Thursday, September 5, 2013

என்ன விசய், எஸ் எ சி!! தலைவா சக்சஸ் மீட் எல்லாம் இல்லையா?

தலைவாக்கு வச்ச ஆப்புல நம்ம ஊர் கதாநாயகர்களிலிருந்து, தயாரிப்பாளர்கள் வரை எல்லாரும் குழம்பிப் போயி இருக்காணுக! விஸ்வரூபத்திற்கு தடை! அடுத்து தலைவாக்கு தடை!னு தமிழ்நாடு அரசு 144 தடை அது இதுனு புதுசா ஆரம்பிச்சு எல்லாரையும் குழப்பி எடுத்துக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் இதிலிருந்து தப்பிச்சதுக்கு காரணம், திருட்டு விசிடி ல படம் பார்த்தால் ஒரு பயலுக்கும் புரியலை! ஒருவேளை தியேட்டர்ல போயிப்பார்த்தால் புரிஞ்சாலும் புரியும்னு தேட்டருக்குப் போனால் அங்கேயும் அதே எழவுதான்! ஆனால் தேட்டருக்குப் போயி நம்மாளு தட்சணை வச்சது வச்சதுதானே? ஆனால் தலைவா விசயத்தில் திருட்டு விசிடிலயே கதை எல்லாம் புரிஞ்சிடுச்சுனு நம்மாளு காசை மிச்சம் பண்ணிட்டான்!

விஸ்வரூபத்தை டி ட்டி எச் ல ரிலீஸ் பண்ணப்போறதா சொல்லி கமலஹாசன் சாதிச்சதைவிட, ஆளுங்கட்சிக்கு ஒரு படத்தை தடை செய்ய புதுமாதிரியான ஒரு யுக்தியை கற்றுக் கொடுத்து,  யாருக்கு வேணா, எந்தப் படத்துக்கு வேணா  ஆளுங்கட்சி ஆப்பு வைக்கலாம்னு ஒரு பாடம் கற்றுக் கொடுத்து சாதிச்சது பெரிய "ஒலக சாதனை" தான். ஆக மொத்தத்த்தில் தலைவாவுக்கு ஆப்பு வச்சது விஸ்வரூபம்தான்னு கூட சொல்லலாம்!

தலைவாவுக்கு எதுக்குத் தடை என்பது இன்னும் சரியாகப் புலப்படவில்லை! இதுல என்ன வேடிக்கைனா நம்ம புரச்சித் தமிழன் சத்யராஜும் தலைவால ஒரு பாத்திரத்தில் நடிச்சு இருக்காரு. இந்தப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரம் அது இதுனு வாயைத் திறக்கவே இல்லை, மனுஷன். அதைவிட வேடிக்கை, நம்ம ரசினியின் நிலைப்பாடு.  என்ன எழவுப் பிரச்சினையா இருந்தாலும், இளைய நடிகர்களுக்கு உதவுவதாகச் சொல்லி ஏதாவது சொல்லுவாரு. ஆனால் இந்தத் தலைவா விசயத்தில் எதுவும் வாயைத் திறக்கவே இல்லை!!

நம்ம வருங்கால முதல்வர், விசய், தலைவா பிரச்சினைக்கு வந்த காரணங்களையும், அதனால் தமிழ்நாடு அரசு தவிர்க்க முடியாமல் விதித்த தடையையும் சரியாகப் புரிந்துகொண்டு அதை எல்லாம் புறந்தள்ளி, திருட்டு வி சி டி எல்லாம் வந்தப்பிறகு தலைவாவை வெற்றிகரமாக வெளியிட உதவிய ஜெயலலிதாவுக்கு நன்றி, நன்றி, மிக்க நன்றி, மிகவும் நன்றினு தொடர்ந்து நன்றி  சொன்னாரு சொல்லிக்கிட்டே இருந்தாரு. இப்படி நன்றி சொல்வதிலேயே மூழ்கிவிட்டதாலோஎன்னவோ  இப்போ தலைவாவின் சக்ஸஸ் மீட்டை செயல்படுத்தாமல் மறந்துட்டாங்க நம்ம அண்ணா எஸ் எ சியும் தம்பி விசய் யும்! ஒருவேளை அடுத்து ஜில்லாவுக்கும் ஆப்பு வந்துடுமோனு பயந்துகொண்டு இருக்காங்களோ? என்னவோ? யாருக்குத் தெரியும்? :)

4 comments:

T.N.MURALIDHARAN said...

quote of the day really superb
தலைவா விமர்சனம் டிவி யில பாத்தபோது பழைய விஜய் படம் ஏதோ ஒண்ணு பாக்கற மாதிரியே இருந்தது.

T.N.MURALIDHARAN said...

சமீபத்தில் நீங்கள் உங்கள் வசிப்பிடம் பற்றி மதுரைத் தமிழனுடன் கருத்தாடல் செய்ததை கவனித்தேன். அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் விளையாட்டுத் தனமாக செய்தியை வெளியிட்டிருக்கிறார். முடிந்தால் தொடர்பு கொண்டு அந்தப் பதிவை நீக்க சொல்லவும். ஒருவேளை ஹேக்கிங் ஆக கூட இருக்கலாம்.

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

சமீபத்தில் நீங்கள் உங்கள் வசிப்பிடம் பற்றி மதுரைத் தமிழனுடன் கருத்தாடல் செய்ததை கவனித்தேன். அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் விளையாட்டுத் தனமாக செய்தியை வெளியிட்டிருக்கிறார். முடிந்தால் தொடர்பு கொண்டு அந்தப் பதிவை நீக்க சொல்லவும். ஒருவேளை ஹேக்கிங் ஆக கூட இருக்கலாம்.**

I am really confused to see that post from avargal unmaigaL. I am not in touch with him and I dont have any contact information about him. He used to make such BAD JOKES often. So, it is difficult to understand his REAL situation. Let me see what I can do, murali. I am glad that YOU CARE about him.

Dora said...

மக்கா விஷயம் ரொம்ப சிம்பிள்
ஜெயா டிவி காரையங்க அவிங்க டிவி லே போடா ரைட்ஸ் கேட்டைங்க. தயாரிப்பாளர் சண் டிவிக்கு வித்திடாறு. அம்புட்டு தான். வேற எந்த எழவும் கிடையாது