Sunday, February 14, 2016

ஹார்வேட் ஒலகநாயகனுக்கு ப்ரீடம் ஆப் ஸ்பீச் கேள்விகள்!!

நான் நாத்திகன்! எனக்கு ப்ரீடம் ஆப் ஸ்பீச் இல்லை! என்றெல்லாம் ஹார்வேட்ல போயி கூவும் ஒலகநாயகன் தெரிந்து கொள்ள வேண்டியவை. எந்த ஒரு சுதந்திரத்திற்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையை பகுத்தறிந்து சரி, தவறென்றெல்லாம் சொல்ல முடியாது.

 அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்த ஒருவர் தன் குழந்தைகளுக்கு அடால்ஃப் ஹிட்லர், ஆர்யன் நேசன் என்று பெயர் வைத்ததால் அவர் குழந்தகளை அவரிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டார்கள்.


Parents who named their children Adolf Hitler and Aryan Nation will not get them back, judge rules

 

A self-proclaimed Nazi dad and his wife cannot have back their four children, three of whom have Nazi-inspired names, a court has ruled.
Adolf Hitler Campbell, six, and his younger sisters Joycelynn Aryan Nation, five, and Honszlynn Hinler, four, were taken into custody in January 2009.
State officials also took another son, Hons Campbell, from his parents Heath and Deborah Campbell just hours after he was born in November.
இந்த ரெஸ்பான்ஸ்களையும் வாசிக்கவும்!!!

So let me get that right, you have to name your children government approved names and raise them only in a government approved way, or they get taken away? Last time I looked a family was free to do and teach what they like to their own offspring. After all no kids are taken away from fanatic religious types, which in my opinion is worse. If children are happy, fed and safe and they do not get abused or tortured, in my opinion you can teach them what you like, they are YOUR children not the authority's, even if others don't like it. That is the beauty of being free.


Liz, Devon, UK, 01/6/2012 12:19-------------------------------------------------------------------------------------------------------------- Unfortunately that is not the case, when you register their birth you are handing them over to the state, they just let you feed them, clothe them, send them to indoctrination classes (school) etc. Until such time as they decide you are not doing it how they want, then they come and take them away. Go look into what registering births actually is.

இப்போ உங்களுக்கு கேள்வி!!

இது சரியா? இல்லை, தவறா?

சரியென்றால் ஏன்?

தவறென்றால் ஏன்?

ராமசாமினு பெயர் வைத்தவன் எல்லாம் கடவுள் பக்தனாக வரவில்லை. கடவுள் எதிர்ப்புக் கொள்கை உள்ளவனாக தந்தை பெரியாராக தலை எடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இதுபோல் பெயர் பெற்ற குழந்தைகள் கொடூரனாக வளருவார்கள்னு எதுவும் சொல்ல முடியாது. இதைப் பற்றி ஹார்வேட் பல்கலைகழகத்தில்  விமர்சித்து இருக்கலாமே? அப்படி செய்திருந்தால் உங்களையும் பிடிச்சு உள்ளே போட்டு விடுவார்கள்?னு பயமா?

எதையும் பகுத்தறிவேன் என்றும் பிதற்றும் தாங்களும் பகுத்தறியாமல் அன்றாட வாழ்வில்செய்யும் காரியங்கள் ஆயிரம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பேச்சுச் சுதந்திரம் வேணும்னு நீங்க ஏன் போயி ஹார்வேட்ல  சொல்வதால் எதுவும் ஆகப் போவதில்லை. அமெரிக்காவில் நடந்த இதுபோல் நிகழ்வைப் பற்றியும் பேசி இருக்கலாமே?? உங்களுக்கு "கருத்துச் சுதந்திரம்" தேவையான இடத்தில் அதைப் பத்தி பேசி இன்னொரு பெரியாராக ஆக முயலுங்கள்!

