Friday, October 24, 2008

எனது ஈழச்சிந்தனைகள்

இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.

13 comments:

வருண் said...

நல்ல சிந்தனைகள், கயல் :-)

ஜோதிபாரதி said...

நல்ல சிந்தனை, உணர்வு!

ராஜ நடராஜன் said...

//அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும். //

தமிழ்நாட்டின் இப்போதைய ஆதரவு ஈழத்துக்கு ஒரு தீர்வாக அமையவேண்டும்.ஆனால் இடையில் சிலர் செய்யும் குளருபடிகள் இந்தப் பிரச்சினையை திசை திருப்பி விடச் செய்கிறது.

போரிடபவனைத் தவிர மாற்றாக ஒரு சமாதான தலைவன் அமையாத ஒரே காரணத்துக்காகத்தான் மக்களுக்கு மாற்று கொள்கையில் நம்பிக்கையில்லை.எப்படியோ நல்ல தீர்வினை அனைத்து ஈழத்து மக்களுக்கு விட்டு விடும் சூழல் உருவாக வேண்டும்.

நசரேயன் said...

நல்ல சிந்தனைகள்

கயல்விழி said...

நன்றி வருண், ஜோதிபாரதி

கயல்விழி said...

நன்றி வருண், ஜோதிபாரதி

கயல்விழி said...

கருத்துக்களுக்கு நன்றி ராஜநடராஜன் :)

வாங்க நசரேயன்

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு, தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

கயல்விழி said...

வாங்க குடுகுடுப்பை, நன்றி :)

ராமலக்ஷ்மி said...

// மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ?//

எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

//சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும். //

பிரார்த்தனையாக இவ்வரிகள் எல்லோர் மனதிலும் பதிய வேண்டும்.

கயல்விழி said...

வாங்க ராமலக்ஷ்மி மேடம், கருத்துக்கு நன்றி :)

vatha said...

இலங்கையின் இறையாண்மைக்கு உலைவைக்கும் தமிழக அரசியல்!

- இந்திரஜித்

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில், இந்திய மத்திய அரசு 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது செயற்பட்டதுபோல நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் வை.கோபாலசாமி, ப.நெடுமாறன், தொல்.திருமாவளவன், எஸ்.ராமதாஸ் போன்றவர்கள் மட்டுமல்ல கருணாநிதியும் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். இந்திய மத்திய அரசில் ஒரு பிரதான பங்காளியாகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவராகவும் உள்ள கருணாநிதி, இன்னொரு சுதந்திரமும் இறைமையும் உள்ள நாட்டின்மீது இந்தியா வன்முறையை பிரயோகித்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என கூறுவது, அப்பட்டமான ஜனநாயக விரோத நிலைப்பாடு என்பதுடன், மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதன் மூலம் கருணாநிதி இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விட்டதுமல்லாமல், இந்தியா 1955ல் பாண்டுங் மாநாட்டில் ஒப்புக்கொண்டு பின்பற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பஞ்சசீலக் கொள்கையையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார். அதுமட்டுமல்ல சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1929ல் எழுதிய கட்டுரை ஒன்றையும் கருணாநிதி சுட்டிக்காட்டி, இந்தியா இலங்கையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் வலியுறுத்தியுள்ளார். நேருவின் கட்டுரையில் அவர் இந்தியா பலவீனமாக இருப்பதனால் (அப்பொழுது பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்துது) அயல்நாடுகளில் உள்ள தனது பிரஜகளை பாதுகாக்க முடியாமல் இருக்கிறது என்றும், இந்தியா பலம் பெறும் காலம் வரும், அப்பொழுது அது தனது பிரஜைகளை பாதுகாக்கும் எனவும் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டிய கருணாநிதி, இப்பொழுது இந்தியா பலம் பெற்றுள்ளதால், அது இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதியின் கூற்றின்படி, இலங்கையின் வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்களும் இந்தியப் பிரஜைகள் என்றே அர்த்தமாகிறது. இது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் மட்டுமின்றி, இலங்கை தமிழர்களின் தனித்துவத்தையும்மதிக்காத, தமிழக, தமிழ் பேரினவாத சக்திகளின் ஆணவப்போக்காகும். இது ஒருபுறமிருக்க, இன்னொரு தமிழக இனவெறியரான ப.நெடுமாறன், இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டும்கூட,வன்னியில் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தத்தை நிறுத்தமுடியாதென, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியிருப்பது, இந்தியாவின் இறைமையை மீறும் செயலென அறிக்கை விடுத்துள்ளார். இதன்பொருள் இலங்கை என்பது இந்தியாவின் ஒருபகுதி என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது. இந்த அறிக்கையின் மூலம், கருணாநிதியைப்போலவே நெடுமாறனும் இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அப்பட்டமாக மீறி நிற்கின்றார். தமிழக இனவெறி அரசியல்வாதிகளின் இத்தகைய உரைகளும் அறிக்கைகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவை மட்டுமல்ல. தமிழகத்திலும் தமிழ் இனவாதத்தை தூண்டி, அங்கும் ஒரு பிரிவினைப் போக்கை வளர்க்கும் நோக்கம் கொண்டவை. இந்திய அரசு இதை முளையிலேயே கிள்ளியெறிய தவறினால், தமிழ்நாடும் ஒரு காஸ்மீராக, காலிஸ்தானாக, நாகலாந்தாக,அசாமாக மாறக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

