Tuesday, August 12, 2008

நீங்கள் HIV பாசிடிவா?

பயந்துவிடாதீர்கள்!

Please dont take it offensively!

எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை! நம்ம ஊரில் இப்போ கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ், கல்யாணத்திற்கு அப்புறம் மல்டிப்பிள் பார்ட்னெர்ஸ் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கு.

என்ன “முற்போக்குவாதிகள்” “அதனால் என்ன தப்பு? ” என்கிறீர்களா?

* இல்லைங்க, நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் நீங்கள் பெருமைப்பட்டாலும் இன்னொரு பக்கம், நம்ம பாதுகாப்பான உடலுறவு முறையை பின்பற்றுகிறோமா? என்கிற கவலை எனக்கு.

* நம்ம ஊரில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் “செக்ஸ் முற்போக்குவாதிகள்” இந்த மாதிரி "கேசுவல் செக்ஸ்" வச்சிக்கிறவங்க எல்லாம் கவனமாக ஆணுறை பயன்படுத்துகிறார்களா? இல்லை அதெற்கெல்லாம் நேரம் அமைவதில்லையா, கிடைப்பதில்லையா ?

* மல்டிப்பிள் செக்ஸ் பார்ட்னெர்ஸ் வைத்துள்ளவர்கள், முக்கியமாக ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?

ஒரு 10 வருடம் முன்னால், எச் ஐ வி பாஸிடிவ் கேஸ் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பதாக படித்தேன். ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை என்ன?

இதைப்பற்றி கொஞ்சம் பேசலாமே?

ஒரு முக்கியமான விசயம்! எச் ஐ வி, இரத்த பறிமாற்றத்தில், மருத்துவ கவனக்குறைவில் பரவுவதைப்பற்றி இங்கே நான் கவனம் செலுத்த விரும்பவில்லை! இங்கே உடலுறவு மூலமாக பரவுவதைப்பற்றி மட்டும் பேசுவோம்!

நான் என்ன நினைக்கிறேன் என்றால்,

* நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!

* ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் பார்ட்னர்கள் வைத்துள்ளவர்கள் ஆணுறை கட்டாயம் பயன் படுத்தனும்!

* நம்ம அரசாங்கம் ரேசன் கார்டுக்கு மாதம் மாதம் இலவசமா எல்லோருக்கும் ஆணுறை சப்ளை பண்ணனும்!

இல்லை, HIV/AIDS அப்படி ஒண்ணும் தமிழ்நாட்டில் "major threat" இல்லையா? நான் தான் பெரிது படுத்துகிறேனா? அப்படியென்றால் என்னுடைய அறியாமையை போக்குங்கள்! என்னை மன்னியுங்கள்!

61 comments:

கயல்விழி said...

//நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டாலும்//

வருண்,
திருமணத்துக்கு முன் உடலுறவு, ஒன்றுக்கு மேற்பட்ட துணைகள் வைத்திருப்பது - இதை எல்லாம் முன்னேற்றமாக கருதுகிறீர்களா? இதில் பெருமைப்பட என்ன இருக்கு?

கயல்விழி said...

//நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!
//

இது ரொம்ப நல்ல பாயிண்ட், ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் அரசு ரேஷன் கார்டுக்கு ஆணுறை வழங்குவதெல்லாம் சரிப்படாது. அது போல உலகத்தில் எந்த நாடாவது செய்கிறதா? இதெல்லாம் ரொம்ப ஓவர் என்பது என் கருத்து

வருண் said...

***வருண்,
திருமணத்துக்கு முன் உடலுறவு, ஒன்றுக்கு மேற்பட்ட துணைகள் வைத்திருப்பது - இதை எல்லாம் முன்னேற்றமாக கருதுகிறீர்களா? இதில் பெருமைப்பட என்ன இருக்கு?****


நான் நினைக்கவில்லை, கயல்.

நம் சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகள் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது! :-)

வருண் said...

*** ஆனால் அரசு ரேஷன் கார்டுக்கு ஆணுறை வழங்குவதெல்லாம் சரிப்படாது. அது போல உலகத்தில் எந்த நாடாவது செய்கிறதா? இதெல்லாம் ரொம்ப ஓவர் என்பது என் கருத்து***

நம்ம மட்டும்தான் கற்பு கற்பு, கலாச்சாரம், பண்பாடு னு அடித்துக்கொண்டு, எயிட்ஸ்லயும் முன்னேறிக்கொண்டு இருக்கோம், கயல்! :-(

கயல்விழி said...

எய்ட்ஸ் பரவுகிறது என்பதற்காக கலாச்சாரம், பண்பாட்டை மொத்தமாக தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை, காலத்து ஏற்ற மாதிரி மாற்றம் செய்யலாம்.

வருண் said...

