Monday, January 31, 2011

பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன்!

ஓ பக்கங்கள் ஞாநி ஓஹோனு இருந்து ஒண்ணுமில்லாமப் போனது உலகம் அறியும்! இவர், தேவையே இல்லாமல் வயதான கலைஞர் கருணாநிதியை அளவுக்கு மீறி தாக்கித் தாக்கி எழுதி எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பி
, பார்ப்பணர்களையும் கருணாநிதிக்காக வக்காலத்து வாங்க வச்சு வீணாப்போனார்னுகூட சொல்லாம்.!

இப்போபதிவுலகில் நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி எதுனாலும் கலைஞரை திட்ட வேண்டியதுனு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

சரி, மற்ற பிரச்சினைகளாவது பரவாயில்லை, சமீபத்தில் கலைமாமணி விருது ஆர்யா, அனுஷ்கா, தமன்னானு கண்ட நடிகைகளுக்கும் கொடுத்து என்னவோ காமெடி பண்ணி இருக்காங்க தமிழக அரசு. சரி, ஏதோ காமெடினு விட்டுட்டுப் போகாமல், ஏதோ கலைமாமணி கொடுத்து ஆட்சியை பிடிக்கப்போறாராம், கலைஞர்! இது எப்படி இருக்கு?

மீனவர்கள் படுகொலை செய்யப்படும் இந்த சூழலில் தமன்னா, ஆர்யா, அனுஷ்காவுக்கு க மா ம கொடுப்பதே எல்லோருக்கும் எரிச்சலைதான் கிளப்புது.

அதைபோயி ஏதோ “அஸ்திரம்” அரசியல் தந்திரம் அது இதுனு நம்ம அண்ணே சொல்றது, டூ இல்லை த்ரீ மச்சா இல்லை? அண்ணனுக்கு பதிவுலக ஞாநி பட்டத்தைக் கொடுப்பதைத் தவிர வேற வழியே இல்லை!

வாழ்க பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணா!

18 comments:

தமிழ் உதயன் said...

விடுங்க சில நேரங்களில் பெரியவங்க இப்படிதான் இருப்பாங்க

Vinoth said...

அப்ப கலைஞரை விமர்சிக்க கூடாதா?

கலைஞர்னா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டர்னு அர்த்தமா?

மற்றவர்களை அவர் எப்படி வேண்டுமானலும் விமர்சிப்பார் அனா யாராவது கருணாநிதின்னு சொன்ன பெயரை சொல்லி கூப்பிடும் அளவிற்கு நாகரிகம் போயிற்றேம்பார்..

//..சரி, மற்ற பிரச்சினைகளாவது பரவாயில்லை, சமீபத்தில் கலைமாமணி விருது ஆர்யா, அனுஷ்கா, தமன்னானு கண்ட நடிகைகளுக்கும் கொடுத்து என்னவோ காமெடி பண்ணி இருக்காங்க தமிழக அரசு...//

கலைஞர் மட்டுமல்ல யாரனாலும் விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சித்து தான் ஆகணும்.

கலைஞருக்கு தெரியாமல் தான் தமிழக அரசு க.மா.ம பட்டம் கொடுக்குதா ?

அவருக்கு தெரியாமல் தான் அரசு இயங்கும்னா ..அவருக்கு முதல்வர் பதவி எதுக்கு ?

அவருக்கு தெரிந்து தான் கொடுக்கும்னா... விமர்சனம் சரிதானே...

ஜே ஆட்சியில், ஊதிய உயர்வு, சலுகை எல்லாம் ஜே அறிவிப்பா வரும்...

விலை உயர்வு, வரி உயர்வு எல்லாம் அரசு அறிவிப்பா வரும்.. அந்த மாதிரி ஒரு விளக்கம் க.மா.ம விருதுக்கு நீஙக கொடுத்தா.. படிகிறவங்களூக்கு ஒன்னும் தெரியாதா ?

உண்மை தமிழன் விமர்சனத்தை நான் படிக்கல .. ஆன இந்தபதிவை படிச்சால..உங்க விமர்சனம் தவறானது

உண்மைத்தமிழன் said...

விருதுகள் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதனை முறைப்படி செய்யாமல் தங்களது கட்சியின் பிரச்சாரத்திற்குத் தேவையான அளவில் மாற்றி, சுயலாபத்திற்காக செயல்படுத்துவது தவறு..!

இதைத்தான் நான் குற்றம் சாட்டியிருக்கிறேன். இந்த விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே கொடுத்திருந்தால் அது நியாயம். எல்லாம் கடந்து தேர்தல் சமயத்தில் கொடுப்பது ஏன்..? கலைஞரிடம் கேட்டுச் சொல்லுங்கள் வருண்..!

