Friday, November 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 8

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
"Did you have inter****** with him?" என்னுடைய ஒரு நடிகரைப்பற்றிய பதிவுக்கு ஒரு சகோதரர் இப்படி ஒரு "கனிவான" பின்னூட்டம் எழுதி இருந்தார். பாவம், அவர் கூட பயணம் செய்பவர்களோடு எல்லாம் இண்டர்கோர்ஸ் வைத்துக்கொள்ளும் மனநோயாளி போலிருக்கிறது. சகோதரரே, அந்த பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய மனநோய் விரைவில் குணமாகவும் பிராத்திக்கிறேன். என்ன அந்த காமெண்டை டிலிட் பண்ணிட்டு பேசாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் இல்லை, கமெண்ட் பக்கத்தில் எழுதினால் ஒருவேளை கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது இல்லையா, அதனால் தான். இப்படி எல்லாம் எழுதி உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது? ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி!

பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி கடுமையாக எழுத எனக்கும் பிடிப்பதில்லை, சிலருக்கு இந்த மொழி தான் புரிகிறது, நான் என்ன செய்ய? சரி அதை விட்டுத்தள்ளுவோம், சில ஜென்மங்கள் என்ன திட்டினாலும் திருந்தாது. போன தொடரில் ஒரு விஷயத்தை சரியாக எழுதாமல் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதாவது, இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிக்க கூடாது என்ற பொருள் வந்துவிட்டது, நான் எழுத நினைத்தது அதுவல்ல.

படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை. நன்றாக படித்து, வேலை கிடைத்து ஒரு நிலையை அடைந்தப்பிறகு 50 வயதுக்காரர் என்ன, Anna Nicole மாதிரி 80 வயது மனிதரைக்கூட காதலியுங்கள், திருமணம் செய்துக்கொள்ளுங்கள், தவறே கிடையாது. காதல் வயதெல்லாம் பார்த்து வருவதில்லை, ஆனால் காதலை செயல்முறைப்படுத்தும்போது வயது வரம்பு அவசியம்! இது தான் நிதர்சனம், நம்பினால் நம்புங்கள்.

மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? வெஸ்டர்னர்ஸ் அப்படி எல்லாம் மறைக்க மாட்டார்கள், திருமணத்தின் போதே 'வெர்ஜின் இல்லை' என்பது நன்றாக தெரிந்தே திருமணம் செய்துக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்! ஏமாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து. அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு பெண் சுதந்திரக்கருத்துக்களை உதிர்ப்பவர்களும், தனியறையில் எப்படி என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. பெண் சுதந்திரம் எல்லாம் ஓவர் நைட்டில் கிடைத்துவிடாது.ஜாதி சமத்துவமே இன்னும் கிடைக்காத போது, ஆண் -பெண் சமத்துவம் கொஞ்சம் பேராசையே! சமத்துவமே வராது என்று சொல்லவில்லை, நிச்சயம் உடனே வராது என்பது மட்டும் உண்மை. இதை எல்லாம் சமாளிக்க முடியுமென்றால், You go girl!!! Sky is the limit!. இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும். நமக்கெல்லாம் Limit is the sky!

இதெல்லாம் புரியாதவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே எழுத முயலுகிறேன், பெற்றோர் கடினமாக உழைத்து நம்மை படிக்க வைக்கும் பணத்தை வீணாக்குவது தவறில்லையா? வீணாக்க விருப்பம் என்றால் சுயமாக சம்பாதித்து உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணாக்கவும். இன்றைய இளையத்தலைமுறை ஆண்களுக்கு தன்னம்பிக்கையுள்ள, படித்த, அதிகாரத்தில் இருக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கிறது, ஒரு நிலைக்கு வந்த பிறகு தானாகவே காதலிக்கும் வாய்ப்புகள் வரும், வேண்டுமென்றால் சுயம்வரம் வைத்து கூட வேண்டியவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தோழி சரஸ்வதியை(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)குறிப்பிடலாம். தானாகவே உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் பட்டியலில் அவளுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

