிய கேள்விக்குறியாகவே இருக்கு. சாருவின் கதை எழுதும் திறன் மங்கிவிட்டதாகத்தான் விமர்சகர்கள் பலர் அவர் சமீபத்திய நாவல்களை விமர்சிக்கிறார்கள். இப்போ எல்லாம் சாருவை ஒரு கதை எழுதுபவர்னு பார்ப்பதைவிட, எதையாவது வம்பை எழுதுவார்னு அவர் தளத்திற்குப் போய் வாசிப்பவர்கள்தான் அதிகம். அலெக்ஸா ரேட்டிங்கும் தரமான எழுத்தும் எதிர்திசையில் போறதை இப்போ எல்லாம் அழகா பார்க்க முடியுது!

ஒருவகையில் அந்தக்காலத்தில் வலையுலகம் இல்லாதது என்னவோ எழுத்தாளர்களின் கற்பனைத் திறனை வளர்த்தது என்றுதான் சொல்லனும். அதனால்தான் அவர்களால் நன்றாக அவர்கள் அனுபவத்தை அனுபவிச்சு எழுத முடிந்ததோ? வலையுலகத்தால் தினமும் என்ன இழவையாவது எழுதனும்னு எழுதி கதை எழுதுபதில் ஜெயமோகன், சாரு போன்றவர்களால், ஒரு தி ஜா போலவோ அல்லது ஒரு ஜெயகாந்தன் போலவோ அல்லது ஒரு அகிலன் போலவோ உருவாக முடியவில்லை என்பதை நீங்கள் கண்கூடகாகப் பார்க்கலாம்.

வலையுலகால் எழுத்தாளர்கள் நஷ்டமடைகிறார்கள் என்றே சொல்லனும். அவர்கள் எழுத்தின் தரம் குறைகிறது. கற்பனைக்கு பஞ்சம் வருகிறது. மேலும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் தாக்கப்படுகிறார்கள். காயபடுத்தப் படுகிறார்கள். அவர்களும் தரமான படைப்புக்களை மட்டும் தருவதை விட்டுவிட்டு எதையாவது உளறி குழாயடி சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குறைந்த வயதிலேயே அவர்கள் எழுத்து தரமிழந்துவிடுகிறது. ஆக மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக் கொண்டுதான் போகிறது என்றுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது.

Tuesday, December 14, 2010

கடலை கார்னர் 65 (18+ ஒன்லி)

கடலை கார்னர்-64

"சரி நான் போயிட்டு வர்றேன்டி பிருந்தா. நான் ஏதோ உங்களுக்குள்ள நெஜம்மாவே சண்டைனு நெனச்சேன்!"

"நான் என்ன பொய்யா சொன்னேன்? நெஜம்மாவே சண்டைதான் பாணு! இப்போ சமாதானம் ஆயிட்டா உங்க ஃப்ரெண்டு."

"எப்படி சமாதானம் செய்தீங்கனு விளக்கமா அவளுக்குச் சொல்றீங்களா?."

"சொல்லவா, பாணு?"

"வேணாம் வேணாம்."

"பாணு! வேணாம்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்கக்கூடாது!"

"இப்போத்தான் அவ கற்பனைத் திறனை தூண்டி விடுறீங்க, கண்ணன்!"

"சரி வேணாம் விடு! பாணு ரொம்ப வெக்கப்படுறாங்க!"

"பிருந்தாதான் விபரத்தை எல்லாம் பச்சையாவே என் காதில் சொல்லீட்டாளே! நான் வர்றேன்டி! பார்க்கலாம் கண்ணன்."

"இருடி பாணு! கேரம் ஆடலாம் வர்றியா?"

"எனக்கு சரியா ஆடத் தெரியாதே? எப்போ வாங்கின?"

"கண்ணன் தான் வாங்கிக் கொண்டு வந்தாரு!"

"பாணு! பிருந்தாவோட கேரம் ஆடிவின் பண்ணனும்னா நான் கண்ணை கட்டிக்கிட்டுத்தான் ஆடனும் போல"

"என்னடி சொல்றாரு இவரு?"

"என்னிடம் தோத்துட்டார். அதான் ஏதேதோ சாக்கு சொல்றாரு! நான் அவரு வெளையாடும் போது அவரை ஏதோ மாயம் செய்றேனாம்.."

"நீ என்னடி செஞ்ச? அதைச் சொல்லு, பாணுட்ட!"

"சரி, சொல்றேன். நீங்க என் உடம்பிலே எந்த இடத்தில் முத்தம் கொடுத்தீங்கனு அவகிட்ட சொல்றீங்களா?"

"சொல்லவா, பாணு?"

"சொல்லுங்கனு சொல்றேன் இல்லை?"

"ரொம்ப அதட்டாதே!"

"ரொம்ப "A" யா இருக்குமாடி? நான் சின்னப்பொண்ணுடி! என்னையும் கெடுத்துடாதே! சரி, எங்கடி பிடிச்ச இந்தக் கண்ணனை?"

"சிகாகோலதான். மொதல்ல பழகும்போது டீசண்டாத்தான் தெரிந்தார்.."

"இப்போ எப்படிங்கிற?"

"படு மோசம்டி!"

"நானும் உன்னை மொதல்ல பார்க்கும்போது உனக்கு உன் "பட்" மட்டும்தான் பெருசுனு நெனச்சேன். இப்போத்தான் தெரியுது.."

"என்ன தெரியுது?"

"உன் ஈகோ இஸ் பிக்கர் தான் யுவர் பட் னு"

"என்ன கொழுப்பா? உங்களுக்குத்தான் ஈகோ என்னைவிட அதிகம்!"

"சரி நான் போயிட்டு வர்றேன்டி பிருந்தா!"

