Monday, July 23, 2012

பெண்களின் இடுப்பு மற்றும் இடையழகு!!

ஆமா வருண்! நீ என்ன பெரிய ஆணழகனா? நம்ம ஊர் ஆம்பளைங்க எல்லாருக்கும் 35 வயதுக்கு மேலே தொப்பை விழுந்து, அவங்க அழகு இந்த லட்சணத்தில் இருக்கும்போது உனக்கென்ன பெண்கள் இடுப்பில ஆராய்ச்சி, அக்கறை? னு பெண்ணியவாதிகளெல்லாம் முறைக்கிறாங்க!

நான் ஒரு ஆண் என்பதால் பொதுவாக பெண்களைத்தான் "கவனிப்பது" வழக்கம். இந்த ஆம்பளைங்க தொப்பையோட இருந்தால் என்ன? இல்லைனா "மாச"மா இருந்தால் எனக்கென்ன? அது அவங்களை பார்த்து ரசிக்க வேண்டிய பெண்களோட பிரச்சினை அதுனு விட்டுட்டேன். சரி, கொஞ்சம் சமாளிச்சமாதிரி இருக்கு, இல்லையா? நான் சப்ஜெக்ட்டுக்குப் போறேன்.

 இங்கே கோடைகாலம்னால, எல்லாம் ஒரு ஷாட்ஸை, டாப்ஸையும் போட்டுக்கிட்டு அலையுதுங்க. பொதுவாக பலர்  நல்லா உடம்பை வச்சிருக்காங்க! ஆனால் எல்லாரும் அபப்டியில்லை! ஒரு சில கொஞ்ச வயதுப் பெண்கள்கூட "abs" மாதிரி ஏதாவது எக்சர்ஸைஸ் செய்து அந்த இடுப்பில் உள்ள கொழுப்பு சதையை வற்றவைக்காமல் இடுப்பை காட்டிக்கிட்டு அலையும்போது அதைப் பார்க்க சகிக்கலைங்க!

பொதுவாக பெண்கள் அங்கத்தில் கவர்ச்சினு சொன்னா அவங்க மார்பகங்கள் மற்றும் "பட்", அதுக்கப்புறம் அது ரெண்டுக்கும் "இடை"ப்பட்ட பகுதி (கொடியிடைனு சொல்லுவாங்க இல்ல?). இயற்கையாகவே ஒரு பெண்ணுக்கு மேலேயும் கீழேயும் கவர்ச்சியாக உடல்வாகு அமைந்து இருந்தாலும், நடுவில் உள்ள இடைப்பகுதியை மிக மிக கவனமாக வைத்திருந்தால்தான் அந்தப் பெண் கவர்ச்சியா இருக்கமுடியும். எந்தவிதமான சாப்பாட்டுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்து இடையை கவனிக்காமல் விட்டுவிட்டால், இடையில் கண்ணா பின்னானு சதை போட்டு, இயற்கையா இருக்க மேலழகும்,  கீழழகும்கூட வீணாப்போயிடும்! அதனால் இடையை/இடுப்பை பெண்கள் அதிக சதைப் போடாமல் ரொம்ப கவனமா வச்சிருக்கனும் என்பது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்!

கீழே  வகைப்படுத்தி இருக்க, 2) ரூலர், 3) செவ்வகம், 4) முக்கோணம் எல்லாம் இடுப்பழகின்மை!


அப்புறம் இங்கே உள்ள 1) வாழைப்பழம், 2) ஆப்பில், 3) பேரிக்காய் போல இருப்பதும் இடுப்பழகின்மைதான்!

 நம்ம ஊர்ல 35 வயதுக்கு மேலே போனால் நம்ம Queen லத்திஃபா  மாதிரித்தான் (spoon shaped) எல்லாருமே ஆயிடுறாங்க!


என்ன இதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும், வந்துட்டான் அறிவுரை சொல்லனு திட்டுறீங்களா? திட்டிட்டுப் போங்க!

 Hourglass!தான் அழகு! நம்ம பியாண்ஸே நோ(வ்)ல்ஸ் மாதிரி!



