Friday, October 31, 2008

ரஜினி-கமல்!!! இது உண்மையா?!

கீழே உள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!

-----------------------------------
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி-கமல், நடிகர்கள் 'பேசா' உண்ணாவிரதம்?

[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 10:02.05 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!. இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே. சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

----------------------------

23 comments:

Arizona penn said...

நீங்க ஒரு விஷயம் புரிஞ்சிக்கலை, ரஜினி மௌன விரதம் இருந்திருந்தால் கூட குசேலன் என்ற குப்பை, குப்பைத்தொட்டிக்குத்தான் போயிருக்கும். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் "கத பறயும்போள்" மலையாள படத்தை தாறுமாறா பிச்சி சிதைச்சி குசேலன் அப்படின்னு ஒரு கேவலமான படத்தை எடுத்துட்டு அது ஓடாததுக்கு அரசியல் காரணம் வேற சொல்றது ரொம்ப ஓவர். இதைத்தான் "ஆட தெரியாதவள் கூடல் கோணல் அப்படின்னு சொன்னாளாம்" அப்படின்னு நம்ம அப்பத்தா கிராமத்தில சொல்லுவாங்க....

வருண் said...

அச்சச்சோ!!!

இந்த செய்திப்படி, ரசினி - கமல் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறார்களா? என்பது மட்டும்தான் என் கேள்வி! அதில் உள்ள மற்றதெல்லாம் விட்டுடுங்க!

அப்படி அவர்கள் கலந்துகொண்டால், இது நல்ல விசயம் தானே?

இல்லையா selwilki?

Anonymous said...

அதைவிட வீட்டிலேயே விழுந்து கிடக்கலாம், கருத்து சொல்ல முடியாதவர்களுக்கு என்ன இன உணர்வு இருக்க போகிறது?

வருண் said...

***அதைவிட வீட்டிலேயே விழுந்து கிடக்கலாம், கருத்து சொல்ல முடியாதவர்களுக்கு என்ன இன உணர்வு இருக்க போகிறது?***

ஆமாம், அப்படித்தான் நடக்கும்னு நினைக்கிறேன். வேறு எங்கும் இந்த செய்தியக்காணோம்! சும்மா "புருடா" மாதிரித்தான் இருக்கு!

Anonymous said...

கலைஞர் கருணாநிதி - தமிழர்களில் அனுபவமிக்க, மூத்த நாடகக் கலைஞன்

- தேசப்பித்தன்

வன்னியிலிருந்து அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் ஓர் இறுவட்டை பார்த்ததும், தமிழக முதலமைச்சரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்று 29ம் திகதி சுபமாக, அதாவது முதல்வர் கருணாநிதிக்கு சுபமாக முடிவடைந்துள்ளது.

ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி ஆறு அம்ச தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்துடன் (?) ஆரம்பித்த கூத்தை, சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் ரூபாயை வழங்கியும் இந்திய மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி கூறியும் நிறைவு செய்து வைத்துள்ளார் கருணாநிதி. இந்தியா என்ன செய்து கிழித்துவிட்டதென்று நன்றி கூறினாரோ, அது வேறு விடயம்.

கலைஞர் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியப் பிரதமர், காங்கிரசின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ் சினிமாத்துறை, இலங்கை அரச அதிபர், இலங்கை அதிபரின் ஆலோசகர் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தமது தரப்புக்களிற்கு ஏதுவான சாதகமான இலாபப் பங்குகளை பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.

இந்த கூத்தாட்டத்தில் பயனடைந்தவர் என்றால் அது கருணாநிதியும் அவரது குடும்ப அரசியல் தலைமையும், இந்திய மத்திய அரசின் அதிகார மையமும் எனலாம். இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையின் இனவாத அரசியல் தலைவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், ம.தி.மு.கவின் தலைவர்களும், தமிழ்ப் பற்றுக்கொண்ட தமிழ்த் திரை இயக்குநர்களும் எனலாம். ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் வஞ்சக நோக்கங்கள் எதுவுமின்றி ஈழத் தமிழர்களுக்காக வெயிலிலும் கடும் மழையிலும் தமது ஆதரவுக் கரங்களை உயர்த்திய சாதாரண தமிழகத் தமிழர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏமாறுவோம் எனத் தெரிந்தும் சொந்த மக்களையும் ஏமாற்றி, தாங்களும் ஏமாளியானவர்கள் யாரென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்களும்தான். ஒட்டுமொத்தமாக, இந்த நாடகத்தில் பழைய அனுபவத்தையே பாடமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றால் அதை மறுப்பதற்குமில்லை.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்பவற்றால் மதிப்பிழந்திருந்த கருணாநிதி தலைமையிலான ஆளும் தரப்பு, மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேவேளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற சட்டசபைத் தேர்தல்களுக்கான கூட்டணியாக மீண்டும் காங்கிரசுடனான தற்போதைய கூட்டை பலமானதொரு நிலையில் புதுப்பிக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதாவது மத்தியில் தமிழக கூட்டணியின் 40 எம்.பிக்கள் எனும் பலத்தை ஆளும் காங்கிரசுக்கு உணர்த்த வேண்டிய தருணமாகவும் இன்றைய காலம் தி.மு.கவிற்கு விளங்குகின்றது.

