Friday, March 27, 2015

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனுக்கு அழைப்பு!

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனை வழக்கம்போல மறுபடியும் பதிவுலகில் காணவில்லை. இதுபோல் அவர் மறைவது இது மூனு அல்லது நாலாவது முறை! பொதுவாக இவர் தளமும் இவரோட சேர்ந்து மறைந்து போகும். அதே நிலைதான் இப்போதும்! நண்பர் இக்பால் செல்வன் நடத்திய கோடங்கித் தளமும் முடக்கப் பட்டதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் அக்கவுண்டும் வேலை செய்யவில்லை!

இக்பால் செல்வனுடன் அதிகமாக விவாதம் செய்தவன், அவருடன் அதிகம் சண்டை போட்ட ஆட்களில்  நானும் ஒருவன் னு சொல்லலாம். இருந்தாலும் இக்பால் செல்வன் மேல் ஒரு தனி தமிழன்பு உண்டு எனக்குனு உங்களுக்குத் தெரியுமா என்னனு தெரியவில்லை!
.
என்னடா இக்பாலை ஆளையே காணோமே? னு நினைத்துக் கொண்டு இருக்கையில் அனானியாக ஒரு ஆள் வந்து இக்பால் செல்வன் பற்றி மிகவும் அதிர்ச்சியான செய்தியைச் (ஒரு புரளியைப் பரப்பிக்கொண்டு) சொல்லிக் கொண்டு அலைகிறார். எப்பொழுதுமே பதிவுலகில் இக்பாலின் எதிரிகளுக்குப் பஞ்சமில்லை! அதனால் இந்த  அனானி சொல்வதையெல்லாம் நான் நம்புவதாக இல்லை.

தயவு செய்து சகோ இக்பால் செல்வன் எங்கிருந்தாலும் வந்து ஒரு பின்னூட்டம் இடவும். ஒருவேளை அவர் பதிவுலகில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துவிட்டாரென்றால்  அவருடன்  தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், தயவு செய்து  அவரை இங்கே அனுப்பி வைக்கவும்.

நன்றி, வணக்கம்! :)

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு நண்பர் விரைவில் வருவார் - உங்களைப் போல...!

Avargal Unmaigal said...

இக்பாலையும் காணவில்லை அது போல நம்பள்கியையும் காணவில்லை

saamaaniyan saam said...

வருண்...

வியாழனன்று செந்தில் குமார் அவர்களின் தளத்தின் பதிவுக்கான பின்னூட்டம் ஒன்றில், விஜய் ஆனந்த் என்பவர் வெளிட்டிருந்த செய்தி...

"விஜய் ஆனந்தவியாழன், 26 மார்ச், 2015 ’அன்று’ 10:03:00 முற்பகல் IST

இது இவ்விடம் சம்பந்தமில்லாத ஒரு தகவல், ஆனால் எங்கே இதை பதிவு செய்வது என எனக்குத் தெரியவில்லை. தமிழில் மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் (இக்பால்) செல்வன் கடந்த 2014 நவம்பர் மாதம், சாலை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். பதிவுலகில் யாராவது எழுதுவார்களா என பார்த்தேன். யாரும் எழுதவில்லை. அவருடைய கல்லூரி தோழர் ஒருவர் எனக்கும் நண்பர் என்பதால், இந்த தகவலை நானும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். செல்வா என்ற பெயரில் கவிதைகள் எழுதி இருக்கின்றாராம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சி, கோவை நகரில் கல்வி கற்று சிறிது காலம் வெளிநாட்டில் இருந்து விட்டு, சென்னையில் பணியாற்றி இருக்கின்றார். அவரது வயது 28 மட்டுமே. இந்த தகவலை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். நன்றிகள் ! "

(இக்பால்) செல்வன் நான் அறிந்திராத பதிவர் என்பதால் உடனடியாக இக்பால் செல்வன் பற்றி இணையத்தில் தேடினேன்... எந்த தகவலும் இல்லை ! விஜய் ஆன்ந்தை தொடர்பு கொள்ளும் வழியும் இல்லை. நேற்று ( வெள்ளிக்கிழமை ) நண்பர் காரிகன் தன் தளத்தில் இந்த செய்தியை பின்னூட்டமாக பதிந்து இக்பால் செல்வன் மத எதிர்ப்பு பதிவுகள் எழுதியவர் என குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த தகவலுடன் மீன்டும் தேடிய போது இவரின் தளம் கோடங்கி என தெரிய வந்தது. ஆனால் அந்த தளம் செயல்பாட்டில் இல்லை....


