சந்தியாவுக்கு ஒரே குழப்பமா இருந்தது. இரவு சீக்கிரமே படுக்கைக்கு வந்துவிட்டாள். படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டு யோசித்தாள். அன்று மதியம் அவள் பார்க்கப்போன அந்த தமிழ்படம் "குருவி"யை அவளால் கவனித்துப் பார்க்கவே முடியவில்லை! அவள் நினைவெல்லாம் அவளுக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி உட்கார்ந்து இருந்த ரமேஷ் மற்றும் அவருடன் அமர்ந்திருந்த அந்தப்பொண்ணு பற்றியே இருந்தது. ஏனோ படம் முடிவதற்கு முன்பே தன் தோழியிடம் ஒரு சாக்கு சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டாள்.
இப்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் இங்கே எங்கே வந்தார்? யார் அந்தப் பொண்ணு? ரமேஷோட ஏன் படத்துக்கு வந்திருக்காள்? அவரோட மனைவியா? இல்லை கேர்ள் ஃப்ரெண்டா? சும்மா வெறும் ஃப்ரெண்டோ? எப்போ ரமேஷ் சிகாகோ வந்தார்? சும்மா விசிட் பண்ணுகிறாரோ? அவர் ரமேஷ்தானா? வேறு யாருமா? நிச்சயம் அவர்தான். யார் அந்தப்பொண்ணு? ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா. இப்படி என்னென்னவோ யோசித்து தலையை பிய்த்துக்கொண்டிருந்தாள்.
ரமேஷ், சந்தியாவின் பழைய ஃப்ரெண்டு மற்றும் ரொம்ப நெருங்கிப் பழகியவர். இருவருக்கும் இடையில் ஒரு சின்ன "ஈகோ க்ளாஸ்" ஏற்பட்டு அது ஒரு பெரிய "வைல்ட் டேர்ன்" எடுத்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது ஒண்ணும் அப்படி ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. ஆனால் ஒவ்வொரு சமயம் ஒரு சின்ன சாதாரண விஷயம்கூட இப்படி பெரிதாகி முடிந்துவிடுகிறது. அதன்பிறகு சந்தியாவுக்கு கல்யாணம் முடிவான போது, ஏதோ வேலை காரணமாக ரமேஷ் நியூ ஜேர்சிக்கு வேலை மாற்றலாகிப் போய்விட்டார். ஃபோன் நம்பர் கூட சந்தியாவுக்கு கொடுக்கவில்லை. அல்லது வேணும்னே கொடுக்கலையானு தெரியவில்லை. அவளை அதற்கப்புறம் அவர் கூப்பிடவும் இல்லை. அவள் இன்னும் அதே வீட்டு ஃபோன் நம்பர்தான் வைத்திருந்தாள். அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து தந்திகூட அவரிடம் இருந்து இல்லை. ஒரு வேளை என் பத்திரிக்கை கிடைத்து இருக்காதோ? ஒரு ஈ-மெயில் வாழ்த்துக் கூட இல்லை! அதன் பிறகு இரண்டு வருடமாகிவிட்டது அவரைப் பார்த்து. ரமேஷிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
இதற்கிடையில் சந்தியா திருமண வாழ்க்கையில் வெற்றியடையவில்லை. கல்யாணம் ஆகி 3 வாரம்கூட அவளை மணந்த ராஜுவுடன் சேர்ந்து வாழமுடியவில்லை அவளால். இப்போது இருவருக்கும் விவாகாரத்து ஆகிவிட்டது.
சந்தியாவின் ஃபோன் அலரியது! அவள் ஃபோனை எடுக்காமல் படுத்தே ரமேஷ் யோசனையில் இருந்தாள்.
"ஹாய் சந்தியா! நான் தான் ரமேஷ் பேசுறேன். மூவ்ட் பேக் டு விண்டி சிட்டி! சும்மாதான் கூப்பிட்டேன்" என்று போனது ரமேஷின் மெசேஜ்!
அவசரமாக எழுந்து வந்து ஃபோனை எடுத்தாள், சந்தியா.
"ஹாய் ரமேஷ்! ஹல்லோ!!"
"ஆர் யு தேர் சந்தியா?"
"யா"
"எப்படி இருக்கீங்க?"
"இருக்கேன். நீங்கள்?"