 நம்ம ஊரில், பொதுவாக இந்த ஆப்பில், பேரிக்காய் ஷேப்ல உள்ளவங்களுக்கெல்லாம்  பாத்ரூம்லகூட கண்ணாடி வைத்து தன் உடம்பை தானேகூட சரிவரக்கூட பார்க்கிறதில்லை.அதுதான் நம்ம கலாச்சாரம்! பார்த்தால்தானே தெரியும், நம்ம எப்படி இருக்கிறோம்னு?  அதன் விளைவுதானோ என்னவோ நம்ம ஊரில் இந்த இடுப்பு சதையைப் பத்தி யாருமே  கண்டுக்கிறதே இல்லை! போதாக்குறைக்கு நம்ம ஊரில் உள்ள ஆடைகள் சல்வார் காமிஸ், சேலை போன்றவை உடலை நல்லா மறைத்து நம்ம பெண்களுக்கு மிகவும் "உதவுது". இங்கே மாரி ஷாட்ஸ்ல திரிய வேண்டிய சூழ்நிலை இருந்தால் அவங்களும் திருந்தினாலும் திருந்தி இருப்பாங்க!

சினிமா நடிகைகள்கூட ஆரம்பத்தில்  ஒரு 4-8 வருடம்தான் (30 வயதுக்குள்ளே, குழந்தை எல்லாம் பெற்றுக்காமல் இருக்கிற சமயம்) கொஞ்சம் கவனமாக உடம்பை வச்சிருக்காங்க. அப்புறம் எல்லாரும் இன்னைக்கு இருக்க "நமிதா" மாரித்தான், பார்த்து பயந்து ஓடுறாப்பிலே ஆயிடுறாங்க!

அது ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்வது, தேவையில்லாமல் உடலில் உள்ள தசைகளைப் பத்தி கவலைப் படுறதெல்லாம் ஏதோ இழிவான செயல் போல நம்ம ஊரிலே நெனச்சுக்கிறாங்கனு தெரியலை. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் அழகாயிருப்பாங்க என்பது ஒருபக்கம் இருக்கட்டும், ஹெல்த்தியாகவும் இருப்பாங்க இல்லையா?

என்னை மாதிரி வெட்டிப்பசங்க, இது மாதிரி பெண்கள் இடுப்பைப்பத்தி விமர்சிச்சாத்தான் அட் லீஸ்ட் கோபமும் எரிச்சலும் முதலில் வந்து, பிறகு கொஞ்சம் யோசிச்சு,  ஏதாவது செய்வாங்கனு ஒரு நப்பாசையில்தான் இந்தப்பதிவு!

13 comments:

கவிதா | Kavitha said...

ஒரு எதிர்பதிவு எழுதும் அளவுக்கு சங்கதி இருக்கே.. "ஆண்களின் தொப்பை மற்றும் தொப்பையழகு !! "

எல்லாத்தையும் எழுதிட்டு, கடைசியாக -
இது மாதிரி ஆண்கள் தொப்பையை விமர்சிச்சாத்தான் அட் லீஸ்ட் கோபமும் எரிச்சலும் முதலில் வந்து, பிறகு கொஞ்சம் யோசிச்சு, ஏதாவது செய்வாங்கனு ஒரு நப்பாசையில்தான் இந்தப்பதிவு! "
//

இப்படியெல்லாம் எழுதினா தொப்பைக்குறையும்னு நினைக்கறீங்க ? :))))))

வருண் said...

கவிதா!

பெண்களையாவது இந்த விசயத்தில் கொஞ்சம் மன்னிக்கலாம், குழந்தை பெற்றுக்கொள்வதால் சில பிரச்சினைகள்கூட காரணமாக இருக்கலாம். ஆனால், ஆண்களுக்கு எந்த எக்ஸ்க்யூஸும் கெடையாதுங்க!

நிச்சயம் என்னைப்போல ரோசமுள்ள ஆண்களுக்கு, உங்க ரெஸ்பாண்ஸால தொப்பை இருந்தால் குறையத்தான் செய்யும். நன்றி :)))

கிரி said...

