Friday, January 16, 2015

தீபிகா, கட்ரீனா யார் அழகு? ரான்பின் தான் சொல்லணும்!

ரிசிகபூர் பையன்,  ரான்பின் கபூரும், தீபிகா படுகோனே வும் ஒரு வருடம் போல (2009?) "டேட்" பண்ணினார்களாம். காதலுக்கு எப்போவுமே "half life" கம்மிதானே? ஒரு வருடத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் "break up" பண்ணிக் கொண்டார்கள்.

காரணம் என்ன?

 Ranbir Kapoor and Deepika Padkuone pose for the camera

ரான்பின் கபூர், தீபிகா போக வேறு அழகான் பெண்களிடமும் ரொம்ப நெருங்கிப் பழகினார் என்கிறார்கள். அது தீபிகாவுக்குப் பிடிக்கவில்லை. வழக்கம்போல இவன் காதலிக்க மட்டும்தான் லாயக்கு, கல்யாணத்துக்கு லாயக்கில்லைனு தீபிகா ஒதுங்கிவிட்டதாக சொல்லிக்கிறாங்க.

இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விடயம்தான். அதுவும் இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில்!

இதன் பிறகு ரான்பின் கட்ரீனா கயிஃப் பை "டேட்" பண்ணியதாகவும் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் நெருக்கமான ஒரு உறவு இன்னும் இருக்கு என்கிறார்கள். ரான்பினும், கட்ரீனாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இன்னும் அறிவிக்கவில்லை!

 Ranbir Kapoor and Katrina Kaif (Photo: DC archives)

இந்த ஒரு சூழலில்..

தீபிகா விடம் நிருபர் ஒருவர் கேள்வி..

நிருபர்: சப்போஸ் நீங்க கட்ரீனாவாக இருந்தால்?

திபிகா: நான் ரான்பின் கபூரை மணப்பேன்!

இதை எல்லாப் பத்திரிக்கையிலும் தீபிகாவின் இந்த "காமெண்ட்"டை பெருசா பேசிக்கிறாங்க!

சரி, நீங்க என்ன நினைக்கிறீங்க?

* தீபிகா, தன்னுடைய எக்ஸைப் பற்றி இப்படி விமர்சிப்பது சரியா? இல்லைனா தவறா?

* நீங்க கட்ரீனா இடத்தில் இருந்தால் இதை எப்படி எடுத்துக்குவீங்க?

சரி, இதுக்கெல்லாம் பதில் தெரியலைனா, ஈஸியா ஒருகேள்வி..அதுக்காவது பதில் சொல்லீட்டுப் போங்க!

இவர்கள் இருவரில் யாரு ரொம்ப அழகா இருக்காங்க?!
 
 


என்ன என்ன?

அழகா முக்கியமா?

வேறென்ன இவர்களைப் பத்தி நமக்குத் தெரியும்?

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அட நீங்க வேற காதல் எல்லாம் இப்ப தெய்வீகம் இல்லைங்க....சும்மா டைம் பாஸ்...ரெண்டே நாள்ல "காதல் கசக்குதைய்யா" :நீ யாரோ, இங்கு நான் யாரோ" அப்படினு பாடிக்கிட்டுப் போயிருவாங்க...இல்லைனா "இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" அப்படினு டயலாக் அடிச்சுடுவாங்க ...இவங்களுக்கெல்லாம் காதலாவது கத்தரிக்காயாவது....காதல் ன்ற வார்த்தையையே கேவலப்படுத்துகின்றார்கள்...

வருண் said...


வாங்க, துளசிதரன்..

என்ன இப்படி சொல்லீட்டீங்க?

அந்தக்காலத்தில் அடுத்தவீட்டுப் பெண் படத்தில் வந்த பாடல் இதுங்க..

****************

பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும்
இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ

*****************

சமீபத்தில் "சுபத்ரா பேசுறேன்" தளத்தில் காதலில் மூழ்கி இருப்பதுபோல் ஒரு கவிதை எழுதியிருந்தார், சுபத்ரா. உங்க பின்னூட்டம் போல் ஒரு பின்னூட்டம் எழுதினேன். அவர் கண்ணாபின்னானு அஃபெண்ட் ஆகிவிட்டார்னு நினைக்கிறேன். :)

நான் சொன்னேன், இதே காதல் கவிதையையும், என் "இந்த"P பின்னூட்டத்தையும் இன்னும் 10 அல்லது 20 வருடம் சென்று படிச்சுப் பாருங்க. அப்போ என் கருத்தைப் பற்றி என்ன சொல்றீங்கனு நான் பார்க்கணும்னு சொல்லீட்டு வந்தேன். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

விசயம் என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும்..
இதுல நீங்க தீபிகா, கத்ரீனா இருவரின் புகைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது :))

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

விசயம் என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும்..
இதுல நீங்க தீபிகா, கத்ரீனா இருவரின் புகைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது :))***

Let me please guilty here, Grace!

ரெண்டு பேருடைய பெயரையும் டைப் அடிச்சேன். கூகில் இமேஜஸ் அள்ளிக் கொண்டு வந்து கொட்டியது இவர்கள் படங்களை. அதில் தீபிகா ரொம்ப அழகா இருக்கிறதை செலக்ட் செய்து இங்கே கொடுத்தேன்னு நினைக்கிறேன். :)))

இருந்தாலும் I did not like Deepika being "nosy" in her ex's "current affair"! :)