Wednesday, January 19, 2011

விஜய்யும் ஜெயாவை வணங்கி வழிபடப்போறாராம்!

காவலன கலக்ஷனில் வரலாறு படைக்கிதோ இல்லையோ, "இந்தப் பிரச்சினையில் கடைசியில் தன் ப்ரெஸ்டிஜ் அது இதுனு பொலம்பி தன் பணத்தைப்போட்டு ரிலீஸ்ப்பண்ணி விஜய் ஒரு வரலாறு படைத்துள்ளார்!" என்பதென்னவோ உண்மைதான். கடைசியில் எப்படியோ படம் வெளியே வந்தது எல்லாருக்கும் சந்தோசம்தான். படம் பயங்கர வெற்றியடைந்தால்தான் இந்த சாதனை பெருசாகப் பேசப்படும்! இல்லைனா.. கஷ்டம்தான்! எப்படியோ காவலன் நல்லா ஓடி வெற்றிபெற்றால் சரிதான்!

இதற்கிடையில் விஜய் இன்று அம்மையாரை சந்திக்கப் போறாராம்!

கொஞ்சநாள் முன்னால அம்மாவை, இவரோட அப்பா போய் தரிசனம் பண்ணிவந்தார். அதுக்கப்புறம் காவலனுக்கு இருந்த பிரச்சினை பல மடங்காக பெருசாகி பொங்கலுக்காவது வெளிவருமா? னு கேள்விக்குறில வந்து நின்னது.

இப்போ மகன் அம்மவை தர்சிக்கப் போறாரு போல! இதன் விளைவு என்ன ஆகப்போகுதோ! நேத்து அம்மாவுக்கு ஆதரவுனு சொன்ன சீமான் இப்போ என்னென்னவோ உளறுகிறார். அம்மாவால எல்லாம் இப்போ விஜய்க்கு ஒண்ணும் பண்ண முடியாது. இவர் அம்மாவுக்கு ஆதரவுனு இந்த சூழ்நிலையில் சொன்னாலும் இவர் அரசியல் கனவு அம்புட்டுத்தான்!

விஜய், என்னவோ சினிமால வில்லன்களை காலி பண்றதுபோல தற்போது உள்ள பிரச்சினைகளை அனுகுறார்போல மனுஷன். இப்படி அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

இதற்கிடையில், இவர் முடியாதுனு சொன்ன 3-இடியட்ஸ் படத்துல இப்போ சூர்யாவை புக் பண்ணியிர்க்கார் ஷங்கர்னு சொல்றாங்க!

விஜய்க்கு இப்போ தேவை பொறுமை. காவலன், நல்லமுறையில் வெற்றியடைய இவர் எல்லாக் கடவுள்களையும் கும்பிட்டுக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு நல்லது.

அம்மா தரிசனம் தேவையே இல்லாத ஒண்ணு! அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.

அவருக்கு ரொம்ப டென்ஷனாயிருக்குனா, ஏதாவது யோகா அல்லது மெடிட்டேஷன் பண்ணச்சொல்லுங்கப்பா அவரோட நலம்விரும்பிகள்!

11 comments:

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான் மாப்பு

Chitra said...

இதற்கிடையில், இவர் முடியாதுனு சொன்ன 3-இடியட்ஸ் படத்துல இப்போ சூர்யாவை புக் பண்ணியிர்க்கார் ஷங்கர்னு சொல்றாங்க!

....Thats news to me. :-)

பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க சொன்னா சரிதான் மாப்பு
//

கருத்துச் சொல்ல வேண்டிய இடுகைக்கு வர்றதே இல்ல? இந்தாள் எல்லாம்...??

ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னா சரிதான் மாப்பு//

இதெப்ப:)

வருண் said...

***நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான் மாப்பு

19 January 2011 6:10 PM***

வாங்க, தள :)

வருண் said...

***Chitra said...

இதற்கிடையில், இவர் முடியாதுனு சொன்ன 3-இடியட்ஸ் படத்துல இப்போ சூர்யாவை புக் பண்ணியிர்க்கார் ஷங்கர்னு சொல்றாங்க!

....Thats news to me. :-)

19 January 2011 8:49 PM***

அது உண்மைதாங்க! :)

வருண் said...

***பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க சொன்னா சரிதான் மாப்பு
//

கருத்துச் சொல்ல வேண்டிய இடுகைக்கு வர்றதே இல்ல? இந்தாள் எல்லாம்...??

20 January 2011 3:42 AM***

கருத்துச் சொல்றது பெரிய வம்புனு நம்ம தளபதிக்குத் தெரியும். அதான் டபாயிக்கிறாரு :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னா சரிதான் மாப்பு//

இதெப்ப:)

20 January 2011 5:12 AM***

வாங்க நடராஜன். அது.. கொஞ்ச நாளாத்தான் :)

Philosophy Prabhakaran said...

// விஜய், என்னவோ சினிமால வில்லன்களை காலி பண்றதுபோல தற்போது உள்ள பிரச்சினைகளை அனுகுறார்போல மனுஷன். //

ஹா... ஹா... உண்மையில் அப்படித்தான் தெரிகிறது...

Philosophy Prabhakaran said...

மூன்று முட்டாள்கள் படம் கைவிடப்படும்... பொறுத்திருந்து பாருங்கள்...

வருண் said...

***Suriya to join 3 idiots remake team

Finally things seem to be falling in place for the remake of 3 Idiots by Shankar. Yes, it is confirmed that Suriya has been signed up to play the role essayed by Aamir Khan in the Hindi version. The movie also stars Jiiva, Srikanth, Sathyaraj and Ileana.

Actor Omi Vaidya, who played the comic role of Chatur in the original, will be reprising his role in the Tamil version too. The shooting is all set to start on 25th January in Ooty and will later shift to Dehradun. Suriya, who is shooting for 7aam Arivu until the end of February, will be joining the crew by March and until then scenes involving the other actors will be canned.

Shankar is said to be giving finishing touches to the script. The probable titles for the movie are Moovar or 3 Rascals.***

தள: மேலே சூர்யா நடிக்கிறதா உறுதியாகிவிட்டதுனு சொல்றாங்க பாருங்க! :)