"நான் நல்லா இருக்கேன் சந்தியா. உங்களை இன்று தமிழ்ப்படம் பார்க்கப்போனபோது தியேட்டரில் பார்த்தேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. எப்படி இருக்கீங்க? கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?"
"தியேட்டரில் என்னைப் பார்த்தீங்களா! நானும் உங்களைப்பார்த்தேன் ரமேஷ். ஆனால் பேச முடியவில்லை"
"ஆமா, ஆனால் ஒரு ஃப்ரெண்டோட வந்திருந்தேன். படம் முடிந்த பிறகு உங்களோட பேசலாம்னு நினைத்தேன். ஆனால் உங்களை பிடிக்கமுடியவில்லை"
"நான், படம் முடியும் முன்பே வெளியில் வந்துவிட்டேன், ரமேஷ்! என்ன சிகாகோ பக்கம், ரமேஷ்?"
"இங்கே மூவ்பண்ணிட்டேன், சந்தியா. இங்கேதான் வேலை"
"ஆர் யு சீரியஸ்?"
"யெஸ்"
"எங்கே இருக்கீங்க?"
"ஹில்சைட்' ல இருக்கேன் சந்தியா!"
"ஹு வாஸ் இட்?"
"ஹூ?"
"அந்த பெண்? உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே?"
"ஓ அவளா? ஜஸ்ட் எ ஃப்ரெண்ட், சந்தியா. அவள் பெயர் லக்ஷ்மி. என் கம்பெணியில் வேலை பார்க்கிறாள். அவள்தான் இந்தப் படத்துக்கு என்னை அழைச்சுண்டு வந்தாள்"
"இல்லை யாருனு சும்மாதான் கேட்டேன்" என்று ஏதோ உளறினாள் சந்தியா.
"உங்க ஹஸ்பண்ட் வீட்டில் தான் இருகாரா? நான் பேசலாமா?"
"நோ, ரமேஷ்! நான் தனியா தான் இந்த வீட்டில் இருக்கேன்"
"ரியல்லி?! சாரி, நான் நியூ ஜெர்சி போகும் முன் என் நம்பர் கூட கொடுக்கல"
"இந்த சாரியெல்லாம் இப்போ எதுக்கு, ரமேஷ்? ஐ ஆம் நாட் கோயிங் டு அக்செப்ட் யுவர் சாரி! சரி, இப்போவாவது கூப்பிட்டீர்களே? தேங்க்ஸ்"
"ஹேய், கொஞ்சம் புதிர் போடாமல் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் ப்ளீஸ்?"
"எதைச் சொல்ல, ரமேஷ்?"
"உங்க கல்யாண வாழ்க்கைபற்றித்தான்.. என்ன ஆச்சு? ஒன்ஸ் ஐ யூஸுட் டு பி யுவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே? சொல்லக்கூடாதா, சந்தியா?"
"ஒண்ஸா? அப்போ சரி சொல்லக்கூடாதுதான்" என்று சிரித்தாள்.
"ஏய் ஏய், இப்போவும் நான் உன் ஃப்ரெண்டுதான் சந்தியா!"
"அதை ஏன் கேக்குறீங்க, ரமேஷ்! அது ஒரு வாரம்கூட ஒழுங்கா போகலை! ரமேஷ். இட் வாஸ் எ ஃபியாஸ்கோ"
"ஐ ஆம் சாரி டு நோ தட்! சரி ஏன்? என்ன ஆச்சு?"
"ரெண்டு பேரும் கம்ப்ளீட் மிஸ்-மேட்ச்! சேர்ந்து வாழ வழியே இல்லைனு எனக்கு தோனியது. அதனால் டிவோர்ஸ் ஆயிடுத்து. எல்லாம் நன்மைக்கேதான் னு போக வேண்டியதுதான் ரமேஷ்" என்று சிரித்தாள்.
"எனக்கு எதுவுமே தெரியாதே, சந்தியா!"
"சரி இப்போ தெரிந்துவிட்டதில்லையா?"
"இது ரொம்ப ஸ்ட்ரேஞ் சந்தியா"
"எது?"
"சரி விடுங்க"
"ரமேஷ்! ஒரு உதவி செய்ய முடியுமா,ப்ளீஸ்?"
"டெல் மி"
"ப்ளீஸ், பழைய மாதிரியே, வா போ என்றே என்னை கூப்பிடுங்களேன்?"
