Monday, December 9, 2013

ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!

கடவுளை உணர்ந்தது மனிதமனமா? இல்லை ஆட்டுகுட்டி மனமா? என்ற கேள்விக்கு "மனிதமனம்" என்பதுதான் பதில். இல்லையா? விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா? தெரிந்தும் இருக்கலாம்! தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.

"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது!  விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், "காமக்கிழத்தன்" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, "நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா  நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்!

சரி, இவர் பதில்னு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்..

மகான் ஜெயதேவ் உளறியதில் ஒரு பகுதி இது.
****மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள். ****


என்ன சொல்றார், இந்த மகான்?

இந்த மேதாவி மனிதமனம் பற்றி பேசுகிறார். மனிதமனம் ஒன்றை புரிந்துகொள்ளும்விதம் பற்றி விளக்கம் அளிக்கிறார் இந்த வெளக்கெண்ணை மகான்!

இதற்கு உதாரணம்னு மனிதமனத்தின் உணருதலில் "தந்தை" "மகள்" தாய்" "காதல்"  "கற்பு" "அன்பு" "பாசம்" போன்றவை எல்லாம் "ரிலேடிவ் ட்ருத்" தாம். ஆனால் "கடவுள்"என்கிற இன்னொரு மனிதமனத்தின் பிதற்றல் மட்டும் "அப்சொலூட் ட்ருத்"தாம்!

இந்த மகான் மனிதனா? இல்லை மண்ணாங்கட்டியா?   இல்லை பகவானா?

என்னுடைய புரிதல்: இந்தாளும் ஒரு மனுசந்தான்! இவர் உளறுவதும் மனிதமனத்தின் மனப்பிதற்றல் தான்! ஆக "கடவுள்" என்று இவர் உளறுவதும் இந்தத் தனி மனிதனின் பிதற்றல்தான்! மனிதமனம் பிதற்றும் ("கடவுளை") மட்டும் ஏன்  "Absolute Truth" என்று பிதற்றுகிறார் இந்த அரைவேக்காடு???

மனிதமனம் பத்தி ஒளறும் இந்தப் பண்டாரத்திற்கு தான் ஒரு மனிதன் என்கிற சுயநினைவே இல்லை! தான் உளறும், தான் பேசும் "கடவுளும்" மனிதமனத்தின் பிதற்றல்தான் என்கிற உணர்வும் இல்லை!

* ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய புரிதல்:  இவருக்குக் கடவுளை உணர வைத்ததும் இன்னொரு மனிதன் எழுதிய புத்தகமோ, சொற்பொழிவோ, இல்லை அர்ச்சனையோதான்!  இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லோரையும் கூமுட்டை என்று உளறுகிறது இந்தக் கூமுட்டை!

"கடவுள்" என்கிற புரிதலும் மனிதமனத்தில் உருவாகி, மனிதமனத்தால் புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு மனிதனிடமிருந்து இன்னொருமனிதனுக்குப் பரவிய "ஒரு தொற்று நோய்"தான் என்பதை இந்த கூமுட்டை ஏன் உணரமுடியவில்லை???

"கடவுள் பக்தி" என்னும் மனிதமன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வியாதியஸ்தந்தான் இந்த ஜெயதேவ் என்னும் பண்டாரமும்!  

அந்த பக்தி என்னும் வியாதி முற்றிப்போய், இந்தப் பண்டாரம் உளறும் உளறல்களில், தானும் ஒரு மனிதந்தான், தான் உளறும்  "கடவுளும்" மனிதனின் பிதற்றல்களில் ஒன்றுதான் என்றுகூட புரியாமல், என்னவோ தானே "கடவுள்" என்பதுபோல் வியாக்யாணம் பேசும் ஒரு கூமுட்டைதான் இந்தாளு!