யூனிவர்சிட்டியில் புதிதாக வந்து சேர்ந்த போது எங்கள் யாருக்குமே அவளை அவ்வளவு பிடிக்கவில்லை. ஒல்லியாக, நெடு நெடுவென்று சுடிதாருடன் வருவாள். Fashion sense என்றால் கிலோ என்ன விலை அவளுக்கு, இந்தியப்பெண்கள் குறைவு என்பதால் வேண்டா வெறுப்பாக அவளையும் சேர்த்துக்கொள்வோம். அவளுடைய குடும்ப பிண்ணனியை தெரிந்துக்கொண்ட போது பாவமாக இருந்தது. அப்பா உடற்பயிற்சி ஆசிரியர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், இவளுக்கு முன் ஒரு அக்கா, பின்னால் ஒரு தங்கை. கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாமல் ரொம்ப திணறி இருக்கிறார்கள். படிப்பு மட்டும் அவளுக்கு ரொம்ப நன்றாக வந்தது என்று சொன்னால் அது பச்சைப்பொய்! அதெல்லாம் இல்லை, அவள் ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் டிவி பார்க்கும் போது, வெட்டி அரட்டையடித்து பொழுதைப்போக்கும் போது, டான்ஸ் க்ளப்புக்கு போகும் போது- எதிலும் கலந்துக்கொள்ளாமல் படிப்பு, படிப்பு, படிப்பு!

அவள் உழைப்பெல்லாம் தேர்வுகளில் ஜொலித்தது, பேராசிரியர்கள் அவள் என்றால் மரியாதையாக பார்த்தார்கள். எங்கள் செட்டிலேயே அதிக க்ரேட் பாயிண்ட் ஆவெரேஜில் க்ராஜுவேட் பண்ணினாள். Fortune 500 கம்பனியில் உடனே இண்டர்னாக எடுத்துக்கொண்டார்கள், எங்களுக்கெல்லாம் ஒரு உப்புமா கம்பனிகளில் வேலை கிடைத்தது. 'வேலை கிடைத்துவிட்டதே' என்று எங்களை மாதிரி வெட்டியாக அவள் சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடவில்லை, தன் வேலை மட்டுமில்லாது, மற்றவர்கள் வேலைகளையும் கற்றுக்கொண்டாள். சில மாதங்களில் அவளை நிரந்தரமாகவே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சக தோழிகள் அவளை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தோம். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துக்கொண்டாள். சரஸ்வதி தற்போது 6 மாதமேயான அழகான பெண்குழந்தைக்கு அம்மா, Software quality control பிரிவில் ப்ராஜக்ட் லீட்! ஏதோ தேவதை கதை போல இருக்கிறது இல்லையா?

தேவதைக்கதை எல்லாம் இல்லை, இந்தப்பெண் பல போராட்டங்களை கடந்தே இந்த நிலையை அடைந்திருக்கிறாள். எத்தனையோ நாள் என்னிடம் தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதிருக்கிறாள்! எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்த நாள் நல்லதாக விடியும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவள் ஆண்களையே ஏறெடுத்துப்பார்க்காதை கவனித்து, ஒருவேளை லெஸ்பியனோ என்று கூட நினைத்திருக்கிறோம். இவளுடைய இந்நாள் கணவர், அந்நாள் காதலராக இருக்கும் போது ரெஸ்டாரண்டுக்கு அவரை அறிமுகப்படுத்த அழைத்து வந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறிவிட்டது. "I thought you are a lesbian!" என்று ஒரு தோழி வாய்விட்டே அலற, உடனே அனைவரும் ஆமோதித்தோம். பிறகு சூழ்நிலையை உணர்ந்து அவசரமாக அவளுடைய காதலரின் முகத்தைப்பார்த்தோம், பேயறைந்தது போல இருந்தது! இப்போதும் அதே எக்ஸ்ப்ரெஷனுடன் தான் உலா வருகிறார்(சும்மா ஜோக்):)

-நினைவுகள் தொடரும்

40 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

முரளிகண்ணன் said...

Very interesting and thought provoking posts. (This series).

wonderful. keep going

நசரேயன் said...

எல்லாத்தையும் படிச்சிட்டேன், எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை, ஆனா அற்புதமா எழுதி இருக்கீங்க.

துளசி கோபால் said...

//(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)//

அதானே அந்தப் பெயரில் பதிவரா யாரும் இல்லாம இருக்கணுமுன்னா.....

தீரத் தேடிப்பார்த்து நல்லா ஆராயணும்,இல்லே?:-)))))

ஆணோ பெண்ணோ தன்முனைப்பா வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரணும்.

Anonymous said...

//இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? //

Accept panna ready solla naangalum ready than.. :-))

ஸ்ரீதர்கண்ணன் said...

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு

உண்மை ஆனால் உங்கள் பதிவுகளில் ஆண்களை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

குடுகுடுப்பை said...

