Wednesday, January 12, 2011

பொங்கலுக்கு காவலன்! இல்லை, சந்தேகமாயிருக்கு!


என்னப்பா நடக்குது விஜய் படங்களுக்கு? நல்லா ஓடிக்கிட்டு இருந்த சுறா வை பாதியில் சிங்கத்தைவிட்டு காலிபண்ணியதா பல குற்றச்சாட்டுகள் வந்தது. அதைத் தொடர்ந்து சன் குழுமத்துக்கும் விஜய்க்கும் பல பிரச்சினைகள் இருப்பதா சொல்றாங்க. அது உண்மையாகும் வகையில் இடையில் எஸ் எ சந்திரசேகரா "அம்மா"வைப்போயி சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கி வந்து இருக்கார். அதனாலயோ என்னவோ இப்போ காவலன் ரிலீஸுக்கு ஏகப்பட்ட பிரச்சினையா இருக்கு போல.

அம்மா ஆட்சிக்கு வந்தாலும் அதுக்குள்ள காவலன் தலையெழுத்து முடிஞ்சிரும். இந்த எழவெல்லாம் விஜய் அப்பாவுடைய அரசியல் கனவால் (இல்லை பகல் கனவால்) வந்தவைதான் என்பது என் தியரி. சில வருடங்கள் முன்னால் ரஜினிக்கடுத்து விஜய்தான்னு சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜய்க்கு இன்னைக்கு சோதனை மேல் சோதனையா இருக்கு! இவரே வம்பை விலை கொடுத்து வாங்கிவந்து வச்சு அழகு பார்க்கிறாரா? இல்லை விஜய் உப்பு விக்கபோனால் மழை பெய்யுதா?

ஆமா, என்னவோ அம்மாவுக்கு விஜய் முதல்வராகனும்னு ரொம்ப ஆசைங்கிற மாதிரி எஸ் எ சந்திரசேகரா பகல்க்கனவு காண்கிறது இருக்கு. சினிமாவும் அரசியலும் ப்ளண்ட் ஆகியிருக்க இந்த சூழலில் இளம் நடிகர் விஜய் பேசாமல் நடிப்புத் தொழிலை மட்டும் கொஞ்சம் கவனாமாகப் பார்ப்பது நல்லது- இதை நான் ஏற்கனவே 10 முறை சொல்லியாச்சு!

பொங்கல் படங்களைப் பார்ப்போம்

1) காவலன் (ரிலீஸ் சந்தேகம் என்கிறார்கள் இந்த நிமிடம் வரை)

விஜய்-அசின் ஜோடி எனக்கு கொஞ்சம் போர் அடிச்சு விட்டது. அதனால அது ஒண்ணும் எனக்கு ரொம்ப அட்ராக்டிவா தெரியலை. இசை: வித்யாசாகர். பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. விஜயுடைய ஸ்க்ரீன் ப்ரெசெண்ஸ் என்னைக்குமே ஒரு பெரிய ப்ளஸ்தான். தான் இயக்கிய "பாடிகாட்"னு ஒரு மலையாள வெற்றிப்படத்தை இயக்குனர் சித்திக் ரிமேக் செய்வதால், காவலன் நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட் தான். பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா பாக்ஸ் ஆஃபிஸில் #1 ஆக நிற்கும் . எப்படியாவது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்னு நம்புவோம்.

2) சிறுத்தை (பொங்கல் ரிலீஸ்)

தனுஷின் ஆடுகளம்தான் #2 ஆக எல்லாரும் ப்ரஜெக்ட் செய்றாங்க! ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆடுகளம் என் மனதைக்கவரவில்லை! "சிறுத்தை"தான் #2! கார்த்தியோட முதல் டபுள் ஆக்ட் படம்! அதனால் நான் இதை ரொம்ப எதிர்பார்க்கிறேன். டபுள் ஆக்ட் மூவி பொதுவா தோல்வியடைவது அரிது. இதுவும் ஒரு ரிமேக் படம்தான். தெலுகுல ரவிதேஜா நடிச்ச வெற்றிப்படம்தான் இது(te: vikramakudu) . தமன்னா ஹீரோயின். எனக்குப் பிடிக்காத ஒரு ஹீரோயின்தான். இசை: வித்யாசாகர், பாடல்கள் எல்லாம் ஓ கே ரகம். இந்தப்படம் ஸ்லோவாக பிக் அப் ஆகும். அதாவது பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் 3 வதாக வரும். பின்னால் பிக் ஆகும் என்பது என் நம்பிக்கை. நிச்சயம் க்ரிடிக்ஸ் கையில் இந்தப்படத்தின் வெற்றி இருக்கு. விமர்சனங்கள் மோசமா வந்தா கார்த்தி கதி அதோ கதிதான்.

