Thursday, July 31, 2014

காவிரிமகனும் எம்ஜியாரும்! ஏமாற்றுக்காரனுக்கு ஏமாற்றுக்காரன்!

தமிழ்ப் பதிவுலகில் பெரிய மனிதர்கள் எல்லாம் நெறையவே இருக்காங்க. அதோட சின்னச் சின்னப்பசங்களும் இருக்காங்க. இங்கே வயதுக்கும் பெரிய சின்ன மனிதனுக்கும் சம்மந்தம் இல்லை!

சரியோ தவறோ, தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டு, தன் கருத்தை பகிர்ந்துவிட்டுப் போறவங்க பெரிய மனிதர்கள். இன்னொரு வகை இருக்கு, எதையாவது சொல்ல வருவதுபோல் வந்து எதையாவது வரிந்து வரிந்து எழுதிவிட்டுத்  தலைப்புக்கும் தான் சொன்ன கருத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் முடித்துவிட்டுப் போற ஏமாற்றுக்காரர்கள்! இவர்கள் சின்னத்தனமானவர்கள்.

காவிரி மகன்னு ஒரு பதிவர் இருக்காரு. இவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பது என் புரிதல். மற்றபடி எனக்கு இவரைப் பத்தி தெரியாது. இவர் நல்லவரா, வல்லவரா, கெட்டவரா, கோமாளியா என்னனு தெரியாது. ஆனால் இவரு தமிழ்ப்திவுலகில் "பெரிய மனுஷன்"!

இவர் சமீபத்தில் எம்ஜியாரும் ராகுகாலமும்னு ஒரு பதிவு (மூனு பிரிவா) எழுதினாரு. இது மூன்றும் தொடர் பதிவுகளாக வந்தன.

 தலைப்பைப்பார்த்துட்டு நம்ம என்ன நினைப்போம்?

எம்ஜிஆர் பகுத்தறிவுவாதியா? இல்லைனா மூடப்பழக்கவழக்கங்கள் கொண்டவரா? சரி இவர் அனுபவத்தில் என்னடா சொல்றாரு "இந்த பெரிய மனுஷன்" னுதான் வாசிக்கப் போவோம்.

அங்கே போனால், வரிந்து வரிந்து எழுதுகிறார்..ஒரு ஃபங்க்சனுக்கு எம்ஜிஆர் வரப் போராரு. அந்த ஃபங்கஷன் ராகுகாலத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்த்தாங்களா? - எம்ஜியாரின் ஆலோசனைப்படி. அல்லது அதைப்பற்றி பகுத்தறிவுவாதி எம்ஜியார் கவலைப்படவில்லையா? என்கிற கேள்விக்கு பதில் தேடிப் போயி இந்தப் பதிவை வாசிச்சவனை எல்லாம் பைத்தியக்காரனாக்கிவிட்டார் அந்தப் பிரபலப் பதிவர் காவிரிமகன்.

எனக்குப்புரிந்தவரைக்கும் Believe it or not, MGR never had an opinion on this at all. அந்த விழா ராகுகாலத்தில் நடந்ததா இல்லையா என்றே அவருக்கு தெரியாது என்பதுபோல் முடிகிறது கட்டுரை!

ஆக, எம்ஜியாரையும், ராகுகாலத்தையும் வச்சு, அதுக்கு இடையில் இவரு நுழஞ்சி என்னதான் எழுதினாரு இந்த ஆளுனு பார்த்தால்,

இவருடைய சொந்தக்கதை, இவரு உக்காந்தது, நடந்தது, இவர் இவருடைய எஜமானுக்கு அறிவுரை சொல்லியது, இவரு எஜமானுக்கும் ராகுகாலத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினை, அப்புறம் இவரு உச்சாப்போனது இப்படியே போனது கட்டுரை.

கடைசியில் ராகுகாலத்தில் அந்த ஃபங்க்சன் நடந்துமுடிந்ததாம்- எம்ஜியாருக்கு அது ராகுகாலமென்று தெரியாமலே! இப்படித்தான் முடிகிறது இந்தக் கட்டுரை..

காவிரி மகனின் பதிவின் தலைப்புகள்..

எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (1)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (2)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (இறுதிப் பகுதி)


இறுதிப்பதிவில் வந்த பின்னூட்டம்..
  1. நான் எம்ஜியார்-தான் ராகு காலத்தில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஆர்கேசி சாருக்குத்தான் அந்த பிரச்சனையோ?