*** கயல்விழி said...
எய்ட்ஸ் பரவுகிறது என்பதற்காக கலாச்சாரம், பண்பாட்டை மொத்தமாக தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை, காலத்து ஏற்ற மாதிரி மாற்றம் செய்யலாம். ***

உலகில், 100% கல்யாணம் முன்னால் உடலுறவு வைத்துக்கொள்பவர்கள், காதல், காமம், கல்யாணம் என்று வாழும் நாடுகளில் இந்த பிரச்சினையை எளிதாக சமாளித்துவிட்டார்கள்.

நாம்தான் எதையும் ஒத்துக்கொள்ளாமல், எல்லாவற்றையும் "கார்ப்பெட்" அடியில் தள்ளி பரிதாபமான நிலையில் இருக்கிறோம் கயல்!

Sundar சுந்தர் said...

கு க பற்றிய அடிப்படை அறிவு வருவதற்கே, சில பத்தாண்டுகள் ஆகி விட்ட நம் சமுதாயத்தில், இதற்க்கெல்லாம் ரொம்ப நாள் ஆகும். நம்ம ஊர்ல செக்ஸ் பற்றிய 'முன்னேறிய' கருத்துக்கள் ஏதோ நகர்ப்புற விஷயம் மட்டும் அல்ல. எந்த ஊர் சுற்றுலாத்தலத்திற்கு போனாலும், 'தள்ளு' கேசுங்களை பார்க்கமுடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். எச் ஐ வி ஆள் ஒன்றும் அறிய அப்பாவி மனைவிகளும், பிறக்கும் குழந்தைகளும் அவதி படுவதும் தினசரி நிகழ்வு தான். என்ன சில மாநிலங்கள் போல எச் ஐ வி சோதனை கட்டாயமாக்க பட்டால் சிலராவது நிச்சயம் தப்பிப்பார்கள். (இங்கே யு கே யில், 7 வயதில் செக்ஸ் கல்வி ஆரம்பிப்பது பற்றி விவாதித்து கொண்டு இருக்கிறார்கள் - 13 வயதில் பிள்ளை பெறுபவர்கள் அதிகமாகிவிட்ட படியால்).

வருண் said...

நீங்கள்சொல்வது முற்றிலும் உண்மை சுந்தர்.

எச் ஐ வி பற்றி "அவேர்னெஸை"கொண்டுவர ஒரு சின்ன முயற்சிதான் இது!

இவன் said...

//நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!
//


வரவேற்கிறேன்

manikandan said...

*****நம்ம ஊரில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் “செக்ஸ் முற்போக்குவாதிகள்”*****

This is basically to offset the imbalances that exists in the society. When we give undue importance to sex and if we act as if it is sacred, we basically get a few people who go on the other way and be very agressive on that.

manikandan said...

*****எய்ட்ஸ் பரவுகிறது என்பதற்காக கலாச்சாரம், பண்பாட்டை மொத்தமாக தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை, காலத்து ஏற்ற மாதிரி மாற்றம் செய்யலாம்*****

" காலத்து ஏற்ற மாதிரி மாற்றம் ". இத தான் சில பேரு தொலைக்கறதுன்னு சொல்றாங்க.

கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் - இது சில பேருக்கு காலத்துக்கு ஏற்ற மாற்றமா தெரியும். வேறு சில பேருக்கு கலாசார சீரழிவா தெரியும்.

ஒரு பொண்ண ஏமாத்தி ஒருத்தன் கல்யாணம் பண்ணி அவளுக்கு HIV கொடுத்தானா, அவன தடுக்கறதுக்கு என்ன முயற்சியோ அத பண்ணனும்.

ration kadaila ஆணுறை கொடுக்கிறது ஒரு கேனத்தமான யோசைனையா தான் எனக்கு படறது. மாசத்துக்கு ஒரு தடவ ஆணுறை வாங்கிகிட்டு அத தூக்கிகிட்டே அலைவாங்களா நம்ப நாட்டுல. ஆணுறை கொடுக்கிற automated machine வேணும்னா ஊர்ல நிறைய எடத்துல வைக்கலாம்.

நான் இருக்குற நாட்டுல prostitution பயங்கர பிரபலம். ஆனா வேறு சில ஐரோபியன் நாட்டுல இருக்கற மாதிரி அவங்கள HIV test எல்லாம் பண்றது இல்ல.

ஜோசப் பால்ராஜ் said...

//This is basically to offset the imbalances that exists in the society. When we give undue importance to sex and if we act as if it is sacred, we basically get a few people who go on the other way and be very agressive on that.//
வழிமொழிகிறேன்.

Anonymous said...

***வருண்,
திருமணத்துக்கு முன் உடலுறவு, ஒன்றுக்கு மேற்பட்ட துணைகள் வைத்திருப்பது - இதை எல்லாம் முன்னேற்றமாக கருதுகிறீர்களா? இதில் பெருமைப்பட என்ன இருக்கு?****


நான் நினைக்கவில்லை, கயல்.