"ஆமா நீங்க "போயிட்டு வர்றேன்"னு அடிக்கடி சும்மா சொல்லுவீங்களா, பாணு?"

"ஹா ஹா ஹா"

"சரிடி நான் வர்றேன். இவரு என்னை கழுத்தைப் பிடிச்சு தள்ளிடுவார் போல" என்று சிரித்தாள் பாணு.

"சரிடி, மறுபடியும் ஏதாவது கேட்டு வந்திறாதே" னு கதவை அடச்சாள் பிருந்தா.

"ஆமா என்னடி சொன்ன, பாணு காதுல?"

"சிவ பூஜையில் நுழைந்த கரடி அவள்தான்னு சொன்னேன்."

"நெஜம்மா?"

"அதே அர்த்தத்தில் கொஞ்சம் பச்சையா சொன்னேன்"

"என்னதான் சொன்ன? சொல்லுடி!"

"இங்கே பக்கத்தில் வாங்க சொல்றேன்!"

"வந்தாச்சு.. சொல்லு!'

"இவ கரடி மாதிரி இடையில் வந்ததாலே ஒரு ஆர்கஸம் பாதிலேயே போயிடுச்சுனு சொன்னேன்."

"ஏண்டி இப்படி பச்சை பச்சையா பொய் சொல்ற?"

"உங்களை விடவா?...சரி, இடுப்புக்குக் கீழே என்ன பண்ணுறீங்க? வெறும் நைட்டி மட்டும்தான் இருக்கு"

"யு ஸ்மெல் குட் டார்லிங்!"

"ச்சீ! இங்கேலாமா "ஸ்மெல்" ப்ண்ணிப் பார்ப்பாங்க?"

"வேற இங்கே என்ன பண்ணனும்? டேஸ்ட் பண்ணிப் பார்க்கனுமா?"

"நீங்க செய்றதையெல்லாம் யார்ட்டயுமே சொல்லக்கூட முடியாது போல! இப்படியெல்லாம் இருப்பாங்களா?"

"ஒன்லி வென் சம்வொன் இஸ் டீப்லி இன் லவ் வித் யு!"

"எப்போவுமே நான் மணக்க மாட்டேனா?"

"ஏன்? நான் எப்போவுமே உன்னை லவ் பண்ணிட்டுத்தானே இருப்பேன்?"

"காதல் எல்லாம் கொஞ்ச நாள்தானே?"

"காமம் எப்படி?"

"அது ரொம்ப நாள் இருக்குமா?"

"இல்லையா பின்னே?"

"இன்னைக்கு என்ன லிவிங் ரூம்லயேவா?"

"உனக்கு ஏன் இப்படி ஒரு ஆசை?"

"எனக்கு?"

"வேணும்ங்கிறத கேள்வியா கேக்கிற? யு ஆர் பியூட்டிபுள் டார்லிங்!"

"ரியல்லி?'

"ஓ மை காட்! யு ஹாவ் டு பி எ கை டு நோ ஹவ் பியூட்டிஃபுள் யு ஆர் வென் யு ஆர் நேக்கட்!"

"வாட் எபவ்ட் எ "கே" வுமன்!"

"அந்த மாதிரி ஏதாவது ப்ளான் இருக்கா?"

"நாட் நவ்"

" "

"ஐ லவ் த வே யு கிஸ் மி, டார்லிங்!"

"ஹவ் டு யு லைக் திஸ்?"

"ஓ மை காட்!"

- தொடரும்

Sunday, December 12, 2010

தத்துப்பித்து பிரபாகரருக்கு சூப்பர் ஸ்டார் பதில்கள்!

கிளிமாஞ்சாரோ பாடல் உருவான விதம் குறித்தும் ஐஸ்வர்யா ராயின் பேரழகை குறித்தும் (பாடி ஸ்டெடியா இருக்கு... மைன்ட் ஆப் ஆயிடுச்சு) உங்களது பேட்டி ஒன்றில் சிலாகித்து ஜொள்ளியிருந்தீர்கள். நல்லது. இப்பொழுது கேள்வி அது பற்றியதல்ல. கிளிமாஞ்சாரோ பாடலில் ஏதோவொரு ஸ்டெப்பை முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்து பார்த்ததாக சொன்னீர்களே. அது எந்த ஸ்டெப் என்று தெரிந்துக்கொள்ளலாமா...? அந்த பாடலில் அதிக பட்சம் கடினமான ஸ்டெப் என்றால் அது தோள்பட்டையை உலுக்குவதும், தொடையை தட்டிக்கொண்டு துள்ளிகுதிப்பதும் தான். அந்த ஸ்டெப்பையா முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்தீர்கள்...

இப்போ இதுக்கு ரஜினி பதில் சொல்லனுமா, உங்க வலைதளத்துக்கு வந்து? சரி, அந்த தோள்பட்டையை உலுக்கிற ஸ்டெப்னே வச்சுக்கோவோம். 60 வயசுல அவரால் ஆட முடியல போல இருக்கு ரொம்ப ப்ராக்டிஸ் தேவைப்பட்டு இருக்கு. உங்களுக்கு இதிலென்ன பிரச்சினை? நீங்க இதைவிட நல்லா செஞ்சிருப்பீங்களா? இதிலே ரஜினி எதுக்கு பொய் சொல்லுவதா நீங்க புரளியக் கிளப்பி விடுறீங்க?

* எந்திரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு உங்கள் இரண்டாவது மகளின் திருமணம் நடந்து முடிந்தபிறகு ஒரு பிரஸ்மீட்டில் ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பிற்பாடு அதுபற்றி மறந்துவிட்டீர்கள் போல. அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...? எந்திரன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதைவிட பெரிய விருந்து வைத்துவிட்டேன் என்று சொல்லி டபாய்க்க வேண்டாம். ஏனெனில் எந்திரன் படத்தை நாங்கள் ஒவ்வொருவரும் டிக்கட் எடுத்து தான் பார்த்தோம்.