இந்தத் தொடரைப்படிச்சு முடிச்சதும் எனக்கு தோனியது. பதிவுலகில் இந்தமாதிரி பித்தலாட்டுக்காரனுகதான் பெரியமனுஷன் போர்வையில் திரிகிறானுக. ஆமா, மனதில் தோனியதை அப்படியே சொல்லிவிட்டேன். நான் ரொம்ப "ஆனஸ்ட்" டாக்கும்.

என் சிந்தனைகள் தொடருகிறது..ஆமா, இந்த பதிவை எழுதியவன் கேணையனா? இல்லை தலைப்பைப் பார்த்துப்போயி இதை வாசிச்சவனுக எல்லாரும் கேணையனுகளா?  இல்லைனா தமிழ்ப் பதிவுலகில் திரிகிற எல்லாருமே கேணையனுகதானா???

இது இப்படி..

************************

இந்தாளுடைய  இன்னொரு பதிவில் இன்னொரு யோக்கியன் பின்னூட்டமிடுறான். எப்படி? இந்தாளை வானளாவ புகழ்ந்து நீங்க அப்படி எழுதுறீங்க, இப்படி எழுதுறீங்கனு சொல்லி- இதயத்திலிருந்து வார்த்தைகளை அள்ளிக்கொட்டி..


Urządzenia fitness – siłownie plenerowe i ścieżki zdrowia commented on ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!
Hi! This is my 1st comment here so I just wanted to give
a quick shout out and say I truly enjoy reading your articles.
Can you suggest any other blogs/websites/forums that go over the same
subjects? Thanks a ton!


உடனே இந்தாளும், அதான் நம்ம விமர்சனம்காவிரிமகன் தான், இந்தப் பின்னூட்டக்கரனுடைய பின்னூட்டத்தில் மயங்கி குழப்பத்துடன் அதை அரைமனதாக  அவன் புகழ்ந்ததை வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள..

பிறரிடம் இருந்து வந்த தொடர் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால்.. அவன் பின்னூட்டத்தில் எழுதியதெல்லாம் சுத்தமான பொய், பித்தலாட்டம் என்று.

இவர் பதிவைப் புகழ்ந்து பின்னூட்டமிட்ட அவனுக்குத் தமிழ் தெரியுமா என்பதே கேள்விக்குறி!! என்பது தெளிவாகிறது தொடர் பின்னூட்டங்களில்!!!

ஆக,  பின்னூட்டமிடுவது அவனுக்குத் தொழில். இப்படி ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்!!

ஆக, எம்ஜியாரையும் ராகுகாலத்தையும் வச்சு இவர்கள் சொந்தக்கதையை எழுதி இப்படி வாசகர்களை ஏமாற்றும் ஒரு பிரபலப் பதிவர்கள் ஒருபுறம்!   அவரையும் ஏமாற்றும் ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்கள் இன்னொரு பக்கம்!

இதுதான் தமிழ்ப் பதிவுலகம்! Enjoy blogging, folks! :)

9 comments:

bandhu said...

இன்று ஒரு தகவல் போல.. இன்று இவரை திட்டுவோம் என்ற முடிவோடு இருக்கிறீர்கள் போல இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளில் இருந்த ஒரே தகவல் எம் ஜி ஆருக்கு ராகு காலத்தின் மீது நம்பிக்கை இருந்தது போல தெரியவில்லை என்பதே. மற்றபடி அதில் என்ன தவறு இருந்தது? பதிவுகள் நீளம்.. பெரிய விஷயம் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் உங்களிடம் இருக்கலாம். அதில் யாருக்கு என்ன நஷ்டம்? இதைவிட கொடுமையான பதிவுகள் பரவலாக இருக்கிறது.

பொதுவாக காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகள் பிரமாதமானவை என்பது என் கருத்து. then again, அது என் கருத்து மட்டுமே.

வருண் said...

வாங்க பந்து!

என் கருத்தில் இருக்க தவறை சுட்டிக்காட்டுவது உங்க கருத்துரிமை!

I am honestly sharing my opinion on those series and way it was titled and way it ended.

