Friday, December 14, 2012

எச்சரிக்கை!அமெரிக்காவைவிட்டு விரைவில் வீடு திரும்புங்க!

தொடர்ந்து துப்பாக்கி சூடு, மக்கள் பலி என்று ஆகிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா என்னும் சொர்க்க பூமியில். கனக்டிகட் என்னும் மாநிலத்தில் நியூடவ்ன் என்னும் ஊரில் இன்று 27 பேர் மரணம்! ஒரு 20 வயதுப் பையன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளிக்குச் சென்று, அவன் அம்மாவையும் (அவர் ஒரு ஆசிரியை), மற்றும் அந்தப்பள்ளியில் இருந்த சிறுவர் சிறுமியர் (மாணவ மாணவியரை) 18 பேர் மற்றும் 8 பேர் (சக ஆசிரியை போன்றவர்களை) சுட்டு கொன்று இருக்கிறான்!




சூட்டிங் நடந்த இடம்



ஷூட்டிங் நடந்த பிறகு குழந்தைகளை அந்த இடத்தில் இருந்து வேறு பாதுக்காப்பான இடத்துக்கு அழைத்துச் செல்றாங்க!



கடந்த ஆறு மாதமாக எவனாவது ஒரு லூசுப்பயலால இதுபோல் தொடர்ந்து பல அப்பாவிகள் சுட்டுக்கொல்லப் படுறாங்க!


27 Killed in Connecticut Shooting, Including 18 Children



 A gunman killed 26 people, 18 of them children, in a shooting on Friday morning at an elementary school in Newtown, Conn., about 65 miles northeast of New York City, a law enforcement official said.

The gunman, who was believed to be in his 20s, walked into a classroom where his mother was a teacher. He shot and killed her and then shot 18 students in the classroom. He also shot seven other adults.The gunman then killed himself inside the school. The shooting ranks among the worst in recent United States history.
A 9-year-old student said he was in the gym when the shooting erupted.
“We were in the gym, and I heard really loud bangs,'’ said the boy, as he stood shivering and weeping outside the school with his father’s arms draped around him. “We thought that someone was knocking something over. And we heard yelling, and we heard gunshots. We heard lots of gunshots. We heard someone say, ‘Put your hands up.’ I heard, ‘Don’t shoot.’ We had to go into the closet in the gym. Then someone came and told us to run down the hallway. There were police at every door. There were lots of people crying and screaming.'’
Another student at the school told an NBC affiliate in Connecticut: “I was in the gym and I heard like seven loud booms, and the gym teachers told us to go in the corner and we huddled. We all heard these booming noises, and we started crying. So the gym teachers told us to go into the office where no one could find us. Then a police officer told us to run outside.”
State police said the Newtown police called them shortly after 9:30 a.m., according to Lt. J. Paul Vance of the Connecticut State Police. “On- and off-duty troopers responded to the school, and with Newtown police immediately upon arrival entered the school and began an active shooter search,” Lieutenant Vance said.
Meredith Artley, the managing editor of CNN.com, said that someone who works at the school told her the shooting happened in the hallway. “She described it as a ‘Pop, pop, pop,'” Ms. Artley said. “She said three people went out into the hall and only one person came back, the vice principal, she said, who was shot in the leg or the foot, who came crawling back. She cowered under the table and called 911. She never saw the shooting. There must have been a hundred rounds.”
President Obama was briefed on the shooting at 10:30 a.m., the White House said.
Danbury Hospital said it was treating three patients from the shooting scene, according to its Facebook page. The hospital, which is not far from the elementary school, said it was on lockdown.
At the hospital, stunned-looking personnel in white coats looked shaken as they gathered in small groups talking about the shooting. In a corner near the gift shop, one woman comforted a weeping colleague.
In the coffee shop, a few customers finished their sandwiches at the lunch counter and the cashier wiped tears from her eyes as she rang up customers.
In a mostly empty fifth-floor waiting room, three women watched local coverage of the tragedy, shaking their heads at each new horrifying detail.
Gov. Dannel P. Malloy arrived at the scene of the shooting on Friday afternoon.
The school, located among wooded hills and suburban tracts in Fairfield County, 12 miles east of Danbury, serves kindergarten through fourth grade. The school has about 700 students.
“It’s just a little country school,'’ said Robert Place, 65, as he stood near the scene. “The look is very ‘50s or ‘60s. One floor. It’s always had a good reputation. People come to Newtown for the schools.'’
The school’s principal, Dawn Hochsprung, was reportedly one of those shot. But at the home of her daughter Cristina Hassinger, in Oakville, Conn., the family was still awaiting any news of her fate.
“We’re looking for any hope,” said Ryan Hassinger, the son-in-law of the principal. “If she’s in the hospital, any chance is better.”
He said that his wife, Cristina, 28, and “her sister are there now,” with Connecticut state troopers, and that he and other relatives were awaiting word on any news.
“I looked on Twitter and it says that she is passed,” said Mr. Hassinger. But, he added, the family was “just waiting.”
A photograph published by a local newspaper, The Newtown Bee, showed a line of children being escorted out of the school with some of the children crying.
In front of a senior center next door to the school, a 20-year-old woman was with her 4-year-old sister, who was in the school at the time of the shooting. The older woman came to pick up her younger sister along with their mother. The girl had her arms and legs wrapped around her older sister.
When a reporter asked the woman what the little girl knew of what had happened, the woman said, “Absolutely nothing, and we don’t plan to tell her anything.”
Reporting was contributed by Peter Applebome, Robert Davey, Elizabeth Maker and Kristin Hussey Zisson from Connecticut, and Al Baker, Joseph Goldstein, Andy Newman, Jennifer Preston and Wendy Ruderman from New York.