ஆனந்தவிகடன் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடாத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்ட புலிகள் இயக்கம் அதன் தலைமைத்துவம் ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பன பற்றிய தமிழக மக்களின் உணர்வலைகளை சாதகமாக பயன்படுத்த துணிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நாடகக் கூத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தெரியும்..

மூதூர் கிழக்கில் இருந்து தமிழ்மக்கள் விரட்டப்பட்டு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து அவலப்பட்டு, குண்டுவீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் முன்னூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டபோது வாய்மூடி கண்ணயர்ந்திருந்த கருணாநிதி, மத்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கையே தனது கொள்கை என்று சப்பைக் கட்டு கட்டிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இடமில்லை என்று கூறி, இலங்கை அகதிகளுக்கெதிரான போக்கை சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த கருணாநிதி

இன்று இறுவெட்டை பார்த்து கண்ணீர்விட்டு, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்க தயாராகின்றார் என்றால் அது தேர்தல் நோக்கத்தைத் தவிர வேறொன்றில்லை.

தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவிகளை துறக்க மாட்டார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போல இந்திய நடுவண் அரசும் கூட நன்கு அறியும். இருந்தும் கருணாநிதியின் நாட்டியத்திற்கு உணர்ச்சியூட்டி இலங்கையை மிரட்டியதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்காது என்பதும் உண்மை.

ஈழப் போராட்டத்தின் இறுதி மூலோபாயமாக ஆயுதப் போராட்டம் அமைந்துள்ளதும், அதன் முதன்மையானதும், ஒரே போராட்ட அமைப்பாகவும் ஜனநாயக மறுப்பையும், ஈவு இரக்கமற்ற படுகொலைக் கலாச்சாரத்தையும் பிரதான தந்திரோபாயங்களாக கொண்ட புலிகள் அமைப்பே தற்போது விளங்குகின்றது.

புலிகளை ஜென்ம விரோதியாக ஒதுக்கி வைத்துள்ள இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கக் கூடிய மாற்று அமைப்புக்களோ, வழிகளோ வடகிழக்கில் கிடையாது. அதற்காக புலிகளை மறைமுகமாகவேனும் ஆசிர்வதிக்கும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலையில் இலங்கை அரசின் யுத்த அரசியலுக்கு முண்டு கொடுப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு தன்னைவிட்டு விலகிச் செல்வதை தடுப்பதற்கு.

ஆனாலும் இலங்கை அரசோ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கப்பல்கள்மூலம் கனரக யுத்த உபகரணங்களை எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளுமின்றி தென்கோடியில் இறக்கிவிட்டு செல்ல பாகிஸ்தானும் ஈரானும் சீனாவும் தயாராக உள்ளன. பொருளாதார உதவிகளை வழங்கி, இந்திய - மேற்குலக இராஜதந்திர அழுத்தங்களை உதாசீனப்படுத்தக் கூடிய பலத்தை இலங்கைக்கு கொடுக்க சீனாவும் ஈரானும் தயாராக உள்ளன.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையாக இருந்த வட-கிழக்கு இணைப்பு விவகாரம் சிங்கள சமூகத்தால் தூக்கி வீசப்பட்டபோது கையாலாகாத நிலையில் இருந்த இந்தியா இன்று, கிழக்கு அதிகாரம் வேண்டும். வடக்கிற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது கூட்டறிக்கையின் சுவைக்கு இடப்பட்ட வாசனைத் திரவியங்களை போன்றதே. இந்தக் கோலத்தில், இந்தியாவுக்கு சொல்லி இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தச் செய்யலாம் என்று நினைத்த அனைத்து அரசியல் கூத்தாடிகளையும் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களை வைத்து இலங்கையை மிரட்டிய இந்தியா, மிகவும் பலவீனப்பட்டு போயுள்ள தனது இலங்கை சம்பந்தமான இராஜதந்திர நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்திக் கொள்ள கலைஞரின் உதவியை பெற்று செயற்பட முயற்சிக்கிறது போலும். இருந்தும் இந்தியா இதில் வெற்றிபெறப் போவதில்லை. எதிரியை வெல்ல முடியாவிடின் இணைந்துவிடுவதே மேல் என்று சொல்வதுபோல் இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவும் மறுபுறத்தில் முயற்சிக்கிறது.. ஆனாலும் அதிலும் இந்தியாவிற்கு வெறும் தோல்விதான். இலங்கை அரசின் நண்பர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் பல நண்பர்கள் நிற்கிறார்கள். உலகிலேயே சிறந்த நண்பன் இந்தியாதான் என்று புதுடில்லியில் பசில் கூறியது ஏமாற்று என்பது பசிலுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் புரியும்.

