Friday, January 9, 2015

கந்தசாமி ஐயாவின் பதிவும் நான் கற்ற பாடமும்!

பதிவுலகில் எங்கே சறுக்கும், எங்கே வழுக்கும் என்று யாரும் அடித்துச் சொல்லிவிட முடியாது. ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமலே நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம். ஆமாம் சில தருணங்களில் நாம் யோசிக்காத, சிந்திக்காத  ஒரு கோணத்தில் வாசகர் யோசித்து, நாம் சாதாரணமாக சொன்னதை அந்த வாசகர் சீரியஸாக எடுத்துப் பின்னூட்டமிட்டுவிடுவார். இப்படி ஒரு சூழல் எல்லோருக்குமே உருவாவதுதான். இதுபோல் சறுக்கல்களால்  நாம் நஷ்டம்டைவதைவிட இலாபமடைவதும் உண்டு.

கந்தசாமி ஐயாவின் பதிவுகளை நான் சமீபகாலமாக வாசிக்கவில்லை. நேற்றுத்தான் அவர் வலைபதிவை எட்டிப் பார்த்தேன். சில மாற்றுக் கருத்துப் பின்னூட்டங்கள் எழுதினேன். பொதுவாக பதிவுலகில் நாம் நம் கருத்தைச் சொல்லும்போது, நம் கருத்தால் ஒரு சிலர் பாதிக்கப் படுகிறார்கள். அப்படி பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள் நிலையை  வந்து எடுத்துச் சொல்வதில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை, இழப்புகளை எதற்காக உலகத்துக்கு திறந்து காட்ட வேண்டும்? என்று பொதுவாக யாரும் அதைச் சொல்வதில்லை. இருந்தாலும் ஒரு சிலர் பின்னூட்டங்களில் தன் தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்லாமல், தன்னை பாதித்த  அக்கருத்துத்  தனக்குப் பிடிக்கவில்லை என்று நேரிடையாகவோ, கோடிட்டு காட்டிவிட்டோ செல்வார்கள்.

கந்தசாமி ஐயா, "குடும்பப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?" என்று ஒரு பதிவை எழுதியிருக்கிறார். இப்பதிவை தமிழ்மணத்தில் பார்த்த நான்  ஒரு  நகைச்சுவைப் பதிவாக அல்லது மொக்கைப் பதிவாக ஏதோ அவருடைய ஸ்டைலில் எழுதியிருப்பார் என்றுதான் நான் பதிவை வாசிக்காமலே அனுமானித்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போலில்லாமல்  அவர் கருத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு பின்னூட்டங்களில் அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பலரும், ஏற்காமல் மாற்றுக்கருத்தையும் எதிர் கருத்தையும் ஒரு சிலர் முன் வைத்துள்ளார்கள். நானும் சற்று தாமதமாக என் கருத்தைப் பகிர்ந்தேன். இது சாதாரணமாக பதிவுலகில் நடப்பதுதான்.

சாதாரண பழமொழிகள்..

"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டதுபோல"  என்கிற பழமொழியை பதிவுலகில் சொல்வதுகூட "பொலிட்டிக்கல்லி இன்கரக்ட்" என்று சொல்லலாம். வாசகர்களில் ஒரு physically challenged ஆன நம் சகோதர் அல்லது சகோதரிகள் இதை வாசிக்கும்போது அவர்கள் மனது கடுமையாக பாதிக்கப் படத்தான் செய்யும். அதனால் இதுபோல் பழமொழியைக்கூட  பொதுவில் சொல்லும்போது நாம் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிற காலகட்டம் இது. It offends some of my brothers and sisters or friends. அதை நான் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோல் பழமொழிகளை தவிர்த்துவிட்டு வேறு அதற்கு ஈடான பழமொழியை சொல்ல வேண்டிய சூழல் இது. "கடவுள் இல்லை" னு நான் ஒரு பதிவெழுதினால், ஆத்திகர்கள் என் கருத்தை ஏற்காமல், மாற்றுக் கருத்தைத்தான் முன் வைப்பார்கள். எரிச்சலடைவார்கள். இதுதான் இயல்பு.