அமெரிக்க வாழ்க்கை எளிதானதல்ல! பல லூசுப்பயலுக துப்பாக்கி வச்சுண்டு அலைவானுக!  ஒரு சிலர் தெரியாமல், இது என்னவோ சொர்க்க பூமினு நெனச்சு வந்துடுறாங்க! நாள் ஆக ஆக, சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" னு ஞானோதயம் வந்து திரும்பிப்போயி சந்தோஷமாக தங்கள் ஊரில் வாழ்றாங்க!

மறுபடியும் சொல்றேன் அமெரிக்கா, சொர்க்க பூமியல்ல! இங்கேயும் கேன்சர், ஹார்ட் அட்டாக்ல செத்துக்கிட்டுத்தான் இருக்காங்க!

 இங்கேயும் பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இதுபோல் பரிதாபமாகக் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்காங்க!

காரு, ரோடு, பே-செக் இதையெல்லாம் பார்த்துப்புட்டு ஏதாவது நீங்களா கற்பனையை வளர்த்துக்கிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிப் புடாதீங்கப்பா!

மரியாதையாக கொஞ்ச காசு சம்பாரிச்சுட்டு பிள்ளைகள் வளரும் முன்னால இடத்தை காலி பண்ணி திரும்பி உங்க ஊருப்பக்கம் போயிடுங்க! சந்தோசமா இருங்க!

19 comments:

Vee said...

வாங்கண்ணே! உடனே ஊருக்கு போயிருவோம் .

வருண் said...

போற வழியிலேயே நம்ம ரெண்டு பேரையும் எவனாவது போட்டுத் தள்ளிடப்போறான், வீ!

ஒண்ணு பண்ணூவோம். நீங்க முன்னால போங்க! நான் பின்னாலயே வர்ரேன்!

ஒரு ஆளை போட்டுட்டாலும் இன்னொரு ஆள் தப்பிச்சு "செத்த செய்தி" சொல்ல வசதியா இருக்கும் பாருங்க, வீ! :)

பழமைபேசி said...

அங்க இறங்கி உசுரு வீட்டுக்குப் போகுதா, உடம்பு போகுதான்னு வேற பொறுத்திருந்து பார்க்கணும்.

”கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த 10 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் மட்டும், 3,500 பேர் பலியாகியுள்ளனர்.”

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//கடந்த ஆறு மாதமாக எவனாவது ஒரு லூசுப்பயலால இதுபோல் தொடர்ந்து பல அப்பாவிகள் சுட்டுக்கொல்லப் படுறாங்க!//
எல்லா வசதிகளும் இருந்து என்ன பிரயோஜனம்.கிறுக்குப் பயலுங்களா இருக்காங்களே!

வருண் said...

*** பழமைபேசி said...

அங்க இறங்கி உசுரு வீட்டுக்குப் போகுதா, உடம்பு போகுதான்னு வேற பொறுத்திருந்து பார்க்கணும்.

”கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த 10 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் மட்டும், 3,500 பேர் பலியாகியுள்ளனர்.”

14 December 2012 2:20 PM***

மணியண்ணா:

விபத்துகளை குறைக்கணும்தான். ஆனால் இதுபோல் சின்னக் குழந்தைகள் சுட்டுக்கொல்லப்படுவது பரிதாபமான ஒண்ணு. மனநிலை சரியில்லாதவங்க எல்லாம் துப்பாக்கியும் கையுமா அலைவதால் வருவது. It's really scary as it is keep happening!

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

//கடந்த ஆறு மாதமாக எவனாவது ஒரு லூசுப்பயலால இதுபோல் தொடர்ந்து பல அப்பாவிகள் சுட்டுக்கொல்லப் படுறாங்க!//
எல்லா வசதிகளும் இருந்து என்ன பிரயோஜனம்.கிறுக்குப் பயலுங்களா இருக்காங்களே!***

இந்த ஊரில் யாருவேணா துப்பாக்கி வச்சுக்கலாம் (தற்காப்புக்கு). மனநிலை சரியில்லாதவனும் அப்படி துப்பாக்கி வச்சிருக்கதால் ஏற்பட்ட விளைவுதான் காரணம்! They have to bring some kind of "gun control policy" so that someone INSANE can not get gun easily! They have to do it!

பழமைபேசி said...

// They have to bring some kind of "gun control policy" so that someone INSANE can not get gun easily! They have to do it!//

இதுதான் அக்கப்போரே!!

