Tuesday, September 14, 2010

"போர்ன் சாமி" குடும்பப்படம் எடுக்கப்போறாராம்!நம்ம இயக்குனர் சாமி ஏதோ புது மாதிரியா யோசிக்கிறேன், படம் எடுக்கிறேன்னு ஏதாவது இன்செஸ்ட் கதைய வச்சு ரசிச்சு ரசிச்சு தமிழ்ல படம் எடுத்து வெளிவிடும். இதுக்கு எவன் சாமினு பேர் வச்சான்னு தெரியலை! அண்ணி கொளுந்தனுடன் தகாத உறவு கொள்ள முயல்வது போல ஒரு ப்ளாட்! அதுதான் இந்தசாமியோட உயிர். உலகத்திலே எவனுமே யோசிக்க முடியாத ஒரு ஐடியா, பாருங்க!

அப்புறம் சாமி, மிருகம்னு ஒரு படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு கொண்டுவருவதுபோல எடுத்து விட்டுச்சு. இதுலயும் இதுக்கு உண்மையான எய்ம் என்னனு தெரியலை. சரி, மிருகம் நல்ல படம்னே வச்சுக்கலாம்னு பார்த்தா, நடிகை பத்மப்ரியாவை செட் ல அறைஞ்சிருச்சாம் சாமி! என்ன இந்த ஆளு பெரிய லூசா இருக்கான், "யாரையும் கை நீட்டிலாம் அடிக்கக்கூடாதுடா நாயே!"னு தமிழ் திரைப்படச்சங்கம் சாமிய ஒரு வருடம் படம் கிடம்னு வந்து நிக்காதே னு அடிச்சு தொறத்திவிட்டாங்க.

அதுக்கப்புறம் சிந்து சமவெளி னு இன்னொரு மாமனார்- மருமகள் தகாத உறவை எடுத்துவிட்டது, சாமி. சாமியுடைய சிந்து சமவெளியப் பார்த்து, இவன் என்ன இதே மாதிரி படமா எடுத்துட்டுப் போறான், அனேகமா இவனோட அடுத்த ப்ளாட் இதைவிட மோசமா இருக்கும்னு நம்ம மறத்தமிழர்கள் எல்லாம் சாமி வீட்டுக்கே போய் கல்லெறிந்தது மட்டுமில்லாமல், படத்தை படுதோல்வி அடைய வச்சுட்டாங்க ஒரு வழியா!

இப்போ சாமி என்ன பண்ணுறதுனு யோசிச்சு குடும்பப் படமா விக்ரமன் படம் மாதிரி எடுக்கப் போதாம்! குடும்பப் படம்னு என்ன எழவை எடுக்கப் போதோ தெரியலை!சில வம்புகள்!

* குஷ்புவும், சுஹாஷினியும் சாமிக்கும் கருத்து சுதந்திரம் இருக்குனு சொல்லி, சாமிக்கு வக்காலத்து வாங்கினால் அதிசயமில்லை னு நான் சொல்லல!

* பதிவுலகில், ஷங்கர் போன்ற இயக்குனர்கள்தான் தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்தியதாவும் அவர் படத்தைப் பார்க்கக்கூடாதுனு சொல்கிற மேதாவிகள் இந்தப் "போர்ன் சாமி"யுடைய கலாச்சார சீரழிவு செய்யும் படங்களை ஏன் கடுமையாக விமர்சிப்பதில்லை னு எனக்கு புரியலை! இல்லை, விமர்சித்து இருக்காங்களா?

தொடுப்புகள் கொடுக்கவும்!

* என்னைக்கேட்டால், தன்னை லிபெரல்ன்னு நெனச்சுக்கிட்டு கலாச்சாரக்காவலர்களை எல்லாம் எதையாவது சொல்லி விமர்சித்துக்கொண்டு திரியுறவங்க எந்த அளவுக்கு அவங்க தான் லிபெரல் னு யோசிச்சுப் பார்ப்பாங்களானு தெரியலை. Because no matter how liberal you are, you need to draw a line at some point! That particular line would not make any sense either! That is what culture is all about!

10 comments:

Chitra said...

* குஷ்புவும், சுஹாஷினியும் சாமிக்கு கருத்து சுந்தந்திரம் இருக்குனு சொல்லி, சாமிக்கு வக்காலத்து வாங்கினால் அதிசயமில்லை னு நான் சொல்லல!


.....நானும் சொல்லல....

நசரேயன் said...

//you need to draw a line at some point//

இல்லைனா மூஞ்சியிலே கோடு போட்டுருவாங்கலா ?

வருண் said...

***Chitra said...

* குஷ்புவும், சுஹாஷினியும் சாமிக்கு கருத்து சுந்தந்திரம் இருக்குனு சொல்லி, சாமிக்கு வக்காலத்து வாங்கினால் அதிசயமில்லை னு நான் சொல்லல!


.....நானும் சொல்லல....***

வாங்க சித்ரா! :)

ஆமாங்க, எதுக்கு வம்பு? :)

வருண் said...

***நசரேயன் said...

//you need to draw a line at some point//

இல்லைனா மூஞ்சியிலே கோடு போட்டுருவாங்கலா ?

14 September 2010 8:26 AM**

உங்க மணி அண்ணா வந்து விபரம் சொல்லுவாரு :)))

ராம்ஜி_யாஹூ said...

எஸ் ஜே சூர்யாவை புறக்கணித்து விரட்டிணோமே அது போலவே சாமியையும் புறக்கணிப்போம்.
கமலும், பாலு மகேந்திராவும், மகேந்திரனும், விஸ்வநாத்தும், பாரதிராஜாவும் கஷ்டப் பட்டு உருவாக்கிய தமிழ் திரைப்படத்தின் மதிப்பை இந்த மாதிரி அரை வேக்காட்டு நபர்கள் எளிதில் சிதைக்க முயலுகின்றனர்.

வருண் said...

***ராம்ஜி_யாஹூ said...

எஸ் ஜே சூர்யாவை புறக்கணித்து விரட்டிணோமே அது போலவே சாமியையும் புறக்கணிப்போம்.***

நல்லா சொன்னீங்க! :) I think he is almost done! :)

பழமைபேசி said...

@@நசரேயன்

யோவ்... நீர் எனக்கு முன்னாடியே வந்துட்டு கேள்வி வேறயா??

வருண், தன்னோட தொடர்பு எண்ணைத் தர மாட்டேங்குறார்யா....

வருண் said...

தொடர்பு எண்ணா? நசரேயன் அதைப் பத்தி எல்லாம் ஒண்ணும் சொல்லலையே! :)

நசரேயன் said...

//வருண், தன்னோட தொடர்பு எண்ணைத் தர மாட்டேங்குறார்யா...//

கிடைக்குமுன்னு நினைக்குறீங்க

வருண் said...

***நசரேயன் said...

//வருண், தன்னோட தொடர்பு எண்ணைத் தர மாட்டேங்குறார்யா...//

கிடைக்குமுன்னு நினைக்குறீங்க

15 September 2010 11:37 AM***

நீங்கள், கெடைக்காதுனு நெனைக்கிறீங்களா?! :))))

கெடைக்கிறது கெடைக்காமப் போகாது! கெடைகாதது கெடைக்காது!
இது என்ன படம்னு சொல்லுங்க! :)))