இவற்றையெல்லாம் மேவி கலைஞர் இந்திய மத்திய அதிகார வர்க்கத்துடன் இணைந்து நடாத்திய நாடகத்தின் பிரதான விளைவுகள் எனச்சிலவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

கருணாநிதி கொடுத்த (?) இரண்டுவார காலக்கெடு பகுதியில் வடக்கில் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையை இலங்கை அரசு இந்திய அரசின் கையறுநிலையை ஆசுவாசப்படுத்த மேற்கொண்டிருந்தது என்பதை, மீண்டும் நேற்று (காலக்கெடு முடிவின் முதல்நாள்) இலங்கை விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்ததாக, எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில், ஈழத் தமிழர்கள் சார்பாக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் எத்தகைய எழுச்சிகளையும் அரசும், அதன் தோழமைக் கட்சிகளும் கணக்கிலெடுக்காமலிருக்கக் கூடிய துணிச்சலையும் ஈழத்தமிழர்களுக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆதரவு நிலை வட கிழக்குக்கு வெளியே இருக்கப் போவதில்லை எனும் மோசமான நிலையையும் தமிழர்கள் தரப்பில் கருணாநிதியின் கூத்து உருவாக்கியுள்ளது.

ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம். அதேநேரத்தில் தமிழக அரசியல் தலைமைகளிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் அவர்களின் சுயநலமற்ற பங்கு, பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ʽஅ" இலிருந்து சொல்லிக் கொடுக்க யாராவது முன் வந்தேயாக வேண்டும். என்றோ ஒரு நாளிலாவது, ஈழத் தமிழர்களுக்காக அர்த்தபுஷ்டியான ஆதரவை வெளிப்படுத்த அதை நெறிப்படுத்தக்கூடிய தலைமை உருவாகும் என்று காத்திருப்போம்.

www.thenee.com

Anonymous said...

அதே கண்கள் - ரோஷோமான்
நாயகன் - காட் பாதர்
ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி - டோனி ப்ராஸ்கோ
குஷி - வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே - செரண்டிபிட்டி
காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் - டூ சார் வித் லவ்
காக்க காக்க - த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ
மே மாதம் - ரோமன் ஹாலிடே
குணா - டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி - ஷீ டெவில்
புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்
கஜினி - மெமண்டோ
துரை - கிளாடியேட்டர்
அந்நியன் - செவென்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்
அலிபாபா - த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி - மிஸ்டர் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு
பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா - கிகிஜிரோ
யோகி - சோட்சி
வாரணம் ஆயிரம் - கிளாசிக்

என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா?

Madhu Ramanujam said...

//பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்//

பாங்காக் டேஞ்சரஸ் வெளிவருவதற்கு பல மாதங்கள் முன்னரே வந்த படமல்லவோ பட்டியல்?

வருண் said...

***ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம்.***

நல்ல முடிவு!

வருண் said...

அனானி அண்ணா!

எதுக்கு இந்த லிஸ்ட்?

ஒண்ணும் புரியலை!

வருண் said...

***Madhusudhanan Ramanujam said...
//பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்//

பாங்காக் டேஞ்சரஸ் வெளிவருவதற்கு பல மாதங்கள் முன்னரே வந்த படமல்லவோ பட்டியல்?***

அப்படியா?

அவர் சொல்கிற லிஸ்ட்ல ஓரளவுக்குத்தான் உண்மை இருக்கு!

வெண்பூ said...

மைக் வெச்சி பேசிட்டுதான் இருக்கானுங்க வருண். பெரிய தலைங்க எல்லாம் பேசுவாங்களான்னு தெரியல...

