Monday, January 5, 2015

இரண்டாயிரத்து பதினைந்து- 2015!

புது வருடம்!  போன வருடம் முதல்ப் பதிவு என்ன எழுதினேன்னு போயி பார்த்தால் அப்படி ஒன்னும் பெரிதாக.. ஆஹா  புதுவருடம் பொறந்துருச்சு, இனிமேல் எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும்! னு என்னை நானே ஏமாற்றிக்கவில்லை! அதுக்கு முந்திய வருடமும் அதே தான். ஆக வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்தாச்சு போல இருக்கு!

நிதானமடைந்து போதி மரத்துக்கு போன புத்தரையே திட்டுறாணுக நம்மாளுக! பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டு ஓடிட்டாருணு! நம்மள எல்லாம் விட்டு வைப்பாணுகளா? அதானால புத்தர் செஞ்ச தப்பையே நம்மளும் எதுக்கு செய்யணும்? :)

இந்த வருடம் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் னு கனவுகளுடனோ, இப்படி நடக்கணும், அப்படி நடக்கணும்னு எதிர்பார்ப்புடனோ புதிய வருடத்தை ஆரம்பிக்கவில்லை! நடப்பதுதானே நடக்கும்? என்கிற எண்ணம்தான் வருகிறது. இனிமேல் எல்லாப் புது வருடமும் இதேபோல்தான் போகும்போல இருக்கு.

ஏதாவது எழுதுவோமேனு எழுத  ஆரம்பித்தால் கடந்த இரண்டு வருடப் புத்தாண்டு ஆரம்பத்தில் வந்த அதே சிந்தனைகள்தான் திரும்பவும் வருகிறது.

பேசாமல் அதையே வெட்டி ஒட்டிடுவோமே? எதுக்கு அதே எண்ணங்களை வேறு வார்த்தைகளைப் போட்டு புது வாக்கிய்ங்கள அமைத்து...


*************************
 Flash back 1...

2013 முடிந்து 2014 ஆரம்பம்!

2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும் இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல! இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ் வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!

இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம்  அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை  இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள்  போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும்  இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,  எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும்,  மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!

இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல்,  இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள்,  கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.

வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.

என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.

நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள்.  These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)

I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.  
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள்.  ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான்.  ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப  மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.

உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.

நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால்  பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும்.  எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.

சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :)  ஆனால் நீங்கள் இழக்கும்  உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)

கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள்,  இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம்  பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம்  பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி  கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும்  உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள்  கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா?  அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!

புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம்.  காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன்  நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும்  கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)

 ***************************

flash back 2...

2013! பதிவுலகிற்கு நல்ல காலம் பொறந்திருச்சு!

2013 பொறந்துருச்சு! பிரகாஷுக்கு ஒரே கில்ட்டி ஃபீலிங்!  அவன் அவன்  நியு இயர் ரெசொலுஷன்னு "நான் சிகரட்டை விட்டுறப் போறேன்", "நான் நான்வெஜ் சாப்பிடப்போறதில்லை", "நான் தினமும் 5 மைல் ஓடப்போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால் பிரகாஷுக்குமட்டும்  இந்த வருடம் அந்தமாரி எதுவும் ஐடியாவே இல்லை.
அதற்கு காரணம் இருந்தது. கடந்த வருடங்களில் அவன் எடுத்த நியூ இயர் ரெரொலுஷன் படி எதையும் அவனால்  சில மாதங்களுக்கு மேலே ஒழுங்கா செயல்படுத்த முடியவில்லை! இந்த வருடம் பிரகாஷ்  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். எப்படியாவது நம்மளால செயல்படுத்த முடிந்த ஒரு நியு இயர் ரெசொலுஷன் தான் இந்த வருடம் கவனமாக எடுக்கணும் என்று. இல்லைனா "உனக்கெல்லாம் எதுக்குய்யா ரெசொலுஷன் மண்ணாங்கட்டி?" னு அவன் மனசாட்சியே அவனை அறையும்!