நீங்க யார் சார்? ரஜினி ரசிகரா? ரஜினி படப்பாடல்கள் புதிர்ல ஒண்ணுகூட தெரியலைனு சொன்னீங்க? உங்களுக்கும் விருந்து தர்றேன்னு சொன்னாரா? இது ரஜினி ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் உள்ள பிரச்சினை சார். நீங்க ஏன் சார் சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறீங்க?

* மைனா படத்தை பார்த்துவிட்டு இதுபோன்ற படத்தில் நான் ஒரு சின்ன பாத்திரத்தில் கூட நடிக்கவில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்கள். உண்மையில் மைனா படத்தை எடுப்பதற்கு முன்பு உங்களிடம் கதையை கூறி அதில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டிருந்தால் நடித்திருப்பீர்களா...? அய்யா... நீங்கள் வருத்தப்படவே வேண்டாம். அடுத்ததாக பிரபு சாலமன் இன்னொரு பட்ஜெட் படம் எடுக்க இருக்கிறாராம். அதற்கு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தேவைப்படுகிறார். என்ன சொல்கிறீர்கள். வந்து நடித்துவிட்டு போகவேண்டியது தானே...?

நீங்க யாரு சார்? பிரபு சாலமன் தூதுவரா? உங்களை அனுப்பினாரா அவ்ரு? அவரு, நாளைக்கு வந்து, "என்ன இப்படி தேவை இல்லாமல் என் பேரை இழுக்குறீங்க"னு சொன்னா உங்க முகத்தை எங்க கொண்டுபோய் வச்சுக்குவீங்க?

இதெல்லாம் ஒரு கேள்விகள்னு கேட்டு விதண்டாவாதம் செய்து என்னத்த சாதிச்சீங்க? ஒண்ணு கவனிச்சீங்களா? ரஜினியை மட்டம்தட்டனும்னு ஒரே எண்ணத்தில் கேட்கிற குப்பைக் கேள்விகளுக்குக்கூட ரஜினி ரசிகர்கள் யாரும் நெகடிவ் ஓட்டுப்போடலை பாருங்க! நீங்க ரஜினிபத்தியோ அவர் ரசிகர்கள் பத்தியோ புரிஞ்சிக்கிற அளவுக்கு இன்னும் வாழ்க்கையில் அனுபவப்படலை சார்!

Saturday, December 11, 2010

தமிழ்மணம் விருதுகள் 2010 ! வாழ்த்துக்கள்!

தமிழ்மணம் நடத்தும் போட்டியில் பதிவர்கள் எல்லாம் ஆவலுடன் கலந்துகொள்ளும் நேரம் இது. நிச்சயம் இது ஒரு ப்ரஸ்டிஜியஸ் அவார்ட் தான்.

பதிவர்கள் பலர் எந்தப்பதிவை பரிந்துரைக்கலாம்னு தன் பதிவுகளையே எடைபோட்டு குழம்பிநிற்கும் இந்த சூழலில் நான் மட்டும் "ஆண்டவன் படச்ச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்" னு நிம்மதியா இருக்கேன்.

நான் இதுவரை இந்தப் போட்டியில் கலந்ததில்லை. கலந்துக்க தகுதி இருக்கானு சந்தேகமமும் உண்டு. போட்டினாலே சின்ன வயதிலிருந்து பிடிக்காது. மற்றும் அவார்ட் வாங்கிற அளவுக்கெல்லாம் யோசிச்சு பதிவு எழுதுறதில்லை, எழுதியதுமில்லை. ஒருமுறை பதிவர் ராமலகக்ஷ்மி அவர்கள் காசுவலாக கேட்டதால் சர்வேஷன் நடத்திய போட்டியில் "அவரு அவரு..ஒரு" னு ஒரு கதை எழுதி இருக்கேன். அதுவும் அமெச்சூரிஷாத்தான் வந்தது. முடிவும் எதிர்பாத்தது போலவே! :)

பதிவுலகில் நானிருக்க காரணம்? இது ஒரு மாதிரியான போதைதான். பதிவுலக போதையில் மாட்டிக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எதையாவது எழுதனும்னு எழுதற ஆள் நான், அவ்ளோதான். ஆனால் உண்மையை என்றுமே சொல்லத்தயங்குவதில்லை!

போட்டியில் கலந்துக்காததை எப்படி வேணா ஒவ்வொரு பதிவரும் எடுத்துக்கலாம்.. ஊர் வாயை கேக்கவா வேணும்?

* இவரு கலந்துக்கிட்டாலும் எவன் பரிந்துரைப்பான் ? இதுவரைக்கும் வாசகர் பரிந்துரையில் குறைந்த அளவு பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் வருண் பதிவுதான் என்று பலர்..

* போட்டியில் கலந்துக்க எல்லாம் ஒரு தரம், தராதரம் இருக்கனும். வருண் தன் "தரத்தை" உலகம் புரிஞ்சுக்கிட்டதை புரிஞ்சுக்கிட்டார் போல இருக்கு என்று பலர்

* எல்லாரும் கலந்துக்கிறாங்க. யாருக்கும் முதல் இரண்டு இடங்கள் கெடைக்கும்னு நம்பிக்கை இருக்காது. இவரும் கலந்துக்கலாம் என்றும் ஒருசில நல்லவர்கள்

சரி, உலகம் ஆயிரம் சொல்லும் நெனச்சுக்கும். அதில் உண்மையும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். உலகத்தைவிட்டுவிட்டு நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.