வருண்...

இக்பால் செல்வனையோ அவரின் தளத்தையோ நான் அறிந்தவன் இல்லை... ஆனாலும் உங்களின் பதிவே உண்மையாகி, அவர் மீன்டும் வரவும், உங்களின் ஆரோக்யமான சண்டை தொடரவும் வேண்டுகிறேன் !

நன்றி
சாமானியன்

காரிகன் said...

வருண்,

இக்பால் செல்வன் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாக ஒரு நண்பர் கூட்டஞ்சோறு தளத்தில் எழுதியிருந்தார். நானும் அதை என் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். இது வெறும் புரளியாக இருந்தால் மகிழ்ச்சியே.

வருண் said...

காரிகன் மற்றும் சாம்,

விஜய் ஆனந்த் என்பவர் யாராக வேன்டுமானால் இருக்கலாம். இக்பாலை வெறுக்கும் பதிவுலக விஷமி யாகக் கூட இருக்கலாம். அவர் ஒரு அனானிதான். அவர் சொல்வதை நாம் எதற்கு நம்பணும். This guy comes from nowhere. Nobody knows who this Vijay Anand anony is. Why do we have to believe his story?? I strongly believe that news is fake and that guy Vijay anand is also a fake! Let us see!

S.P. Senthil Kumar said...

வணக்கம் வருண் அவர்களே,

என்னுடைய தளத்தில்தான் விஜய் ஆனந்த் என்ற நண்பர் இக்பால் செல்வன் பற்றிய தகவலை தெரிவித்திருந்தார். நீங்களும் பெயரில்லா என்பவரும் காரசாரமாக விவாதம் நடத்திகொண்ட பதிவில்தான் அவரும் பின்னூட்டம் இட்டிருந்தார்.

http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_25.html

எனக்கு அவரப் பற்றி தெரியாது. ஆனாலும் பதிவுலகில் அவரைப் பற்றி பிரமாதமாக சொல்லும் போது அந்த தகவல் பொய்யாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னை போன்ற புதியவர்களுக்காக இக்பால் செல்வனை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதலாமே.

வருண் said...

வாங்க செந்தில்! உங்க தளத்தில் வந்த பின்னூட்டத்தின் விளைவே இப்பதிவு! முதலில் இக்பால் வந்து நிக்கிறாரானு பார்ப்போம். :)

வலிப்போக்கன் - said...

தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், அவரை வருண்க்காகாவது இங்கே அனுப்பி வைக்கவும்.

Iniya said...

அவர் நலமுடன் விரைவில் திரும்ப வரவேண்டும் என்று வேண்டுகிறேன்.வருணுக் காக்கவேண்டும் வரவேண்டும்

Amudhavan said...

காரிகன் தளத்தில் அப்படி ஒரு செய்தி பார்த்ததும் மிகவே வருந்தி நானும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். உங்கள் தளம் பார்த்ததும் நம்பிக்கைக் கீற்று மெல்ல எட்டிப்பார்க்கிறது. இப்படியெல்லாம் அசிங்கமாக இணையத்தில் செய்கிறவர்கள், நடந்துகொள்பவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி ஒருபுறமிருக்க இது அவர்களுடைய வேலையாயிருந்தால் நிச்சயம் இந்த முறை அத்தகையவர்களை மன்னித்துவிடலாம். நீங்கள் சொல்லியுள்ளபடி இக்பால் செல்வன் வரவேண்டும்.

வருண் said...

*** வலிப்போக்கன் - said...

தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், அவரை வருண்க்காகாவது இங்கே அனுப்பி வைக்கவும்.***
இதே போல் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்..

***கோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா? (ஆகஸ்ட் 2013 ல எழுதிய பதிவு)***

அப்போது திரும்பி வந்தார். வந்து, தன் தளத்தை மூடிவிட்டதாகவும் தன்னை ட்விட்டர்ல தொடர்புகொள்ளலாம் என்றார். பிறகு இன்னொரு தளம் ஆரம்பித்தார். இது ஒரு தொடர் கதை..


வருண் said...

