Thursday, June 2, 2011

விஷப்பாம்புகள்-2 பாம்புக்கு ஏது காது?

பாம்புக்கு காது கெடையாது! இசையை எல்லாம் ரசிக்கவும் தெரியாது! என்பதே அறிவியல்ப்பூர்வமான உண்மை! ஆனால் நம்ம ஊர் பாம்பாட்டிகள் ஒரு குழல் எடுத்து ஊதி ஊதி நல்ல பாம்பை ஆட வைப்பாங்க?! மேலும் நம்ம ஊரில் காது ஒருவருக்கு நல்லாக் துல்லியமாக கேட்டால், அவருக்கு பாம்புக்காது னு வேற சொல்லுவாங்க. மகுடி எடுத்து வூதி பாம்பாட்டி செய்றதெல்லாம் சும்மா "ட்ரிக்ஸ்" னுதான் வெள்ளைக்காரங்க நம்புறாங்க! நம்ம ஆளுங்க பாம்பை ஆடவைப்பதுடன், விஷப்பாம்பை எல்லாம் கடவுளாக்கி வணங்கவும் ஆரம்பிச்சுடுவாங்க!

சரி, விஷப்பாம்புகள் பத்தி பார்ப்போம். முன்னால சொன்னதுபோல விஷப்பாம்புக்கு பேர் போன நாடுகளில் நம்ம ஊரும் ஒண்ணு. அதுவும் நமக்கு நல்லாத் தெரிந்த, பலதடவைகள் கேள்விப்பட்ட நான்கு வகையான பாம்புகள் உலகத்திலேயே மிகவும் கொடிய விஷப்பாம்புகள் வகையைச் சேரும்!

* நல்ல பாம்பு (நாகம்) Elapidae family:

நல்ல பாம்பு பொதுவாக தென் கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவில்தான் அதிகம் வசிக்கிறது. அதிக குளிர் சீதோசனநிலையுள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் நல்ல பாம்பு கெடையாது. பொதுவாக இவைகள் இறை தேடுவது இரவில்தான்! நல்ல பாம்பின் விஷமும் முக்கியமாக நியுரோ டாக்ஸின் தான். நம்ம செண்ட்ரல் நேர்வஸ் சிஸ்டத்தை மற்றும் மூளையை பாதிக்கும் விஷம்!

இந்தியாவில் நல்ல பாம்பு கடிச்சா அதற்கு மருந்தாக "polyvalent snake anti venom" தான் பொதுவாக கொடுக்கிறாங்க. இது குதிரைக்கு குறைந்த அளவில் நல்ல பாம்பு விஷத்தைக் கொடுத்து, படிப்படியாக அதிகமாகக் குதிரை ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி, அதிலிருந்து தயாரித்த மருந்து.

ஒரு சிலர் நல்ல பாம்பு எல்லாமே "ஆண் பாம்பு"னு சொல்லி கேட்டிருக்கேன். அதாவது, ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போல, ஆண் பாம்பு மட்டும்தான் "படம் எடுக்கும்" என்று ஒரு சிலர் நம்புறாங்க. உண்மையிலேயே ஆண் மற்றும் பெண் நாகம் படம் எடுக்கும் என்றுதான் அறிவியல் சொல்லுது!

கீழே கொடுக்கப் பட்டுள்ள இன்னும் 3 வகை நம்ம ஊர்ப் பாம்புகள் (* கட்டுவிரியன் (common Krait, Family: "Elapidae": * கண்ணாடி விரியன் * சுருட்டை விரியன்) பற்றி பின்னால பார்ப்போம்!

மேலே படத்தில் உள்ளது கருநாகம்!

7 comments:

கோவி.கண்ணன் said...

//மேலே படத்தில் உள்ளது ராஜநாகம்!//

பார்த்தாலே சும்மா அதுறுதில்லே.....!

//பாம்புக்கு காது கெடையாது! இசையை எல்லாம் ரசிக்கவும் தெரியாது! என்பதே அறிவியல்ப்பூர்வமான உண்மை! ஆனால் நம்ம ஊர் பாம்பாட்டிகள் ஒரு குழல் எடுத்து ஊதி ஊதி நல்ல பாம்பை ஆட வைப்பாங்க?!

ஒலி அதிர்வை பாம்புகள் நாக்கால் உணரும். மகுடி அதிர்வை ஏற்படுத்தவல்லது. மகுடியை வாசிக்கும் போது அசைத்து அசைத்து வாசிப்பதால் பாம்பு அதற்கேற்றவாறு ஆடுகிறது. பாம்புக்கு காதி இல்லை என்பது உண்மையோ அது போல் அதற்கு ஒலி அதிர்வை உணரும் திறன் இருப்பதும் உண்மை தான்.