Anyway, தமிழ்மணத்திற்கும், விருதுகளை ஸ்பாண்சர் செய்யும் அலோகாவுக்கும் இதில் ஆவலுடன் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கும், வெற்றிபெறப்போகும் பதிவர்களுக்கும் "ரிலாக்ஸ் ப்ளீஸ்" சார்பாக என் வாழ்த்துக்கள்! நன்றி! :)

Thursday, December 9, 2010

திடீர்னு கமல் வளவள! சார்லி சாப்ளினை மிமிக் செய்யலையா?

கமலஹாசன் கொஞ்சம் ஹைப்பரா இருக்கார் போலயிருக்கு. திடீர்னு மன்மதன் அம்பு வெளியாகும் நேரம் வந்துவிட்டதால் நெறையாவே பேசுறார். பேச ஆரம்பிச்சதாலே பாதிக்கு மேலே உளறலாத்தான் வருது.

* எந்திரன் பட வெற்றிக்கு அதில் உள்ள் "காண்டெண்ட்ஸ்" காரணமல்ல! ரஜினி என்கிற நடிகரும், சன் நெட்வொர்க் செய்த மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜிதான் காரணம் என்கிறார். இதிலிருந்து இவர் சொல்ல வர்றதென்ன? ஷங்கரின் ட்ரீம் ப்ராஜெக்ட்டான இந்தப்படத்தில், ஷங்கர் ஒண்ணும் பெரிய "ஸ்டஃப்" வைக்கவில்லைனு சொல்றாரா? அதனால்தான் தான் இதில் நடிக்கலைனு சொல்றாரா? பாவம் ஷங்கர்! :(

* அப்புறம், எந்திரன் மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜியை மன்மதன் அம்பு ஃபாளோ பண்ணுமானு கேட்ட அதே கேள்விக்கு, நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் யாரையும் மிமிக் பண்ணியதில்லைனு சொல்றார்.

இவர் யாரையும் மிமிக் பண்ணியதாக யாரும் இங்கே சொல்லவில்லை, நாளுக்கு நாள் மாறிவரும் மார்க்கட்டிங் ஸ்ட்ரட்டஜியை இவரும் செய்வாரா என்பதே கேள்வி.

தசாவதராம் ரிலீஸ் செய்தவிதம் நிச்சயம் சிவாஜி ரிலிஸ் செய்த ஸ்ட்ரேட்டஜிலதான் செய்தார்கள். பெரிய பொருட்செலவில் தயாரித்ததால் நெறைய ப்ரிண்ட் ரிலீஸ் செய்தார்கள்.

அதேபோல் மன்மதன் அம்பு சிங்கபூரில் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டதும், மலேசியாவில் எந்திரன் ஆடியோ ரிலீஸ் செய்த ஸ்ட்ரட்டஜிதான். சரி இதெல்லாம் "கோ இண்சிடெண்ஸ்"னு வச்சுக்கிட்டாலும், ஆமா இவரு சார்லி சாப்ளினை மிமிக் பண்ணாமல் என்ன பண்ணினார்?

Tuesday, December 7, 2010

தமிழ்நாட்டில் ஏன் "அம்பேத்கார்கள்" உருவாகவில்லை?!

காந்தி, என்னதான் நம்ம தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப் பற்று அதிகம். காரணம் என்னனா, காந்தி , பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு பெரிய காரணம், காந்தி கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை! இப்போ காந்தியே ஒரு தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால்? அவர் போராடி இவ்வளவு மேலே வந்திருப்பதுக்கு எல்லாம் சாண்ஸே இல்லை!

காந்தி உயர் சாதியில் பிறந்தது அவர் தப்பில்லைதான்! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா இருந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! இருந்து இருக்க முடியாது! இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம், இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்! காந்தி மேலே எனக்கு நெறைய மரியாதை எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே கத்துக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு நெறைய சாதகங்கள் இருந்தன. அப்புறம் காந்தி பொறந்தது குஜராத்! தமிழ்நாடு இல்லை! தமிழ்நாட்டில் பொறந்து இருந்தா ஒரு வேளை வீணாப்போயி இருப்பார்!

அடுத்து நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்! இது உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கனும்! என்னைத் தவறா புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை நான் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி வளர்ந்து நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வ்ளவு தன்னம்பிக்கை இருந்து இருக்கனும்? ஒரு வேளை அம்பேத்கார் தமிழ் நாட்டில் பொறந்து இருந்தால்? நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு! நம்ம ஊர் உயர்சாதி முட்டாள்களால் அம்பேத்கார் படித்து மேலே வரவிடாமல் சுத்தமாக தடுத்து இருக்கலாம்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கக் பட்டுக்கூட இருக்கலாம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா என்ன?

பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப் பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும் வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல் செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா? அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை அவர்களுக்குகாக இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும் மனிதர்கள்தான், ஏன் அவர்களை இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்னு யோசிக்கயாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை இருந்ததா? இல்லை திறந்த மனது இருந்ததா? னு பார்த்தால் கெடையவே கெடையாது என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டு தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் முழு கவனம் செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல் களையோ பற்றி பற்றி இவங்க கவலையே பட்டதில்லை!

பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்க்கொண்டு வந்து "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!

அம்பேத்கார்கள் நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக அந்த காலகடத்தில் முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனு தோனுது. நிச்சய்ம அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பிறகு மறைந்தும்தான் இருப்பார்கள். அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம், தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்கள்! நிச்சயம் இதில் இவர்கள் பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.

ரொம்ப யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்) எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லிட்டுப் போகலாம்! இல்லைனா இருக்கவே இருக்காரு நம்ம கடவுள். அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் சீரழிக்கும்போது?

குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த சிந்தனைகளின் தொகுப்புதான் இது!

ராம்கோபால் வர்மாவின் ரத்தசரித்திரம்-2 படுதோல்வி!