மற்றபடி இன்னும் வரவிருக்கும் பதிவுகளும் தாத்தாவின் இந்த திட்டமிட்ட சுருட்டல் வேலையைச் சுட்டிக் காட்டுவதாகவே அமையும்..!

Jayadev Das said...

//இந்த விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே கொடுத்திருந்தால் அது நியாயம். எல்லாம் கடந்து தேர்தல் சமயத்தில் கொடுப்பது ஏன்..? // கலை"மாமாமணி" குடுத்து ஓட்டு வாங்கி ஆட்சியைப் பிடிக்கத் திட்டம்! ஹா....ஹா.... ஹா... சும்மா தமாஷ் பண்ணாதீங்க அண்ணே, ஐம்பது பேரோ நூறு பேரோ இந்த விருதை வாங்கலாம், அவங்க மூலமா எவ்வளவு ஓட்டு விழுந்து விடும்? அதுவும் இல்லாம நம்ம சனம் எந்த நிலைமையில இருக்குன்னு பாத்தீங்களா? பத்திகிட்டு எறியும் பிரச்சினைக்கே எருமை மட்டு மேல மழை பேஞ்சா மாதிரி அப்படியே இருக்காங்க, இந்த லட்சணத்துல இந்த விருதப் பாத்துட்டு [அதுவும் எவனுக்கோ குடுக்கிறது , கஷ்டம்...] ஓட்டு போட்டுடுவாங்களா? அவரு தேர்தல் சமயத்துல ஊழல் பணத்துல கொஞ்சம் அள்ளி வீசுவாரு, அப்புறம் கூட்டணி போடுவாரு, [இல்லாட்டி இருக்கவே இருக்கு வாக்குச் சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு முதலான] இப்படித்தான் அவங்க ஓட்டு வாங்க முடியுமே தவிர கலை"மாமாமணி" விருதால் எல்லாம் ஒன்னும் ஆகாது.

ராஜ நடராஜன் said...

வருண்!நீங்கள் எப்படியோ ஆனால் நான் ஏதோ மனதில் தோன்றுவதை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வாய்ப்புக்கள் கிட்டும் போது எழுதுகிறேன்.

ஆனால் உண்மைத்தமிழன் அப்படியல்ல.ஒரு எழுத்தாளனுக்கான முழுத்தகுதிகளும் அவருக்குண்டு.நீங்கள் தூரத்திலிருந்து கொண்டு பின்புலங்கள் அறியாமல் விமர்சித்தாலும் உங்கள் தலைப்பின் படி உண்மைத்தமிழன் பதிவுலக ஞாநிதான் என்பதில் சந்தேகமேயில்லை.

கருணாநிதியின் சுயநலங்கள் அவரது ஒவ்வொரு நகர்விலும் அப்பட்டமாகவே தெரிகிறது.உண்மைத்தமிழன் கலைமாமணி பற்றி சொல்வது சரியே.

உண்மைத்தமிழன் said...

தோழர் ஜெயதேவ்..

நான் நீங்கள் குறிப்பிடும் அர்த்தத்தில் சொல்லவில்லை..!

தேர்தல் சமயத்தில் இப்படி சினிமா நட்சத்திரங்களோடு தான் இழைந்து இணைந்திருப்பதாகக் காட்டி தமிழ்ச் சினிமாவுலகமும் தன்னருகில்தான் இருக்கிறது என்று பிலிம் காட்ட நினைப்பதைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறேன்.

இன்னொன்று, இந்த சினிமா துறையினருக்கு இத்தனை விருதுகளை ஒரே சமயத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரிடையே தனது கட்சிக்காக ஓட்டு வேட்டையையும் தொடங்குகிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

சென்னையில் மட்டும் சினிமாத் துறையின் குடும்பத்தினரை கணக்குப் போட்டால் ஒன்றரை லட்சம் மக்கள் இருக்கிறார்கள்..! அவர்கள் கேட்பார்களா? மாட்டார்களா? என்பது அடுத்த விஷயம்.

ஆனால் இதனை அவர் அரசியலாக்குகிறார் என்றுதான் சொல்கிறேன்.

பழமைபேசி said...

குகு இன்னும் வந்து மேலான கருத்தை ஏன் சொல்லலை? வெள்ளாவில முசுவா இருக்காரோ?

வருண் said...

***தமிழ் உதயன் said...

விடுங்க சில நேரங்களில் பெரியவங்க இப்படிதான் இருப்பாங்க

31 January 2011 8:03 PM**

:-)

வருண் said...

***Vinoth said...

அப்ப கலைஞரை விமர்சிக்க கூடாதா?

கலைஞர்னா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டர்னு அர்த்தமா?

மற்றவர்களை அவர் எப்படி வேண்டுமானலும் விமர்சிப்பார் அனா யாராவது கருணாநிதின்னு சொன்ன பெயரை சொல்லி கூப்பிடும் அளவிற்கு நாகரிகம் போயிற்றேம்பார்..

