Saturday, April 25, 2009

காதலுடன் 14

"சந்தியா! ரமேஷ்தான் பேசுறேன்! எங்கே போன சந்தியா? ஆளையே காணோம்! இது என்னுடைய ஐந்தாவது மெசேஜ் -கடந்த பத்து நாட்களில். இன்னும் உயிரோட இருந்தால் கால் ரிடெர்ன் பண்ணு ப்ளீஸ்" என்று அவளுக்கு வாய்ஸ் மெசேஜ்ல சொல்லி முடித்தான்.

சந்தியாவின் அமைதிக்கு காரணம், திடீர்னு இந்தியாவில் இருந்து அவள் அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை என்று ஃபோனில் சொன்னார்கள். மைல்ட் அட்டாக்தான் என்றார்கள். இப்போ ஹாஸ்பிட்டலில் இருப்பதாகவும் சொன்னாங்க. மைல்ட் அட்டாக் என்றாலும் உடனே புறப்பட்டு இந்தியா போய்விட்டாள், சந்தியா. அவசரமா டிக்கெட் புக் பண்ணி புறப்பட்டதால் அவளால் இந்த ஷாக் நியூஷை ரமேஷிடம் சொல்ல முடியவில்ல. இ-மெயில் அனுப்பவும் நேரமில்லை, மேலும் மனசு ரொம்ப குழம்பிய நிலையில் இருந்ததால் யாரிடமும் சரியாக்கூட சொல்ல முடியவில்லை. வேலையில் லீவ் அப்ரூவல் வாங்கவே போதும் போதும்னு ஆயிடுச்சு.

இந்தியா போனதும் ஏர்போர்ட்ல இருந்து நேராக ஹாஸ்ப்பிட்டல்தான் போனாள். அங்கே அம்மா பெட்ல இருந்தாள். அப்பா, அவளருகில் அமர்ந்து அழுது ரொம்ப கலங்கிப்போய் இருந்தார். அப்பா, அம்மா ரெண்டுபேரும் சண்டை போட்டுத்தான் பார்த்து இருக்காள், சந்தியா. இதுபோல் அப்பா அம்மாவுக்காக கலங்கி, அழுது அவள் இன்றுவரை பார்த்ததில்லை. இப்போதுதான் புரிந்தது அவளுக்கு நல்லா சண்டை போட்டார்கள் ஒருவரை ஒருவர் கம்ப்ளைண் செய்தார்கள் என்றால் நல்லா ஹெல்த்தியாக இருக்காங்கனு அர்த்தம்னு.

அம்மாவுக்கு உள்ள ஹெல்த் ப்ராப்ளம்ஸ் ஓரளவுக்கு அவளுக்குத் தெரியும். கொலெஸ்டிரால் அதிகமாக இருக்கிறது அதுபோக சேர்த்து ஹைப்பர் டென்ஷனும் இருக்குனு தெரியும் அவளுக்கு. ஆனால் கொலெஸ்டிரால், ஹைப்பர் டென்ஷன் யாருக்கு இல்லை? எல்லோருக்குமா ஹார்ட் அட்டாக வருது?

கொஞ்ச நாளாவே ஒழுங்கா அல்லோப்பதி மாத்திரை மருந்துகள் சாப்பிடாமல், ஹைப்பர் டென்ஷன் சரிபண்ண யோகா பண்ணுறேன், ஆயுர்வேத/சித்த மெடிசினை சாப்பிட்டால் நல்லதுனு சொன்னாங்கனு என்று ஃபோனில் சொல்லிக்கொண்டு இருந்தாள் அம்மா. இப்படி கண்ட வைத்தியம் செய்து உடம்பை கெடுத்துக்கொண்டாள் என்று நம்பினாள் சந்தியா. என்ன வேதிப்பொருள் இருக்குனே தெரியாத கண்ட ஆயுர்வேத மாத்திரை/மருந்துகள் சாப்பிடுவது பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தாள் சந்தியா. ஆனால் இவள் சொல்வதையெல்லாம் அவள் அம்மா கேட்பதாக இல்லை.