ஜெயதேவ் is talking about "relative truth"! When it comes to "God" which should be another RELATIVE TRUTH discovered by human mind , he calls that as "absolute truth" for his convenience. His same "senseless mind" is the one came up with the "God concept" as well. As it comes from same "dead mind" of his, we should call "God" as relative truth as well. 

That is as simple as that!

19 comments:

'பரிவை' சே.குமார் said...

விதண்டவாதம் என்னன்னு ஒண்ணும் புரியலை... ஆனா ரெண்டு பேர் கருத்துப் போர் நடத்தியிருக்காங்கன்னு தெரியுது...

வருண் said...

குமார்: மனிதமனம்தான் கடவுளை தேடி, அலைந்து கண்டுபிடித்து கொண்டு வந்தது. இல்லைனா கடவுள் எங்கேயாவது சுத்திண்டு இருந்து இருப்பார்.

பிறந்த குழந்தைக்கு கடவுள் யாருனு தெரியாது. கடவுளைப் பற்றிச் சொல்லி அவரை அறிமுகப்படுத்துவது தாய் தந்தையர்தான். அதேபோல் தாய் தந்தையர்க்கு அறிமுகப்படுத்தியது அவர்கள் தாய் தந்தையர். கடவுளாக வந்து நாந்தேன் கடவுள்னு யாரிடமும் சொல்வதில்லை. அப்படி சொன்னதாக் சொன்ன "மகான்களும்" போய் சேர்ந்துட்டாங்க.

தர்க்க ரீதியாகப் பார்க்கும்போது, கடவுளும் ஒரு ரிலேட்டிவ் ட்ருத்தான். சும்மா இவரா கடவுள் மட்டும் "அப்சுலூட் ட்ருத்"னு சொல்லுவாராம். நாங்க எல்லாம் ஆமாம் சாமி போடணுமாம். மூளையே இல்லையா என்ன இவருக்கு? கொஞ்சம்கூட யோசிக்கத் தெரியலை?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்
தொடருங்கள்

குலசேகரன் said...

U don't judge a novel by its author, or by its blurb. Similarly, delink Jeyadev's view from Jeyadev.

That which he has said, is nothing but a rehash of some western philosophy.

It says that everything is relative in this material world and also, in the consciousness of man. Man is, in this sense, not independent. So, all that he sees and in which his thinking is rooted, is relative. Hence, what he says as truth is Relative Truth.

Believers therefore disregard these relative truths of the world of sight and sound. And believe that God is not a relative truth. He is absolute truth, which means, he is alone.

It is western. Eastern philosophy says though God is beyond the relative truths, he exists within the relative truths also. In other words, he is both: in it and off it.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ போங்கப்பா...!

குலசேகரன் said...

Your question: when man sees only relative truth, how comes he says he has seen the absolute truth i.e God and talks about it?

The answer is: the believers in eastern philosophy, accept that there are exceptional men who can see beyond the relative truths. The believers accept what these men have told them. These exceptional men (called differently in different religions) and Dr Walker in his celebrated book: Diagonosis of Man - calls them men of Higher Consciousness - have left behind messages about Absolute Truth. If Jeyadev says about Asbolute Truth, he just conveys the message left behind exceptional men in religious history.

குலசேகரன் said...

I, for one, believe in such exceptional men. For e.g I believe in Azhwaars. Nammaazhwaar passurams progressively describe the ascend towards Godhead and final merger. Thirumangai Azwar describes such a merger too.

Bunyan's Pilgrim Progress describes a Christian who ascends, falls, ascends and falls, and finally reaches the summit.

The religious experiences of thes men should be your thorough examination. Not Jeyadeve or me, poor mortals that we are!

காமக்கிழத்தன் said...

நன்றி வருண்.

காமக்கிழத்தன் said...

நன்றி வருண்.

காமக்கிழத்தன் said...

கேள்விக்கான நேரடியான பதிலைத் தராமல், சுற்றி வளைத்து எதையெதையோ சொல்லி மழுப்புவதில் ஜெயதேவுக்கு நிகர் எவருமில்லை!