"எனக்கு நடந்ததை பற்றி எல்லாம் தெரியாது இல்லையா? அதனால் தான்..."
"சரி, இப்போ தான் தெரிஞ்சிடுச்சே?"
"ஓ கே சந்தியா"
"சரி இப்போ என்ன ஸ்ட்ரேஞ்னு சொல்லுங்க?"
"வெளிப்படையா சொல்ல முடியல சந்தியா"
"நீங்க ரொம்ப ஈகோயிஸ்டிக்கா, ரமேஷ்?"
"தெரியலையே! இருந்தாலும் இருக்கும்"
"தெரியலையா? சரி, உங்களைப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?"
"என்னைப்பற்றி என்னோட நெருங்கி பழகியவர்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால நீதான் சொல்லனும்!" ரமேஷ் சிரித்தான்.
"சொல்லவா?"
"ம்ம்"
-தொடரும்
பின் குறிப்பு: இது ஒரு கற்பனை கதைதான். எவ்வளவு தூரம் எழுத முடியும்னு தெரியலை. ஏதோ நேரம் கிடைக்கும்போது எழுதி எல்லோரையும் கொல்லுறேன். சரியா, வாசகர்களே? :-)
12 comments:
/*
தமிழ்படம் "குருவி"யை அவளால் கவனித்துப் பார்க்கவே முடியவில்லை!
*/
குருவியை எந்த சந்தோசத்துல போனாலும், பாதியிலே தெறிச்சி ஓடி விடுவாங்க
அநியாத்துக்கு இங்க்ளிபிசு இருக்கு, என் மர மண்டைக்கு ஒண்ணுமே புரியலை
விஜய் ரசிகர்கள் உங்களை அடிக்கவர போறாங்க, நசரேயன்! :)
**நசரேயன் said...
அநியாத்துக்கு இங்க்ளிபிசு இருக்கு, என் மர மண்டைக்கு ஒண்ணுமே புரியலை
24 November, 2008 3:51 PM***
சரி இனிமேல் கவனமாக தமிழ் வார்த்தைகள் போட்டே எழுதுறேன்.
புரியலைனு சொல்றது டூப்பு தானே? :)
நல்ல தொடக்கம். கலக்குங்க வருண்!
அது ஏன் எல்லோரும் சொல்லி வச்சா மாதிரி கடைசியில தொடரும் போடறீங்க.
சீக்கிரம் பார்ட் 2 போடுங்க.
***Sundar said...
நல்ல தொடக்கம். கலக்குங்க வருண்!
24 November, 2008 10:53 PM***
வாங்க சுந்தர்! ரொம்ப நன்றி சுந்தர்!:-)
***அமிர்தவர்ஷினி அம்மா said...
அது ஏன் எல்லோரும் சொல்லி வச்சா மாதிரி கடைசியில தொடரும் போடறீங்க.
சீக்கிரம் பார்ட் 2 போடுங்க.***
ரொம்ப நீளமா எழுதினால் போர் அடிச்சுடும்னு அப்பப்போ கொஞ்சம் நிறுத்தி இப்படி எழுதுகிறோம்!
உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் ரொம்ப நன்றிங்க, அமிர்தவர்ஷினி அம்மா!
பார்ட்-2 விரைவில் கொடுக்கப் பார்க்கிறேன் :-)
இது உண்மைக்கதை எனக்கு தெரியுமே.
***குடுகுடுப்பை said...
இது உண்மைக்கதை எனக்கு தெரியுமே.
25 November, 2008 7:15 AM***
வாங்க குடுகுடுப்பை!
சரி, சரி யார்ட்டயும் சொல்லாதீங்க! இப்படியா ஊரைக்கூட்டி சத்தமா சொல்றது! LOL
உங்கள் வருகைக்கு நன்றிங்க!
ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா.
epadi varun? penngaloda manavottamivalavu theliva therinjuthu? kayal's training???
but romba nalla iruku unga flow....
***நித்தி .. said...
ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா.
epadi varun? penngaloda manavottamivalavu theliva therinjuthu? kayal's training???
but romba nalla iruku unga flow....
25 November, 2008 9:35 PM ***
வாங்க nithi! :)
கயலிடம் நிறையவே கற்றுள்ளேன். :) :)
உங்க பின்னூட்டத்திற்கு நன்றி! :-)
Post a Comment