தமிழைப் பொறுத்தவரையில் இது ஒரு "டப்" படம்தான். நம்ம சூர்யா அபாரமாக நடித்துள்ளதால் "டப்" ரைட்ஸ்க்கு போட்ட காசை எடுத்துடுவாங்க. ஹிந்தியிலும், தெலுகு சினிமாவிலும்தான் இந்தப்படம் முக்கியமாக எடுக்கப்பட்டது. ராம்கோபால் வர்மா பத்தி பேச எல்லாம் எனக்குத் தகுதி இருக்கானு தெரியலை. ஏன்னா இவர் படத்தில் உள்ள வயலண்ஸ் கொஞ்சம் என்னை பயமுறுத்துவது மட்டுமல்லாமல், இந்த ஆளு குப்பைய படமா எடுத்தாலும், அதையும் கோபுர உயர லெவெலுக்கு எடுத்துக்கொண்டுபோகும் அளவுக்கு பதிவுலகில் சிலர் இருக்காங்க.

பாக்ஸ் ஆஃபிஸில் இந்தப் படத்தின் நிலவரம் என்னனு பார்த்தால்,

* ஹிந்தியில் பயங்கர ஃப்ளாப்! முதல் வீக் எண்ட்லயே தியேட்டரில் ஈ ஓட்டுறாங்களாம்.

* தெலுகுல எப்படினா? அங்கேயும் ரிலீஸ் செய்து ஐந்து நாட்களில் தியேட்டரில் கூட்டம் கொறைந்து விட்டதாம்.

ஆக, ரத்தசரித்திரம் 1 & 2 ராம் கோபால் வர்மாவின் ஃப்ளாப் படங்களில் இடம் பிடிக்கின்றன!

சூர்யாவின் நடிப்பு, தெலுங்கு மக்களிடமும் மற்றும் விமர்சகர்களிடமும் பெரிய அளவில் பாராட்டப் பட்டிருக்கு! அது ஒண்ணுதான் நல்ல விசயம்.

மற்றபடி ராம் கோபால் வர்மாவின் ஃப்ளாப் படம்தான் இந்த ரத்தச்சரித்திரம் 1 மற்றும் 2. அந்த உண்மையை தெரிந்து கொள்ளுங்க!

Monday, December 6, 2010

நடிகர் விஜய் ஒரு இடியட்டா?

நடிகர் விஜய் 3 இடியட்ஸ்ல ஒரு முக்கிய ஹீரோ என்று சொல்லும்போதே எனக்கு ஏதோ ஒரு மாதிரியான ஒரு ஃபீலிங். விஜய், பெரிய இயக்குனர் கீழெல்லாம் நடிக்க முடியுமா? விஜய் என்ன ரஜினியா? இந்த வயதிலும் சங்கரை மதித்து அவர் சொல்படி நடிப்பதற்கு? அதிலும் மூனு ஹீரோ உள்ள படத்தில் ஒரு ஹீரோ. ஃப்ரெண்ட்ஸ் ல சூரயாவுடன் நடித்து சூர்யா புகழைத் தட்டிக்கிட்டு போயிட்டார். இந்தப்படத்தில் என்ன ஆகப்போகுதோ பார்க்கலாம்னு பார்த்தால், விஜய் ஏதோ சாக்குச் சொல்லி இந்த் ப்ராஜெக்ட்ல இருந்து கழண்டு கொண்டதாக செய்தி வந்தது. அது உண்மை என்பதுபோல்இப்போது எல்லாரும் எழுதுறாங்க!

விஜய், சன் ஆஃப் சந்திரசேகரா ஒரு வினோதமான ஆகடர்தான். அப்பா இயக்குனரானதால நடிகரரானார். தனக்கென்று ஒரு இடத்தை தந்திறமையால் வென்றார். ஆனால், இவரை இயக்கும் இயக்குனர்கள் எல்லாம் கொஞ்சம் பெரிய ஆளாக அவர்கள் சொல்லும்படி இவர் கேட்கும்படி நிலைமை வந்தால் இவரால் அவர்களோட இணைந்து வேலை செய்ய முடியுமா? என்கிற கேள்விக்கு நான் பதில் தேடிக்கொண்டு இருந்தேன். அது விஜயால் முடியாது என்பது போல் இருக்கிறது இவர் 3 இடியட்ஸ்ல இருந்து கழண்டு கொண்டது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜயோட சூப்பர் ஸ்டார் கனவு சூர்யாவால் தகர்க்கப்பட்டு வருகிறது. இவருடைய அரசியல் ஆசை இவரை பாதாளத்தில் தள்ளிக்கொண்டு இருக்கிறது. இந்த் நிலையில் பெரிய இயக்குனர் சொல்ற படி நடிக்கமுடியாத ஒரு நடிகர் விஜய் என்பது உறுதியாகிறது.

விஜயின் இந்த "நான் ஒரு இடியட்டாக இருக்கமாட்டேன்" என்கிற முடிவு முட்டாள்தனமாந்து என பலர் நம்புகிறார்கள். What an idiot this Vijay is, to turn down a Shankar's movie? என்று திட்டுகிறார்கள் பலர். விஜய் ரசிகர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! விஜய் புத்திசாலியா? இல்லை தன் அரசியல் பேராசையால் சீக்கிரம் வீணாப்போய்விடுவாரா என்பதை காலம்தான் சொல்லனும்!

Sunday, December 5, 2010

நாறும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப ரகசியங்கள்!

தகாத வியாபாரம் செய்ததாக நடிகை மஞ்சுளாவுடைய படத்தை லெனின் என்ற பத்திரிக்கையாளர் வெளியிடும்போது எல்லோருமே கொதித்தெழுந்தோம். ஆனால் இன்னைக்கு விஜயகுமாரின் மகளே அவர் குடும்ப மானத்தை வாங்குகிறார்.