1987 ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படைமீது, புலிகள் தொடுத்த வலிந்த தாக்குதல்களால் இந்திய அமைதிப்படை புலிகளுடன் யுத்தம் புரிய நேரிட்டது. அப்பொழுது இந்திய அமைதிப்படை தமிழர்களை கொல்வதாகக்கூறி, இந்திய மத்திய அரசையும் இந்திய அமைதிப்படையையும் கருணாநிதி கடுமையாக வசை பாடினார். புலிகளுடனான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினரில் 1255 பேர் கொல்லபட்டனர், பல ஆயிரக்கணக்கான காயமுற்றனர். இவ்வாறு பல இழப்புகளைச் சந்தித்த இந்திய அமைதிப்படை 1990 ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியபொழுது, இந்திய அமைதிப்படை தமிழர்களுடன் சண்டைபோட்டு விட்டதாகக்கூறி, கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்தார். இப்பொழுது அதே கருணாநிதி, 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது இந்தியா நடந்து கொண்டதுபோல இந்திய மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டுமென புத்தி பேதலித்தமாதிரி பிதற்றுகிறார். 1960களில் இந்தியா பின்பற்றிய அயலுறவு கொள்கைகளின் விளைவாக, தன்னைச்சுற்றிவர இருந்த நாடுகளான சீனா, பாகிஸ்தான், பர்மா, நேபாளம், சிக்கிம்,பூட்டான், ஆப்கானிஸ்தான் என எல்லாநாடுகளுடனும் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிக்கொண்டது. சீனாவுடன் 1962ல் ஒரு தடவையும்,பாகிஸ்தானுடன் 1965லும் 1971லுமாக இருதடவைகளும் எல்லையுத்தத்திலும் ஈடுபட்டது. சிக்கிமை 1972ல் தனது நாட்டுடன் இணைத்தக் கொண்டது. ஆனால் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரை,(முன்னைய காலங்களில் சோழப்பேரரசர்களின் படையெடுப்புகள் நடந்தபோதிலும்) இருநாடுகளுக்கிடையிலும் தரைத்தொடர்புகள் இல்லாததாலும், இலங்கையின் பண்டாரநாயக்க ஆட்சிகளின் புத்திசாதுரியத்தினாலும்,இந்தியாவுடன் பெரும் முரண்பாடுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் தகர்ந்து, ஜனதாதளம், பாரதீயஜனதா போன்ற கட்சிகளின் அரசுகள் உருவான பின்னணியில், அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் மேம்படத் தொடங்கின. குறிப்பாக சீனாவுடனும் பாகிஸ்தானுடனுமான இந்தியாவின் உறவுகள் முன்னெப்போதையையும் விட இப்பொழுது சிறப்பாக உள்ளன. ஆனால் தரைத்தொடர்புகளும் இல்லாமல், இந்தியாவைவிட எழுபதில் ஒரு மடங்கு சிறியதுமான,இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை,இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ்தேசிய வெறிபிடித்த சக்திகள் சீர்குலைத்துவிடக்கூடிய அபாயம் இப்பொழுது எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைமையிலான இலங்கை தமிழ் பாசிசசக்திகள்,இந்தியாவின் இறைமைக்கு சவால்விட்ட அளவுக்கு வேறு எந்த அயல்நாடும் அதற்கு சவால்விட்டது கிடையாது எனலாம். அதேபோல தமிழக தமிழ் இனவெறி சக்திகள் (முன்பு சோழமன்னர்களின் படையெடுப்புகளை விடுத்துப்பார்த்தால்) அளவுக்கு வேறு எந்தவொரு அந்நிய சக்தியும் இலங்கையின் இறைமைக்கு சவால்விடுத்ததும் கிடையாது. இந்த உண்மையை இந்திய அரசாங்கத்தின் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது வெளிசக்திகளின் தலையீட்டினாலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. அது முற்றுமுழுதாக இலங்கையின் அனைத்து இனங்களினதும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக நாட்டின் சனத்தொகையில் 70 வீதத்தை வகிக்கும் சிங்களமக்களின் புரிந்துணர்வும் உடன்பாடும் அதற்குத்தேவை. இலங்கையின் 