ராமலக்ஷ்மி said...

கோவி.கண்ணன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். அதிர்வுகளை ஏற்படுத்தவே மகுடி.

/பாம்புக் காது/

ரொம்ப சகஜமா பயன்படுத்தப் படுவது:))!

ராஜ நாகம் கம்பீரம்.

Anonymous said...

சகோ. பாம்புகளைக் குறித்த தங்களின் பதிவு அருமை. பாம்புகளைப் பின்னி நிறைய மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் இருக்கின்றன. அனைத்தையும் கொஞ்சம் விளக்கினால் நல்லாருக்கும் சகோ.

அப்புறம் ஒருத் திருத்தம் நல்ல பாம்பு எனப்படும் கருநாகம் என சொல்வது தான் வழக்கம். பலர் அதனை இராஜநாகம் என அழைக்கின்றார்கள். ஆங்கிலத்தில் உள்ள KING COBRA என்பதை தமிழ்ப் படுத்திவிடுகின்றார்கள். இது தவறு என சில தமிழாய்வாளர்கள் சொல்லியும் வருகின்றார்கள்.

கருநாகம் என்பதே KING COBRA-வின் தமிழ்ப் பெயராகும். மாற்றினால் மகிழ்வேன் ... பதிவுகளிலாவது தமிழ் வாழட்டுமேன் !

வருண் said...

***கோவி.கண்ணன் said...

//மேலே படத்தில் உள்ளது ராஜநாகம்!//

பார்த்தாலே சும்மா அதுறுதில்லே.....!

//பாம்புக்கு காது கெடையாது! இசையை எல்லாம் ரசிக்கவும் தெரியாது! என்பதே அறிவியல்ப்பூர்வமான உண்மை! ஆனால் நம்ம ஊர் பாம்பாட்டிகள் ஒரு குழல் எடுத்து ஊதி ஊதி நல்ல பாம்பை ஆட வைப்பாங்க?!

ஒலி அதிர்வை பாம்புகள் நாக்கால் உணரும். மகுடி அதிர்வை ஏற்படுத்தவல்லது. மகுடியை வாசிக்கும் போது அசைத்து அசைத்து வாசிப்பதால் பாம்பு அதற்கேற்றவாறு ஆடுகிறது. பாம்புக்கு காதி இல்லை என்பது உண்மையோ அது போல் அதற்கு ஒலி அதிர்வை உணரும் திறன் இருப்பதும் உண்மை தான்.

2 June 2011 7:00 PM***

உண்மைதான் கோவி. காது இல்லாமலே பாம்புக்கள் ஒலி அதிர்வை நன்கு உணரமுடியும்!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

கோவி.கண்ணன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். அதிர்வுகளை ஏற்படுத்தவே மகுடி.

/பாம்புக் காது/

ரொம்ப சகஜமா பயன்படுத்தப் படுவது:))!

ராஜ நாகம் கம்பீரம்.

2 June 2011 7:09 PM***

வாங்க ராமலக்ஷ்மி. உண்மைதான் பாம்புகள் உடலில் (தோலில்?) ஒலி அதிர்வை உணரும் "சென்சார்கள்" உள்ளன. :)

வருண் said...

***இக்பால் செல்வன் said...

அப்புறம் ஒருத் திருத்தம் நல்ல பாம்பு எனப்படும் கருநாகம் என சொல்வது தான் வழக்கம். பலர் அதனை இராஜநாகம் என அழைக்கின்றார்கள். ஆங்கிலத்தில் உள்ள KING COBRA என்பதை தமிழ்ப் படுத்திவிடுகின்றார்கள். இது தவறு என சில தமிழாய்வாளர்கள் சொல்லியும் வருகின்றார்கள்.

கருநாகம் என்பதே KING COBRA-வின் தமிழ்ப் பெயராகும். மாற்றினால் மகிழ்வேன் ... பதிவுகளிலாவது தமிழ் வாழட்டுமேன் !

2 June 2011 7:54 PM***

கருநாகம் = King Cobra னு நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன், நன்றி, இக்பால் செல்வன்! :)

லதானந்த் said...

படத்தில் இருப்பது கருநாகம் அன்று. அது ராஜநாகம். இரண்டுக்கும் வேறுபாடுகள் பல உள.