கடவுள் ஒருவரா பலரா என்னும் என் கேள்விக்கு, “விடை எங்கே கிடைக்கும் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒருவருடைய புத்திசாலித்தனத்தைப் பொருத்தது” என்கிறார்.

”இவரும் மகாப் பெரிய புத்திசாலிதானே! ஏன் பதில் சொல்லவில்லை” என்று நான் கேட்க விரும்பவில்லை.

”கடவுள் என்றும் இருப்பவர் என்பது அதிசயம் என்றால் அந்த அதிசயத்துக்குப் பின்னால் இருப்பது எது?” என்ற கேள்விக்கும் நேரடி பதில் இல்லை

சாமர்த்தியமாக மழுப்பியிருக்கிறார். அதைத்தான் நீங்கள் மிகவும் தெளிவான விளக்கங்களுடன் கண்டித்திருக்கிறீர்கள்.

அதர்மம் பற்றிய கேள்விக்கும் இவருடைய வழக்கமான மழுப்பல்களே பதில்கள்.

”அதர்மம் என்று ஒன்று இல்லை. கடவுளை நம்பாமல் இருப்பதுதான் அதர்மம்” என்கிறார்.

”அப்புறம் ஏன் கடவுள் குறித்துக் கேள்விகள் கேட்டால், அலறித் துடித்துச் சாபம் கொடுக்கிறார்கள்?” என்றுகூட இவரிடம் நான் கேட்க விரும்பவில்லை.

காரணம்.....

இவருடைய மிகவும் கீழ்தரமான, அநாகரிகமான விவாதம் புரியும் முறைதான்.

இதற்கு ஆதாரமாகத் தனிப் பதிவே இப்போது வெளியிட்டிருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் நன்றி வருண்.

sweet said...

punpaduttha vendum enbadhu enadhu nokkam alla

kadavulai pidikka vitttaal odhungi iru

ippadi padhivu pottu adutthavar manadhai nokadikkadhe

Anonymous said...

//Believers therefore disregard these relative truths of the world of sight and sound. And believe that God is not a relative truth. He is absolute truth, which means, he is alone.//

குலசேகரன்,
The Absolute Truth is under debate now whether it is really absolute or not. You are just accepting the exceptional men what they are saying. How do you know that, what these exceptional men told is correct or not. Again it is a debate. You believe. Not necessary that everybody must belive it.

Actually Jeyadev didn't answer the question. The question is,

கடவுள் ஒருத்தர் தானா? அல்லது பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியால்..... யுகயுகங்களாக நடந்த பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!

Can you answer to this question?
Whether God is one only or multiple?

Anonymous said...

//ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?//

நல்ல கேள்வி இது. இந்த கேள்வியை ஒருவன் உணர்ந்தாலே போதும்.

சில வருடங்களுக்கு முன்பு, கோயம்புத்தூரில் ஒரு 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டபோது நடந்த சம்பவம்.
நான் ஒரு ஆத்திகனிடம் கேட்டேன். ஒரு 10 வயது செல்ல மகளை அவள் தந்தையின் எதிரே, ஒருவன் கற்பழிக்க முயற்ச்சிக்கிறான். அவனை தடுத்து தன் மகளை காப்பற்றுவதற்கு அந்த தந்தையிடம் எல்லா பலமும் பொருளும் இருக்கிறது. இப்போது அந்த தந்தை, தன் மகளை காப்பாற்றாமல், அவன் கற்பழிப்பதை வெடிக்க பார்த்துக்கொண்டிருந்தால் அவன் ஒரு நல்ல அப்பனா என்று கேட்டேன். அவன் உடனே, இல்லை, அந்த கற்பழிப்பு குற்றவாழியை விட அந்த அப்பன் தான் மிக மோசமான குற்றவாளி என்றான்.
நான் சொன்னேன், உங்க கடவுளும் இந்த அப்பன மாதிரி தான், எல்லா பெண்கள் கற்பழிக்கப்படும் போதும், தன்னிடம் அதை தடுப்பதற்கு எல்லா சக்தியும் இருந்தும், அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறானே, இவன் செய்கிறது சரியா தவறா என்று கேட்டேன். அதற்க்கு அந்த ஆத்திகன், கடவுள் ஒரு செயலை செய்தால் சரிதான். அதற்க்கு எதாவது அர்த்தம் இருக்கும் என்றான். இந்த மாதிரி முட்டாள் ஆத்திக கூமுட்டைகளை என்ன செய்வது?