Not only you, there are several who enjoyed reading the article. I felt cheated. I felt I WASTED MY TIME! It may be MY IGNORANCE!

My opinion is mine! Yours is yours! :-)

bandhu said...

Thanks Varun for understanding! எங்கே எனக்கும் மண்டகப்படி உண்டோன்னு பயந்து கிட்டே இருந்தேன்!
I respect your opinion!

viyasan said...

உண்மையில் 'எம்ஜியாரும் ராகுகாலமும்' பதிவை வாசித்து நானும் குழம்பிப்போய் விட்டேன். அந்தப் பதிவில் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது எனக்கும் புரியவில்லை. ஆனால் இணையத்தில் ஒரு பதிவில் "ஏமாற்றப்பட்டு" விட்டதற்காக, நீதி கேட்கும் 'தில்' வருண் அண்ணாச்சியைத் தவிர வேறு யாருக்கும் வராது. அதைப் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை. :-)

வருண் said...

வாங்க வியாசர் அண்ணாச்சி!

நம்ம ஊரில் பொண்ணுங்களிடம் எவனாவது தெரிந்தவனே தப்பா நடந்தால் வெளிய சொல்ல மாட்டாங்க. ஏன் னா.. சொன்னால் அவமானம் நமக்குத்தான் என்பதால்.

இதை பயனபடுத்தி, பொறுக்கிகள் எல்லாம் தனியாக உள்ள பெண்களிடம் பொறுக்கித்தனம் செய்வது சாதாரணம்.

உங்களைப்போல இந்தாளு பதிவை வாசிச்சுப்புட்டு..குழம்பியவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளமானவர்கள்..

பெரிய மனிதன், வயதுக்கு மரியாதை கொடுக்கணும்னு அடக்கி வாசிப்பவர்கள் பலர்.

ஆனா அண்ணாச்சி, நமக்கெல்லாம் நாலு வயதுப் பையன் தரமாக நடந்தால் அவந்தான் பெரிய மனுஷன். 70 வயது ஆளு இந்த மாதிரி பதிவெழுதினால்.. என்ன மனுஷன் இவன்னு சத்தமாக சொல்ல தயக்கம் கெடையாது.

நம்ம என்ன பெருசா "பெரிய மனிதன்" பட்டமா சம்பாரிச்சு வச்சிருக்கோம். அதை இழக்க? :)))

mahesh said...

kitta thatta 2 maasam piraku mindum vanthu irukkuringa. thodarnthu ezuthunga sir.

வருண் said...

வாங்க மஹேஷ்! உங்களை மீண்டும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி! :)

Amudhavan said...

அதே கோபம், அக்கினி பூசிய வார்த்தைகள்....கொஞ்சமும் குறையாமல் இருக்கிறீர்களே....!
காவிரி மைந்தனின் சில பதிவுகளை நானும் படித்தேன்.அவருடைய சிந்தனைகளும் கருத்துக்களும் பாரதிய ஜனதாவைச் சார்ந்து இருப்பவையாகப் பட்டன. அதனால் எல்லாப் பதிவுகளையும் படிக்காமல் சில தேர்ந்தெடுத்த பதிவுகளை மட்டும் படிப்பேன். எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.

வருண் said...

வாங்க அமுதவன் சார்!
நான் இந்தப் பதிவு எழுதும்போதே..

///அதே கோபம், அக்கினி பூசிய வார்த்தைகள்....கொஞ்சமும் குறையாமல் இருக்கிறீர்களே....!///

என் மனசாட்சி கிட்டத்தட்ட இதையேதான் சொல்லியது. :-)

***எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.***

வேர்ட் ப்ரஸ் தளங்களில் பின்னூட்டமிடுவது எனக்கு எளிதாகப் படவில்லை. நான் யாருக்கும் என் இ-மெயில் ஐ டி கொடுப்பதில்லை என்பது முக்கியக்காரணம்.

***எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.***

ரொம்பவே வாசகர்களை ஏமாற்றிவிட்டார்.. அங்கு பின்னூட்டமிட்ட ஒருவர்கூட அதை சொல்லாமல்ப் போனது அதைவிட மோசம். சொன்னால்த்தானே தெரியும் அவர் ஏமாற்றினார் என்பது?- இது என் வாதம். :)

"இப்படித்தான் சொல்லணுமா, வருண்?" இது நீங்கள்! :)