அதேபோல் "குடும்பப் பெண்கள் இப்படி வாழவேண்டும்?" என்று பெண்கள் பற்றி பொத்தாம் பொதுவாக விமர்சித்தால்.. அதையும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர்  எதிர்த்துக் கருத்துச் சொல்லத்தான் செய்வார்கள். இந்நிலை எந்தப் பதிவருக்கு வேண்டுமானாலும் வரலாம். பதிவுலகில் ஏதாவது கருத்தை சொன்னால் நீங்கள் இதுபோல் சூழலுக்கு தயாராகத்தான்  இருக்க வேண்டும். எந்தக்கருத்து நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று யாருக்கும் தெரியாது.

அதேபோல் கந்தசாமி ஐயா கருத்தை   ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திகேயன் அம்மா, கலா அவர்கள், ஒரு எதிர் கருத்தை முன் வைத்துள்ளார்கள். அதற்கு காரணம் தனிப்பட்ட முறையில் அவர்களை அப்பதிவில் சொன்ன கருத்துக்கள் பாதித்து உள்ளது.

நிற்க.. அவர்கள் நிலைமை தெரிந்து இருந்தால், அவர்களுடைய இந்த பின்னூட்டத்திற்கு கந்தசாமி ஐயா அவர் கருத்தை அனுசரித்து பதில் சொல்லியிருப்பார். ஆனால் கார்த்திக் அம்மாவை சரியாகத் தெரியாத அவர், கொஞ்சம் எதிர்வினையாக  இன்னொரு கருத்தை பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார். Sometimes we do react quickly and counter our argument or defend the point we brought up. அப்படி ஒரு சூழல்தான் இது. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.  பிறகு நிலைமை தெரிந்தவுடன் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுவிட்டார். கார்த்திக் அம்மா அதை புரிந்து கொண்டார். எல்லாம் சுமூகமாக முடிந்தது.

இந்த சின்ன தர்ம சங்கடத்தில் நாம் கற்றதென்ன?

கார்திக் அம்மா என்கிறபதிவரின் மிகப்பெரிய இழப்பு, அவர்கள் மனநிலை, அதனால் இன்று அவரிடம்  இருக்கும் அவர்களுடைய முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் என்னைப்போல் பாமரனுக்கும் தெரிய வந்துள்ளது. பதிவர்கள், வாசகர்கள் பலர் வருகிறார்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்வும் நமக்குத் தெரிவதில்லை. இப்போது கந்தசாமி ஐயாவின் பதிவால், கார்த்திக் அம்மாவின் சிந்தனைகளையும், அவர் மகன் கார்திகேயன் ஆரம்பித்த பொன்னியின் செல்வன் தளத்தை பற்றியும் நான் தெரிந்து கொண்டேன். ஒரு சில சின்ன தவறுகளால்தான் நாம் ஒரு சில பதிவர்கள் மனநிலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்கள பட்ட இன்னல்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது. அதனால் நாம் செய்யும் சிறு தவறுகளும் நாம் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொள்ள உதவுகின்றன என்று எடுத்துக் கொண்டு தொடருவோம் நம் பதிவுலகப் பயணத்தை.



20 comments:

Angel said...

//அதனால் நாம் செய்யும் சிறு தவறுகளும் நாம் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொள்ள உதவுகின்றன //


ஆமாம் வருண் ..மிக அருமையா எழுதியிருக்கீங்க .

Amudhavan said...

வருடக் கடைசியிலும் ஆரம்பத்திலும் சுயவிமரிசனம் செய்துகொள்கிறமாதிரியான பதிவுகளை நல்ல தெளிந்த சிந்தனையுடன் எழுதிவருகிறீர்கள். பொன்னியின் செல்வன் பற்றிய பதிவிலும் உங்கள் உள்பார்வை வியாபித்திருக்கிறது. மற்ற பதிவர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் மிகச்சரியானதே.

Kasthuri Rengan said...

இப்போது தான் தமிழ் இளங்கோ அவர்களின் பதிவைப் படித்தேன்...
சரி
எனது தவறுகளைப் பதிவிட்டால் பல ஜி.பிக்கள் வருமே..

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் நாங்களும் நீங்கள் சொல்லியிருக்கும் பின்னூட்டம் பதிவு பற்றி தமிழ் இளங்கோ அவர்களின் பதிவில் வாசித்தோம்.
நம்மைச் சுற்றி நடப்பவையும், நாம் அதற்கு கொடுக்கும் ரியாக்ஷனும் நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் எனப்து உண்மையே! தங்கள் கருத்து மிகவும் சரியே! நல்ல பதிவு!