வருண் said...

***It says that everything is relative in this material world and also, in the consciousness of man. Man is, in this sense, not independent. So, all that he sees and in which his thinking is rooted, is relative. Hence, what he says as truth is Relative Truth.***

குலசேகரன்: Are you defending the NONSENSE the religious goon Jeyadev talking about?

The "God" was DISCOVERED BY HUMANS. Whether he existed or not is a different question.

We are humans and we are imagining about God as there was a need for weak-minded humans. You better understand that. "God" is a relative truth, that's why every religious goon sees God differently.

Calling "God" as absolute truth is BULLSHIT! Only an IDIOT like Jeyadev would call that. Because his Brain is DEAD! Anybody who can think logicall can understand God is a relative truth.

That's very simple for one who has brain. I hope you have a working brain unlike Jeyadev.

வருண் said...



*** //ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?//

நல்ல கேள்வி இது. இந்த கேள்வியை ஒருவன் உணர்ந்தாலே போதும்.****

இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் அந்த முட்டாள் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான். கடவுள் பக்தியால் மூளை மழுங்கிப்போய் சமூகத்தை பாழ்படுத்தும் அடிமுட்டாள் அந்த ஆளு! ஏதாவது பரம்பொருள் மண்ணாங்கட்டினு ஒளறுவானே ஒழிய, கடவுளை இவனுக்கு யாரு அறிமுகப்படுத்தியது? அது இன்னொரு மனிதந்தான் என்கிற உண்மையை உணரமுடியாத அடிமுட்டாள் இவன்!

குலசேகரன் said...

//You are just accepting the exceptional men what they are saying. How do you know that, what these exceptional men told is correct or not. Again it is a debate. You believe. Not necessary that everybody must belive it.//

Ya, u r on the spot. Believers accept such men just as the Disciples of Jesus Christ accepted his words: 'Let Dead bury the Dead. Thou follow me!" and followed him, so also, the believers follow and accept such men.

Whether such men expressed truth or not, believers don't examine. If they attempt to examine, they r rationalists. Believers r not rationalists. They believe it is not possible to examine in order to believe. 'Believing where we can't prove" as Tennyson wrote.

No one forces u to believe such men. U r free to denounce them and throw them out. But if u r an intellectual, unlike a Believer, u will do like William James, the eminent American psychologist has done: To examine the religious experiences of such men and publish his views. His views became a famous book on psychology of religious experiences. Or like theologians like Aquinas did: To verify the religious experiences of such men and prove them to be true.

But mere railing against such men, and their followers, shows u r afraid to examine the religious experiences; or it is intellectual lethargy i.e. laziness.

Unknown said...

இந்த தொற்றுநோய் பல தலைமுறையாக தொடர்வதால் உடன் குணப்படுத்தி விட முடியாது ...நோய் ஆழமாய் போயிருப்பதால் நீண்ட காலம் தேவைப் படும் !
த.ம +1

வருண் said...

***Whether such men expressed truth or not, believers don't examine. If they attempt to examine, they r rationalists. Believers r not rationalists. ***

Jeyadev is criticizing Darwin's theory. Do you KNOW THAT? He acts like a RATIONALIST when he does that. Do YOU UNDERSTAND?? Then when it comes to GOD, his brain become DEAD and he cant think RATIONALLY anymore! He is not even able to understand he is a human, and that he learned about God through another human and, that "God" is a RELATIVE TRUTH!