பெண்கள் பற்றிய பதிவு, வருகையை மட்டும் பதிவு செய்கிறேன்

குடுகுடுப்பை said...

பெண்கள் பற்றிய பதிவு, வருகையை மட்டும் பதிவு செய்கிறேன்

Anonymous said...

எல்லா ஆண்களும் கோவலன்களாக இருப்பதில்லை..சில ராமன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..அவர்கள் கண்ணகிய எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

கயல்விழி said...

வாங்க நசரேயன், நன்றி :)

கயல்விழி said...

//Very interesting and thought provoking posts. (This series).

wonderful. keep going

//

நன்றி முரளிக்கண்ணன் :)

கயல்விழி said...

//

அதானே அந்தப் பெயரில் பதிவரா யாரும் இல்லாம இருக்கணுமுன்னா.....

தீரத் தேடிப்பார்த்து நல்லா ஆராயணும்,இல்லே?:-)))))

ஆணோ பெண்ணோ தன்முனைப்பா வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரணும்.
//

வாங்க துளசி மேடம், ரொம்ப நன்றி :) :)

கயல்விழி said...

//

Accept panna ready solla naangalum ready than.. :-))//

வாங்க பைத்தியம், எந்த பைத்தியமும் அதை எல்லாம் அக்செப்டும் பண்ணாது, எந்த பைத்தியமும் வெளியே சொல்லவும் சொல்லாது. :) :)

கயல்விழி said...

//
உண்மை ஆனால் உங்கள் பதிவுகளில் ஆண்களை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.//

இருக்கலாம் ஸ்ரீதர் கண்ணன், எனக்கு Gender Bias இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நடுநிலைவாதியாகவே இருப்பது கடினம். தவறான கண்ணோட்டம் எது என்பதை சுட்டிக்காட்டினால் அதைப்பற்றி விவாதம் செய்யலாம். மாற்றுக்கருத்துக்களை நிச்சயம்வரவேற்கிறேன்.

கயல்விழி said...

வாங்க குடுகுடுப்பை, வருகைக்கு நன்றி :)

இது பெண்களுக்கான பதிவெல்லாம் இல்லை, சில இடங்களில் பெண்களை மட்டும் விளித்திருப்பேன் ஏனென்றால் "கற்பு" போன்றவை இருவருக்கும் பொது என்று சொல்லபட்டாலும் நடைமுறையில் அது பெண்களுக்கே பொருத்தப்படுகிறது. கல்வி போன்ற விஷயங்களை இரு பாலினருக்குமே பொருந்தும்.

கயல்விழி said...

வாங்க அனானிமஸ்

ராமன்கள் சீதையையோ அல்லது கண்ணகியையோ தேடுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் கோவலன்கள் அப்படிப்பட்டபெண்களைத்தேடுவதில் பிரச்சினை இருக்கிறது.

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரு ப்ரெசென்ட் மட்டும் போட்டுக்கிட்டு அப்பீட்டு ஆயிக்குறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ரொம்ப சூடு பறக்குது பதிவுல...
நான் இந்த ஆட்டைக்கு வரல...

வல்லிசிம்ஹன் said...

ரொம்பவே ரசிக்கும்படி எழுதறீங்க கயல்.
சரஸ்வதி நல்லா இருக்கட்டும்.

முயற்சியில்லாமல் சிலருக்கு(?) எதுவுமே கிடைப்பதில்லை.
சரஸ்வதி முயற்சித்து அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
இதனால் அவங்க வீட்டாருக்கும் நன்மை கிடைத்ததா?
nothing wrong in being biased.
we have been driven to that state.

ராஜ நடராஜன் said...

பதிவு வரைக்கும் வந்தீட்டீங்க கயல்விழி.கனிவுள்ள சகோதரர் யார்ன்னும் கூவிடுங்க.அனானிப்பின்னூட்டத்திற்கே எரிச்சல்ங்கிற போது பின்னூட்டக் கனிவெல்லாம் அடாவடித்தனமான மனநோய்.