நம் சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகள் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது! :-)


elorum ninaipathai ningal ezhuthuvathu ungaludaya blog ahadhu ungaludaya karuthai vishayam parimaruvathe blog ungal kutrai nan vanmayaha kandikaren. apo kalyanathuku munadi sex vachukarthu munetramnu soningana koncha nalla aids vanthathum munatram nattuku nalladhu makkal thoha kurayumnu solluveenga pola

nalla thane ezuthitu iruntheenga enachu intha mathiri ezudhi unga madhipe neengale kurachu kiteengaa

வருண் said...

***ration kadaila ஆணுறை கொடுக்கிறது ஒரு கேனத்தமான யோசைனையா தான் எனக்கு படறது. மாசத்துக்கு ஒரு தடவ ஆணுறை வாங்கிகிட்டு அத தூக்கிகிட்டே அலைவாங்களா நம்ப நாட்டுல. ஆணுறை கொடுக்கிற automated machine வேணும்னா ஊர்ல நிறைய எடத்துல வைக்கலாம்.***

LOL!!!

வருண் said...

****This is basically to offset the imbalances that exists in the society. When we give undue importance to sex and if we act as if it is sacred, we basically get a few people who go on the other way and be very agressive on that.***

Honestly I am completely lost! Kushboo is challenging that Is there anybody who has not slept with someone before marriage!

Several people support that and say the "world has changed".

Now they say something else!

வருண் said...

****நான் இருக்குற நாட்டுல prostitution பயங்கர பிரபலம். ஆனா வேறு சில ஐரோபியன் நாட்டுல இருக்கற மாதிரி அவங்கள HIV test எல்லாம் பண்றது இல்ல.****

நம்ம ஊர்ல இல்லாத பிராத்தலா???
பருத்திவீரனில் நடப்பதுபோல் பல சின்ன ஊர்களில் இன்றும் நடக்கிறது.

ஆணுறைனா என்னனு கேப்பானுக!

வருண் said...

***elorum ninaipathai ningal ezhuthuvathu ungaludaya blog ahadhu ungaludaya karuthai vishayam parimaruvathe blog ungal kutrai nan vanmayaha kandikaren. apo kalyanathuku munadi sex vachukarthu munetramnu soningana koncha nalla aids vanthathum munatram nattuku nalladhu makkal thoha kurayumnu solluveenga pola

nalla thane ezuthitu iruntheenga enachu intha mathiri ezudhi unga madhipe neengale kurachu kiteengaa

13 August, 2008 4:32 AM***

உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது! :-(

ஒருவனுக்கு ஒருத்தி, கல்யாணம் பிறகுதான் உடலுறவுனு நம்ம கல்ச்சரை ஃபாலோ பண்ணினால்,

எச் ஐ வி எல்லாம் நம்மை எதுவும் செய்ய முடியாது!

இல்லாததை இருக்கு நினைத்துக்கொண்டு இருக்கிறோமா என்கிற பயம் எனக்கு!

வருண் said...

****ஒரு பொண்ண ஏமாத்தி ஒருத்தன் கல்யாணம் பண்ணி அவளுக்கு HIV கொடுத்தானா, அவன தடுக்கறதுக்கு என்ன முயற்சியோ அத பண்ணனும்.***

பொண்ண ஏமாத்தி எச் ஐ வி கொடுப்பது ஒருவகை. அப்பாவி பொண்டாட்டிக்கு ஊர் மேய்ற புருஷன் கொடுக்கிற எச் ஐ வி அதைவிட கொடுமை! :-(

manikandan said...

*****Kushboo is challenging that Is there anybody who has not slept with someone before marriage*

இப்படி தான் குஷ்பூ சொன்னாங்களா ? ஆனா நீங்க குஷ்பூவ பத்தி சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும் :)-

Dr.Sintok said...

//ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?/


நீங்கள் பண்ணியதுண்டா?
நான் இல்லை............(இன்னும்)...

வருண் said...

***Dr.Sintok said...
//ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?/


நீங்கள் பண்ணியதுண்டா?
நான் இல்லை............(இன்னும்)...***

நான் பண்ணியிருக்கிறேன் (ப்ளட் டெஸ்ட்- வெஸ்டெர்ன் ப்லாட்).

நான் எச் ஐ வி நெகட்டிவ், Dr. Sintok! :)

வருண் said...

**** அவனும் அவளும் said...
*****Kushboo is challenging that Is there anybody who has not slept with someone before marriage*

இப்படி தான் குஷ்பூ சொன்னாங்களா ? ஆனா நீங்க குஷ்பூவ பத்தி சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும் :)-***

எனக்கு குஷ்பூ அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படி இருக்கிரவர்கள் "சேஃப் செக்ஸ்" ப்ராக்டிஸ் பண்ணுகிறார்களா? பண்ண வேண்டும் என்பதுதான் என் கவலை!