இவனுங்க தமிழ்ப்பற்றுத்தான் சந்தி சிரிச்சிருச்சே!! ஒகேனக்கல் பிரச்சினையில உண்ணாவிரதத்துல கலந்துக்காதவங்க மேல கடும் நடவடிக்கை அப்படின்னானுங்க. ஆனா இங்க கலந்துக்காதது மட்டுமில்லாம, பெங்களூர்ல தமிழர்களுக்கு எதிரா நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட குத்து ரம்யா (திவ்யா) வாரணம் ஆயிரம் பட ஹீரோயின்.. கேக்க ஒரு நாதியில்ல.. இதுல அந்த படத்தை யாரு வாங்கியிருக்காங்கன்னு பாத்தீங்களா!! எல்லாருக்கும் அவங்கவங்க பிசினஸ்தான் முக்கியம், தமிழு, ****, மங்காணியெல்லாம் உங்களுக்கும் எனக்கும்தான்..

Anonymous said...

கலைஞருக்கும் கமலுக்கும் ரஜினிக்கும் வியாபாரம், பணமே பிரதானம்...
பாரதி ராசாவுக்கு படம் ஒண்ணும் இல்லை.. அதனால இவுக ஏதாச்சும்
பேசுனா அத வச்சி கொஞ்சம் அரசியல் பண்ணலாம்னு பாக்காரு..
விஜிய் விக்ரம் தலக்கு ஒரு எளவும் தெரியாது..
ரொம்பக் கூத்துய்யா.. இலங்கை பிரச்சனய வச்சுக்கிட்டு இப்படி போற
இந்தத் திரைக்கதைய நெனச்சு அளுவறதா சிரிக்கிறதா..

Anonymous said...

There is no link between 'Roshomon' and 'Athae Kangal'....Roshomon is one of the master piece of Akira Kuroseva..I thik the above list is a junk one....

ராஜ நடராஜன் said...

வணக்கம் வருண்.இப்பத்தான் தொலைக்காட்சியைப் பார்த்தேன்.ரஜனி,கமல் உள்பட எல்லா நடிகர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.வரவேற்போம்.

வருண் said...

*****வெண்பூ said...
மைக் வெச்சி பேசிட்டுதான் இருக்கானுங்க வருண். பெரிய தலைங்க எல்லாம் பேசுவாங்களான்னு தெரியல...888



யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு
(Saturday, 1st November 2008)


இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும், என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரித்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க முற்பகல் 11.30-க்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார்.
உண்ணாவிரதத்தில் அவர் ஆற்றிய எழுச்சியுரை:

இது மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு போராட்டம். பாதிக்கப்படுகிற தமிழ் மக்கள் குறித்த தங்கள் உணர்வுகளை கலைஞர்கள் வெளிப்படுத்தும் வகையில் நல்ல முறையில் ஏற்பாடுகளைச் செய்துள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன். ராதாரவி சொன்ன மாதிரி இது 3-வது கட்டப் போராட்டம்தான். அதை சரியாக செய்திருக்கிறீர்கள்.

இங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நல்லதுதான். கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். அந்த நல்ல மக்களுக்கு தங்கள் நாட்டில் வசிக்கிற உரிமை கூட இல்லை என்பது எத்தனை வேதனைக்குரிய விஷயம்!

அவர்கள் வேண்டுமென்றா இப்போது போரில் இறங்கினார்கள்... சாத்வீகமான முறையில் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பார்த்தவர்கள், வேறு வழியின்றி ஆயுதமேந்தியிருக்கிறார்கள்.
இப்போது உடனடித் தேவை யுத்த நிறுத்தம்தான். போரை நிறுத்துங்கள், இங்கே ஒலிக்கிற இந்தக் குரல் ராஜபக்சேவின் காதுகளுக்குக் கேட்க வேண்டும்.

ராஜபக்சே அவர்களே... உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தமிழ் மக்கள் கேட்பது என்ன? சம உரிமைதானே... அதைக் கொடுப்பதுதான் உங்களுக்கு நல்லது.

உங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. இந்த முப்படைகளை வைத்துக்கொண்டு, உரிமைக்காகப் போராடும் அந்த மக்களை உங்களால் அழித்துவிட முடிந்ததா? 30 ஆண்டுகளாக அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அப்புறம் என்ன படை உங்களுடையது! ஏன் இந்த நிலை... அந்த மக்கள் உண்மைக்காக, உரிமைக்காக போராடுகிறார்கள்.