அப்புறம் காதல் பண்ணாம படிப்புங்கிறது ஹார்மோன்களுக்குச் சரிப்பட்டு வருமான்னு தெரியலை.ஒருவிதத்தில பார்த்தா அது டானிக்குன்னு கூடச் சொல்லலாம்.எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணி குட்டிக்கரணம் போட்டு வாழ்க்கையில் வெற்றியடைதல் தேவை என நினைக்கிறேன்.அப்புறம் இந்த மாதிரி அட்வைஸெல்லாம் நம்ம ஊருப்பக்கத்துக்குத்தான் சரிப்பட்டு வருமுன்னு தோணுது.நானும் இங்கே பார்க்கிறேன் அரபிகளுக்கும் காதலுக்கும் ஆவாதோ என்னவோ அல்லது சட்டங்கள் உணர்ச்சிகளை அமுக்குகிறதான்னும் தெரியல எந்த அரபுகளும் காதலித்து நான் பார்த்ததில்லை. மாறாக பிரச்சினைகளுக்குள்ளும் ஹார்மோன்கள் புகுந்து விளையாடும் தேசங்கள் பிலிப்பைன்ஸ்,இலங்கை,லெபனான் போன்றவை.

ராஜ நடராஜன் said...

அப்புறம் சரஸ்வதி பற்றி படிக்க நன்றாக இருந்தாலும் அவர் மாதிரி என்பது விதிவிலக்கு என நினைக்கிறேன்.

SurveySan said...

இதெல்லாம் உண்மைச் சம்பவங்களா இல்ல கற்பனா ரீல்களா? :)

நல்லா எழுதறீங்க.

அது சரி said...

ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தான்டா தெரியும்...ஆம்பள ஒனக்கு என்ன தெரியும்...

இது எதோ ஒரு வெளங்காத தமிழ்படத்துல கேட்ட வசனம்..அதனால எனக்கு தெரியுமா தெரியலையான்னு எனக்கே தெரியல...(ஸ்ஸ்ஸ் யப்பா...தலை சுத்துதே!)

//
பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும்.
//

இது சரி.ஆனா, பெண்கள்னு சொல்றதைவிட இது எல்லாருக்கும் பொருந்தும்..எனக்கு தெரிஞ்ச வரை, பெண்கள் அடங்கி போறதுக்கு (இல்ல அடக்கி வைக்கப்பட்டு இருப்பதற்கு) மிக முக்கிய காரணம் பொருளாதார சூழ்னிலையும், பெண்ணை பெண்ணே தவறாக பேசும் கலாச்சார சூழ்னிலையும் தான் காரணம்..ஆண்கள் நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை..ஆனால் ஒரு பெண்ணின் மீது தவறான பட்டத்தை சூட்டுபவர்கள் முதலில் (பெரும்பாலும்) பெண்களாக தான் இருக்கிறார்கள்..

ஆண்களுக்குள் சம்பாதிப்பதில் போட்டி, பொறாமை என்றால் பெண்களுக்குள் யார் ஒழுக்கமான நடத்தை உள்ளவள் என்று போட்டி இருப்பதாக தெரிகிறது (இல்லை, நான் பார்த்தவரை அப்படி தெரிகிறது!)

//
படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை.
//

இது எனக்கு கொஞ்சமும் தெரியாத சப்ஜெக்ட்டு..அப்புறமா எதுனா தெரிஞ்சா சொல்றேன்..

//
மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே?
//

இது ஒருவர் சம்பந்தப்பட்டது என்றா நினைக்கிறீர்கள்? இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருவருக்கும் வேண்டும். ஆண்களை பொறுத்தவரை, உடலுறவை விடுங்கள், கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தன் அந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான்...இப்படி சொன்னாலே அந்த திருமணம் நின்றுவிடும்..அந்த பெண் மீது எந்த தவறும் இல்லாவிட்டாலும் அவளது நடத்தை கேள்விக்குறியாக்கி விடுவார்கள்.. (இப்படி மற்றொரு பெண்ணை அசிங்கப்படுத்த முதலில் நிற்பது....பெண்களே தான்...). க‌ல்யாண‌த்துக்கு பின் சொன்னால், அந்த‌ க‌ண‌வ‌ன் ர‌குவ‌ர‌ன்/பிர‌காஷ் ராஜ் போல‌ சைக்கோ ஆக‌ மாறிவிடுவான்..

இதே போல‌ ஒரு ஆணும் த‌ன‌து திரும‌ண‌த்துக்கு முந்திய‌ காத‌லை (அது உட‌லுற‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ காத‌லாக‌ இருந்தாலும்!) அவ்வ‌ள‌வு எளிதாக‌ சொல்லிவிட‌ முடியாது....அப்ப‌டி சீர்குலைந்த‌ திரும‌ண‌ங்க‌ளும் அதிக‌ம்..