Anonymous said...

//எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை! நம்ம ஊரில் இப்போ கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ், கல்யாணத்திற்கு அப்புறம் மல்டிப்பிள் பார்ட்னெர்ஸ் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கு.

அதனால் என்ன தப்பு?

* நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டாலும் இன்னொரு பக்கம், நம்ம பாதுகாப்பான உடலுறவு முறையை பின்பற்றுகிறோமா? என்கிற கவலை எனக்கு. //

நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
1. "அதனால் என்ன தப்பு?" என்று கேட்கிறீர்கள்? அப்படி என்றால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்வீர்கள். அதேபோல் உங்கள் மனைவியும் எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். அப்படித்தானே?
அப்படித்தான் என்று சொல்வீர்களேயானால் நான் என் வாயை மூடிக்கொள்கிறேன். இல்லை என்றால் இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

கவனிக்கவும்.. இது பல்லாயிரக்காண பொதுஜனம் வந்து கவனிக்கும் தமிழ்மணம். என்னைப்போன்ற பிளாக்கர் அல்லாதோரும் வாசிக்குமிடம். நாக்கு குழறாமல் பேசுங்கள்.

பதில் சொல்லுக...

வருண் said...

மஹேஷ்!!!

ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க! அப்படித்தான்! :-)

வருண் said...

I dont think it is worth arguing with you, Mahesh! I rather take the bullet and admit that "that is what I am"!

Now you must keep quiet as you promised!

Thank you!

வருண் said...

***கவனிக்கவும்.. இது பல்லாயிரக்காண பொதுஜனம் வந்து கவனிக்கும் தமிழ்மணம். என்னைப்போன்ற பிளாக்கர் அல்லாதோரும் வாசிக்குமிடம். நாக்கு குழறாமல் பேசுங்கள்.***

பல ஆயிரம் அபலைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாகக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது!

பேசப்பேசத்தான் புரியும்!

மூடி மறைத்தால் முட்டாளாகவே வாழ்ந்து சாக வேண்டியதுதான்!

மொக்கைச்சாமி said...

1) ஒருவானுக்கு ஒருத்தின்னு இருந்துட்டா இந்த பிரச்சனையெல்லாம் இல்ல.
2) வளரும் சமுதாயத்துக்கு - செக்ஸ் education கண்டிப்பா வேணும். US'ல 4th grade students'kக்கு உயிர் கொல்லி நோய்கள் பத்தி சொல்லும் போது HIV பத்தியும் சொல்லறாங்க. (without touching the subject of sex or possible ways of spreading). வளர்ந்ததுக்கு அப்புறம் செக்ஸ் education class'la they link HIV with unsafe sex.
3) சென்ற தலைமுறை மற்றும் இந்த தலைமுறைக்கு - உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட விசிட் போகும் போது, டாக்டர்கள் இதைப்பற்றி விளக்கலாம். டிவி'ல சொல்றதவிட, டாக்டர் ஒன்-டு-ஒன் சொன்னா காது கொடுத்து கேப்பாங்கன்னு நினைக்கறேன். HIV பத்தின பயம் இருந்தா automatic'ah காண்டம் use பண்ணுவாங்க.
4) Pregnancy'க்கு அப்புறம் first doctor விசிட்'லையே HIV test பண்ணிடுவாங்க. So if your wife is HIV negative then நீங்களும் நெகடிவ் தான் (இதுக்கு ஒருவனுக்கு ஒருத்தின்னு இருக்கணும்)
5) Bachelor'ஆ இருந்தா (ஆண்/பெண்), வேலைக்கு சேரும் போது நிறைய கம்பெனிகள்ல ஒரு மெடிக்கல் டெஸ்ட் பண்ணுவாங்க. அப்போ HIV'யும் டெஸ்ட் பண்ணுவாங்க. (இந்தியால பண்ணுவாங்க, மத்த நாடுகள்ல பத்தி தெரியல).

வருண் said...

நன்றி, திரு. மொக்கைசாமி அவர்களே!

அழகாக சொல்லியுள்ளீர்கள் 5 பாயிண்ட்களில்! :)

வருண் said...

*** அப்போ HIV'யும் டெஸ்ட் பண்ணுவாங்க. (இந்தியால பண்ணுவாங்க, மத்த நாடுகள்ல பத்தி தெரியல).***

அப்படியா? எச் ஐ வி டெஸ்ட் செய்கிறார்களா??

