ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து அவருடைய உண்மையான "ஹெல்த்" எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் இருப்பதால், சவுந்தர்யாவின் கோச்சடையான் போல ஒரு அனிமேஷன் அல்லது மோஷன் பிக்ச்சர் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நல்ல ஐடியாதான். ஆனால் அதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள்? என்பதே பிரச்சினை. படம் வெளிவர காலம் கடக்கக் கடக்க படம் வெளி வராது என்றுதான் ஊர் உலகம் பேசும்.
எதிர்பார்த்ததைவிட காலம் தாமதம் அடைந்துவிட்டதால், நம்ம சூப்பர் ஸ்டாருடைய கோச்சடையான் இப்ப வரும், வந்துரும், வந்துக்கிட்டே இருக்குனு சொல்லச் சொல்ல எரிச்சல்தான் வந்தது. மற்றவர்களைவிட முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு!
ஒரு வழியாக இப்போது இந்தப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது! படம் டிசம்பர் 12 வெளிவருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் "மணிரத்னமே மார்க்கட் இழந்து நிற்கும் இந்த நவீன திரையுலக காலத்தில் கத்துக்குட்டி சவுந்தர்யாவின் கோச்சடையான் எந்தளவுக்கு வெற்றி பெறும்?" என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றால் அது மிகையல்ல.
இந்தப்படத்தில் ஒரு சில ப்ளஸ் பாயிண்ட்ஸ்னு பார்த்தால்..
* ஏ ஆர் ரகுமானின் இசை!
* நம்ம க்யூட் தீபிகா படகோன் இருக்கார்!
* இந்தப் படத்திற்கு ஜெயலலிதாவின் "கருணை"யால் வரிவிலக்கு கொடுக்கப் படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது
ஆனால் என்னதான் ரஜினி ரசிகர்கள் கூட்டம் எங்கும் இருந்தாலும் அவர்கள் மட்டும் பார்ப்பதால் இந்தப் படம் மட்டுமல்ல எந்தப் படமும் வெற்றியடையாது. பொது ஜனங்கள், முக்கியமாக ஓரளவுக்கு சிறுவர்களை கவர்வதுபோல இந்தப்படம் இருந்தால், அவர்களை வைத்து படம் ஓரளவுக்கு வெற்றியடையலாம். மற்றபடி, இவ்வளவு காலதாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தாலே அதுவே ஒரு பெரிய வெற்றிதான்!
கோச்சடையான் ட்ரைலர் தொடுப்பு (என் டி ட்டிவி)! (இதில் ஏதோ காப்பிரைட் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது).
முள்ளும் மலரும் படத்தில் உணர்ச்சிபொங்கப் பார்த்த ரஜினியை இந்த கோச்சடையான் பொம்மை ரஜினியோட ஒப்பிட்டுப் பார்த்தேன்! சோகம்ப்பா! :( |
5 comments:
டிரைலர் பார்த்தேன். அது சவுந்தர்யாவின் அனுபவமின்மையா அல்லது போதிய பணத்தை செலவிடவில்லையா என்று தெரியவில்லை தரம் அப்படித்தான் இருந்தது.
கோச்சடையான்-னா என்ன meaning வருண்?
//அது சவுந்தர்யாவின் அனுபவமின்மையா அல்லது போதிய பணத்தை செலவிடவில்லையா என்று தெரியவில்லை //
Ethicalist E,
படம் முழுவதையும் சௌந்தரியாவே இயக்கியிருப்பார் என்று நம்புகிறீர்களா? நிச்சயமாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன். K.S. ரவிக்குமார் இயக்கி கொடுத்திருப்பார். வெளியே வரும்போது சௌந்தர்யாவின் பெயரில் வரும்.
**** Ethicalist E said...
டிரைலர் பார்த்தேன். அது சவுந்தர்யாவின் அனுபவமின்மையா அல்லது போதிய பணத்தை செலவிடவில்லையா என்று தெரியவில்லை தரம் அப்படித்தான் இருந்தது. ***
படம் எப்படி வருதுனு பார்க்கலாம்!
***Alien A said...
கோச்சடையான்-னா என்ன meaning வருண்?***
யாரோ நாம் கேள்விப்படாத ஒரு வீரர் (கற்பனை வீரர்?) பெயர் போல என்பதை மட்டும்தான் என்னால் யூகிக்கமுடியுது, ஏலியன். :)
Post a Comment