//
அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
//

ரொம்ப‌ க‌ரெக்ட்..இது இப்ப‌ இல்ல‌..க‌ல்தோன்றி ம‌ண்தோன்றா கால‌த்துக்கு முன்னாடியே ம‌ன்ன‌ருக்கு ஆயிர‌ம் ம‌னைவி இருப்பாங்க‌...ஆனா, எந்த‌ ஒரு இல‌க்கிய‌த்துல‌யும், அர‌சிக்கு ஆயிர‌ம் க‌ண‌வ‌ர்க‌ள் இருந்த‌தா எழுத‌லை..அப்ப‌டியே இருந்தாலும் அந்த‌ பெண் மிக‌ மோச‌மாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருப்பாள்..

//
இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும்.
//

ச‌ரிங்க‌ டீச்ச‌ர் :0)

க‌டைசியா உங்க‌ளுக்கு ஒரு கேள்வி..

ரிலாக்ஸ் ப்ளீஸ் அப்ப‌டின்னு பேரு வ‌ச்சிட்டு அதிர‌டியாவே எழுத‌றீங்க‌ளே, நீங்க‌ எப்ப‌ ரிலாக்ஸ் ஆவீங்க? :0)

வருண் said...

*** Paithiyam said...
//இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? //

Accept panna ready solla naangalum ready than.. :-)) ***

அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?

நம்புறீங்களா?

இல்லை எதுக்கு வம்புனு?

வருண் said...

***நானும் இங்கே பார்க்கிறேன் அரபிகளுக்கும் காதலுக்கும் ஆவாதோ என்னவோ அல்லது சட்டங்கள் உணர்ச்சிகளை அமுக்குகிறதான்னும் தெரியல எந்த அரபுகளும் காதலித்து நான் பார்த்ததில்லை***

இதைப்பத்தி நிறைய பேசனும், நடராசன். ஒரு "ஹெல்த்தி" விவாதம் பண்ணனும் :-)

Anonymous said...

Congrats for discussing so courageously.
But the kind of personal values are more of "hide & seek" in Indian society, I am also from India with social development experience.
As per that it does not seem that pre martial sex is never happening, Extra martial sex is also prevalent.
As many of the comments only declaring it is an issue. Many boys had first physical relationships in their teens, very few with commercial sex workers, mostly with neighbour women. This is based on verbatums received during community trainings;project evaluations. But the issue here is as being sensitive like you did, answering to that comment with a separate post.
If we do not react the way they expect to, then no one will try using this kind of personal questions in a forum as "Knock Punch". You could have replied to him, with a crude smile, "No personal questions please."
Problem is our overt consciousness too,it's not novel we behave that way.If you would like to chatr with me reply, where we can discuss further and how? Again, thumps up, keep going!

Anonymous said...

மிகவும் ஆவலாய் இந்தத் தொடரை எதிர்பார்த்திருந்தேன்...கலக்கல் எழுத்து நடை...தைரியம் உங்க வரிகளில்...

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள் கயல்...!!!

ரிஷி said...

எல்லொருக்கும் வனக்கம் அருமயான படைப்புக்கள்
நான் புதியவன் எனக்கு வழி காட்டுன்கள்
நன்றீ மீண்டும் வ்னக்கம்

ரிஷி.
http://karaiyoramuthalaikal.blogspot.com/

ரிஷி said...

என் பிலாக்கு வருகை தாருங்கள்
http://karaiyoramuthalaikal.blogspot.com/

Sundar சுந்தர் said...

//பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது //
போட்டு தாக்குங்க!

Direct confronting is not always a right solution. முக்கியமாக while dealing with strangers in unsafe surroundings - இதில் எனக்கு தோணும் உவமானம் - சாக்கடையிலிருந்து எழுந்து நம் நோக்கி வரும் பன்றிகள். வேகம், துணிச்சலோடு விவேகமும் வேண்டும்.

SK said...

வருண் கயல் நீங்க கூப்பிட்ட சினிமா பதிவு போட்டுட்டேன்

வருண் said...

எஸ் கே!!!

உங்க பதில்கள் படித்து நிறைய சிரித்தேன்! ரொம்ப நல்லா இருந்தது! நன்றி! :-)

zen said...