3) ஆடுகளம்

இந்தப்படத்தை தலையில் தூக்கிவச்சுக்கிட்டு ஆடுற இந்த சன் பிக்ச்சர்ஸை என்ன பண்ணலாம்னு எரிச்சலா இருக்கு. இதுல மெட்ராஸ்க்கார தனுஷ் மதுரைக்காரனாகிறாராம். "பொல்லாதவன்" புகழ் வெற்றிமாறன் இயக்கம். இசை: ஜி வி ப்ரகாஷ். ட்ரைலெர்ல "கொண்ணேப்புடுவேன்"னு சொல்றாரு நம்ம மருதை பாஷையிலே! எனக்கு என்னவோ இந்தப்பட ட்ரைலெர் அப்புறம் இந்தக் கோழிச்சண்டையெல்லாம் ரொம்ப இம்ப்ரெஸிவா தெரியலை! ஆனா சன் டிவி கமர்ஷிலை வச்சு எதை வேணா சாதிக்க முடியும்னு நெனச்சுட்டு இருக்காங்க. மக்கள் அந்த நெனப்பிலே மண் அள்ளிப்போட்டா சரிதான். ஆடுகளம் என்னோட ஃபேவரைட் இல்லை. ஆனால் ஹூ நோஸ்? லெட் அஸ் வெயிட் அண்ட் சி!

4) இளைஞன் (கலைஞரின்)

பா விஜய் நல்லாப் பாட்டு எழுதுவாரு. இவர் ஹீரோவா நடிக்கிற இரண்டாவது (?) படம். இன்னைக்கு திரைக்கதை எழுதுவதில் கொடிகட்டிப்பறந்த பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜாக்கூட ஒண்ணுமில்லைனு ஆயிட்டாங்க. அந்தக்காலத்தில் பராசக்தில திரைக்கதை வசனத்துல மக்கள் மனதை அள்ளினார் கலைஞர். 70-80ல கொடிகட்டிப் பறந்த பா இயக்குனர்களால் சாதிக்க முடியாதது கலைஞரால் இப்போ முடியுமா? இன்னொரு பெரிய மேட்டர் இதில் என்னனா நம்ம கமெர்ஷியல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்! இசை: இதிலும் வித்யாசாகர்தான்! நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை. ஒரு சுமாரான படமா வந்தாலே அதிசயம்தான்.

என்னுடைய எதிர்பார்ப்பு!

சிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.

இது நாலும் ரிலீஸ் ஆவதால் நம்ம மன்மதன் அம்பு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பயங்கரமா பாதிக்கப்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை! :)

18 comments:

குடுகுடுப்பை said...

இது நாலும் ரிலீஸ் ஆவதால் நம்ம மன்மதன் அம்பு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பயங்கரமா பாதிக்கப்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை! :)

என்ன ஒரு சந்தோஷம்.

எனக்கென்னவோ ரஜினி முதல்வரா வந்துதான் விஜய் பிரச்சினைய தீர்ப்பாருன்னு நினைக்கிறேன்.

பழமைபேசி said...

நல்லாச் சொல்றாய்ங்க... கேட்டா, நான் பதிவுலகத்துப் பக்கமே வர்றதில்லைனு நீட்டோ நீட்டுன்னு நீட்டி முழக்குறது?! ஃம்!!

குடுகுடுப்பை said...

அண்ணே பழமையாரே: இந்தப்பக்கம் கவர்ச்சிப்பக்கம் மாதிரி.

குடுகுடுப்பை said...

நாம இரண்டு பேரும் பிரபலமா இருந்திருந்தா இந்நேரம் வருண் நம்மைப்பத்தியும் பதிவு போட்டிருப்பாரு,நமக்கு அந்தக்கொடுப்பினை இல்லை.

பழமைபேசி said...

//நம்மைப்பத்தியும் பதிவு போட்டிருப்பாரு,//

சொந்த செலவுல ஏந்தான் சூனியம் வெச்சுக்கறாங்களோ தெரியலை?! இஃகி!!

வருண் said...

***குடுகுடுப்பை said...

இது நாலும் ரிலீஸ் ஆவதால் நம்ம மன்மதன் அம்பு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பயங்கரமா பாதிக்கப்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை! :)

என்ன ஒரு சந்தோஷம்.***

ஹலோ இதுல எனக்கென்ன சந்தோஷம்? ஒரு நடப்பைச் சொன்னேன்..

***எனக்கென்னவோ ரஜினி முதல்வரா வந்துதான் விஜய் பிரச்சினைய தீர்ப்பாருன்னு நினைக்கிறேன்.

12 January 2011 1:41 PM***

ரஜினி முதல்வராகப்போறாரா!!! நீங்க சொன்னால் எது வேணா நடக்கலாம் :)))

வருண் said...

***பழமைபேசி said...

நல்லாச் சொல்றாய்ங்க... கேட்டா, நான் பதிவுலகத்துப் பக்கமே வர்றதில்லைனு நீட்டோ நீட்டுன்னு நீட்டி முழக்குறது?! ஃம்!!