// நான் ஒரு ஆண் என்பதால் பொதுவாக பெண்களைத்தான் "கவனிப்பது" வழக்கம். இந்த ஆம்பளைங்க தொப்பையோட இருந்தால் என்ன? இல்லைனா "மாச"மா இருந்தால் எனக்கென்ன? அது அவங்களை பார்த்து ரசிக்க வேண்டிய பெண்களோட பிரச்சினை அதுனு விட்டுட்டேன். //

:-)) ஹி ஹி ஹி சூப்பர்

நீங்க சொன்ன மாதிரி பலர் கண்ணாடியில் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை.. ஒருவேளை எதுக்கு பார்த்து டென்ஷன் ஆகணும் என்று விட்டு விட்டார்களோ! :-))

வருண் US ல பெண்கள் ரொம்ப குண்டாக இருப்பார்கள் என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன், அதாவது அனைவரும் அல்ல குறிப்பிடத்தக்க அளவில், உண்மையா! இதே Europe எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவர்கள் ரொம்ப Fit ஆக இருப்பாங்க. இருவருமே ஆண்கள் மட்டும் பெண்கள்.

கவிதா சொன்ன மாதிரி தொப்பையோட இருக்கிற ஆண்களை போட்டு வாங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் :-))

நம்ம ஊர்ல ஆண்களும் சரி பெண்களும் சரி ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தங்கள் உடம்பைப் பற்றி கவலைப்படுவது போல தெரியலை. இவர்களை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் 25 வயது பசங்க எல்லாம் தொப்பையை தள்ளிட்டு நிற்பது பார்க்க கொடுமையாக இருக்கிறது.

தற்போது இது மாறி வருகிறது இன்னும் ஒரு தலைமுறை சென்றால் இதில் நிச்சயம் மாற்றங்கள் வரும்.

Anonymous said...

இடுப்பு ஆராய்ச்சியில் பி.எச்டியே வாங்கிவிடுவீர் போலிருக்கே !

அருமை .. உண்மையில் நானும் கவனித்துள்ளேன் .. ஒவ்வொரு இடுப்பும் ஒவ்வொரு வகையில் அழகு தான் ..

இடுப்புக்கும் அதன் கவரும் தன்மைக்கும் பரிணாம மற்றும் இனவிருத்தி காரணங்கள் உண்டு .. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பற்றி பேசுவோம் .. அருமை உங்கள் பணி தொடருங்கள் ...

Jayadev Das said...

\\US ல பெண்கள் ரொம்ப குண்டாக இருப்பார்கள் என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன், அதாவது அனைவரும் அல்ல குறிப்பிடத்தக்க அளவில், உண்மையா!\\ நான் கேள்விப் பட்டவரை, அங்கு பெண்கள் தங்கள் தோற்றம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு உடலில் தேவையில்லாத சதை போடாமல், ஃ பிட் ஆக இருப்பார்கள். எங்களுக்குத் தெரிந்த பெண் ஒருத்தி இங்கே அவுட் ஆஃ ப் ஷேப்பில் இருந்தால், அங்கே போய் சில வருடங்கள் கழித்து வந்த போது சிக் என ஆகி விட்டதாக ஏன் வீட்டுக்காரி சொன்னாள். காரணம், அங்கே எல்லா பெண்களுக்கும் இருக்கும் அந்த சென்ஸ் இவளுக்கும் இருப்பதால் இவளும் மாறி விட்டாள். ஆனால், அமெரிக்கா ஆண்கள் அதற்க்கு நேர் எதிர். தொப்பை அவனது சொந்தக் கையே சுற்றினால் இன்ரண்டும் சந்திக்காது, அவ்வளவு பெரிதாக இருக்கும்.

Doha Talkies said...

மிகவும் அருமை நண்பரே.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

வருண் said...

***கிரி said...

வருண் US ல பெண்கள் ரொம்ப குண்டாக இருப்பார்கள் என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன், அதாவது அனைவரும் அல்ல குறிப்பிடத்தக்க அளவில், உண்மையா! இதே Europe எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவர்கள் ரொம்ப Fit ஆக இருப்பாங்க. இருவருமே ஆண்கள் மட்டும் பெண்கள்.***

நிச்சயமா ஒரு 25-30% பெண்கள் குண்டாத்தான் இருக்காங்க. அதுதான் இந்தப் பதிவின் தூண்டுதலே! ஆனா நம்ம மக்களுக்கு எவ்வளவோ மேல்.