Yaathoramani.blogspot.com said...

அதிர்சியாகத்தான் உள்ளது
எப்படியும் சில நாட்கள் இடைவெளியில்
எப்படியாவது ஒருத்தனுக்கு இப்படி கிறுக்குப் பிடித்துவிடுகிறதே
நீங்கள் சொல்வதுதான் சரி
ஊரை நோக்கி நடையைக் கட்டுவதுதான் சரி

Jayadev Das said...

இது என்னது துப்பாக்கியை கண்ட கண்ட பயலுங்க எடுத்துகிட்டு அழையக்கூடதுன்னு சட்டம் போடுவீங்களா, எல்லாம் ஊரை விட்டு ஓடச் சொல்லுவீங்களா? அதுசரி, எல்லாத்தையும் ஓடச் சொல்லிட்டு ஐயா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? ஹா......ஹா......ஹா......ஹா......

அமுதா கிருஷ்ணா said...

அதீத சுதந்திரம் இப்படியா? துப்பாக்கி வைத்து கொள்ள கூடாது என்ற சட்டம் வந்தால் தான் உருப்படும்.

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மார்க்கமாதான் அலையுறாங்க போல...!

'பரிவை' சே.குமார் said...

உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க..
துப்ப்பாக்கி என்பது அவர்களுக்கு விளையாட்டுப் பொருள் போல ஆயிருச்சு...

கை அரிச்சா சுடுவாங்க போல...

பாவம் இறந்த குழந்தைகள்...

வருண் said...

*** பழமைபேசி said...

// They have to bring some kind of "gun control policy" so that someone INSANE can not get gun easily! They have to do it!//

இதுதான் அக்கப்போரே!!

14 December 2012 5:22 PM***

இது மாரி இன்னும் 100 படுகொலைகள் நடந்தாலும் இந்த ஆட்டில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதை ஒழிக்கமாட்டார்கள்! :(

வருண் said...

***Ramani said...

அதிர்சியாகத்தான் உள்ளது
எப்படியும் சில நாட்கள் இடைவெளியில்
எப்படியாவது ஒருத்தனுக்கு இப்படி கிறுக்குப் பிடித்துவிடுகிறதே
நீங்கள் சொல்வதுதான் சரி
ஊரை நோக்கி நடையைக் கட்டுவதுதான் சரி***

வாங்க ரமணிசார். உங்க கருத்துக்கு நன்றி. :)

வருண் said...

*** Jayadev Das said...

இது என்னது துப்பாக்கியை கண்ட கண்ட பயலுங்க எடுத்துகிட்டு அழையக்கூடதுன்னு சட்டம் போடுவீங்களா, எல்லாம் ஊரை விட்டு ஓடச் சொல்லுவீங்களா? அதுசரி, எல்லாத்தையும் ஓடச் சொல்லிட்டு ஐயா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா? ஹா......ஹா......ஹா......ஹா......***

கண்டு பிடிச்சுட்டீங்களா?? உயிர்மேல் ஆசையில்லபோல எனக்கு! :)

வருண் said...

***அமுதா கிருஷ்ணா said...

அதீத சுதந்திரம் இப்படியா? துப்பாக்கி வைத்து கொள்ள கூடாது என்ற சட்டம் வந்தால் தான் உருப்படும்.***

இந்த நாட்டுல மெஜாரிட்டி தற்காப்புக்கு துப்பாக்கி வச்சிருப்பது அவசியம்னு நம்புறாங்க. :(

வருண் said...

***Blogger MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மார்க்கமாதான் அலையுறாங்க போல...!****

Autistic child னு சொல்றாங்க! ஒரு மாதிரி மனநிலை சரியில்லாதவன் தான்.

அவன் அம்மாதான் வீட்டில் 3 துப்பாக்கி வச்சிருந்து இருக்காங்க.

அம்மாவை வீட்டிலேயே கொன்றுவிட்டு (இது பின்னாலதான் எனக்கு தெரியும், பள்ளியில் அவன் அம்மாவையும் கொன்றாதாக நான் நினைத்தேன்) அவங்க வேலை செய்த பள்ளிக்கு வந்து குழந்தைகளையும் ஆசிரியை, பிர்ண்சிப்பல் எல்லாரையும் கொன்னுட்டு தன்னையும் சுட்டு கொன்னுக்கிட்டான்! :(

His mom and dad were divorced. They are RICH! விவாகரத்து ஓரளவுக்கு அவனை பாதித்து இருக்கலாம். ஆனால் உண்மையில் என்ன பிரச்சினை னு இன்னும் சரி வர தெரியவில்லை!

வருண் said...

***சே. குமார் said...

உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க..
துப்ப்பாக்கி என்பது அவர்களுக்கு விளையாட்டுப் பொருள் போல ஆயிருச்சு...

கை அரிச்சா சுடுவாங்க போல...

பாவம் இறந்த குழந்தைகள்...***

அம்மாவை கொன்னுட்டு இவனும் செத்து தொலைந்திருதாலாவது பரவாயில்லை.. ஒண்ணுமே அறியாத 20 குழந்தைகள் பலி! :(