Thursday, September 24, 2009

கமலஹாசன் என்கிற வியாபாரி!

வரவர கமலஹாசன் பெரிய சினிமா வியாபாரியா மாறிக்கொண்டு வருகிறார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கிற நம் நாட்டில், மைனாரிட்டிக்கு எதிராக படம் எடுத்தால், மைனாரிட்டி எதையும் சாதிக்க முடியாது, மேலும், நம்ம க்ரிடிக்ஸ் எல்லாம் ஒருமாதிரி ஹிந்துக்களுக்கு ஆதரவா எடுத்தால்தான் படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதை சமீபகாலமாக புரிந்துகொண்டார்.

* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!

* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.

"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?

அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!

ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்.

10 comments:

பிரசன்னா இராசன் said...

இதெல்லாம் நாம சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்லைங்க. தமிழ் சினிமாவில் புரையோடிப் போனது. இந்த மாதிரி ரெம்ப யோசிச்சா முடி தான் தேவையில்லாம கொட்டும்.:D

குடுகுடுப்பை said...

உஙகளுக்கு இன்னைக்கு நிறைய கூட்டம் வரும்.

நியாயப்படி கமல்ஹாசன்

75% இந்துவுக்கு 3 இந்து தீவிரவாதி. 12 % முஸ்லீமுக்கு முக்கால் முஸ்லீம் தீவிரவாதி, மீதி உள்ள மதங்களுக்கு % க்கு தகுந்த மாதிரி தீவிரவாதிகளை போட்டு படம் எடுத்திருக்கனும்.

நானும் எதாவது புதுசா ஆராய்ச்சி செய்து ஒரு பதிவு போடனும்.

வருண் said...

***பிரசன்னா இராசன் said...

இதெல்லாம் நாம சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்லைங்க. தமிழ் சினிமாவில் புரையோடிப் போனது. இந்த மாதிரி ரெம்ப யோசிச்சா முடி தான் தேவையில்லாம கொட்டும்.:D

24 September, 2009 1:57 PM***

நம்ம சொல்றத சொல்லிருவோம்ங்க! முடி போனாப் போகுது விடுங்க :)))

உங்கள் வருகைக்கு நன்றி :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

உஙகளுக்கு இன்னைக்கு நிறைய கூட்டம் வரும்.

நியாயப்படி கமல்ஹாசன்

75% இந்துவுக்கு 3 இந்து தீவிரவாதி. 12 % முஸ்லீமுக்கு முக்கால் முஸ்லீம் தீவிரவாதி, மீதி உள்ள மதங்களுக்கு % க்கு தகுந்த மாதிரி தீவிரவாதிகளை போட்டு படம் எடுத்திருக்கனும்.***

சும்மா சொல்லக்கூடாது, நீங்க கணக்கில் புலிதான் போங்க! உங்க விகிதாசாரத்தை பார்த்து நான் ஆடிப்போயிட்டேன் :)))

ILA(@)இளா said...

வெங்காய பக்கடாவுக்கு வெங்காயம போடனுமா?

வருண் said...

தேவை இல்லைங்க, இளா :)))

கடலை மாவு, உப்பு, எண்ணெய், மிளகாய், ஆனியன் இருந்தாப் போதும்! :)))

குடுகுடுப்பை said...

நான் என்ன கால்குலேட்டர் வெச்சிக்கிட்டா பின்னூட்டம் போடமுடியும். ஏதோ ஒரு புளோவில போட்டாச்சி:)))))))))

வருண் said...

***குடுகுடுப்பை said...
நான் என்ன கால்குலேட்டர் வெச்சிக்கிட்டா பின்னூட்டம் போடமுடியும். ஏதோ ஒரு புளோவில போட்டாச்சி:)))))))))***

I did not mean that. என்னைக்கேட்டால், கமலஹாசன் எல்லோரையும் ஒரே மதத்தவரா ஆக்கியிருக்கலாம். அவர் ஹிந்துவாக இருப்பதால் ஹிந்துக்களையே பயங்கரவாதிகளாக காட்டி இருக்கலாம்.

எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு ஹிந்துவையும் கலக்கனும். His politics is so obvious and he gained nothing out of it!

It is best to criticize your own religion and your own folks than someother religion or people.

He only irritated the innocent TN muslims who never go involved in such acts and created another problem instead of solving it!

மணிகண்டன் said...

***
என்னைக்கேட்டால், கமலஹாசன் எல்லோரையும் ஒரே மதத்தவரா ஆக்கியிருக்கலாம். அவர் ஹிந்துவாக இருப்பதால் ஹிந்துக்களையே பயங்கரவாதிகளாக காட்டி இருக்கலாம்
***

Not only that, he should mute all the dialogues if they are so. Coz, characters might have to talk about kashmiri pundit issue, godhra train or coimbatore bomb blast. Then also, we will write all these thought provoking articles !

வருண் said...

I don't think we have terrorist problem in TN now, though we have other problems.

This movie may be appropriate for NI but not for us!

சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி ங்கிற கதைதான்! :)