இது நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. என் நண்பர் ஒரு வேலையில் கவன்மெண்ட் சேரப்போனார். அவர் சுகர், அல்புமின் டெஸ்ட் பண்னியதாகவும் எல்லாம் நார்மல் என்ரும் ஒரு 100 ரூபாய் அழுது டாக்டர் சான்றிதழ் வாங்கினார்! எந்த டெஸ்ட்மே பண்னவில்லை. இதுதான் நம் இந்தியா :-(

மொக்கைச்சாமி said...

நான் காலேஜ் முடித்து ஒரு MNC'யில் join செய்யும் போது மெடிக்கல் டெஸ்ட் செய்து கொண்டு வரச்சொன்னார்கள். அவங்களே hospital name, நேரம் எல்லாம் சொல்லிடுவாங்க. சும்மா கைய வீசிக்கிட்டு போனோமா, டெஸ்ட் எடுத்தோமா, வந்தோமான்னு இருக்க வேண்டியது தான். Life threating disease இருந்தா மட்டும் தான் offer'ah reject பண்ணிடுவாங்க.
இதில் HIV'யும் அடக்கம்.

வருண் said...

*** மொக்கைச்சாமி said...
நான் காலேஜ் முடித்து ஒரு MNC'யில் join செய்யும் போது மெடிக்கல் டெஸ்ட் செய்து கொண்டு வரச்சொன்னார்கள். அவங்களே hospital name, நேரம் எல்லாம் சொல்லிடுவாங்க. சும்மா கைய வீசிக்கிட்டு போனோமா, டெஸ்ட் எடுத்தோமா, வந்தோமான்னு இருக்க வேண்டியது தான். Life threating disease இருந்தா மட்டும் தான் offer'ah reject பண்ணிடுவாங்க.
இதில் HIV'யும் அடக்கம்.

13 August, 2008 11:03 AM***

அப்படியா? இப்பொழுதான் முதல் முறை கேள்விப்படுகிறேன்.

ரொம்ப நல்ல விசயம், திரு. மொக்கைசாமி!

ராஜ நடராஜன் said...

//பல ஆயிரம் அபலைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாகக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது!

பேசப்பேசத்தான் புரியும்!

மூடி மறைத்தால் முட்டாளாகவே வாழ்ந்து சாக வேண்டியதுதான்!//

வருண் இது நல்லாயிருக்கு:)

வருண் said...

*** ராஜ நடராஜன் said...
//பல ஆயிரம் அபலைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாகக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது!

பேசப்பேசத்தான் புரியும்!

மூடி மறைத்தால் முட்டாளாகவே வாழ்ந்து சாக வேண்டியதுதான்!//

வருண் இது நல்லாயிருக்கு:)***

நன்றி, திரு. ராஜ நடராஜன்! :-)

Selva Kumar said...

ஒரே நாள்ல ரண்டு பதிவு போட்டா எதுக்கு விரிவான பின்னூட்டம் போடறது ??

இன்னிக்கு நேரம் வேற இல்ல..

Selva Kumar said...

//நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!
//


நல்ல யோசனை ஆனால் இன்று HIV மட்டுமே பெரிய பிரச்சனை அல்ல

என்னை கேட்டால் Master Check-Up செய்ய வேண்டும் என்பேன்..

ஏன்னா இன்று இளவயதில் தாக்கும் நோய்களில் HIVயைவிட High probability மற்ற நோய்களுக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

Selva Kumar said...

//"நீங்கள் HIV பாசிடிவா?"
//

இல்ல..இல்ல

நான் உடலாலும் (இரத்தம்) உள்ளத்தாலும் பி பாசிட்டிவ் மட்டுமே..

வருண் said...

***வழிப்போக்கன் said...
ஒரே நாள்ல ரண்டு பதிவு போட்டா எதுக்கு விரிவான பின்னூட்டம் போடறது ??

இன்னிக்கு நேரம் வேற இல்ல..***

வாங்க வழிப்போக்கன்! :) நீங்கள் வந்து எட்டிப்பார்த்ததே போதும்! :-)

வருண் said...

*** நல்ல யோசனை ஆனால் இன்று HIV மட்டுமே பெரிய பிரச்சனை அல்ல

என்னை கேட்டால் Master Check-Up செய்ய வேண்டும் என்பேன்..

ஏன்னா இன்று இளவயதில் தாக்கும் நோய்களில் HIVயைவிட High probability மற்ற நோய்களுக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன்.***

ஆனால் எச் ஐ வி தானே ரொம்ப டேஞ்சரஸ் மற்றும் "ஒட்டுவார் ஒட்டி" (contagious)! :-)

வருண் said...

*** வழிப்போக்கன் said...
//"நீங்கள் HIV பாசிடிவா?"
//

இல்ல..இல்ல

நான் உடலாலும் (இரத்தம்) உள்ளத்தாலும் பி பாசிட்டிவ் மட்டுமே..

13 August, 2008 12:59 PM**

உள்ளத்தாலும் B +ve!!!