Yaathoramani.blogspot.com said...

கற்றுக் கொள்கிற மன நிலையிலேயே
அனைத்துப் பதிவுகளையும் தொடர்வதால்
தங்கள் கருத்து எனக்கு முழு உடன்பாடானதே

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

2 வருடங்களாக பலமுறை கார்த்திக் அம்மாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன்... ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இன்றி தவித்துள்ளேன்... ஏனென்றால் அம்மாவின் எண்ணம் முழுவதும் கார்த்திக் தான்... இது ஒரு புறம் இருக்கட்டும்... இவர் ஒருவர் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்... இன்னும் பல பேர்கள் உள்ளார்கள் - பலவற்றை வெளியில் சொல்லாமல்... சமயம் வரும் போது பலருக்கும் தெரியும்...

இனி மேலும் பல லாபங்கள் அடைய வாழ்த்துக்கள்... புரிதலுக்கு நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு விஷயத்திலும் பாடங்களை கற்றுத்தருகிறது! அதுபோல இந்த பதிவின் மூலமும் சிலவற்றை அறிந்து கொண்டது கற்றுக்கொண்டது சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

Iniya said...

நான் இன்னும் படிக்கவில்லை இருந்தாலும் தாங்கள் முன் வைத்த நியாயங்களை வரவேற்கிறேன் புரிந்துனர்வுடன் யாரையும் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ம்..ம். யாருக்கு என்ன சூழ்நிலை நிலை என்று தெரியாமல் அபிப்பிராயம் சொல்லுவதே தப்பு என்று நினைப்பவள் நான். இதற்காக ஒரு கவிதையும் எழுதியுள்ளேன்.சரி அதை விடுங்கள். இனிய பொங்கல் வாழத்துக்கள் வருண்!
தாமதத்திற்கு மன்னிக்கவும் சூழ்நிலை அப்படி இருக்கிறது.

மகிழ்நிறை said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எழுத எனக்கு முக்கால் மணிநேரம் ரெபரன்ஸ் தேவைபட்டது வருண்!! தலையும்,புரியாம, வாலும் புரியாம...இங்கே மது சுட்டிக்காட்டிய தமிழ் இளங்கோ அண்ணா பதிவுக்கு போய், அப்புறம் கந்தசாமி சார் பதிவுக்கு போய், கார்த்திக் அம்மா, செந்தழல்......now am back:)
------
அதென்ன கார்த்திக் அம்மா கேட்ட கேள்வியின் சாரத்தையே விட்டுபுட்டு, சும்மா அவங்க சூழல் தெரியாம இப்படி பதில் சொல்லிட்டேனு இப்படி திசை திருப்பிட்டாங்களே!!!
-----
என்னமோ போங்க:((

வருண் said...

***Angelin said...

//அதனால் நாம் செய்யும் சிறு தவறுகளும் நாம் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொள்ள உதவுகின்றன //


ஆமாம் வருண் ..மிக அருமையா எழுதியிருக்கீங்க .***

வாங்க, ஏஞ்சலின்! நன்றிங்க! :)

வருண் said...

*** Amudhavan said...

வருடக் கடைசியிலும் ஆரம்பத்திலும் சுயவிமரிசனம் செய்துகொள்கிறமாதிரியான பதிவுகளை நல்ல தெளிந்த சிந்தனையுடன் எழுதிவருகிறீர்கள். பொன்னியின் செல்வன் பற்றிய பதிவிலும் உங்கள் உள்பார்வை வியாபித்திருக்கிறது. மற்ற பதிவர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் மிகச்சரியானதே***

வாங்க அமுதவன் சார். செந்தழல் ரவியின் பதிவை நான் இப்போதுதான் பார்த்தேன், சார். மேலும் அப்பதிவில் நிறைய "புனைவுகள்" இருக்கு, அது ஒரு "உண்மை கட்டுரை" அல்ல "புனைவு" என்பதை கார்த்திக் அம்மா அவர் பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தியதும் நல்லதுனு நான் நம்புகிறேன்.

வருண் said...