உங்கள் ராணுவத்தின் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியவில்லை உங்களால். காரணம் உங்கள் ஈகோ. உண்மையை ஒத்துக்கிட்டு அவர்களின் உரிமைகளைக் கொடுங்கள்.

ஏழை மக்கள், சாமான்ய, அப்பாவி மக்கள் கஷ்டப்பட்டால் ஒரு நாடு உருப்படாது. அவர்களது மூச்சுக் காற்று மண்ணில் பட்டால் கூட அந்த நாடு உருப்படாது. பல ஆண்டுகளாக கொத்துக்கொத்தாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த மக்கள்.

அவர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கான இடத்தை, உரிமையை அந்த மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

இந்தக் குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை எனில் பெரிய நாடுகள் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிவரும் என்றார் ரஜினிகாந்த்.

பேச்சின் முடிவில் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.

வருண் said...

****Anonymous said...
கலைஞருக்கும் கமலுக்கும் ரஜினிக்கும் வியாபாரம், பணமே பிரதானம்...
பாரதி ராசாவுக்கு படம் ஒண்ணும் இல்லை.. அதனால இவுக ஏதாச்சும்
பேசுனா அத வச்சி கொஞ்சம் அரசியல் பண்ணலாம்னு பாக்காரு..
விஜிய் விக்ரம் தலக்கு ஒரு எளவும் தெரியாது..
ரொம்பக் கூத்துய்யா.. இலங்கை பிரச்சனய வச்சுக்கிட்டு இப்படி போற
இந்தத் திரைக்கதைய நெனச்சு அளுவறதா சிரிக்கிறதா..***

சுயநலமாக இருந்தாலும், இலங்கை தமிழருக்கு இந்த சுயநல உதவிகூட நல்லதுதானே?

வருண் said...

***ராஜ நடராஜன் said...
வணக்கம் வருண்.இப்பத்தான் தொலைக்காட்சியைப் பார்த்தேன்.ரஜனி,கமல் உள்பட எல்லா நடிகர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.வரவேற்போம்.***

நிச்சயம், வரவேற்கவேண்டிய ஒன்று தான்,ராஜ நடராஜன்!

Sundar சுந்தர் said...

I flew through colombo airport couple of times during last 2 years - it pains me to think of all the misery in that land that is so similar to our kerala & andamans. i recall all the srilankan ppl i met right from my school days - in 80's; .... a closer one was last month in uk...with a highway fastfood attendent (btw, i think lankan tamils are the majority ethnic group across uk fastfood/petrol bunk staff akin to gujjus in US) - i asked abt his family in SL and he mentioned abt them in refugee camps - in transit between towns and not having heard from them in last 2 days while news of shell attacks continued - for a moment i wondered how it would be to continue working odd hours in a foreign land with knowledge of having their family in harms way. the pain is very real - no matter who is right or what is right the pain must stop.

There is escalation of commitment - means, none of the outcomes could possibly justify the means and all the losses on the way.

Choices look bleak for the people - one is continued struggle, another is a possible commie style dictatorship with hostile borders. from tigers preference, I get a feel that an endless struggle seems to be more justified than a realistic settlement - may be the impact of 'esalating commitment'

Resolving conflicts of such scale requires approaches that are beyond individuals ego. I doubt there is any end to the ego wars going on there.

Hope some good sense prevails and those people get a piece of fundamental freedom and democracy we take so much for granted.

SK said...

எல்லாரும் மைக் புடிச்சு நல்லாவே பேசி இருக்காங்க.

இவுங்க பேசறதை எல்லாம் கேக்கறதுக்கு கேக்காமலையே இருக்கலாம்.

வருண் said...

///Sundar said...

i asked abt his family in SL and he mentioned abt them in refugee camps - in transit between towns and not having heard from them in last 2 days while news of shell attacks continued - for a moment i wondered how it would be to continue working odd hours in a foreign land with knowledge of having their family in harms way. the pain is very real - no matter who is right or what is right the pain must stop.///

அய்யோ! அவங்க கதையைக்கேட்டால் ரொம்ப ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும், சுந்தர்! :-(

வருண் said...

***SK said...
எல்லாரும் மைக் புடிச்சு நல்லாவே பேசி இருக்காங்க.

இவுங்க பேசறதை எல்லாம் கேக்கறதுக்கு கேக்காமலையே இருக்கலாம்.***

உதட்டளவில் இல்லாமல், மனசாட்சியுடன் தன் உள்மனதில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நம்புவோம், எஸ் கே! :-)

புதுகை.அப்துல்லா said...

hi sister go and see here

http://blogintamil.blogspot.com/2008/11/blog-post_02.html

:))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.