2500 வருட வரலாற்றில் தமிழகமன்னர்களின் பல படையெடுப்புகளின் காரணமாக, இந்தியா என்றால் ஒர் ஆக்கிரமிப்பு நாடு என்ற சிந்தனை சாதாரண சிங்களமக்களின் மனதில் ஊற்ப்போய் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையைவிட்டால் தமக்கு வேறுநாடு கிடையாது என்ற கருத்தும் சிங்களமக்கள் மத்தியில் உண்டு. இலங்கை கௌதம புத்தரால் சிங்களமக்களுக்கென ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற நம்பிக்கையும் சிங்களமக்களுக்கு உண்டு. மேலும் இந்த கருத்தோட்டங்களை அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள இனவாதிகள் வளர்த்தும் வந்துள்ளார்கள். ஆனால் அதேநேரத்தில் சாதாரண சிங்களமக்கள், தமிழர் உட்பட ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. தீவிர இனவாதம் பேசிய சிங்கள அரசியல்வாதிகளை, இலங்கைச் சிங்கள மக்கள் எப்பொழுதும் நிராகரித்தே வந்துள்ளனர். இன்றுகூட இலங்கையில், இனங்களின் ஐக்கியத்தை விரும்பும் தமிழர்களின் விகிதாசாரத்தைவிட, அதை விரும்பும் சிங்களவர்களின் விகிதாசாரமே அதிகம். எனவே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அனுசரணை வழங்குவதானால், அது தலையீடு அல்லது நிர்ப்பதித்தல் என்ற வகையில் இருக்குமானால்,அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம்,தமிழக இனவாத அரசியல்வாதிகளின் சொற்படி செயற்படுமானால்,அது இலங்கையின் ஸ்திரதன்மையை பாதிப்பதுடன் மாத்திரம் முற்றுப்பெறாது. இந்தியாவையும் அது கடுமையாக பாதிக்கும். ஏனெனில் சில தமிழக அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக நம்புவது போல, புலிகள் சுயாதீனமான ஒரு தமிழ் தேசிய இயக்கமல்ல. அவர்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அனைத்து வேலைத்திட்டங்களிலும், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. அதில் முக்கியமானது இந்தியாவை சீர்குலைத்து, இந்திய உபகண்டத்தை யுத்தப்பிராந்தியமாக நிலை நிறுத்துவது. அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகத்தான சுதந்திரப் போராட்டத்தை நடாத்திய இந்திய மக்கள்,தம்மீது அந்நிய –உள்நாட்டு நாசகார சக்திகளால் போடப்பட்டுள்ள சதி வலையை நிச்சயம் அறுத்தெறிவார்கள் என்று நம்பலாம்.

http://www.thenee.com/html/251008-3.html

Ravi said...

Also u should think about the following

//கொடுங்கையூரில் ராசீவின் சிலை உடைக்கப்பட்டு விட்டது என்று தரையில் விழுந்து உருண்டு புரண்டு நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளான காங்கிரசுக்கட்சிப் பதடிகளே!....

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?

(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(3) ராசீவு கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுடத்தில் இருந்த சுப்பிரமணியம் சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?
(
5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் பேராய கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(10) மாவீரன் சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?

(11) புலனாய்வு செய்த புடலங்காய்களிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் உசாவவில்லை.

(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள காங்கிரசுக்கட்சி முண்டங்களே விடை கூறுங்கள்...
-www.tamilwin.com//