LOL!!!

Anonymous said...

வருண்,
இதே போன்ற கருத்து எனக்கும் உண்டு. சொல்லப்போனால்,
- வழிப்போக்கன் சொல்வது போல், எயிட்ஸ் மட்டுமில்லாமல், மாஸ்டர் செக்கப் இரு பாலரும் செய்திருக்க வேண்டும். இந்த சோதனை முடிவுகள் திருமண உறவை முடிவு செய்ய இன்றியமையாததாகவும், அடிப்பாடியானதாகவும் இருத்தல் மிக அவசியம்.

என் நெருங்கிய சொந்தத்தில் நடந்த ஒன்று... என் அண்ணனுக்கு (பெரியம்மா மகன்) நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி ஒரு வருடத்தில், குழந்தை பெற்றுக்கொடுத்து விட்டு அண்ணி மேலே போய் சேர்ந்து விட்டார். அவருக்கு வெகு நாட்களாகவே மூளையில் கட்டி இருந்து, அதை மறைத்து திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள், அவரை பெற்றவர்கள். இப்போது அண்ணன் தன் குழந்தையோடு துணையில்லாமல் புனேயில் வசித்து வருகிறார்.

எயிட்ஸ் பரிசோதனை-யை பொறுத்த வரையில், வைரஸ் தொற்றுக்கு பிறகு அதனை கண்டு பிடிக்க மூன்று மாதமாவது ஆகுமென்பதால், டெஸ்ட் ரிசல்ட்ஸ் எவ்வளவு லேட்டஸ்ட்-ஆக இருக்குமோ அவ்வளவு நல்லது. அப்படி எடுத்தாலும் திரும்பவும் 3 மாதம் கழித்து மீண்டும் டெஸ்ட் செய்வது நல்லது.

நம் ஊரில் என்ன ஹிம்சை என்றால் இதை மானப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு "எங்க பையனை/பொண்ணை சந்தேகப் படுகிறீர்களா?" என்று பையன்/பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை செய்ய வாய்ப்புகள் அதிகம்.

நம் சமுதாயத்துக்கு இதை உள் வாங்கி புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பக்குவம் வரவேண்டும்.

ரொம்ப அவசியமான பிரச்சினையை எழுதி விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

--வளவன்

கையேடு said...

மீண்டும் ஒரு பயனுள்ள உரையாடல் திரு.வருண்.

எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை, உலக அளவில் "அரசாங்க எண்ணிக்கையில்" இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைத்து குளறுபடி செய்கிறது என்று வேறு புகார்கள் உண்டு.

தகவலுக்காக:

//கோவை: தமிழக காவல்துறையில் 107 போலீசாருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதே போல தமிழக சிறைகளில் கைதிகள் மத்தியிலும் மிக வேகமாக எச்.ஐ.வி. பாதிப்பு பரவி வருகிறது.
காவல்துறையில் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரகசியமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. //

http://thatstamil.oneindia.in/news/2008/02/01/tn-107-tn-policemen-have-confirmed-hiv-infection.html


//ஆனால் எச் ஐ வி தானே ரொம்ப டேஞ்சரஸ் மற்றும் "ஒட்டுவார் ஒட்டி" (contagious)! :-)//

இவ்வரி ரொம்பவே பயமுறுத்துது. பல "ஒட்டுவார் ஒட்டி" நோய்களுக்கு மத்தியில் எய்ட்ஸ் பரவும் விதம் ஒன்றும் ஆபத்தானதல்ல என்று கருதுகிறேன்.

King... said...

நானும் வருகிற என்னோட பிறந்த நாளுக்கு யாருக்காவது ரத்தம் குடுக்கணும்னு இருக்கிறேன் அப்ப பாத்துக்கலாம்...

வருண் said...

***//ஆனால் எச் ஐ வி தானே ரொம்ப டேஞ்சரஸ் மற்றும் "ஒட்டுவார் ஒட்டி" (contagious)! :-)//

இவ்வரி ரொம்பவே பயமுறுத்துது. பல "ஒட்டுவார் ஒட்டி" நோய்களுக்கு மத்தியில் எய்ட்ஸ் பரவும் விதம் ஒன்றும் ஆபத்தானதல்ல என்று கருதுகிறேன்.***

கையேடு அவ்ர்களே!!

என்னை மன்னியுங்கள்! "ஒட்டுவார் ஒட்டி" என்று நான் சொன்னது தவறுதான்.

டி பி, அம்மை, போன்றவைகளைத்தான் அப்படி சொல்லனும் ஒட்டுவார் ஒட்டி என்று.

நிச்சயம் எயிட்ஸ் அப்படி பரவுவதில்லைதான்.

Thanks for your comment! :-)

வருண் said...

திரு. வளவன்!