அப்படி என்ன ஒரு ஈஸியான/உருப்படியான  ரெசொலுஷன் எடுக்கலாம்? னு யோசித்து யோசித்து  கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். "பிரகாஷு கார்னர்" என்று அவன் ஒரு தளம் வைத்திருந்தான், நம்ம பிரகாஷ். அவன் வலைதளத்தில் எழுதும் பதிவு எவனுக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பதிவெழுதுவதுமட்டும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையைச் சொன்னால் பிரகாஷ், பதிவுகள்னு எதுவும் பெருசா  எழுதி நாட்டைத் திருத்தவில்லை! அவனுடைய எழுத்த்துக்குணு அவன் ஒண்ணும் பல விசிறிகளைப் பெறவில்லை! ஏதோ ஏனோ தானோனு தனக்கு தோணுகிற என்னத்தையாவது ஒரு பதிவை எழுதுவான். ஒவ்வொரு சமயம் நம்ம எதுக்கு இப்படி மாஞ்சிக்கிட்டு பதிவெழுதனும்? னு அவனே நினைப்பதுண்டு. இருந்தாலும் பதிவெழுதுறேன்னு எதையாவது தொடர்ந்து கிறுக்காமல் அவனால இருக்க முடியாது. பிரகாஷ், எதையாவது கட்டுரை, கதைனு எழுதிட்டு அதையும் தமிழ் மணம் அது இதுனு எல்லாத் திரட்டியிலும் சேர்த்து விடுவான்.  அவன் எழுதுறதை ஒரு நாளைக்கு எவனாவது தெரியாமல் அவன் தளத்திற்கு வந்துவிட்ட ஒரு பத்து இருபது  பேர் படிப்பார்கள். அப்படிப் படிக்கிறவங்களும் படிச்சுட்டு கருத்துனு எதுவும் பெருசா சொல்ல மாட்டாங்க! ஒவ்வொரு சமயம், உண்மையிலேயே தப்பித் தவறி நல்லா எழுதி இருந்தாலும்கூட இவன் பதிவை  வாசிச்சுட்டு  எதுவுமே  சொல்ல மாட்டாங்க, அவன் வாசகர்கள்! ஆனால் ஏதாவது சொற்குற்றம், பொருள் குற்றம், எழுத்துப் பிழைனு அவன் பதிவில் தப்பு விட்டு இருந்தால், அந்தக் குறையை மட்டும் பொறுப்பா வந்து சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுபோல் குறை சொல்லும்போதுதான்  "இவங்க எல்லாம்கூட நம்ம பதிவை வாசிக்கிறாங்க போல?" னு பிரகாஷ் தெரிந்து கொள்வான்.

சரி, இதுதான் சரியான முடிவு!ஒரு வருடம் ஒரு பதிவுமே எழுதாமல் இருப்பதென்பது பெரிய தியாகம்தான். நமக்கும் நல்லது. நம்ம எழுத்தை  அமைதியாக வாசிச்சு ரசிக்கும் விசிறிகளையும் ஒரு மாதிரி எழுத்துத் தீணி போடாமல் பழி வாங்கியதுபோல் இருக்கும்னு தன் முடிவைத் தானே மெச்சிக்கொண்டான். ஆனால் இந்த நியு இயர் ரெசொலுஷனை பதிவுலகில் சொல்லியே ஆகணுமே? இதை சொல்லலைனா எப்படி எல்லாருக்கும் நம்ம  ரெசொலுஷன் இதுதான்னு  தெரியும்? சரினு வேற வழியில்லாமல் "உங்க நலன் கருதி, 2013 ல் நான் பதிவெழுதப் போவதில்லை! உங்களுக்கெல்லாம் நல்ல காலம் பொறந்திருச்சு" னு ஒரு தலைப்பைப் போட்டு உருக்கமாக தன் முடிவை/நியு இயர் ரெசொலுஷனைத் தெளிவாகச் சொல்லி ஒரு பதிவு எழுதி வெளியிட்டுவிட்டான்! தமிழ்மணத்தில் அதை இணைத்தும் விட்டான், பிரகாஷ்.ஆனால் என்னைக்கும் இல்லாமல் அவனோட அந்தப் பதிவை வாசகர்கள் ஒரு 100 பேர் வாசகர் பரிந்துரைவில் பரிந்துரை செய்து, தமிழ் மணம் மகுடத்தில் வேற ஏற்றி விட்டு விட்டார்கள்!. ஏன்னு தெரியலை அந்தப் பதிவுக்கு அர்த்தமான பின்னூட்டங்களும் ஒரு 100க்கு மேலே வந்து இருந்தன!


