Thursday, December 12, 2013

பாரதியின் பிறந்தநாளை மறந்த தமிழறிஞர்கள்! கவிஞர்கள்!

போன வருடம் 2012ல ரஜினி பிறந்த தினத்தென்று பதிவுலக மாமேதைகள், கவிஞர்கள் (நம்ம கவிஞர் மதுமதியும்தான்), ரஜினியைத் தூக்கிக் கொண்டாடும் தமிழ் சமூகம், மீடியா பாரதியை  மதிக்கலைனு என்று ஒரே ஒப்பாரி வைத்தார்கள்.

இவர்களுக்கும் ரஜினி பொறந்தநாள் அன்றுதான் பாரதி பொறந்தநாள் ஞாபகம் வந்ததோ என்னவோ!என்ற கேள்வி எழாமல் இல்லை!

ரஜினியை, கரிப்பதை விட்டுப்புட்டு ஒழுங்கா பாரதி பொறந்த தினத்திற்கு அவரை வாழ்த்துவதுதான் பெரிய மனுஷனுக்கு அழகுனு இவர்கள் ஒப்பாரிப் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது.

சரி, இந்த முறை (2013) என்ன பண்ணுறாங்கனு பார்ப்போம்னு காத்திருந்தால் எனக்குக் கிட்டியது ஏமாற்றமே! :(

இந்த வருடம் பாரதி பிறந்ததினத்தென்று அவருக்கு ஒரு வாழ்த்தோ,  நினைவுகூர்தலோ எதுவுமே இவர்கள் வலைதளத்தில் காணோம்!

2012ல டிசம்பர் 12 வாக்கிலே  சில வலைபதிவுகளில் வந்த பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது!

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்- ரமணி சார் பதிவு!

ரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை- கவிஞர் மதுமதி


இந்த வருடம் டிசம்பர் 11ல இவர்கள் பாரதியை வாழ்த்தி ஏதாவது பதிவு எழுதினாங்களா?னு நீங்கதான் சொல்லணும்!

1 comment:

'பரிவை' சே.குமார் said...

பாரதியை தமிழறிஞர்கள் கவிஞர்கள் மட்டுமின்றி அனைவரும் மறந்து வருகிறோம் என்பதே உண்மை.