Dear Varun and Kayal,
வெல்.எப்படி தொடங்குவது என்றே தெரியவில்லை.
உங்கள் 74 பதிவுகளும் அதற்கான இருநூற்றி சொச்சம் காமெஂட்ஸ் ஐயும் ஒரே வீச்சில் 2 நாட்களில் படித்து முடித்தேன். மிக மிக அழகான நடையில் தெளிவான பார்வயுடன் நறுக்குத் தெறித்தார்ப்போல Taboo ஸப்ஜெக்ட்ஸ் குறித்தும் எழுதி இருந்தீர்கள்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்தியாவை விட்டு வெளியில் இருந்ததில் சுத்தமாக எனது சுயத்தை இழந்து விட்டிருந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன் தான் Blog உலகத்தை பற்றி அறிய முடிந்தது.
கற்பு,இந்தியர்கள் அறிவியலில் முன்னேறாதது,தமிழர்களின் ஹீரொ வொர்ஷிப் ,காதல் சொட்ட ச் சொட்ட ஒரு கதை இதை எல்லாம் படித்ததும் பள்ளி/கல்லூரி நாட்களில் வெறியுடன் படித்த பல பாலகுமாரன் நாவல்கள் நினைவுக்கு வந்துவிட்டது.
அநேகமாக என் மனதுள் அந்த நாட்களில் இருந்த பல எண்ணங்களை(தமிழன் ஏன் இப்படி இருக்கிறான்,இல்லாதவர்களை சந்தோசப்படுத்திப்பார்க்கிறது போன்ற ) எழுத்தில் பார்த்ததும் என்னை அறியாமல் ஒரு ADDICTION போல வந்து முழு மூச்சுடன் முழு Blog ஐயும் படித்து விட்டேன்.
880 ×10^24 Metres அகலம் உள்ள அகண்டவெளியில் நாம் யார்? யார் /எது நம்மை /இவ்வெளியை இயக்கி வருகிறது? கடவுள்? காதல்,தமிழர்களின் ஒற்ற்றுமை(இன்மை),வியாபாரத் துறையில் பூஜியமாக விளங்கும் தமிழர்கள், பள்ளிப்ருவம்,வெளிநாட்டு (குறிப்பாக அரபு நாடுகளில்) தமிழர்கள்/பொறியாளர்கள் வாழ்க்கை,இயற்கையை பாதுகாத்தல்
இது பற்றியெல்லாம் உங்களைப்போன்ற Bore அடிக்காத நடையில் எழுத ஆசை.பார்ப்போம்.
இது போன்ற எண்ணங்களை பாலைவனமாகியிருந்த எனது மனதில் தோ ற்று வித்தமைக்கு நன்றி தெரிவித்தே இம்மடல்.
நன்றி. உங்கள் பணி இனிதே தொடரட்டும்.
Ippadikku,
Zen

வருண் said...

Zen!

Thanks for your comments! Glad you liked our blog! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக நல்ல விளாசல் பதிவு

வாழ்த்துக்கள் சரஸ்வதிக்கு.

//(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)//

எல்லாவற்றையும் மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தும் ஒப்புக்கொள்ளும் உங்களின் இந்த மனோபாவம் என்னை வியப்பிலாழ்த்துகிறது.

உங்களின் பதிவினைவிடவும் பின்னூட்டங்களில் பதிலிடுவது மிகவும் அருமை.

வாழ்த்தக்கள் கயல்

(காதல் கல்வெட்டு என்ன ஆச்சு)

abc said...

இது ஒரு நல்ல வலைப்பதிவு .......தன்னுடைய மனைவிக்கு திருமணத்திற்கு முந்தைய உறவு உண்டு என்பதை எந்த கணவனும் என்னுடன் சேர்த்து ஒப்புக்கொள்வதில்லை அதே போன்று தன்னுடைய கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்புண்டு என்பதை எந்த பெண்ணும் ஒப்புக்கொள்வதில்லை இது இந்திய நிலை ......பெண்ணியம் பேசும் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய மனைவி அவ்வாறாக இருக்க விரும்புவதில்லை ......

SK said...

அ. அ.

நல்ல வேலை நீங்க கேட்டுடீங்க :-)

M.Rishan Shareef said...

நல்ல பதிவு சகோதரி !

ஜோசப் பால்ராஜ் said...

//ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து //

முழுதும் ஆதரிக்கிறேன். ஆனால் இங்க எல்லாரும் உங்களையும், என்னையும் போல் சிந்திப்பதில்லை.
1000 பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த செய்யலாம்னு ஒரு பழமொழிய வேற துணைக்கு கூட்டிக்கிட்டு வர்றாய்ங்களே?