***கவிதா சொன்ன மாதிரி தொப்பையோட இருக்கிற ஆண்களை போட்டு வாங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் :-))***

நம்ம ஆம்பளைங்க பொதுவா செய்றது என்னனா, "pleading guilty". :))) அஜீத் மங்காத்தால சொல்ற மாரி, தொப்பை பெருசாகிடுச்சுனு சொல்லி ஜோக் மாரி சமாளிக்கிறது.

ஃபிட் ஆ இருக்கது ரொம்ப கஷ்டமான விசயம்ங்க. பயங்கர சிண்ஸியரிட்டி, அப்ஸெசன்கூட தேவை. பலரால நிச்சயம் முடியாது.


***நம்ம ஊர்ல ஆண்களும் சரி பெண்களும் சரி ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தங்கள் உடம்பைப் பற்றி கவலைப்படுவது போல தெரியலை. ***

கேட்டால், கவலைப்பட நெறைய விசயம் இருக்கு, இதெல்லாம் ஒரு பிரச்சினைனு சொல்றதே தப்புனு நனைக்கிறது.

***இவர்களை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் 25 வயது பசங்க எல்லாம் தொப்பையை தள்ளிட்டு நிற்பது பார்க்க கொடுமையாக இருக்கிறது.***

இதெல்லாம் ரொம்ப அதிகம். நம்ம கவிதாதான் இவர்களை விமர்சிச்சு ஒரு பதிவெழுதனும். பெண்கள் சொன்னால்த்தான் இவர்களுக்கு உரைக்கும். நம்ம சொன்னால் தட்டிவிட்டுட்டு போயிக்கிட்டே இருப்பாங்க!

***தற்போது இது மாறி வருகிறது இன்னும் ஒரு தலைமுறை சென்றால் இதில் நிச்சயம் மாற்றங்கள் வரும்.***

இதைப்பத்தி பேசினால்த்தான், இதை என்னனு பார்ப்பாங்க. நான் இந்தப் பதிவு ஆரம்பிக்கும்போது ரொம்ப அஃபெண்ஸிவா இருக்குமேனு நெனச்சேன், அப்புறம் இதை பேசியே ஆகனும்னு எழுதினேன். :)

உங்க கருத்துக்கு நன்றி, கிரி!

வருண் said...

*** Iqbal Selvan said...

இடுப்பு ஆராய்ச்சியில் பி.எச்டியே வாங்கிவிடுவீர் போலிருக்கே !

அருமை .. உண்மையில் நானும் கவனித்துள்ளேன் .. ஒவ்வொரு இடுப்பும் ஒவ்வொரு வகையில் அழகு தான் ..

இடுப்புக்கும் அதன் கவரும் தன்மைக்கும் பரிணாம மற்றும் இனவிருத்தி காரணங்கள் உண்டு .. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பற்றி பேசுவோம் .. அருமை உங்கள் பணி தொடருங்கள் ...

23 July 2012 8:47 PM***

நீங்க வேற ஒரு இக்பால் செல்வனா??

முதல் ஸ்டெப்பாக இப்படி இருக்கே என் இடுப்புனு கவலையாவது படனும். இப்ப்படித்தான் இருக்கும், இதுதான் இயற்கைனு நெனச்சா, இதை சரிசெய்ய சாண்ஸே இல்லை! :)

உங்க கருத்துக்கு நன்றிங்க. :)

வருண் said...