"என்ன பிரகாஷ்  இப்படி செஞ்சுட்டீங்க?"னு ஒரு சில இளம் யுவதிகள்

"நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்!"னு மதிக்கத்தக்க பல பதிவர்கள்.

"என்ன பிரகாஷ், இப்போத்தான் உங்களுக்கு நல்லா கோர்வையா எழுத வருது! இப்போ நீங்க நிறுத்தக்கூடாது!" னு உரிமையுடன் சிலர்.

"உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு, பிரகாஷ்! நான் ரெகுலரா உங்க தளம் வாசிப்பேன். ஆனால் பின்னூட்டமிடுவதில்லை"னு ஒரு இருபது பேர்.


அப்படி இப்படினு ஆளாளுக்கு பின்னூட்டத்தில் புகழ்ந்ததும், பிரகாஷாக்கு நிலை கொள்ளவில்லை! எப்படியும் அவர்களுக்கு தன் நிலைமையை விளக்கி நன்றி சொல்லணும்னு இன்னொரு பதிவை எழுதினான். :))) ஆக, கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் அவன் நியு இயர் ரெசொலுஷன் நாசமாப் போனது! :-)


பாவம் பிரகாஷ், "நம்ம மக்கள், யாரையும் ஒழுங்கா வாழவும் விடமாட்டானுக, நிம்மதியா சாகவும் விடமாட்டானுக" என்கிற உண்மை இப்போக்கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் அதைவிட சோகம்! 


****************************

9 comments:

Avargal Unmaigal said...

பாஸ் இவ்வளோ பெரிய பதிவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ப்ளாஷ் ஒன்றுல நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க ஆழ்ந்து படிக்கனும்... மீண்டும் வருகிறேன்

-'பரிவை' சே.குமார் said...

2015க்கு வந்த பிறகு முந்தைய இரண்டு வருடங்களை பின்னோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்... நீண்ட பகிர்வாய் இருந்தாலும் நிறைவாய்....
அருமை வருண்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

Wow ! Nice thoughts Varun ! I like the one talking about people who ignore or look down upon u.. I am similar to wat you have said.. Earlier I used to forgive and respect.. Now, me too 'not anymore' 😀
Prakash story is very funny and meaningful

Mythily kasthuri rengan said...

ஒன்னு தெளிவா தெரியுது Vn. நீங்க பக்கா pessimist, நானோ energetic optimist:)))) so HAPPY NEW YEAR:))))

Mythily kasthuri rengan said...

ஒரு வேளை அவரு வருண் பிரகாசோ???:)))

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்பார்ப்பு, கடவுள் என உண்மைகள் பல... வாழ்த்துக்கள்...

Iniya said...

வாழ்வை உணர்ந்து அழகாக எழுதியுள்ளீர்கள். நானும் இதை எல்லாம் உணர்ந்திருக்கிறேன். பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே வாழ்கிறோம். என்று நினைத்துக் கொள்வேன்.எங்களை மட்டும் நம்பிக் கொண்டு எங்கள் மனதையும் நாம் தான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் உண்மையே சூப்பர் வருண் வாழ்த்துக்கள்..!

G.M Balasubramaniam said...

நாளோ ஆண்டோ போகப் போக நாம் புதிதாய் எதையோ கற்கிறோம். பிறரைக் கோவில் வைத்துக் கும்பிடுவதாகட்டும் நம்மை மதியாதவர்களை நாமும் மதிக்காமல் இருப்பதாகட்டும் சில வாழ்த்துக்கள் சம்பிரதாயமாகவே போய் விட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

பல நல்ல கருத்துக்கள். சிந்தனைகள். வாழ்வியல் தத்துவங்கள்?! யதார்த்தங்கள்...நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றோம் வயது ஏற ஏற. கற்றால்தான் நாமும் முதிர்ந்து வருகின்றோம் எனலாம். இல்லை என்றால் வேஸ்ட். பல கலவையுடன் அவியல் போன்று சுவையுடன்....அவியல் பழையதானால் கெட்டுவிடும். ஆனால் இது சுவாரஸ்மாக இருக்கின்றது. (நாங்கள் தாம்தமாக வந்ததானால் இப்படி....)