இந்த மாதிரி ஏமாற்றுவது நம் அறியாமை! :-(

உங்க ரிலேடிவை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

எனக்குத்தெரிய நிறையப்பேர் இப்படி அவர்களின் அறியாமையால் செய்கிறார்கள்! ஒருவருக்கு துரோகம் செய்கிறோம் என்று நினைக்காமல் இன்னொருவருக்கு நன்மை செய்வதாக நினைக்கிறார்கள் :-(

கருத்தாழமுள்ள உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

வருண் said...

***King... said...
நானும் வருகிற என்னோட பிறந்த நாளுக்கு யாருக்காவது ரத்தம் குடுக்கணும்னு இருக்கிறேன் அப்ப பாத்துக்கலாம்...***

பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழனும்!

Anonymous said...

//ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க! அப்படித்தான்! :-) //

மிக்க நன்றி வருண்!

ஏனென்றால் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உள்ளுக்குள் அப்படி இருப்பதில்லை. அதனால் கேட்டேன். மற்றபடி நான் உணர்ச்சிவசப்படவில்லை. என் வாக்கை நான் காப்பாற்றுகிறேன். இதற்கு மேல் நானும் விவாதம் செய்யவில்லை.

வருண் said...

***ஏனென்றால் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உள்ளுக்குள் அப்படி இருப்பதில்லை. அதனால் கேட்டேன். மற்றபடி நான் உணர்ச்சிவசப்படவில்லை. என் வாக்கை நான் காப்பாற்றுகிறேன். இதற்கு மேல் நானும் விவாதம் செய்யவில்லை.***

நன்றி, மஹேஷ்! :-)

Thamira said...

நடராஜன் : //பல ஆயிரம் அபலைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாகக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது!

பேசப்பேசத்தான் புரியும்!

மூடி மறைத்தால் முட்டாளாகவே வாழ்ந்து சாக வேண்டியதுதான்!//

வருண் இது நல்லாயிருக்கு:)//


இதுக்கு ஒரு ரிப்பீட்டு.!

வருண் said...

***இதுக்கு ஒரு ரிப்பீட்டு.!***

நன்றி, தாமிரா! :-)

Anonymous said...

///***வருண்,
திருமணத்துக்கு முன் உடலுறவு, ஒன்றுக்கு மேற்பட்ட துணைகள் வைத்திருப்பது - இதை எல்லாம் முன்னேற்றமாக கருதுகிறீர்களா? இதில் பெருமைப்பட என்ன இருக்கு?****


நான் நினைக்கவில்லை, கயல்.

நம் சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகள் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது! :-)///

அது எந்த சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகள் ???? குஷ்பு மாதிரி ""ஒருவனுக்கு ஒருத்தி"" என வாழ்ந்துகொண்டிருக்கிற மற்றும் சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகளா?? அல்லது நீங்கள் எந்த சமுதாயம், மற்றும் முற்போக்குவாதிகளை சொல்லுகிறீர்கள்?? இல்லை உங்களுக்கே சரி என தோன்றுகிறதா???

கயல்விழி குறிப்பிட்டது போல நீங்கள் உபயோகபடுத்திய வார்த்தைளே தவறு நண்பரே.. :-(

வருண் said...

சபரி அவர்களே!

நம் சமுதாயத்தில் திருமணம் முன்பு உடலுறவு கொள்வது தவறு, தகாத உறவுகள் மற்றும் எக்ஸ்ட்ரா மாரிட்டல் ரிலேஷன்ஷிப் எல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு னு நீங்கள் நம்புவதுபோல் நம் மக்கள் எல்லோருமே இருந்தால் எந்த தொல்லையும் இல்லை. அந்த மாதிரி வாழ்பவர்களை பற்றி நானும் பெருமைப்படுகிறேன். அவர்களை நான் எந்தவகையில் அவமானப்படுத்தவும் இல்லை!

அதே நேரத்தில், "வேறு மாதிரி" வாழ்பவர்களை ஊக்குவிக்கவும் நான் முயலவில்லை! அதை கண்டிக்கவோ தண்டிக்கவோ நான் முயலவில்லை. காரணம்? இது அவர்கள் வாழ்க்கை! என்னுடையது அல்ல! உங்களுடையதும் அல்ல!

அப்படி வாந்தால்? அப்படித்தான் வாழமுடியும் என்றால், அப்படித்தான் வாழ்வேன் என்று முரண்டு பிடித்தால், என்ன செய்யனும் அவர்கள்???

அப்படி வாழ்ந்தால், கவனமாக "சேஃப் செக்ஸ்" ப்ராக்டிஸ் பண்ணுங்க, அப்பாவிகளுக்கும், அபலைகளுக்கும், எச் ஐ வி யை கொடுத்துவிடாதீர்கள் என்றுதான் சொல்ல வர்றேன்!

manjoorraja said...

மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பற்றி பதிந்திருக்கிறீர்கள்.

தற்போது மிகவும் அதிகமாகவே எய்ட்ஸ் நோய் இந்தியாவில் பரவியிருக்கிறது என்பது சமீபத்திய செய்தி.

எச்சரிக்கைகள் செய்யப்பட்டாலும் கூட அது இன்னும் தீவிரமாக செய்யப்படவேண்டும். பள்ளிகளிலும் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதைவிட ஒரு மருத்துவர் மூலம் சொல்லிக்கொடுப்பது மிகவும் நலம் பயக்கும்.

வருண் said...

*** மஞ்சூர் ராசா said...
பள்ளிகளிலும் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதைவிட ஒரு மருத்துவர் மூலம் சொல்லிக்கொடுப்பது மிகவும் நலம் பயக்கும்.***

வாங்க, திரு. மஞ்சூர் ராசா!

"மருத்துவர் சொல்லிக்கொடுக்கலாம்" என்கிற உங்கள் ஆலோசனை, மிகவும் பாராட்டத்தக்க ஒரு நல்ல ஆலோசனை!

என்னைக்கேட்டால் இதற்காகவே சில டாக்டர்களை ஒவ்வொரு ஊரிலும் அப்பாயிண்ட் பண்ணலாம். முழுநேர வேலையாக அறியாமையில் வாழும் மக்களையும், அறியாப்பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இந்தப்பாடம் சொல்லிக்கொடுக்கலாம்!
டாக்டர்கலெல்லாம் பாலிடிக்ஸ் செய்வதற்கு பதில் இதுபோல் ஏதாவது உறுப்படியான காரியம் செய்யலாம்!

Sundar சுந்தர் said...

//வருண் said...
இது அவர்கள் வாழ்க்கை! என்னுடையது அல்ல! உங்களுடையதும் அல்ல!//
சரியா சொன்னிங்க. என்ன பண்றது, நிறைய பேருக்கு liberal ன்னாலே morality யோட நேர் எதிர்ன்னு நினைக்கிறாங்க. ரொம்ப சுலபமா தனிப்பட்ட முறையில தாக்க துணியறாங்க. not all those who respect rights of gays are gays - பதிவுலகத்திலேயே இந்த கதின்னா நேர்ல... கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கோங்க! உங்களுக்கு தோணறதை தொடர்ந்து எழுதுங்க.

வருண் said...

***சுந்தர் said...
உங்களுக்கு தோணறதை தொடர்ந்து எழுதுங்க.***

நன்றி சுந்தர்! :-)

கையேடு said...

//என்னை மன்னியுங்கள்!//

அதை ஒரு குற்றமாகக் குறிப்பிடவில்லை, அவ்வரியை மாற்றியமைத்தால் இன்னும் தெளிவாகப் போய்ச்சேரும் என்ற எண்ணத்தில் எழுதிய பின்னூட்டம். எதற்குங்க மன்னிப்பெல்லாம்.

//கையேடு அவ்ர்களே!!//
"அவர்களே" எல்லாம் தவிர்க்கலாங்க வருண்.

மங்களூர் சிவா said...

/
நான் காலேஜ் முடித்து ஒரு MNC'யில் join செய்யும் போது மெடிக்கல் டெஸ்ட் செய்து கொண்டு வரச்சொன்னார்கள். அவங்களே hospital name, நேரம் எல்லாம் சொல்லிடுவாங்க. சும்மா கைய வீசிக்கிட்டு போனோமா, டெஸ்ட் எடுத்தோமா, வந்தோமான்னு இருக்க வேண்டியது தான். Life threating disease இருந்தா மட்டும் தான் offer'ah reject பண்ணிடுவாங்க.
இதில் HIV'யும் அடக்கம்.

/

ரிப்பீட்டு

நான் வேலை பார்ப்பது இந்தியன் கம்பெனிதான் ஆனால் இந்த டெஸ்ட் உண்டு.

வருண் said...

Mr. Ranjith!

One thing I should not be doing is MISGUIDING people with sloppy statements. Honestly I want to be corrected publicly by critics like u so that folks can understand the false information or sloppy statement of mine should not be taken as such.

I believe we understand each other very well.

BTW, when I wrote that I was only thinking HT, diabetes, impotency, heart diseases of that sort.

Anyway, thanks again!

Take it easy!

வருண் said...

***மங்களூர் சிவா said...

ரிப்பீட்டு

நான் வேலை பார்ப்பது இந்தியன் கம்பெனிதான் ஆனால் இந்த டெஸ்ட் உண்டு.***

Good to know that!

கயல்விழி said...

பலரும் எழுதி இருப்பது போல இது ரொம்ப தேவையாஞ விவாதம் வருண். Good work!

வருண் said...

நன்றி, கயல்! :-)