***Mathu S said...

இப்போது தான் தமிழ் இளங்கோ அவர்களின் பதிவைப் படித்தேன்...
சரி
எனது தவறுகளைப் பதிவிட்டால் பல ஜி.பிக்கள் வருமே.. ***

வாங்க மது!

தவறுகள் பல G B க்கள் என்றால், நீங்க கற்றுக்கொண்டதை அதைவிட பல மடங்கு GB களாக இருக்கும் மது.

நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களுக்கு பொறுப்புள்ள ஆசிரியராக இருந்து, அவர்களை கூர்ந்து கவனித்து உங்களால் ஆன உதவி செய்துகொண்டு இருப்பதால் மற்றவர்களைவிட நீங்கள் கற்பது நிச்சயம் அதிகம்தான்.

Some people look at only the bank account credit as the sole credit. People like me look at other credits they earned as well Madhu. :-)

வருண் said...

***Thulasidharan V Thillaiakathu said...

ஆம் நாங்களும் நீங்கள் சொல்லியிருக்கும் பின்னூட்டம் பதிவு பற்றி தமிழ் இளங்கோ அவர்களின் பதிவில் வாசித்தோம்.
நம்மைச் சுற்றி நடப்பவையும், நாம் அதற்கு கொடுக்கும் ரியாக்ஷனும் நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் எனப்து உண்மையே! தங்கள் கருத்து மிகவும் சரியே! நல்ல பதிவு! ***

வாங்க துளசிதரன். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

வருண் said...

Ramani S said...

***கற்றுக் கொள்கிற மன நிலையிலேயே
அனைத்துப் பதிவுகளையும் தொடர்வதால்
தங்கள் கருத்து எனக்கு முழு உடன்பாடானதே

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் ***

வாங்க ரமணி சார். தங்கள் வருகைக்கும், வாழ்த்ட்துக்கும் நன்றி. :)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

2 வருடங்களாக பலமுறை கார்த்திக் அம்மாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன்... ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இன்றி தவித்துள்ளேன்... ஏனென்றால் அம்மாவின் எண்ணம் முழுவதும் கார்த்திக் தான்... இது ஒரு புறம் இருக்கட்டும்... இவர் ஒருவர் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்... இன்னும் பல பேர்கள் உள்ளார்கள் - பலவற்றை வெளியில் சொல்லாமல்... சமயம் வரும் போது பலருக்கும் தெரியும்...

இனி மேலும் பல லாபங்கள் அடைய வாழ்த்துக்கள்... புரிதலுக்கு நன்றி...***

வாங்க தனபாலன். உண்னமைதான், ப்ல பதிவ்வர்கள் தன் சோகங்களை இறக்கி வைப்பதில்லை. அதனால் அவர்களைப் பற்றி அறியாமல் அறியாமையில்தான் நான் வாழ்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு..

நம்ம என்னதான் ஆறுதல் சொன்னாலும், கார்த்திக் அம்மாவை அவர்கள் மனதுக்கு எது ஆறுதல் தருகிறதோ அதைத்தான் நாம் அவர்களை மேற்கொள்ள சொல்லணும்னு நான் நம்புகிறேன். :)

வருண் said...

***‘தளிர்’ சுரேஷ் said...

வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு விஷயத்திலும் பாடங்களை கற்றுத்தருகிறது! அதுபோல இந்த பதிவின் மூலமும் சிலவற்றை அறிந்து கொண்டது கற்றுக்கொண்டது சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!**

வாங்க சுரேஷ். உங்க ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. :)

வருண் said...

***Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!***

வாங்க யாழ்பாவணன்! நீங்க நடத்தும் போட்டி என்னனு வந்து பார்க்கிறேன். :)

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

ezhil said...

இன்னும் அந்தப் பதிவைப் படிக்கவில்லை ஆனால் ஒவ்வொரு பதிவைப் படிக்கும் போதும் சரி பின்னூட்டங்கள் படிக்கும் போதும் எழுதும் போதும் அப்பதிவின் பின் இயங்கும் பதிவரின் மன நிலையை சமூகச் சிக்கலை யோசிக்க வேண்டியதாகிறது நமக்கு ஏற்புள்ளவற்றை பெற்றுக்கொள்வோம் மற்றவற்றில் இருக்கும் நியாயம் தெரிய காத்திருப்போம்