 ****************************************

ட்விட்டரில் வலம் வரும் நீங்கள் உங்கள் ரசிகப் பொறுக்கிகள்,

 https://twitter.com/SandiyarKaran

https://twitter.com/mrpaluvets

சண்டியர் கரன் மற்றும் மிஸ்டர் பழுவேட்டரையர்னு  ட்வீட் ஹான்டில் வைத்துக்கொண்டு உங்க துதி பாடிக்கொண்டு, மற்றவர் முகத்தில் காறி உமிழ்ந்து கொண்டு திரியும் இந்த திராபைகளுக்கு கிடைத்துள்ள ப்ரீடம் ஆப் ஸ்பீச் பத்தியும் ஹார்வேட்ல விமர்சிக்க வேண்டியதுதானே?

*****************************************

என்ன சார் நீங்க? நீங்க எந்த நாட்டில் இருக்கீங்களோ, அந்த நாட்டில் உள்ள நிலவரப்படிதான் கருத்துச் சுதந்திரம் அமையும் னு ஒரு சின்ன விசயம்கூட உங்களுக்குப் புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒருவர தன் குழந்தைக்கு "அடால்ஃப் ஹிட்லர்" அல்லது "ஆர்யன் நேசன்" என்கிற பெயர் வைத்தால் எவனும் அவன் குழந்தைகளை பறிக்கப் போவதில்லை! என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!

ஏன் சார் சும்மா போட்டுக்கிட்டு..





 தொடர்புடைய பதிவுகள்

 பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தவறான பு...





15 comments:

Avargal Unmaigal said...

சுதந்திரத்திற்கும் ஒரு அளவிற்கு மட்டுமே சுதந்திரம் உண்டு போல இருக்கிறது

Avargal Unmaigal said...

நீயூஜெர்ஸியில் இருந்தும் இந்த தகவல் என் கண்ணில் படாமல் போய் இருக்கிறது. இனிமே வெளிநாட்டு (இந்தியா)செய்திகளை மட்டும் படிக்காமல் உள்ளுர் செய்திகளையும் படிக்க வேண்டும்

Avargal Unmaigal said...


காரின் நம்பர் பிளேட்டுக்கு பெயர் தேர்ந்தெடுப்பதிலும் சில கட்டுப்பாடுகள் இங்கே உண்டு எந்த பெயரையும் இங்கே வைட்துவிட முடியாது

Anonymous said...

சரியான பதிவு.. அவர் எப்போது தான் ஒழுங்காக பேசியிருக்கிறார்,,,

நிஷா said...

அடடா! இப்படிக்கூடவா நடக்கின்றது!பெயர் வைப்பதற்கு கூட உரிமை இல்லையா?
அடால்ப் ஹிடலர் எனும் பெயர் ஒருத்தருக்கு மட்டும் தான் சொந்தமாகுமா?

ஆனாலும் இந்த பெயர் வைக்கும் விடயத்தில் தங்கள் விருப்பு வெறுப்பினை மட்டும் பார்க்காமல் குழந்தையின் எதிர்கால நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.பக்தி முத்திப்போய் பிள்ளைக்கு பெயரை வைத்து விட்டு அப்பிள்ளை வளர்ந்த பின் எதற்கெல்லாம் பயப்பட வேண்டும் என்பதற்கு பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்ட என்னவர் உதாரணம்,

இலங்கையில் இராணுவ சோதனை சாவடிகளில் கொஞ்ச நேரமேனும் உள்ளே வைத்து விசாரிக்காமல் விட்டதில்லை.

நிஷா said...

உங்கள் கேள்வி நியாயமானது தான்.இருப்பை வெளிப்படுத்தி மீடியாக்கள் மூலம் தன்னை குறித்த விவாதங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என இப்படி சொதப்புவாரோ என்னமோ?

பெரும்பாலான கருத்துக்கள் சின்னத்தனமாய் தான் இருக்கும். இவர்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும்!

காரிகன் said...