12 January 2011 1:58 PM***

ஏங்க, மணியண்ணா!!!

அவரு ரொம்ப நாளைக்கப்புறம் எங்க "ஆத்து"ப்பக்கம் வந்து இருக்காரு. அவரை ஏன் இப்படி விரட்டுறீங்க? :(

அதுவும் கமலை (பெயிட்டா வச்சி) கமலைப் பத்தி ஏதாவது எழுதினால்த்தான் அவரிடம் பின்னூட்டம் வாங்க முடியும்! :))

வருண் said...

***குடுகுடுப்பை said...

அண்ணே பழமையாரே: இந்தப்பக்கம் கவர்ச்சிப்பக்கம் மாதிரி.

12 January 2011 2:04 PM***

கவர்ச்சியா இங்கே என்ன இருக்கு? எல்லாம் உங்க கற்ப்னைக் கண்ணுக்குத்தான் தெரியுது போல! :)))

வருண் said...

***குடுகுடுப்பை said...

நாம இரண்டு பேரும் பிரபலமா இருந்திருந்தா இந்நேரம் வருண் நம்மைப்பத்தியும் பதிவு போட்டிருப்பாரு,நமக்கு அந்தக்கொடுப்பினை இல்லை.

12 January 2011 2:05 PM***

உண்மையிலேயே உங்களைப் பத்தியும், மணியண்ணா பத்தியும் எழுதினால் ரொம்ப புகழ்ந்து தள்ளிடுவேன். வெட்கப்பட்டுட்ட்டே (புகழ்ச்சியை அள்ளிக்கொள்ள முடியாமல்) அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வரமாட்டீங்க! அதான் யோசிக்கிறேன். :)

வருண் said...

***பழமைபேசி said...

//நம்மைப்பத்தியும் பதிவு போட்டிருப்பாரு,//

சொந்த செலவுல ஏந்தான் சூனியம் வெச்சுக்கறாங்களோ தெரியலை?! இஃகி!!***

அடுத்த பதிவு நம்ம "மணியண்ணாவுடைய பொது நோக்கு மற்றும் தமிழ்ப் பற்று" னு போட்டு எழுதவா? :)

Philosophy Prabhakaran said...

எனக்கென்னவோ காவலன் ரிலீஸ் ஆயிடும்னு தான் தோணுது... தியேட்டர் பேரெல்லாம் கூட அனௌன்ஸ் பண்ணியாச்சே...

என்னுடைய சிறுத்தை முன்னோட்டத்தை படிக்கவும்...


http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_12.html

யாதவன் said...

நல்ல அலசல் வாழ்த்துக்கள் அனா காவலன் வெற்றி பெரும்

தர்ஷன் said...

நமக்குன்ன ஆடுகளம்தான் வருண்
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் இருக்கும் நம்பிக்கையால்

Chitra said...

இருந்தாலும், பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒரு போட்டி - எதிர்பார்ப்பு குறைந்து கொண்டே தான் வருகிறது.

வருண் said...

ரசிகன் தீர்ப்பு
எனக்கென்னவோ தெலுங்கு ரீமேக் படங்களின் மீது துளியளவு கூட ****நம்பிக்கை இல்லை. அதிலும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் பழிவாங்கும் கதையை வைத்து காய் நகர்த்துவார்கள் என்று புரியவில்லை. இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் அடியாக இருக்கக் கூடும் என்பது எனது கணிப்பு.***

அண்ணே பிளாசஃபி!

உங்க ப்ரிடிக்ஷன் பார்த்தேன். நல்ல அலசல்.. ஆனா.. எனக்கு இதுவும் ஹிட் தான் னு தோணுது. பார்க்கலாம் :)

வருண் said...

***யாதவன் said...

நல்ல அலசல் வாழ்த்துக்கள் அனா காவலன் வெற்றி பெரும்

12 January 2011 5:56 PM***

காவலன் வெற்றியடையும்னுதான் நானும் சொல்லியிருக்கேங்க. ஆனால் ஜனவரி 15லதான் ரிலீஸ் ஆகுதாம்.

Why it is so complicated??? Too much politics to put down Vijay?

வருண் said...

***Blogger தர்ஷன் said...

நமக்குன்ன ஆடுகளம்தான் வருண்
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் இருக்கும் நம்பிக்கையால்

12 January 2011 10:07 PM***

உண்மைதாங்க, தர்ஷன். ஆடுகளம் ரொம்ப எத்ரிபார்க்கப்படுகிறது. ஆனால் எனக்கு தனுஷ் படம்னா.. இப்படித்தான்..

வருண் said...

***Chitra said...

இருந்தாலும், பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒரு போட்டி - எதிர்பார்ப்பு குறைந்து கொண்டே தான் வருகிறது.

13 January 2011 5:48 AM***

நமக்கெல்லாம் ரஜினி படம் வந்தால்தான் பொங்கல் பொங்கலாயிருக்கும் :)))