*** Jayadev Das said...

\\US ல பெண்கள் ரொம்ப குண்டாக இருப்பார்கள் என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன், அதாவது அனைவரும் அல்ல குறிப்பிடத்தக்க அளவில், உண்மையா!\\ நான் கேள்விப் பட்டவரை, அங்கு பெண்கள் தங்கள் தோற்றம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு உடலில் தேவையில்லாத சதை போடாமல், ஃ பிட் ஆக இருப்பார்கள். எங்களுக்குத் தெரிந்த பெண் ஒருத்தி இங்கே அவுட் ஆஃ ப் ஷேப்பில் இருந்தால், அங்கே போய் சில வருடங்கள் கழித்து வந்த போது சிக் என ஆகி விட்டதாக ஏன் வீட்டுக்காரி சொன்னாள். காரணம், அங்கே எல்லா பெண்களுக்கும் இருக்கும் அந்த சென்ஸ் இவளுக்கும் இருப்பதால் இவளும் மாறி விட்டாள். ஆனால், அமெரிக்கா ஆண்கள் அதற்க்கு நேர் எதிர். தொப்பை அவனது சொந்தக் கையே சுற்றினால் இன்ரண்டும் சந்திக்காது, அவ்வளவு பெரிதாக இருக்கும்.***

உண்மைதான் பெண்கள், உடல் வாகைப் அத்தி ரொம்ப அக்கறை எடுத்துக்கிறாங்க. ஒரு சிலர் "லிப்போசக்ஷன்" எல்லாம் பண்ணுற அளவுக்கு போயிடுவாங்க. :( நிச்சயம் நம்ம ஆண்களைவிட அமெரிக்கர்கள் பெட்டர்தான். இங்கே ஒரு நாள் அய்யப்பன் பக்தர்கர் இருமுடிகட்டி, சட்டையை கழட்டி நின்னபோது நம்மாளுகளைப் பார்த்து பயந்துட்டேன் நான். சாமி மேலே பாரத்தப் போட்ட்டுட்டு தைரியமாக சட்டையை கழட்டிட்டு பெரிய பொஎரிய தொப்பையோட வந்துட்டார்கள்! யப்பா! :)))

வருண் said...

**Doha Talkies said...

மிகவும் அருமை நண்பரே.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

24 July 2012 2:36 AM***

வருகைக்கு நன்றி நண்பரே. நேரம் கிடைக்கும்போது வர்றேன். நன்றி. :)

வருண் said...

///***இவர்களை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் 25 வயது பசங்க எல்லாம் தொப்பையை தள்ளிட்டு நிற்பது பார்க்க கொடுமையாக இருக்கிறது.***

இதெல்லாம் ரொம்ப அதிகம். நம்ம கவிதாதான் இவர்களை விமர்சிச்சு ஒரு பதிவெழுதனும். பெண்கள் சொன்னால்த்தான் இவர்களுக்கு உரைக்கும். நம்ம சொன்னால் தட்டிவிட்டுட்டு போயிக்கிட்டே இருப்பாங்க!///

should read as

இதெல்லாம் ரொம்ப அதிகம். நம்ம கவிதாதான் இவர்களை விமர்சிச்சு ஒரு பதிவெழுதனும். பெண்கள் சொன்னால்த்தான் இவர்களுக்கு உறைக்கும். நம்ம சொன்னால் தட்டிவிட்டுட்டு போயிக்கிட்டே இருப்பாங்க!
------------

ஒருதர ராமலக்ஷ்மிதான் "இந்த உறைப்பை" சரி செய்தாங்க. இன்னும் நான் இதை சரியாக கற்றதாகத் தெரியவில்லை! :(

Jayadev Das said...

25-07-2012 குமுதம், பக்கங்கள் 137 -139 -ல் இந்தப் பதிவை சுட்டு ஹாட் நியூஸா போட்டுட்டாங்க............ ஐயையோ இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லியா............

வருண் said...

***Jayadev Das said...

25-07-2012 குமுதம், பக்கங்கள் 137 -139 -ல் இந்தப் பதிவை சுட்டு ஹாட் நியூஸா போட்டுட்டாங்க............ ஐயையோ இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லியா............***

நெஜம்மாத்தான் சொல்றீங்களா?! என்னனு எடுத்துப் பார்க்கிறேன். நல்ல வேளை, தேதியெல்லாம் போடுறதால நான் காப்பியடிச்சேன்னு சொல்ல மாட்டாங்க. நான் பார்த்த இடுப்பு எனக்குத்தான் தெரியும். :) க்ரிடிட் அந்த இடுப்புக்குத்தான் போகனும்! :))))