***Iniya said...

அவர் நலமுடன் விரைவில் திரும்ப வரவேண்டும் என்று வேண்டுகிறேன்.வருணுக் காக்கவேண்டும் வரவேண்டும் ***

வருவார்னு நம்புவோம், இனியா! பார்க்கலாம். :)

வருண் said...

***Amudhavan said...

காரிகன் தளத்தில் அப்படி ஒரு செய்தி பார்த்ததும் மிகவே வருந்தி நானும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். உங்கள் தளம் பார்த்ததும் நம்பிக்கைக் கீற்று மெல்ல எட்டிப்பார்க்கிறது. இப்படியெல்லாம் அசிங்கமாக இணையத்தில் செய்கிறவர்கள், நடந்துகொள்பவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி ஒருபுறமிருக்க இது அவர்களுடைய வேலையாயிருந்தால் நிச்சயம் இந்த முறை அத்தகையவர்களை மன்னித்துவிடலாம். நீங்கள் சொல்லியுள்ளபடி இக்பால் செல்வன் வரவேண்டும்.***

இதுமாதிரி ஓப்பன் ஐ டி ல வர்ரவங்களை எல்லாம் எப்படி சார் நம்புறது?? ஏகப்பட்ட சைக்கோக்கள் திரிகிறார்கள். அதுவும் நம்ம ஒரு விவாகாரமான ஆளாக இருந்தால் பதிவுலகில் நம்மை கொன்னு மாலை போட்டு இறுதிச் சடங்கெல்லாம் நடத்தி முடிச்சுடுவானுக. யாராவது நம்பிக்கையானவர்கள் சொன்னாலேயொழிய இதையெல்லாம் நம்ப முடியாது சார். யார் இந்த விஜய் ஆனந்த்? திடீர்னு இவருக்கு என்ன இந்த செய்தியைச் சொல்லணும்னு அவசியம்? இவர் சொல்வதையெல்லாம் நம்பணும்னா இவர் யாருனாவது நமக்குத் தெரியணும்.இவரால் ஒரு ஒரிஜினல் ஐடில வந்து இ-மெயில் ஐ டியெல்லாம் கொடுக்க முடியாதா? நண்பரோட நண்பர் சொன்னாருனு சொல்றார்..அந்த நண்பர் பேரைக்கூடச் சொல்லல. எனக்கென்னவோ இந்தாளுமேலே, மேலும் அவர் சொல்லும் "கதை"யில் நம்பிக்கை இல்லை சார். பார்க்கலாம்.:)

பரிவை சே.குமார் said...

இக்பால் செல்வன் நான் அறிந்திராதவர்தான் என்றாலும் அவர் எங்கிருந்தாலும் இங்கு வந்து நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமென மனசு தவிக்கிறது...

Pararajasingham Balakumar said...

இக்பால் செல்வன் திடீரென காணாமல் போய்விடவில்லை.
தமிழ் மணத்தில் வெளியாகும் பாலியல் சம்பந்தமான மற்றும் சோதிட மூடநம்பிக்கைகள் சம்பந்தமான பதிவுகளை தமிழ் மணம் வெளியிடுவதை கண்டித்து வந்தவர் கடந்த வருடம் நடுப்பகுதியில்
இவ்வாறான பதிவுகளை வெளியிடும் தமிழ் மணத்தை பகிஷ்கரிக்கப்போவாதாகவும் , இனி மேல் பதிவுகலை வெளியிடுவதில்லை என்றும் கோடங்கி வலை தளத்தில் அறிவித்திருந்தார் .
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அதற்கு பின் அவரை வலை தளங்களில் பார்க்க முடியவில்லை . கோடங்கி வலைதளமும் முடங்கி போயிருந்தது.
எனவே அவர்நலமாகத்தான் இருக்கிறார் என நம்புகிறேன் .
வலைதளங்களிலிருந்தும் , பதிவுலத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு மறைந்திருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாமென நினைக்கிறேன்.

வருண் said...

***பரிவை சே.குமார் said...

இக்பால் செல்வன் நான் அறிந்திராதவர்தான் என்றாலும் அவர் எங்கிருந்தாலும் இங்கு வந்து நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமென மனசு தவிக்கிறது...***

வாங்க குமார்.:)

அவர் தளம் காணாமல்ப் போவது இது 4 வது முறை என்பதாலும், அவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று ஒருவருமே இல்லை என்பதாலும், அவர் ஒரு மாதிரி புதிராகவேதான் வலையுலகில் இருந்தார்னு சொல்லணும். அவருக்கு என்ன பிரச்சினையோ, சரி, இங்கிருந்தாலும் வாழ்க! :)

வருண் said...