வருண்,

நம்ம 'ஒலகம்' பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன? அவர் இதவிட இன்னும் அதிகமா பேசக்கூடியவர். உலக வரலாறு, இலக்கியம், ஆன்மீகம் என எல்லாத்தையும் பிச்சு உதறுவாரே?

Unknown said...

தகவல் முழுமையாகத் தரப்படவில்லை என்று நினைக்கிறேன். குடும்ப வன்முறை போன்ற காரணங்களால் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் மீட்கப்படுவது மேலை நாடுகளில் சாதாரணம். இங்கும் அப்படித்தான் நடந்துள்ளது.

(In 2010, a New Jersey appeals court ruled there was sufficient evidence of abuse or neglect due to prior domestic violence to seize the children.
Authorities insisted putting the children into care had nothing to do with their names)

இது உங்கள் சுட்டியில் உள்ள தகவல்தான்.

வருண் said...


*** Jana Parimalam said...
தகவல் முழுமையாகத் தரப்படவில்லை என்று நினைக்கிறேன். குடும்ப வன்முறை போன்ற காரணங்களால் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் மீட்கப்படுவது மேலை நாடுகளில் சாதாரணம். இங்கும் அப்படித்தான் நடந்துள்ளது.

(In 2010, a New Jersey appeals court ruled there was sufficient evidence of abuse or neglect due to prior domestic violence to seize the children.
Authorities insisted putting the children into care had nothing to do with their names)

இது உங்கள் சுட்டியில் உள்ள தகவல்தான்.***

My understanding is the Name is major cause for these "allegations" and that trouble to the parents. The parents claim that there is no evidence of abuse and it is the name..

///The case originated after the local ShopRite refused to decorate a birthday cake for the son, Adolf Hitler Campbell, and reported the incident. Adolf and siblings JoyceLynn Aryan Nation and Honszlynn Hinler Jeannie have been in foster care since then.

-------------------------


“Actually, the judge and DYFS told us that there was no evidence of abuse and that it was the names. They were taken over the children's names,” Heath Campbell told NBC 10 Tuesday.

http://www.foxnews.com/us/2011/10/26/baby-hitler-parents-lose-custody-kids-even-though-judge-says-no-abuse.html
///

Yeah, we can always say there is "more" to the story blah blah because we know little and we imagine a LOT especially if someone dare to name his kids like that!

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

அன்பின் வருண்...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

'பரிவை' சே.குமார் said...

அன்பின் அண்ணா...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

நிஷா said...

வருண் சார் பற்றி நானும் என் தொடர் பதிவில் குறிப்பிட்டேன்!

வருண் said...

****நிஷா said...

வருண் சார் பற்றி நானும் என் தொடர் பதிவில் குறிப்பிட்டேன்!

March 8, 2016 at 12:02 PM ***

நிஷா: உங்க பதிவில் ரிலாக்ஸ் ப்ளீஸ் பற்றியும் வருண் பற்ரியும் விமர்சித்து இருந்ததை கவனித்தேன்ங்க. கொஞ்சம் வேலை அதிகமானதால் அந்த நேரத்தில் வந்து பவ்வியமாக் நன்றி சொல்வதுபோல் ஏதாவது வம்பு பண்ண முடியவில்லை. உங்க நல்ல நேரம்தான் போங்க! :)))

நிஷா said...

இது வரை என் நேரமெல்லாம் நல்ல நேரமாய் தான் இருந்திருக்கின்றது வருண் சார்! இனியும் அப்படித்தான் இருக்கும் என பட்சி வந்து சொல்லி விட்டுப்போனது?அதிருக்கட்டும் அதே தொடர் பதிவை உங்களையும் தொடர சொன்னேனாம் சார்!நீங்க கொஞ்சம் கண்டுகொண்டால் நலமாயிருக்கும்!

சீண்டி விட்டு கருத்து போடுவதில் பவ்யம் எங்கிருந்து வரும் எனும் ஆராய்ச்சிக்கெல்லாம் நான் வரவே இல்லை!