ஓரளவுக்கு அம்மா உடல்நிலை நார்மல் ஆனவுடன் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர், அந்த கார்டியாலைஸ்டிடம் அம்மா உடல்நிலைபற்றி தனியாக பேசினாள், சந்தியா. கொலெஸ்டிரால் அதிகமானதுனாலதான் பிரச்சினை என்றார் அவர். இப்போ ஆஞ்சியோ ப்லாஸ்டி பண்ணி இருக்கோம். இதோட அவங்க ரெகுலரா மெடிசின் சாப்பிடனும், டயட்ல இருக்கனும். லிப்பிட்டார் ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்கேன். அது ஓரளவுக்கு கொலெஸ்டிராலை குறைத்து கீழே கொண்டு வரனும். தவிர ஹைப்பர் டென்ஷன் பில்ஸையும் ரெகுலராக சாப்பிடனும். மேலும் 3 மாதம் ஒருமுறை செக் அப்க்கு தவறாமல் வரனும். இனிமேல் யோகா பண்றேன், மெடிட்டேஷன் பண்ணி நான் ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறேன் என்று சொல்லி கொடுத்திருக்கிற ப்ரிஸ்க்ரிப்ஷனை சாப்பிடாமல் கவனக்குறைவா அவங்க இருக்கக்கூடாது என்று வார்ன் பண்ணினார்.

சந்தியா, இந்தியாவில் இருந்த ரெண்டு வாரம் அம்மாவை நல்லா கவனித்துக்கொண்டாள். அதற்குமேல் லீவ் கிடைக்காததால 2 வாரம் கழித்து புறப்பட்டு திரும்பி வந்தாள். வரும்போது அம்மாவிடம் ஒழுங்கா மாத்திரை சாப்பிடு, இந்த ஆயுர்வேத மற்றும் சித்த மெடிசினை தயவு செய்து விட்டுத்தள்ளு என்று கடிந்து சொல்லிவிட்டுவந்தாள். மேலும் அப்பாவிடமும் அம்மா கவனமாக மாத்திரை மருந்து சாப்பிடுறாங்களானு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து சேர்ந்தாள்.

வந்ததும், ரமேஷிடம் இருந்து, வாய்ஸ் மெசேஜஸ் பல இருப்பதைப் பார்த்தாள். உடனே ரமேஷை கூப்பிட்டாள்.

"ஹாய் சந்தியா!"

"அவசரமா இந்தியா போகவேண்டியதாச்சு, ரமேஷ். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை"

"என்ன ஆச்சு, சந்தியா?”

“ஹார்ட் அட்டாக், ரமேஷ். ரொம்ப நாளா ஹைப்பர் டென்ஷனும், கொலெஸ்டிராலும் இருக்கு. ஆனா அவங்க ஒழுங்கா டயட்ல இருக்கிறது இல்லை, செக் அப் பண்றதில்லை, மாத்திரையும் ஒழுங்கா நேர நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. இப்போ ஹார்ட் அட்டாக்ல வந்து நிக்குது”

“ஐ ஆம் சாரி டு ஹியர் சந்தியா. இப்போ எப்படி இருக்காங்க?”

“இப்போபரவாயில்லை ரமேஷ். ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டினு ஏதோ ஒரு ப்ரொஸஸுட்ஜர் பண்ணி இருக்காங்க. இப்போ பரவாயில்லை, ரமேஷ். வீட்டுக்கு வந்துட்டாங்க. கவனமா இருக்கனும்னு டாக்டர் சொல்றார்”

“ஹார்ட் டிஸீஸ் எல்லாம் இப்போ ஈசியா ட்ரீட் பண்ணிடலாம் சந்தியா. லேட்டெஸ்டா நெறைய டெவெலப்மெண்ட்ஸ் ஆயிருக்கு சந்தியா. கவலைப்படாதே ”

“என்னவோ போங்க, ரமேஷ்” என்றாள் சோகமாக.

“மனசு சரியில்லையா?”

“ஆமா என்னென்வோ புரட்சியா பேசுறேன். அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லைனா, தாங்க முடியலை, பாருங்க”

“ஹேய், ஐ மிஸ்ட் யு எ லாட், சந்தியா”

“சாரி, உங்ககிட்ட சொல்ல முடியலை, ரமேஷ். அவசரமா டிக்கட் புக் பண்ணிப்போக வேண்டியதாயிடுத்து. மனசும் ரொம்ப குழம்பி இருந்தது”

“பரவாயில்லை. நான் கொஞ்சம் பயந்துட்டேன், அவ்வளவுதான். உனக்கு இப்போ "ஜெட்லாகா" இருக்கா?”