//..சரி, மற்ற பிரச்சினைகளாவது பரவாயில்லை, சமீபத்தில் கலைமாமணி விருது ஆர்யா, அனுஷ்கா, தமன்னானு கண்ட நடிகைகளுக்கும் கொடுத்து என்னவோ காமெடி பண்ணி இருக்காங்க தமிழக அரசு...//

கலைஞர் மட்டுமல்ல யாரனாலும் விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சித்து தான் ஆகணும்.

கலைஞருக்கு தெரியாமல் தான் தமிழக அரசு க.மா.ம பட்டம் கொடுக்குதா ?

அவருக்கு தெரியாமல் தான் அரசு இயங்கும்னா ..அவருக்கு முதல்வர் பதவி எதுக்கு ?

அவருக்கு தெரிந்து தான் கொடுக்கும்னா... விமர்சனம் சரிதானே...

ஜே ஆட்சியில், ஊதிய உயர்வு, சலுகை எல்லாம் ஜே அறிவிப்பா வரும்...

விலை உயர்வு, வரி உயர்வு எல்லாம் அரசு அறிவிப்பா வரும்.. அந்த மாதிரி ஒரு விளக்கம் க.மா.ம விருதுக்கு நீஙக கொடுத்தா.. படிகிறவங்களூக்கு ஒன்னும் தெரியாதா ?

உண்மை தமிழன் விமர்சனத்தை நான் படிக்கல .. ஆன இந்தபதிவை படிச்சால..உங்க விமர்சனம் தவறானது

31 January 2011 9:08 PM***

ஆர்யாவுக்கும் தமன்னாவுக்கும் க ம ம கொடுப்பதால் ஓட்டெல்லாம் விழாதுங்க, வினோத்!

வருண் said...

***உண்மைத்தமிழன் said...

விருதுகள் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதனை முறைப்படி செய்யாமல் தங்களது கட்சியின் பிரச்சாரத்திற்குத் தேவையான அளவில் மாற்றி, சுயலாபத்திற்காக செயல்படுத்துவது தவறு..!

இதைத்தான் நான் குற்றம் சாட்டியிருக்கிறேன். இந்த விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே கொடுத்திருந்தால் அது நியாயம். எல்லாம் கடந்து தேர்தல் சமயத்தில் கொடுப்பது ஏன்..? கலைஞரிடம் கேட்டுச் சொல்லுங்கள் வருண்..!

மற்றபடி இன்னும் வரவிருக்கும் பதிவுகளும் தாத்தாவின் இந்த திட்டமிட்ட சுருட்டல் வேலையைச் சுட்டிக் காட்டுவதாகவே அமையும்..!

31 January 2011 10:04 PM***

இந்த மீனவர் பிரச்சினை மத்தியில் இந்த விருதுகள் நம்ம மக்களுக்கு எரிச்சலைத் தராதா?

வருண் said...

திரு.ஜெயதேவ் தாஸ்!

என் கருத்தும் அதேதாங்க!

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!நீங்கள் எப்படியோ ஆனால் நான் ஏதோ மனதில் தோன்றுவதை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வாய்ப்புக்கள் கிட்டும் போது எழுதுகிறேன்.

ஆனால் உண்மைத்தமிழன் அப்படியல்ல.ஒரு எழுத்தாளனுக்கான முழுத்தகுதிகளும் அவருக்குண்டு.நீங்கள் தூரத்திலிருந்து கொண்டு பின்புலங்கள் அறியாமல் விமர்சித்தாலும் உங்கள் தலைப்பின் படி உண்மைத்தமிழன் பதிவுலக ஞாநிதான் என்பதில் சந்தேகமேயில்லை.

கருணாநிதியின் சுயநலங்கள் அவரது ஒவ்வொரு நகர்விலும் அப்பட்டமாகவே தெரிகிறது.உண்மைத்தமிழன் கலைமாமணி பற்றி சொல்வது சரியே.
1 February 2011 4:34 AM ***

உங்க கருத்துக்கு நன்றி, நடராஜன்.

அதெல்லாம் பார்க்கிறவங்க கண்களைப் பொறுத்ததுங்க. க மா ம விருதுல சுயநலம்லாம் எல்லாருக்கும் தெரியாது.

உங்களை, உ த போன்ற மு க வை அறவே வெறுப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்!

வருண் said...

***ஆனால் இதனை அவர் அரசியலாக்குகிறார் என்றுதான் சொல்கிறேன்.***

அவர் ஆக்கினாலும் இல்லைனாலும், கலைஞர் மூச்சுவிட்டாலும் அரசியல்தான் னு நீங்க சொன்னா அது மிகை இல்லைனு உலகம் ஒத்துக்கும்.

Jayadev Das said...

உண்மைத் தமிழன் அண்ணா, இந்த கலைமாமணி விருதால் உங்கள் கணக்குப் படி ஒன்றரை லட்சம் சினிமாத் துறையினரைக் கவர முடியும் என்று சொல்கிறீர்கள். சென்னையின் வாக்காளர் எண்ணிக்கையைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம், மேலும் சென்னையில் வசிக்கும் என் உறவினர்கள் மூலம் கேள்விப் பட்டது: அங்கே வேறு எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது, ஏனெனில் அங்கே எல்லோருடைய ஓட்டையும் தி.மு.க. வினர் கள்ள வோட்டகப் போட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். மேலும், ரவுடிகளை வைத்து பெரும்பாலான வாக்குச் சாவடிகளையே கைப் பற்றி விடுவதாகவும் சொல்கிறார்கள் [தி.மு.க. என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம் தானே,]. சென்னை மாநகராட்சி தேர்தலின் போது இதை நீதி மன்றமே காரி உமிழ்ந்ததால் மறு தேர்தல் வைத்தார்கள். [continued]

Jayadev Das said...

அதாவது, இன்றைய முதல்வர், நேர்மையானவர், தில்லுமுள்ளே செய்யாதவர், ஊழளுக்கு நெருப்பாக இருப்பவர் [ஊழல் பண்றவன் எல்லாம் வந்து குளிர் காஞ்சுக்கலாமாம்!] என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அவருக்கு தன்னுடைய நலம், தன் சந்ததியினர் நலம் தான் முக்கியம் அதற்காக என்ன கேவலமான விஷயத்தையும் பன்னுவார்தான். அதற்காக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதற்க்கெடுத்தாலும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தால், நீங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியைக் காண்பிக்கிறீர்கள், உண்மையான தறுகளை சுட்டிக் காட்ட வில்லை என்ற அவ நம்பிக்கை தங்கள் மீது ஏற்ப்படும், தயவு செய்து அதைத் தவிருங்கள்.

உண்மைத்தமிழன் said...

ஜெயதேவ் உங்களுடைய நாகரிகமான பின்னூட்டங்களுக்கு நன்றி..!

சரி.. நான் கலைஞரை எனது சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திட்டுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு கேள்வி..!

முதல் வருடம் மட்டுமே விருதுகளைக் கொடுத்துவிட்டு இப்போது ஆட்சி முடியும் தருவாயில், இரண்டு வருட பரிசுகளை வழங்கவிருப்பது.. அடுத்த இரண்டு வருடங்களுக்கான அறிவிப்பை கொடுத்திருப்பது.. இதற்கு மிகச் சரியான ஒரு காரணத்தையாவது சொல்லி விடுங்களேன் பார்ப்போம்..!

Jayadev Das said...

அண்ணா, அரசு அலுவலகங்கள் /செயல் பாடுகள் எதுதான் காலா காலத்துல நடக்குது? இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட திரைப் படங்களுக்கான தமிழக அரசு விருதுகளை இரண்டு அல்லது மூன்று [சரியாக ஞாபகம் இல்லை] வருடங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் வழங்கினார்களே? அது மாதிரி எல்லாத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு எப்போது அவர்களாக நினைக்கிறார்களோ அப்போது கொடுக்கிறார்கள். இது மெத்தனம் தானே தவிர வேறொன்றுமில்லை. அரசு வீடு வழங்கும் திட்டம் என்பது நீங்கள் சொல்வது போல ஒட்டுக்காகப் பண்ணிய பித்தலாட்டம். ஒப்புக் கொள்கிறேன், ஆனால் கலைமாமாமணி விருதில் அந்த மாதிரி நினைக்க லாகிக்கே இல்லை. [தொடரும்]

Jayadev Das said...

அதிகம் வேண்டாம், நீங்களே ஒரு கணக்கு போடுங்கள், குத்து மதிப்பாக இந்த விருது வாங்கியவர்கள் எங்கே வசிக்கிறார்கள், அங்கே அவர்களால் எவ்வளவு ஓட்டு விழும், அந்த தொகுதியின் வாக்களர் எண்ணிக்கை என்ன, இவர்களது ஓட்டால் அந்த தொகுதியை கைப்பற்ற முடியுமா? [கள்ள ஓட்டால ஜெயிகிரவனுக்கு போயி இந்த கணக்கே போட முடியாதுங்கிறது வேற விஷயம்!] . அந்த மாதிரி எத்தனை தொகுதி வரும் என்றெல்லாம் பாருங்கள் நான் சொல்ல வருவது தெரியும். [தயவு செய்து தங்களுடன் வாக்கு வாதம் செய்கிறேன் என நினைக்காதீர்கள், சும்மா, உங்களுடன் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான் ].