நடிகர், நடிகை வாழ்க்கையில் பணம் மட்டும்தான் நெறைய இருக்கும், மற்றபடி நடிகைகள் வாழ்க்கை மோசமாக இருக்கும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னைக்கு ஒரு நடிகையின் மகளே தன் தந்தை தாயின் வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கும்போது என்ன சொல்வதன்றே தெரியவில்லை!

கெளரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்தை வீழ்த்துவது, அவர் குடும்பத்தில் அவர் வீக்னெஸ் தெரிந்த அவர் மகன் தான். மற்றவர்கள் எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில் “கண்ணன் சிவாஜி” கேரக்டர் ஒரு துரோகிதான்!

இன்னைக்கு விஜயகுமாருக்கு எதிரியாக அவர் மகள் வனிதா! தன் குடும்பத்தில் இருந்தவர்கள் எதிரியாகும்போது அவர்களை எதிர்த்து வெற்றிபெறுவதென்பது முடியாது என்பதை விட, அர்த்தமற்ற ஒரு வெற்றி. அதில் படும் காயங்களை ஆற்றுவதென்பது முடியவே முடியாது. நடிகர் விஜயகுமார் நல்ல நடிகர் மற்றும் மனிதர் என்கிற ஒபினியன் பரவலாக இருந்து வந்தது. அவர் மகள் வனிதா தன் மனதில் உள்லதை எல்லாம் கொட்டி அதை நாறடித்துவிட்டார். இதில் சிறுவயதில் தன் குடும்ப நிலை கண்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வனிதா சொல்லும்போது, அவர் மேல் பரிதாபம்தான் வருகிறது எனக்கு!

Saturday, December 4, 2010

செக்ஸ் என்கிற என்றுமே அடங்காத ஆசை!


இந்தக்காலத்து போர்ன் ஆசாமிகள் நினச்சுக்கிறது என்னனா அந்தக்காலத்தில் வாழ்ந்த நம் மக்கள் எல்லாம் தேவையான அளவு செக்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலை. ஒருவனுக்கு ஒருத்தினு கட்டுப்பட்டித்தனமா வாழ்ந்து வாழ்க்கைய வீணடிச்சுட்டாங்க! செக்ஸ் பத்தி சரியாத் தெரியாமலே வாழ்ந்து முடிச்சுட்டாங்க. இப்போ நாங்கதான் விதவிதமா தெரிஞ்சுக்கிட்டோம்னு நெனச்சுக்கிறாங்க.

ஆனால் உண்மை என்னனா நீ ஆயிரம் பெண்களுடன், லட்சம் தர உடலுறவு கொண்டாலும், உனக்கு அந்த காம ஆசை (desire for sex ) தீரப்போவதில்லை. ஆயிரத்து ஒண்ணுக்காக நீ நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டுத்தான் அலைவ. 90 வயதான பிறகும் உனக்கு ஒரு “ஹாட் சிக்” பார்த்து அவளோட காமம் கொண்டால் எப்படியிருக்கும்? நு காம ஆசை வந்து அது நிராசையாகத்தான் முடியும். ஆக மொத்தத்தில் நீ எந்த வகையிலும் இந்தப் பாடத்தை படித்து முடித்த திருப்தி ஒருபோதிலும் வருவதில்லை. ஆக, எல்லாம் அறிஞ்ச மேதாவியான உன் வாழ்க்கையிலும் உன் “காம ஆசை” நிராசையாகத்தான் முடியுது.

நம்ம புத்தர் எல்லாரும் மாதிரித்தான் பிறந்து, டீனேஜராக கி, கல்யாணம் பண்ணி செக்ஸ் வச்சுக்கிட்டு பிள்ளையும் பெத்தார். 35 வயசுல இருந்து “காம ஆசை” (desire for sex) யை அடக்கி வாழ ஆரம்பிச்சாராம். எவ்ளோதான் விதவிதமா "காம லீலைகள்" செய்தாலும் “காமம் கொள்ளனும்னு வருகிற ஆசை” யை ஒழிக்க முடியாது. ஆனால் 35 வ்யதில் புத்தர் “காம ஆசை”யை ஒழிச்சுட்டார். அதனால்தான் அவர் உன் முன்னோர்களைவிட, உன்னைவிட “க்ரேட்”!

இந்தக்காலத்து செக்ஸ் மேதாவிகள் தெரிஞ்சுக்க வேண்டியது.. எவ்ளோதான் விதவிதமா நீ செக்ஸ் ஆக்டிவிட்டி விதவிதமா வச்சுக்கிட்டாலும் மறுபடியும் இன்னொரு பெண்ணைப்பார்த்து அவள¨ அனுபவிக்க செக்ஸ் ஆசை வரத்தான் செய்யும். நீதான் எல்லவிதமான செக்ஸ்பத்தியும் செஞ்சிட்ட, அப்புறம் ஏன் இன்னும் அலையிற? செக்ஸ் பத்தி சரியாத்தெரியாதவர்கள்னு நீ நெனைக்கிற முன்னோர்களைவிட நீ என்னத்த பெருசா கிழிச்சுட்ட? உன் மேதாவித்தனத்துப்படி முன்னோர்களெல்லாம் செக்ஸ் தெரியாமலே வாழ்ந்துட்டாங்கனே வச்சுக்குவோம். ஆனா நீ இவ்ளோ செய்த பிறகும் நீயும் அதே குட்டையை சேர்ந்த மட்டைதான்! உனக்கு இன்னொரு பிரச்சினை என்னனா 90 வயசுல வயாகராவும் வொர்க் ஆகாது, உன் காம ஆசைத்தீ மட்டும் பிரகாசமா எரியும்! அதனால செக்ஸ்ங்கிறது ஒண்ணும் பெரிய விசயம் இல்லைங்கிறத இந்தக்காலத்து “போர்ன் மேதாவி”களெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

The activity of sex will never ultimately satisfy the desire for sex.