“ஆமா”

“நைட் உனக்கு தூக்கம் வருமா?”

“வராதுதான். ஏன் நீங்க என்ன செய்யச் சொல்றீங்க?”

“நான் வேணா அங்கே வரவா?”

"நல்ல ஐடியா. வந்து என்னை தூங்க வைக்கவா இல்லை தூக்கத்தை கெடுக்கவா?” அவள் சிரித்தாள்.

“ஆமா ரெண்டுக்கும்தான்”

“சரி வாங்க. இன்னைக்கு ஃப்ரைடே நைட் தானே?”

“தனியா ஒரு பெட் இருக்கா?”

“இல்லைனா என்ன இப்போ? ஏன் என்னோட சேர்ந்து படுத்துக்க வேண்டியதுதானே?”

“அதானே?”

“அதெல்லாம் இருக்கு, வாங்க!”

“ஏய்”

“நெஜம்மாவே இன்னொரு பெட் ரூமில் ஒரு ட்வின் சைஸ் மேட்ரஸ் இருக்கு.பயப்படாமல் வாங்க”

சரியா, 9 மணிக்கு காலிங் பெல் அலறியது. ரமேஷ்தான் என்று பார்த்துவிட்டுக் கதவைத்திறந்தாள்.

“வாங்க, ரமேஷ்” என்றாள்.

“என்ன அதிசயமா சேலை கட்டி இருக்க!” அவளை வித்தியாசமாக பார்த்தான்.

“சும்மாதான்”

“ஏய், ஐ தின்க் ஐ மிஸ்ட் யு எ லாட். மே பி ஐ ஷுட் கோ பேக் ஹோம்”

“வாட்!! என்ன ஆச்சு?” என்று சொல்லிக்கொண்டே அவள் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருந்தாள். ரமேஷ் அவள் பின்னால் அருகில் நின்று கொண்டு அவள் காதுகளில் முனுமுனுத்தான்.“சேலையில் ரொம்ப செக்ஸியா இருக்க” என்று.

அவள் முதுகோட உரசுவதுபோல் நின்றான். அவள் உடலில் இருந்து ஒரு மணம் வந்தது. அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட்டது. அவள் நிலைமையை சமாளித்து சுதாரிக்கும் முன்னால் அவள் கழுத்தில் அவன் இதழ்களை பதித்தான். சந்தியா அப்படியே சிலையாக நின்றாள்.

“என்ன சொன்னீங்க?” என்றாள் மெதுவாக சிறிது நேரம் கழித்து.

“இல்லை, நீ சேலையில் இருப்பதால் ரொம்ப ரொம்ப செக்ஸியா இருக்க. நான் இங்கே இருந்தால் உன்னை ஏதாவது செய்துவிடுவேன். அதனால் திரும்பி போயிடுறேன்..” என்று சொல்ல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் தன் உதட்டைப்பதித்தான். அவன் முந்த்தங்களால் சந்தியா உடம்பில் என்னென்னவோ நடந்தது. அவள் பாதிக்கண்களை மூடி இருந்தாள். அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யோசிக்கும்போது மறுபடியும் காலிங் பெல் அடித்தது. ரமேஷ் இன்னொரு முறை அவள் கழுத்தில் லேசாக முத்தமிட்டுவிட்டு மெதுவாக பின்னால் நகர்ந்தான்.

பெல் சத்தத்தால் சுயநினைவுக்கு வந்த சந்தியா, மெதுவாக வெளியே பார்த்தாள். அங்கே பக்கத்தில் வசிக்கும் ஒரு வயதான அமெரிக்க வெள்ளைக்காரப்பெண்மணி நின்று கொண்டு இருந்தார்.

சந்தியா கதவைத்திறது, "ஹாய் க்ரிஸ்டீன். எனி ப்ராப்ளம்?" என்றாள்.

“Pardon me, Sandhya, please, Can I borrow your jumper cable? My Car battery seems to be dead as I was away for a while. I have to go out shopping now”

“Sure, let me come down and get that for you. It is in my car” என்றாள் சந்தியா.

சந்தியா தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அந்த அம்மாவுடன் நடந்து வெளியே போனாள்.

-தொடரும்

No comments: