Monday, January 26, 2015

பச்சையாக எழுதுவதுதான் செழுமையான எழுத்தா?

பலமுறை நான் கதை எழுதும்போது ஒரு சில நடப்பு வார்த்தைகளை நான் பேசிக்கேட்ட விதமாக அப்படியே எழுதியபோதும்... இங்கே வந்து பதினெட்டு பிளஸ் போடுங்க, இல்லைனா உங்கள் வார்த்தைகள் எங்களை முகம் சுளிக்க வைக்கின்றன, நீங்க கவனமாக எழுதணும். தமிழ்மணம் இதுபோல் எழுத்துக்களை விரும்பாது என்றெல்லாம் அறிவுரை செய்தவர்கள் ஆயிரம்.

அதே கருத்தைக்கொண்டவர்கள், மற்றொரு ஆசிரியர் அதையே தைரியமாக செய்யும்போது அதை சரி என்கிறார்கள்.

நான் எங்க ஊரில் கேள்விப்பட்டப் பழமொழிகளை கேள்விப்பட்டவாரே இங்கே எழுத முடியாது. அது என் எழுத்துக்கு நானே செய்யும் துரோகம்.

அப்படி என்ன பழமொழி என்கிறீர்களா?.

1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது

2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த எல்லா கிழ்த்தரமான ஆண்களுக்கும் இப்பழமொழிகள் நன்கே பரிச்சயம். இங்கே பெரிய மனுஷன் வேடத்தில் அவர்கள் திரிவதால் அதை அப்படியே சொல்லாமல் திரித்துச் சொல்லிக்கொண்டு அலைவதும் எனக்குத் தெரியும்.

ஆமாம், அர்த்தம்  நிறைந்ததாகத்தான் இருக்கும் அசிங்கப் பழமொழிகள் பல. நான் என் நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்ட விதத்தில் இங்கே சொன்னேன் என்றால் என் மேல் சாணியை கரைத்து ஊற்றாமல் செல்ல மாட்டார்கள் இங்கே உள்ள இலக்கிய மேதைகள் பலர்.

ஆனால் அதே பழமொழியை பெ முருகன் என்கிற மேதாவி கதையில் காளி சொல்லுவதாக எழுதினால், இதே மேதைகளால் அது நல்லிலக்கியம் என்று பாராட்டப்படும்.

ஆக, உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தராசு வைத்துள்ளது. ஒரே   பொருள், யார் வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்து, அது கமலஹாசனா, இல்லை ரஜினிகாந்தா, இல்லைனா பெ முருகனா என்பதைப் பொறுத்து அதன் நிறை மாறுபடுகிறது.

என்ன ஒரு கேவலமானவன் மனிதன் என்பவன்!! என்ன நடிப்பு!! என்ன பாசாங்கு!

29 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தராசு வைத்துள்ளது. ஒரே எடை உள்ள ஒரு பொருள், யார் வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

உலகம் ஆயிரம் பேசும் அவற்றை எல்லாம் எடுக்க முடியாது...தங்களின் உணர்வு புரிகிறது.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

இங்கு பிரபலங்களுக்கு முன்வாசல் என்றால் நம்மைப் போன்றோருக்கு பின் வாசலே... எழுத்தில் வார்த்தையின் மணம் வீச வேண்டுமே தவிர... வார்த்தை வீசக்கூடாது...

இந்தப் பழமொழிகளை நானும் கேட்டிருக்கிறேன்...

நல்ல கேள்வி வருண்.

வருண் said...

****ரூபன் said...

வணக்கம்

உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தராசு வைத்துள்ளது. ஒரே எடை உள்ள ஒரு பொருள், யார் வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

உலகம் ஆயிரம் பேசும் அவற்றை எல்லாம் எடுக்க முடியாது...தங்களின் உணர்வு புரிகிறது.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-***

வாங்க ரூபன். :)

"இப்படியெல்லாம்" சொல்லித்தான் ஒரு சிலருக்கு "வழ்க்குச் ச்சொல்" "பழமொழி" "படுக்கைய்றை" பத்தியெல்லாம் எல்லாருக்கும் மிக எளிதாகவே எழுதத்தெரியும். அதை ப்லர் எழுதாதற்கு காரணம் இருக்குனு விளக்கவேண்டி இருக்கு.

வருண் said...

*** -'பரிவை' சே.குமார் said...

இங்கு பிரபலங்களுக்கு முன்வாசல் என்றால் நம்மைப் போன்றோருக்கு பின் வாசலே... எழுத்தில் வார்த்தையின் மணம் வீச வேண்டுமே தவிர... வார்த்தை வீசக்கூடாது...

இந்தப் பழமொழிகளை நானும் கேட்டிருக்கிறேன்...

நல்ல கேள்வி வருண்.***

ஏங்க நம்ம பாக்காத "காளியா" இல்லை "பொன்னாளா"??

அப்படிப் பாத்தால் ச்காத உறவுக்கதைகள்கூட உண்மையில் நடப்பதுதான். ஏன் அதையே எழுதி தமிழ் இலக்கியத்தை உண்மைகளால் நிரப்ப வேண்டியதுதானே? நான் கேள்விப்பட்டதையெல்லாம் ஒரு மாரி, வசந்தா மூலம் சொல்றத்ன்ன கஷ்டமா என்ன??

Avargal Unmaigal said...

பாஸ் நீங்க நவீனகால இலக்கிய எழுத்தாளர் அல்ல அவங்கதான் எல்லா கெட்டவார்த்தைகளையும் எழுத முடியும் அதையும் அதிக பணம் கொடுத்து வாங்கி அதை ஆஹா ஓகோ என்று பாராட்டி தாங்கள் வைத்திருக்கும் பகவத்கீதை மற்றும் இதிகாச புத்தகங்க வைத்திருக்கும் ஷோகேஸில் வைத்து இருப்பார்கள் அதை விமர்சிக்கும் படித்தவர்கள் அந்த கெட்ட வார்தைகளை தமிழில் சொல்லி விமர்சிக்காமல் அதை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் அப்படி சொன்னால் அவர்கள் சமுகத்தில் உயர்ந்தவர்கள் என்று நினைப்பு வேறு

ஆனால் அதை வார்த்தைகளை நாம் பயன்படுத்தினால் ஐயகோ இப்படி சமுகத்தை கெடுகிறான் என்று கதருவார்கள். நாம் என்ன நம்ம எழுத்தை காசுக்க விக்கிறோம் இலவசமாகத்தானே தருகிறோம்


எனக்கு உண்மையிலே இதில் மறைந்து இருக்கும் பழிமொழி என்ன வென்று தெரியவில்லை அதனால் முடிந்தால் என் தளத்தில் சொல்லிவிட்டு போகவும்
1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது
2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.

வருண் said...

***Avargal Unmaigal said...

பாஸ் நீங்க நவீனகால இலக்கிய எழுத்தாளர் அல்ல அவங்கதான் எல்லா கெட்டவார்த்தைகளையும் எழுத முடியும் அதையும் அதிக பணம் கொடுத்து வாங்கி அதை ஆஹா ஓகோ என்று பாராட்டி தாங்கள் வைத்திருக்கும் பகவத்கீதை மற்றும் இதிகாச புத்தகங்க வைத்திருக்கும் ஷோகேஸில் வைத்து இருப்பார்கள் அதை விமர்சிக்கும் படித்தவர்கள் அந்த கெட்ட வார்தைகளை தமிழில் சொல்லி விமர்சிக்காமல் அதை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் அப்படி சொன்னால் அவர்கள் சமுகத்தில் உயர்ந்தவர்கள் என்று நினைப்பு வேறு

ஆனால் அதை வார்த்தைகளை நாம் பயன்படுத்தினால் ஐயகோ இப்படி சமுகத்தை கெடுகிறான் என்று கதருவார்கள். நாம் என்ன நம்ம எழுத்தை காசுக்க விக்கிறோம் இலவசமாகத்தானே தருகிறோம்


எனக்கு உண்மையிலே இதில் மறைந்து இருக்கும் பழிமொழி என்ன வென்று தெரியவில்லை அதனால் முடிந்தால் என் தளத்தில் சொல்லிவிட்டு போகவும்
1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது
2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.***

நான் பார்த்த வரைக்கும், கெட்ட வார்த்தை எழுதுவதற்கு, தமிழர்கள் கலாச்சாரம் என்பது "கூட்டிக் கொடுப்பது"தான் ன்னு எழுதுவதற்கு, தமிழச்சியை எல்லாம் தேவடியாளாக்குவதற்கு முதல் தகுதி, நீங்க ஒரு தமிழறிஞரா இருக்கணும். பேராசிரியரா இருந்தால் இன்னும் வசதி.

கொஞ்ச நாள் முன்னால் தமிழ் மேதை செயமோகன், "வாத்தா" னா என்ன என்பதற்கு பச்சையாக அவர் தளத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.

தமிறிஞர்கள் எல்லாம் அருவருப்பானவர்கள் என்கிற காரணத்தால்தானோ நம்மளமாதிரி ஆட்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து பயந்து அறிவியல் பக்கம் போய்விடுகிறோம்.

வருண் said...

****எனக்கு உண்மையிலே இதில் மறைந்து இருக்கும் பழிமொழி என்ன வென்று தெரியவில்லை அதனால் முடிந்தால் என் தளத்தில் சொல்லிவிட்டு போகவும்
1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது
2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.***

நீங்க என்ன தல இப்படி அப்பாவியா இருக்கீங்க? தமிழ்க் கலாச்சாரத்தில் ரொம்ப "ஊறாமல்" இருக்கீங்களே?

உங்க ஆசைப்படி அப்படியே பச்சைத் தமிழில் சொல்லிடுறேன். :)))

திண்டுக்கல் தனபாலன் said...

அட... கெட்டதை விடுங்க... கேட்டதையும் விடுங்க... நல்லதொரு நகைச்சுவை நிகழ்ச்சி... உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்... இருந்தாலும் :-

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வரிகளுக்கும் பலத்த கைதட்டல்... வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது... கைதட்டல்கள் முடிந்ததும் கண்ணதாசன், "இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்... என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.... ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்பது தான் உண்மை என்று புரிகிறது....” என்றார்.

// என் எழுத்துக்கு நானே செய்யும் துரோகம்...// உங்களது எண்ணம் தொடரட்டும்...

மகிழ்நிறை said...

புரிகிற மாதிரி எனக்கு சொல்லத் தெரியுமா என தெரியவில்லை என்றாலும் முயற்சிக்கிறேன். ரொம்ப ரேரா கொஞ்சம் புரிஞ்ச லாஸ்ட், பெஞ்ச் ஸ்டுடென்ட் ஒரு ப்ரைட் மாணவர்க்கு விளக்கும் முயற்சி:))))

வருண் ஒரு போஸ்ட் எழுதும்போதோ, இல்ல மைதிலி ஒரு போஸ்ட் எழுதும் போதோ அவர்கள் வார்த்தைகளில் கவனம் அவசியமாகிறது.bcoz என் கருத்தை என் மொழியில முன் வைக்கிறேன். அப்படிப்பார்த்தால் ஜெமோ செய்தததை என்னாலும் ஏற்கமுடியவில்லை. but ஒரு உண்மை சம்பவத்தை ஆவணபடுத்தும்போது அந்த ஊர் மக்களிடையே புழங்கிய பழக்கவழக்கங்களை, பழமொழிகளை பதிவு செய்யவேண்டியது அவசியமாகிறது. அதை தான் பெ.மு செய்திருக்கிறார். காளி என்ன எக்கசெக்கமா படிச்சுட்டு யு.எஸ் லயா வேலைபார்க்கிறார்:))(j.k) so அவர் கதையை எழுதும்போது இடக்கர்அடக்கல் என சில வார்த்தைகளை எடிட் பண்ணுறது , கதை நடக்கும் சூழலை ஷார்ப்பா சொல்லமுடியா போகும். இதை செவ்வியல் படைப்புகள் என்பார்கள், உதாரணத்துக்கு பாலாவின் படங்களை போல.

ஆனால் கதையல்லாமல், தன் பேட்டியிலோ, பதிவிலோ பெருமாள்முருகன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் தான் தவறு.

நீங்க இப்போ இருக்கிற எழுத்தாளர்கள் படைப்புகளை படிப்பதில்லைன்னு நினைக்கிறேன். என் சிறுவயதில் பார்த்த சினிமாக்களில் வீட்டுவேலை பார்க்கும் பெண், சித்தாள், ஏன் பிச்சைகாரர்களை கூட மேக்கப் போட்டுதான் காட்டுவார்கள். ஆனா இன்னிக்கு பல சினிமா இயல்பா இருக்கு. அதேபோல தான் நான் வாசிக்கதொடங்கிய காலத்தில் கதை நாயகன் எந்த ஊர் காரர் என்றாலும் ஒரே ஸ்லாங் ல பேசிக்கிட்டு இருப்பாங்க. but இப்போ கதைகள் ரொம்ப நேட்டிவிட்டியோட இயல்பா இருக்கு. டைம் கிடைக்கும்போது தற்கால இலக்கியவாதிகளின் படைப்புகளை படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் கொதியுங்க பாஸ்:) ஆனா இதுதான் நம்ம வரலாறு. கதைகளில் அதை மூடி மறைத்தால், மேல்சாதி என தன்னை கூறிகொள்ளும், தமிழர்கள் குரங்குகளாக வாழ்ந்தார்கள், ராட்சசர்களாக வாழ்ந்தார்கள்,ஆரிய ராமன் வந்து தான் நமக்கு விமோட்சணம் அளித்தான் என கதை அளக்கும் வடநாட்டுக்காரன் இன்னும் மேல மேல தனக்கு தேவையான வரலாறை இட்டு கட்டிகொள்வான்.



இது எல்லாவற்றுக்கும் மேல, இந்த கருத்தில் நாம் இருவரும் வேறு வேறு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாலும், உங்க வார்த்தைகள், போஸ்ட் இப்போ கொஞ்சம் கோபத்தை பக்குவமா கையாள்வதாக காட்டுது:)so வருணுக்கு ஒரு போக்கே:)

மலரன்பன் said...

I haven’t heard these two sayings about K R Vijaya and Priest and God. You have assumed everyone, who has lived in TN, knows them. How? You can tell me the meaning of them at least now!

In your post, one point emerges clear: there are different kinds of writings. You and Perumal Murugan or Jeyamohan or such writers don’t author the same kind of writing. You are not a creative writer i.e. you don’t write novels or any other fiction. You write only personal blogs to release your pent-up anger or emotions on all and sundry matters read by a select coterie of a few of your friends, or by persons like me, who browse internet blogs and forum for whiling away extra time or for recreation.

I said different kinds of writing. The different kinds require different approaches. For a creative writer, the context and target readership are important. If he targets female readers, who are brought up in a conservation society, he takes especial care to ensure that his words are acceptable in a genteel female society. If he targets males of all sorts, he may not take the same care; yet, he won’t use all sorts of words, either decent or indecent. If he has no such target, and only aims to produce an art i.e. a creative fiction, as literature, then, he has no rules but to put appropriate words in appropriate contexts in his novel.

Literature accepts all and categorise them under appropriate genres. Thus, in modern literature, we have categories: books for young readers, female and male together or separate; books for adult females and males; books for instant gratification i.e. to read on a short journey and discard when you alight from the bus or train. For females (i.e. teenagers) we have Mills and Boon novels; for mature females, we have novels of authors like Jane Austen, Sivashankar, Ramani Chandran, Jyotirlatha Girija, Lakshmi and similar others; for male readers we have Dickens and Hardy, Jeyakanthan, Jeyamohan, Ahilan and NaPa and similar others. If the male readers are mature, we have D H Lawrence and Perumal Murugan who writes about sex graphically and sensual conversations and descriptions. For instant gratification, we have novels of Rajesh Kumar and Pattukkottai Prabakar and Dennis Robbins, James Hadly Chase, Jeffrey Archar... (cont’d)

மலரன்பன் said...

However, almost all writers follow the generally accepted norms of the society they live in. In Victorian England, no English novel used the commonly heard obscenities in poor people conversation. Even in use of slang, they took care to avoid obscene slang. However, a few writers may defy their current norms. D H Lawrence defied them and his novel Sons and Lovers was proscribed by government as obscene. Today, the same novel is prescribed texts in PG classes all over the world. LOL !

In Tamil, we have so far travelled on the safe path of decent words, irrespective of the targeted readership. It was possible to do so because the subjects the writers took for themes mostly are about genteel society like the ones we see in TV serials - well dressed characters speaking decent Tamil. So, the conversations in earlier novels were genteel; even when some poor were introduced as characters, their speeches were censored by author himself for fear of incurring the wrath of persons like you.

Now the trend has changed in Tamil literature. Writers take up all sorts of themes although women writers continue with the same feminine themes. All sorts of themes include the lives of dalits, the fringe sections of society like prostitutes, vagabonds, wastrels, robbers and cheats. Writers feel their writing should reflect their society as a whole, not in parts. All sections should be corralled and the voices of downtrodden should be given shape in words. The politically-correct society should be shocked. They feel the anguish of such neglected and downtrodden people, so far muted, should be allowed to jolt the society. The society should know such people do (or did) exist and their life could be literature. This trend has already come into being in English and French literature long time ago....(CONT’D)

மலரன்பன் said...

Thus, we see dalit writers are emerging and their novels are about the dalits. University courses in Tamil classify them under Dalit literature, just like in USA, the writings by the blacks are classified and studied under Black Writing. Other writers like Jayanthan (died recently), Samuthiram (also died) wrote about all kinds of poor who inhabited our slums and lived like animals closely.

Come to think of the crucial issue of obscenities that has disturbed you much: The aforesaid writers, under your verbal attack here, feel that the characters should speak as they have really spoken. The life reflected in the novel should contain authentic voices to involve the readers with the ups and downs, agony and ecstasies, pains and sorrows, of such sections of society. To fit authentic voices into the appropriate contexts, obscene words are unavoidable. For e.g. two slum women quarrel about a man - one, his wife and the other his concubine – vituperative words will fly thick and fast there, and such words are unspeakable, let alone put-downable in black and white. Earlier times, writers avoided them; now, they boldly come out with such novels to shock us. Therefore, in Mathoru Pagan, you will have to read the unspeakable bad words occurring in the common conversations of innocent peasants who lived in 1940s and get shocked. W/o such words, Mathorubagan will have become a poor product of false words. It would not have attracted me, a lover of good literature in Tamil language.

But the opposition to writers like him shows that we have still a long way to go to make our Tamil literature vibrant in tune with the times, to use your correct word Chezhippu. If you feel so agonised to read such bad words, you are free to avoid reading such books. Your laying off will help Tamil literature grow and vibrant.

Thanks for the opportunity to write about Tamil lit.

அருள் said...

பெருமாள் முருகனை எதிர்த்தால் சாதிவெறி: மற்றதெல்லாம் என்ன வெறி?

http://arulgreen.blogspot.com/2015/01/Freedom-of-Speech-Perumal-Murugan.html

G.M Balasubramaniam said...

எனக்கு அந்த வார்த்தைகளின் உண்மைப்பொருள் தெரியவில்லை. தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். பெருமாள் முருகனின் கதைக் கருவுக்கு எதிர்ப்பா இல்லை சில வார்த்தைப் பிரயோகங்களுக்கு எதிர்ப்பா.?நான் எழுதி இருக்கும் ஒரு சிறு கதையும் பெருமளவில் வாசிக்கப் பட்டால் சர்ச்சைக் குள்ளாகுமோ தெரியவில்லை. ( வாழ்வின் விளிம்பில் தொகுப்பில் வரும் ஒரு கதை ” இப்படியும் ஒரு கதை.).வலைப்பூவில் எழுதுயதுதான். பல நாட்கள் விடுப்புக்குப் பின் மீண்டும் ஆஜர்.

வருண் said...

*** திண்டுக்கல் தனபாலன் said...

அட... கெட்டதை விடுங்க... கேட்டதையும் விடுங்க... நல்லதொரு நகைச்சுவை நிகழ்ச்சி... உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்... இருந்தாலும் :-

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வரிகளுக்கும் பலத்த கைதட்டல்... வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது... கைதட்டல்கள் முடிந்ததும் கண்ணதாசன், "இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்... என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.... ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்பது தான் உண்மை என்று புரிகிறது....” என்றார்.

// என் எழுத்துக்கு நானே செய்யும் துரோகம்...// உங்களது எண்ணம் தொடரட்டும்...****

வாங்க தனபாலன். :)

நாம் அனைவருமே ஒரு சார்புடையவர்கள்தாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்பவன் எளிமையானவன், மனசாட்சியுடன் நடந்து கொள்பவன். அதை ஏற்றுக்கொள்ளாமல் நியாயப்படுத்தலில் பலர் இறங்குவதையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

உங்கள் அருகில் உள்ளவர்கள் மனநிலையை அறிய்க்கற்றுக்கொண்டாலே கோடி இலக்கியங்கள் படித்ததற்கு சமம். எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் நம்முடன் வாழும் மனிதர்களின் உணர்வுகளை??

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடித்தானே அலைகிறான் மனிதன்?

வருண் said...

**** Blogger Mythily kasthuri rengan said...

புரிகிற மாதிரி எனக்கு சொல்லத் தெரியுமா என தெரியவில்லை என்றாலும் முயற்சிக்கிறேன். ரொம்ப ரேரா கொஞ்சம் புரிஞ்ச லாஸ்ட், பெஞ்ச் ஸ்டுடென்ட் ஒரு ப்ரைட் மாணவர்க்கு விளக்கும் முயற்சி:))))

வருண் ஒரு போஸ்ட் எழுதும்போதோ, இல்ல மைதிலி ஒரு போஸ்ட் எழுதும் போதோ அவர்கள் வார்த்தைகளில் கவனம் அவசியமாகிறது.bcoz என் கருத்தை என் மொழியில முன் வைக்கிறேன். அப்படிப்பார்த்தால் ஜெமோ செய்தததை என்னாலும் ஏற்கமுடியவில்லை. but ஒரு உண்மை சம்பவத்தை ஆவணபடுத்தும்போது அந்த ஊர் மக்களிடையே புழங்கிய பழக்கவழக்கங்களை, பழமொழிகளை பதிவு செய்யவேண்டியது அவசியமாகிறது. அதை தான் பெ.மு செய்திருக்கிறார். காளி என்ன எக்கசெக்கமா படிச்சுட்டு யு.எஸ் லயா வேலைபார்க்கிறார்:))(j.k) so அவர் கதையை எழுதும்போது இடக்கர்அடக்கல் என சில வார்த்தைகளை எடிட் பண்ணுறது , கதை நடக்கும் சூழலை ஷார்ப்பா சொல்லமுடியா போகும். இதை செவ்வியல் படைப்புகள் என்பார்கள், உதாரணத்துக்கு பாலாவின் படங்களை போல.

ஆனால் கதையல்லாமல், தன் பேட்டியிலோ, பதிவிலோ பெருமாள்முருகன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் தான் தவறு.

நீங்க இப்போ இருக்கிற எழுத்தாளர்கள் படைப்புகளை படிப்பதில்லைன்னு நினைக்கிறேன். என் சிறுவயதில் பார்த்த சினிமாக்களில் வீட்டுவேலை பார்க்கும் பெண், சித்தாள், ஏன் பிச்சைகாரர்களை கூட மேக்கப் போட்டுதான் காட்டுவார்கள். ஆனா இன்னிக்கு பல சினிமா இயல்பா இருக்கு. அதேபோல தான் நான் வாசிக்கதொடங்கிய காலத்தில் கதை நாயகன் எந்த ஊர் காரர் என்றாலும் ஒரே ஸ்லாங் ல பேசிக்கிட்டு இருப்பாங்க. but இப்போ கதைகள் ரொம்ப நேட்டிவிட்டியோட இயல்பா இருக்கு. டைம் கிடைக்கும்போது தற்கால இலக்கியவாதிகளின் படைப்புகளை படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் கொதியுங்க பாஸ்:) ஆனா இதுதான் நம்ம வரலாறு. கதைகளில் அதை மூடி மறைத்தால், மேல்சாதி என தன்னை கூறிகொள்ளும், தமிழர்கள் குரங்குகளாக வாழ்ந்தார்கள், ராட்சசர்களாக வாழ்ந்தார்கள்,ஆரிய ராமன் வந்து தான் நமக்கு விமோட்சணம் அளித்தான் என கதை அளக்கும் வடநாட்டுக்காரன் இன்னும் மேல மேல தனக்கு தேவையான வரலாறை இட்டு கட்டிகொள்வான்.



இது எல்லாவற்றுக்கும் மேல, இந்த கருத்தில் நாம் இருவரும் வேறு வேறு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாலும், உங்க வார்த்தைகள், போஸ்ட் இப்போ கொஞ்சம் கோபத்தை பக்குவமா கையாள்வதாக காட்டுது:)so வருணுக்கு ஒரு போக்கே:)***

இவ்ளோ பெரிய பின்னூட்டமிட்டு உங்க தரப்பு வாதத்தை வைத்ததற்கு உங்களுக்குத்தான் பெரிய பூங்கொத்தைக் கொடுக்கணும், மைதிலி! :)

Amudhavan said...

சில சூழ்நிலைகளுக்காகவும், சில பாத்திரங்களுக்காகவும் பச்சைப் பச்சையாய்ப் பேசுவதை எழுதுவது என்பது ஜெயகாந்தன் ஆரம்பித்துவைத்த பாணிதான். ஆனால் அதிலும் அப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீற வேண்டும் என்றொரு கூட்டமும் அப்போதிருந்தே வளர்ந்துவந்ததையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதனை ஜி.நாகராஜன் போன்றவர்கள் கொஞ்சம் தைரியமாகவே செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த வகையில் இது சரிதான். ஆனால் இதற்குப்பின் வந்த சில எழுத்தாளர்கள் அப்படியெல்லாம் அதிர்ச்சியளிக்கும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்காகவே அதற்கேற்ப சூழல்களைக் கதையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டுத் தாங்கள் பாட்டுக்குத் தங்களின் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் இந்த வகையினராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த வரிசையில் முன்னணியில் வைக்கவேண்டிய எழுத்தாளர் சந்தேகமில்லாமல் சாருநிவேதிதா தான்.

வருண் said...

***I haven’t heard these two sayings about K R Vijaya and Priest and God. You have assumed everyone, who has lived in TN, knows them. How? You can tell me the meaning of them at least now!****

Well, let me avoid getting personal on you. I usually do that.

Here is the situation we have got now..

People who have not heard are coming forward and telling that like you do. But people those who do know that are just keeping quiet. I know little bit about Tamils' psychology. If they say "No" it is a "No". If they dont say anything. That means "Yes" most of the time.So,unfortunately you can not take a "count" here from the "yes" or "no" answer and estimate the "awareness" here.

I never said, everybody heard of these "proverbs"

This is what I have said..

***தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த எல்லா கிழ்த்தரமான ஆண்களுக்கும் இப்பழமொழிகள் நன்கே பரிச்சயம். இங்கே பெரிய மனுஷன் வேடத்தில் அவர்கள் திரிவதால் அதை அப்படியே சொல்லாமல் திரித்துச் சொல்லிக்கொண்டு அலைவதும் எனக்குத் தெரியும். ***

You may be one of decent Tamils (unlike me) who did not grow up in an environment like me. There are millions of them, of course.

I have seen the modified version of the same proverb in several discussions.

I am afraid, it is not possible for me to share that "vulgar proverb" in public. But that does exist in "our culture". I do not share my bedroom life in Public either. I dont dare to insult another community to take a "revenge" on them or teaching a lesson to them either. I mean, not all truths are spoken out loudly. There are valid reasons for that too.

I am only writing the truth is kind of "defense" is weakest imho.
Again, that's my opinion. :)

வருண் said...

***You are not a creative writer i.e. you don’t write novels or any other fiction.***

You seem to have known everything about me! How can I defend myself now?

I am not like you. I would have phrased it differently unless I am talking about myself. Because I know very little about others. I try not to judge others but do judge sometimes. What a filthy hypocrite I am! :)

***You write only personal blogs to release your pent-up anger or emotions on all and sundry matters read by a select coterie of a few of your friends, or by persons like me, who browse internet blogs and forum for whiling away extra time or for recreation.****

I am impressed, malaranaban! See I am not here to talk about myself. I am not trying to tell how great I am to the world either. Honestly I find such a lecture EXTREMELY BORING!

I feel the same, listening to you as you are talking about me- what I am and what is my capability and where I stand when it comes to creativity and such.

I am really sorry to say that you are EXTREMELY BORING! No offense here, I promise. I am just being extremely honest.

Let me move on to some interesting bloggers. I mean bloggers whom I find interesting.

Thanks a lot for stopping by, malaranban.

Do take care! :)

வருண் said...


***Blogger அருள் said...

பெருமாள் முருகனை எதிர்த்தால் சாதிவெறி: மற்றதெல்லாம் என்ன வெறி?

http://arulgreen.blogspot.com/2015/01/Freedom-of-Speech-Perumal-Murugan.html***

வாங்க அருள். உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

வருண் said...

*** G.M Balasubramaniam said...

எனக்கு அந்த வார்த்தைகளின் உண்மைப்பொருள் தெரியவில்லை. தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். பெருமாள் முருகனின் கதைக் கருவுக்கு எதிர்ப்பா இல்லை சில வார்த்தைப் பிரயோகங்களுக்கு எதிர்ப்பா.?நான் எழுதி இருக்கும் ஒரு சிறு கதையும் பெருமளவில் வாசிக்கப் பட்டால் சர்ச்சைக் குள்ளாகுமோ தெரியவில்லை. ( வாழ்வின் விளிம்பில் தொகுப்பில் வரும் ஒரு கதை ” இப்படியும் ஒரு கதை.).வலைப்பூவில் எழுதுயதுதான். பல நாட்கள் விடுப்புக்குப் பின் மீண்டும் ஆஜர். ***

வாங்க சார்! :)

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். உங்க தளம் வந்து என்னனு பார்க்கிறேன், சார். நன்றி :)

மலரன்பன் said...

//பெருமாள் முருகனின் கதைக் கருவுக்கு எதிர்ப்பா இல்லை சில வார்த்தைப் பிரயோகங்களுக்கு எதிர்ப்பா.?//

இரண்டுக்குமே எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேவடியாள் தெரு என்று எழுதியதும், கோயில் விழாவில் நடக்கும் கூத்தில், கோமாளிக்கும் சக பாத்திரம் ஒன்றுக்குமிடையில் நடக்கும் உரையாடலையும் காட்டி எதிர்க்கிறார்கள். அதேவேளையில், தலித்து மக்களைப்பற்றிய கவுண்டர்களின் பேச்சை எடுத்துக்காட்டவில்லை. அதைத் தவிர்த்துவிட்டு, கவுண்டர்கள் உண்மையில் நல்லவிதமாக தலித்துக்களை நடத்தியவர்கள் என்று எடுத்துக்காட்டுவதோடு நில்லாமல், கவுண்ட மனைவியர் தங்கள் கணவன்மார்கள் இறந்த போது, உடன் கட்டையேறினார்கள் அவர்கள் உத்தமிகள் என்று வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன! எனப்பெருமை பொங்கச் சொல்லி, உடன்கட்டையேறுதல் ஒரு பெண்ணின் நற்குணம் அவள் தெய்வமாகிறாள் என்று இயம்புகிறார்கள். இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர் கேள்விப்பட்ட (மற்றவர்கள் கேள்விப்படவில்லை என்று ஆசிரியரின் எதிர்ப்பாளர்கள் சொல்லும்) கோயில் திருவிழாவை ஒட்டிய பழக்கமொன்றே கதையில் உச்சகட்டமாக‌ வைக்கப்படுகிறது. அதற்குத்தான் எதிர்ப்பு அதிகம். திருச்செங்கோடு என்ற ஊரில் பெயரே எழுதப்படக்கூடாதென்கிறார்கள்.

ஆசிரியர் மன்னிப்புக்கடிதம் மட்டுமெழுதிக்கொடுக்காமல், அந்நாவலில் எவற்றையெல்லாம் கவுண்டர்கள் விரும்பவில்லையோ அவற்றையெல்லாம் தான் அடுத்தபதிவிலிருந்து நீக்கி விடுகிறேன் என்று உறுதிமொழியை அக்கடித்ததிலேயே எழுதியும் கொடுத்துவிட்டார்.

இச்சூழநிலையைத்தான் எழுத்தாளர்கள் (சாருவைத்தவிர) எதிர்க்கிறார்கள். ஏனென்றால், இனி ஒவ்வொரு எழுத்தாளரும் எவ்வூரையும் குறிப்பிட்டு எப்புதினமும் எழுத முடியாது. பயப்படுவார்கள். அனைத்தும் கற்பனைப்பெயராகத்தான் இருக்க வேண்டும். எ.காக, சென்னையில் ஒரு வீட்டில் நடந்த கதை என்று முடித்துவிடவேண்டும். மேலும் எழுதுபவை எல்லாம் செவி வழிக்கதைகளை ஒட்டியமையக்கூடா. அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். பெருமாள் முருகனைப் போன்ற எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களைப் பற்றி எழுதும்போது, அம்மக்கள் புனிதர்கள் மட்டுமே என்று படிப்போர் கருதும்படியாக எழுதியிருந்தால், அதற்கு எதிர்ப்பில்லை. அதில் ஒரே ஓரிடத்தில் மட்டும் விமர்சனம் இருந்தால், எதிர்ப்பு கிளம்பும்.

தமிழில் ஒரு இசுலாமிய முன்பு இருந்தார். அவர் பெயர் கருணா மணாளன். பாளையங்கோட்டை சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி நூலகர். அவரின் சிறுகதைகள் தொடர்ந்து குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து வரும். அவை இசுலாமியக் குடும்பங்களில் வாழ்க்கையை நிலைக்கலனாகக் கொண்டவை மட்டுமே. அவைய‌னைத்திலும் ஒரு இசுலாமிய வில்லனை பார்க்கவே முடியாது. அனைத்து இசுலாமியரும் நல்லவர்; அப்பாவிகள்; தெயவத்துக்குப் பயந்தவர்கள். எப்பாவமும் செய்ய மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையைக் கெடுக்க அந்நியர்கள் நுழைவார்கள். இறுதியில் இவர்களின் தெய்வபக்தியினால் அவன் அழிவான். இப்படித்தான் அக்தை போகும். ஒரு செயற்கை சமூகத்தை நமக்குக் காட்டுவார். அவரின் கடனது என்று அவர் நினைத்தது என்று முடிக்கலாம். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட கதைகள் didactic stories எனபர். ஆக, எழுத்தாளர்கள் அனைவரும் கருணா மணாளன்களாக ஆகி, டைடாக்டிக் கதைகள் மட்டுமே எழுத வேண்டிய சூழல் வரும்.

(வரும்)

மலரன்பன் said...

இப்படியாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றைத்தான் அவர்களுக்குப் பிடித்தவண்ணம் மட்டும் எழுதி வெளியிட்டால் அவன் பிழைத்தான். இல்லாவிட்டால் செத்தான். அவன் ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுவான். அவன் எழுதவே கூடாது. முன்பு எழுதியவற்றையெல்லாம் எரித்துவிட வேண்டும். அதாவது இங்கு இலக்கியமும் மதமும் ஒரே தட்டில் வந்து விடுகின்றன. மதத்தில் மக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அடக்குமுறைக்கு அடங்கியே தீரவேண்டும். ஹிந்துமதம் அப்படியன்று என்றோரே இன்று தாமும் அடக்குபவர்களே என்று மாறிவிட்டார்.

எனவே இங்கு எவரெல்லாம் மாதொரு பாகனை எதிர்த்தார்களோ அவர்களெல்லாம் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். குறைந்தது அவர்கள் பயப்படுவார்கள். கட்டாயத்துப் பயந்து செய்வதில் படைப்பிலக்கியம் மட்டும் கடும் சீரழிவை அடையும். மற்றவைகள் அவ்வளவு மோசமாகாது.

சிலர் எழுத்தாளனுக்கென்ன கொம்பா? என்று கேட்கிறார்கள். முட்டாள்தனமான கேள்வி. ஏனென்றால், எழத்தாளன் தன் எழுத்தை ஒரு கடமையாகக் கருதி எழுதி, நுங்களை அதைப்படித்தே தீரவேண்டுமென்று, நேராகவோ, மறைமுகமாகவோ, மிரட்டவில்லை; கட்டாயப்படுத்தவில்லை. இப்படிக்கட்டாயப்படுத்தாமல், செய்பவர்கள் தம‌க்கு விரும்பியதைச்செய்து வெளியிடும் செயலகள் பற்பல சினிமா, டிவ் சீரியல், போன்று சமூகத்தில் உள்ளன. அவர்களையெல்லாம் உம‌க்கென்ன கொம்பா என்று கேட்பதில்லை. கட்டாயப் படுத்தாத எழுத்தாளனை மட்டும் அப்படிக் கேட்பதேன்?

அருள்!

உங்கள் பசுமைப்பக்கங்கள் உங்கள் சார்பு நிலை எடுத்தாருக்கு மட்டுமே பசுமை. ஏனெனில் மாற்றுக்கருத்துக்களை நீங்கள் வெளியிடுவதில்லை. இப்படி உங்களைச்சுற்றி இரும்புக்கோட்டையை எழுப்பிக்கொண்டு வாழும் நீங்கள் கருத்துச்சுதந்திரம் பற்றி கவலைப்படுகிறீர்கள் :-) இங்கே உங்கள் பதிவுக்கு கருத்து சொல்லலாம்.

உங்கள் பதிவு மற்றெல்லாவற்றிற்கும் ஆதரவு; இதற்கு மட்டும் எதிர்ப்பா? அதாவது எங்கெல்லாம் மற்றவர்கள் பாதிப்பு என்று எதிர்த்தார்களோ - இசுலாமியர், நாடார்கள் போன்று - அங்கு பெருமாள் முருகனின் ஆதரவாளர்கள் அமைதிகாத்தார்கள். இன்று காக்கவில்லை. இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதுதானே உங்கள் கருத்து? ஆமென்றால், நீங்கள் பெருமாள் முருகனை எதிர்க்கவில்லை. அவரின் ஆதரவாளர்களின் இரட்டை வேடத்தையே எதிர்க்க்கிறீர்கள். சரியா?

இங்கு அவரின் ஆதரவாளர் எவருமே இல்லை. என்னை எவருக்கும் தெரியாது. நீங்கள் எடுத்துக்காட்டிய அனைத்தையும் பதிவுகளில் எவராவது ஆதரித்தால் என் பதில் இங்கே போட்டது போலவே. எனவே பெருமாள் முருகனைப்பற்றி மட்டுமே பேசுங்கள்.

வருண் said...

***தமிழில் ஒரு இசுலாமிய முன்பு இருந்தார். அவர் பெயர் கருணா மணாளன். பாளையங்கோட்டை சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி நூலகர். அவரின் சிறுகதைகள் தொடர்ந்து குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து வரும். அவை இசுலாமியக் குடும்பங்களில் வாழ்க்கையை நிலைக்கலனாகக் கொண்டவை மட்டுமே. அவைய‌னைத்திலும் ஒரு இசுலாமிய வில்லனை பார்க்கவே முடியாது. அனைத்து இசுலாமியரும் நல்லவர்; அப்பாவிகள்; தெயவத்துக்குப் பயந்தவர்கள். எப்பாவமும் செய்ய மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையைக் கெடுக்க அந்நியர்கள் நுழைவார்கள். இறுதியில் இவர்களின் தெய்வபக்தியினால் அவன் அழிவான். இப்படித்தான் அக்தை போகும்.***

திரு மலரன்பன்!

உங்களைப் பற்றி நொல்லுங்கள் என்றால், நீங்க என்ன சொல்லுவீங்க???

உண்மையைத்தான் சொல்லுவீங்க..

அதாவது உங்க வாழ்க்கையில் உங்களை யார் யாரு அவமானப்படுத்தினார்கள் என்றும்

யார் யாரிடம் நீங்க தவறு செய்து அடிவாங்கினீர்கள் என்ரும்

யார் யாரை நினைத்துஎப்படி எப்படி மாஸ்டர்பேட் பண்ணினீர்கள்.. இப்போவும் பண்ணிக்கொண்டு இருக்கீங்க என்பதையெல்லாம்

சொல்லுவீங்களா இல்லை எழுதுவீங்களா?

இல்லைனா இவைகளை கவனமாக வடிகட்டி உங்களைப் பத்தி ஒரு பொய்யான பிம்பத்தை கொடுப்பீங்களா?

தயவு செய்து பதில் சொல்லவும்.

I am asking this because you do get personal on people. Let me see how hones you are. I hope you are not living a FAKE LIFE!

வருண் said...

***Amudhavan said...

சில சூழ்நிலைகளுக்காகவும், சில பாத்திரங்களுக்காகவும் பச்சைப் பச்சையாய்ப் பேசுவதை எழுதுவது என்பது ஜெயகாந்தன் ஆரம்பித்துவைத்த பாணிதான். ஆனால் அதிலும் அப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீற வேண்டும் என்றொரு கூட்டமும் அப்போதிருந்தே வளர்ந்துவந்ததையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதனை ஜி.நாகராஜன் போன்றவர்கள் கொஞ்சம் தைரியமாகவே செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த வகையில் இது சரிதான். ஆனால் இதற்குப்பின் வந்த சில எழுத்தாளர்கள் அப்படியெல்லாம் அதிர்ச்சியளிக்கும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்காகவே அதற்கேற்ப சூழல்களைக் கதையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டுத் தாங்கள் பாட்டுக்குத் தங்களின் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் இந்த வகையினராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த வரிசையில் முன்னணியில் வைக்கவேண்டிய எழுத்தாளர் சந்தேகமில்லாமல் சாருநிவேதிதா தான்.***

வாங்க அமுதவன் சார்! :)

தெளிவாக் சொல்லீட்டீங்க.

எழுத்தாளன் எல்லாம் "பொது நலச் சேவை ச்செய்றான்" "அவன் கருத்துச்சுதந்திர்ரத்தை மதிக்கணும்" என்ற வாதத்துடன் என்ன அயோக்கியத்தனம் வேணுமானாலும் செய்யலாமா??

எழுத்தாளமும் சுயநலவாதிதான். மக்களை ஈர்க்கணும்னு ஒரு சில விஷத்தையும் கலப்பதுண்டு என்பதெல்லாம் நம்க்குத் தெரியாதா என்ன??

இதி வேடிக்க என்னவென்றால் பெ முருகன் கதையை சாருநிவேதிதா எழுதி இருந்தால்.. இப்போ அவருக்கு வக்காலத்து வாங்கும் பலர், எதிர்ரணியில் இருப்பார்கள்!

இல்லைனு சொல்லச் சொல்லுங்கள். பார்ப்போம்! :)))

மலரன்பன் said...

//You may be one of decent Tamils (unlike me) who did not grow up in an environment like me. There are millions of them, of course.
//

Questioning me earlier, //Do you know whether I am a creative writer or not//, here you are assuming that I am a decent guy (decently brought up, you mean). I have seen life in the dark alleys of slums both in Chennai and my town and in a Northern metro where I live now. I have grown up hearing all the vulgar words since my aware childhood, till I came out of the slum and joined the genteel society. After joining, I used to berate, or rather, close my ears whenever I happened to be back at the same place and heard. My slum mates used to laugh at me. You have become a pompous Brahamanan ! In Rome, do as Romans do, they used to advise me.

But now I recall those vulgar words, and go to the sources of minds which create and use such bad words. They are right, the speakers! Value of a word depends upon the context and the person speaking. Words don't stand alone for meaning and importance or value. As Rushdie wrote, every text has a context. The vulgar words sound vulgar if you take them out of context. A child's palavar is welcome; but if it is yours now, if heard, will be called madness. Correct?

So, slum dwellers are in their right because they don't pretend to hide their anger that can be expressed only in bad words. When I hear such words now, when I go back, for some study, or to meet a long-lost mate, I become considerate and compassionate to the speakers and their words.

This made me love all that Perumal Murugan wrote coming they are from the mouth of the Kongu peasants and others. I loved the speakers so well that their words don't sound harsh to me; rather, lovable: like a wife loving to listen to the intimate vulgarities expressed by her husband. She pretends to hate but knows quite well they are drenched in his love for her.

Love me. love my dog (an English proverb) which means if you cannot love the things a person likes, it is difficult for you to understand such a person. Understanding will bring you closer to the person. If you love the poor, you ought to love the way they live. There is no half-way house for you, dear. Beware, a typical slum contains prostitutes, pimps, wastrels, derelict tramps, the down-trodden in the name of God, deserted wives under lecherous watch of rakes and debauchees, children whose fathers are unknown, disease-ridden people and the proletariat who work morning to dawn and come home at night only to be dragged by police for some imaginary interrogation under one pretext or other by police, nubile maidens suddenly disappearing only to appear after many days having lost their virginity to many unknown human monsters, and more often than not, not appearing at all, but found later in Kamathipura or GB Road as shown in the film Mahanadhi. Have you lived there? If so, you can't help loving all their lingo. Don't go there: it is a dark and bitter world. But writers go and they love the lingo so that the life there will form the background of their creation to make us aware such people exist in our society or to point a moral embedded therein.

It is a stage in one's development to progress to slum from a posh residence, paradoxically.

Against the above reasoning, no harm will be caused either to me or to any one of the mature commenters here, if you care to explain the meaning of such popular sayings. All proverbs belong to our language. Nothing is taboo. Lets be bad here now. Tell us the meaning of the popular sayings, Can't you?

மலரன்பன் said...

//இதி வேடிக்க என்னவென்றால் பெ முருகன் கதையை சாருநிவேதிதா எழுதி இருந்தால்.. இப்போ அவருக்கு வக்காலத்து வாங்கும் பலர், எதிர்ரணியில் இருப்பார்கள்!//

Don't create hypothetical situations. பெருமாள் முருகன் நாவலைப்பற்றி மட்டுமே பேசும்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை சரியா தவறா என்று அறியமுடியும். பெ.முருகனின் மாதொருபாகன் பொதுநலச்சேவையாக அவர் எழுதவில்லை. அப்படி சேவை செய்பவர் அவரின் ஜாதியினரை வேறுமாதிரியல்லவா காட்டியிருப்பார்?

நீங்கள் அந்த நாவலைப் படிக்கவில்லை. இனியும் படிக்கப்போனால், சாரு நிவேதிதாவின் மனதோடுதான் படிப்பீர்கள். இது ஒரு ஆவ்ரேஜ், மீடிய‌கர் நாவல்; இதில் சொல்லப்பட்ட தீம் வெகு சாதாரணமானது என்று முடித்துவிட்டார். அந்நாவலைப்படித்தோர் அவரின் விமர்சனம் எவ்வளவு தவறானது ஏன் அவரிப்படி எழுதினாரென்று ஊகித்துக்கொள்ளலாம்.

எப்புதினத்தையும் விமர்சனங்களைப் படிப்பதற்கு முன்பே படிக்கவேண்டும். நான் கதைச்சுருக்கத்தைக் கூட படிக்கவில்லை. திறந்த மனதோடு படிக்க வேண்டும்.

பெருமாள் முருகன தான் பிறந்து வளர்ந்த தம் ஜாதி மக்களின் மேல்கொண்ட extraordinary empathyயின் கற்பனை வடிவமே அந்நாவல். எவராலும் பொன்னாளுக்கும் காளிக்குமிடையே காட்டப்படும் காதலையும் அவர்கள் படும் மனவேதனைகளையும் காட்டவே முடியாது. அம்மக்களின் வாழ்க்கையை அனுபவித்தர் மட்டுமே எழுத முடியும். அக்காதலில் புனிதம் நம்மை அசத்துகிறது. கதையில் பல பாத்திரங்களின் செயல்களும் பேச்சுக்களும் நாவலாசிரியரின் தம் ஜாதியினரோடு கலந்த வாழ்க்கை வழியாக உருவாக்குகிறார். நாவலில் குறைகள் இருக்கின்றன. அவை, இறுதி தீர்ப்பாக வரும்போது பின் தள்ளப்படுகின்றன. இது ஒரு க்ளாசிக்.

வருண் ஒரு விஞ்ஞானியைப்போல இலக்கியததை அணுகக்கூடாது. இலக்கியம் படிக்க நம்மைத் தகுதியுடையவர்களாக்கிக்கொண்டுதான் நூலையே எடுக்கவேண்டும்.

எவர் என்ன சொன்னாலென்ன? எந்த போராட்டம் எதற்காக நடந்தாலென்ன? என்று எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளி விட்டுப்படியுங்கள். நாம் எப்படி ஒரு நல்ல இலக்கியவாதியை மரணிக்கச்செய்தோமென்ற குற்றவுணர்வு பெருவீர்கள்.

வருண் said...

***மலரன்பன் said...

//இதி வேடிக்க என்னவென்றால் பெ முருகன் கதையை சாருநிவேதிதா எழுதி இருந்தால்.. இப்போ அவருக்கு வக்காலத்து வாங்கும் பலர், எதிர்ரணியில் இருப்பார்கள்!//

Don't create hypothetical situations.***

Why NOT?

Someone in the responses has demonstrated a "real situation" .

Based that "reality" I am creating this hypothetical situation.

I dont see why it is SO WRONG!

வருண் said...

***Against the above reasoning, no harm will be caused either to me or to any one of the mature commenters here, if you care to explain the meaning of such popular sayings. All proverbs belong to our language. Nothing is taboo. Lets be bad here now. Tell us the meaning of the popular sayings, Can't you?**

You dont understand..

I have a white powder. It can be NaCN or NaCl. I am the one who knows what I have. You may say, "Dont worry I can eat this white powder and will be alive."!

I see your ignorance there and I certainly dont want to kill you feeding NaCN! :) Because I am the one who knows the truth.