இது நான் படித்ததில் பிடித்த ஒண்ணு. இது நகல்தான்! ஒரிஜினல் ஆங்கிலத்தில் இங்கே!

Friday, December 3, 2010

கலாச்சார சீரழிவுகள்! நட்பு?!

கலாச்சாரம் என்பது யார் ரெண்டுபேர் படுத்து எப்படி உடலுறவு கொள்ள்லாம் என்பது பற்றி மட்டும் விவாதிப்பது இல்லை. "எவன் எவளோட படுத்தால் எனக்கென்ன? அது அவங்களுக்குள்ள பிரச்சினை!" யினு கொஞ்சம் அந்த உறவை விவாதிப்பதை விட்டுவிட்டு வேற ஒரு விசயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்ப்படம், நாடோடிகள். இதிலே நண்பன் வீட்டில் படுத்திருக்கும் நண்பர்கள், நண்பனின் "காதலி"யே பார்த்து ஜொள்ளுவிடுவது போல் காட்சிகள் வருது. என்னுடைய மதிப்பீட்டில் ஒரு சில படங்கள் ஒரு சில சீன் களாலேயே பூஜியம் மதிப்பெண்கள் பெறுகின்றன .

சமீபதில் ஒரு பதிவரின் 18 + ஜோக்கில் நண்பன் மனைவியை இழிவுபடுத்துவது போல ஒரு கேவலமான ஜோக் எழுதியுள்ளார்! அதைப் படிக்கும்போது எனக்கு நல்லாத்தான் வாயில வந்தது! ஜோக் என்கிற பேரில் என்ன வேணா எழுதலாமா? இல்லைனா இதுதான் இன்றைய நட்புக் கலாச்சாரமா? என்னால் முடிந்த ஒண்ணே ஒண்ணு அந்தப் பதிவுக்கு இரக்கமே இல்லாமல் நெகட்டிவ் மதிப்பெண்ணை வழங்கியது. ஆனாலும் இதை ரசிப்பவர்கள்தான் இன்றைய கலாச்சாரத்தில் அதிகம் என்பதை அந்தப் பதிவு பெற்ற மதிப்பெண்களிலும், வாசகர் பரிந்துரையிலும் இருந்து உணர்ந்தேன். இதுதான் நம்முடைய இன்றைய கலாச்சாரமா?

எனக்குத் தெரிய நான் வளர்ந்த சூழலில் பொறுக்கித்தனம் எல்லாமே செய்வார்கள். ஆனால் தன் நண்பனின் தங்கை, மனைவி, தாய் என்று வரும்போது தன் குடும்பப்பெண்களிடம் நடப்பதைவிட ஒரு படி மேலாக இந்த உறவுகளை மதிப்பதுதான் வழக்கம். தண்ணி அடிப்பான், கஞ்சா அடிப்பான், தேவடியாளிடம் போய் படுப்பான், அடிதடியில் இறங்குவான். ஆனால் தன் நண்பன்னு வரும்போது அவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் கொடுக்கும் மரியாதை (காசெல்லாம் செலவழிக்கிறானோ இல்லையோ) ஒரு தனி ரகம்தான்.

இதுதான் நான் வளர்ந்த மறத்தமிழர் கலாச்சாரம். அது நிச்சயம் சீரழிந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் நம் முன்னேற்றமா? இல்லை நாந்தான் நட்புனு எதையோ நெனச்சுக்கிட்டு கனவுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கேனா?

Thursday, December 2, 2010

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்

ஜெயா டிவியில் எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் கருத்துக்கள் பரிமாறுவது போல் அனுஹாசன் நடத்தும் "கண்ணாடி" என்னும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதுபோல் நிகழ்ச்சிகள் நான் இதுக்கு முன்னால பார்த்ததில்லை! எச் ஐ வி பாசிடிவா இருப்பவங்க தான் பட்ட கஷ்டங்களையும், மக்கள் எந்த அளவுக்கு எயிட்ஸ் நோய் எப்படிப் பரவும் என்று தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் என்பதை சொல்ல தைரியமாக வந்து இருந்தார்கள்.

மொதல்ல இவங்களைப் பார்த்தால், இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள்னு பாவமாக இருந்தது. அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு ரொம்ப பெருமையாக இருக்கு .

இந்த நிகழ்ச்சியில் ஒரு சில கேள்விகளுக்கு அதில் பங்குபெற்ற டாக்டர் சரியா பதில் சொன்ன மாதிரி தோனலை! குறிப்பா கீழே உள்ள ஒரு கேள்வி!

ஒருவர் டாக்டரிடம்:

ஒரு எயிட்ஸ் நோயாளி அடிபட்டு ரத்தம் சிந்தஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லப்படும்போது, டாக்டர்களே அவர்களை ட்ரீட் செய்ய பயப்படுகிறார்கள். டாகடர்கள் இப்படி இருக்கலாமா? என்கிற குற்றசாட்டுடன்.

இதற்கு பதில் சொன்ன டாக்டர், கொஞ்சம் கனிவா இதில் உள்ள ரிஸ்க் களை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னவிதம் ரொம்ப rude ஆக இருந்தது.

டாக்டர் சொன்ன பதில்: ஏன் பயப்படுறாங்கனா டாக்டருக்கு ஒட்டிவிடும்! நாங்களும் எயிட்ஸ் பேஷண்ட் ஆகிவிடுவோம். எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கு! அதனால்தான் பயப்படுகிறார்கள்னு சொன்னார்.

இதைவிட அந்த டாக்டர் நல்லா பதில் சொல்லி இருக்கலாம்னு தோனுச்சு! அதாவது அதுபோல் அந்த நோயாளியிடம் இருந்து வரும் ரத்தம் டாக்டர் உடம்பில் ஏதாவது உள்ள காயத்தில் பட்டால் டாக்டருக்கும் எச் ஐ வி வந்துவிடும். அதனால் எச் ஐ வி டாக்டருக்கும் பரவும் சாண்ஸ் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் டாக்டர்கள் கொஞ்சம் கவனமா இருக்காங்கனு சொல்லி இருக்கலாம்.

நடிகர் கமலஹாசன் அவர்கள் எச் ஐ வி அவேர்நெஸ்காக செய்யும் தொண்டுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. "கண்ணாடி" போல் நெறைய டி வி நிகழ்ச்சிகள்தான் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு சொல்ல ஒரு சிறந்த வழினு தோனுது.
-------------

எச் ஐ வி சம்மந்தமா 2 வருடம் முன்னால நான் எழுதிய பதிவுக்கு லின்க் இங்கே தர்றேன். இதையும் படிச்சுப் பாருங்க!

நீங்கள் HIV பாசிடிவா?

Wednesday, December 1, 2010

அந்தணா! திருடுறது தப்புண்ணா!

அறிவுகெட்ட அந்தணா! திருடுறது தப்பு இல்லையா? அதாவது மிஷ்கின் ஜப்பானியப் படத்தை தழுவி தமிழ் சினிமாவுக்கு புதுமையா ஒரு படம் எடுக்கிறது?

என்ன பார்க்குறீங்க? யார் அந்த அந்தணன்னா?

Tamil cinema னு இணையதளத்தில் ஆர் எஸ் அந்தணன்னு ஓரு விமர்சகர் நந்தலாலாப் படத்துக்கு மிஷ்க்கினுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய சில வரிகள்.

'''ஒன்று மட்டும்தான் புரியவேயில்லை. நாம் எடுக்கிற படத்தை சுட்டு வேறு மொழிகளில் எடுக்கிறார்கள். பின் அதை ரீமேக் ரைட்ஸ் என்ற பெயரில் நாமே

பெரும் பணம் கொடுத்து வாங்கி தொலைக்கிறோம். மறுமுறையும் பார்த்து கைதட்டுகிறோம். அல்லது கவலைப்படுகிறோம். அல்லது விமர்சனம் என்ற பெயரில் துவைத்து காயப் போடுகிறோம்.

இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.

கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!'''

என்ன சொல்றாரு இவரு? ஒரு ஜப்பானிய மொழிப்படத்தின் ப்ளாட்டை திருடி, மிஷ்கின் தமிழ் சினிமாவை கவுரவப்படுத்துறாராம்மா? ஒரிஜினல் படத்தை எழவுங்கிறான் இந்த அறிவுகெட்ட முண்டம். அதை திருடிக்கொண்டு வந்தவன் மேதையாம்! இதிலே யாரை நாசமாப்போகனு சொல்றான் இந்த நாயி? படம் பார்ப்பவர்களையா? சபிக்கிறானாம்? படம் பார்க்கிறனுகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது! எங்கே இருந்து பிடிச்சுட்டு வர்றானுகனு தெரியலை இது மாதிரி லூசூகளை! ஒரு படத்தில் ப்ளாட் திருடப்பட்டால் அதை சொல்லத்தான் செய்வான். அவன் திருடினான் இவன் திருடினான்! எவன் யோக்கியன் ? என்பதெல்லாம் புல்ஷிட்!

ஏன் இந்த ஜப்பானைய பட டைரெகட்ருக்கு இதை அனுப்பி அவர் ஒப்பீனியன் கேக்கவேண்டியதுதானே? அந்த அளவுக்கு மிஷ்கினுக்கு தைரியம் இருக்கா? இல்லை இந்த அந்தணன் இதை மிஷ்கினுக்காக செய்வரா?

நிச்சயம் இந்த ப்ளாட் திருடப்பட்ட ஒண்ணுதான். இது மிஷ்கின் வாழ்க்கையில் வருகிற அனுபவம் இல்லை! புதுமையா படம் எடுக்கனும்னு ஜப்பானிய மொழி, ரஷ்யமொழிப் படங்கள் பார்க்கிறது, புத்தங்கள் படிக்கிறது- ஒரு சிலருக்கு இதே வேலைதான்.

ஒருவனுடைய க்ரியேட்டிவிட்டினா இதுதானா? எனக்கு உண்மையிலே தெரியலை. எங்கேயாவது போய் ஐடியாவைத் தேடி கொண்டு வருவதா க்ரியேட்டிவிட்டி? இயக்குனர் பாலு மஹேந்திரா இதேபோல்தான். எதையாவது ஒரு ஹாலிவுட் படத்தின் ப்ளாட்டை தமிழில் ஆக்கித் தருவது. அதாவது தமிழ் சினிமால பெரிய புடுங்கிகள்னு பேர் எடுக்கிறவன் நெறையப்பேர் திருடனுகதான்.

பாலச்சந்தர், பார்திராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்குனு சொல்லலாம். "குட்டி" "முள்ளும் மலரும்" "பசங்க" "முதல் மரியாதை" போன்ற படங்களெல்லாம் இதற்கு விதிவிலக்குனு சொல்லலாம். அந்தக்காலத்தில் பீம்சிங் எடுத்த சிவாஜி படங்களெல்லாம் இதற்கு விதிவிலக்கு.

அந்தணன், ஏன் இப்படி அடிச்சுக்கிறாருனு தெரியலை! ஒரு ப்ளாட் ஒரு படத்தை தழுவி எடுத்தால் அது ஒரு பெரிய நெகடிவ் பாயிண்ட் தான்! அதை சொல்லத்தான் செய்வாங்க!