***Pararajasingham Balakumar said...

இக்பால் செல்வன் திடீரென காணாமல் போய்விடவில்லை.
தமிழ் மணத்தில் வெளியாகும் பாலியல் சம்பந்தமான மற்றும் சோதிட மூடநம்பிக்கைகள் சம்பந்தமான பதிவுகளை தமிழ் மணம் வெளியிடுவதை கண்டித்து வந்தவர் கடந்த வருடம் நடுப்பகுதியில்
இவ்வாறான பதிவுகளை வெளியிடும் தமிழ் மணத்தை பகிஷ்கரிக்கப்போவாதாகவும் , இனி மேல் பதிவுகலை வெளியிடுவதில்லை என்றும் கோடங்கி வலை தளத்தில் அறிவித்திருந்தார் .
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அதற்கு பின் அவரை வலை தளங்களில் பார்க்க முடியவில்லை . கோடங்கி வலைதளமும் முடங்கி போயிருந்தது.
எனவே அவர்நலமாகத்தான் இருக்கிறார் என நம்புகிறேன் .
வலைதளங்களிலிருந்தும் , பதிவுலத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு மறைந்திருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாமென நினைக்கிறேன்.***

இக்பால் முதலில் இஸ்லாமியர்களை விமர்சிச்சு பதிவெழுதினார். பின்னால் ஈழத்தமிழர்களை விமர்சிச்சார். மேலும் அவர் ஒரு நாத்திகர். இதனால் அவருக்கு பலதரப்பட்ட எதிராலிகள் உண்டு. இருந்தாலும் நாகரீகமாகவும், பொறுப்புடனும்தான் தன் கருத்தைச் சொல்லுவார். He never revealed any kind of personal identity ever for some reason. :)

Angelin said...

அந்த தகவல் புரளியாகவே போகட்டும்னு இறைவனை வேண்டுவோம் ..அவர் ப்ரொபைலில் மைக்ரோ பயாலஜி /பயோ டெக் எதோ ஒன்றை ஆரம்ப நாட்களில் பார்த்த நினைவு ...மேலும் அவர் canada வில் இருந்தார்நும் நினைக்கிறேன் .
.face book இல் கூட யாரும் அவருடன் தொடர்பில் இல்லையா ..

வருண் said...

வாங்க ஏஞ்சலின்! இக்பால் செல்வன் பெயரிலிருந்து அவர் நடந்துகொண்ட எல்லாமே எனக்குப் புதிராகத்தான் இருந்ததுனு சொல்லணும்ங்க. அவரிடம் விவாதங்களில் பலவிதமான கேள்விகள் நான் கேட்டு இருக்கேன். அதாவது அவர் கனடாவிலிருந்ததைப் பற்றியும், அவர் பெயர்க் காரணம் பற்றியும். அவர் அதெற்கெல்லாம் பதில் சொல்லுவதை கவனமாகத் தவிர்த்தார். எனக்குத் தெரிய அவர் யாருடனும் பர்சனல் ஐடெண்டிடி ஷேர் பண்ணவில்லை! அதான் இன்று இக்குழப்பம். :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வருண்! நீங்கள் சொல்வது போல இவை வதந்திகள் என்றுதான் நினைக்கிறேன்.
வலையுலகில் காணாமல் போனவர்கள் பட்டியலில் வவ்வாலும் இருக்கிறார்.

வருண் said...

புதுசா ஒரு இக்பால் செல்வன் வந்து இருக்காரு!!! :)

http://iqbal-selvan.blogspot.com/2015/04/blog-post_22.html

Anonymous said...

கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் பாடை கட்டி பால் ஊற்றி கருமாதி பண்ணி சிலை வைத்து மாலை போட்டு, ஏண்டா மாலை போட்டே அவருக்குத் தான் கடவுள் நம்பிக்கை இல்லை என கல்லால் எறிந்து போற வற காக்கா எல்லாம் அச் சிலையில் எச்சம் போட பண்ணி வேடிக்கைப் பார்க்கும் உலகம்.. ஷப்பா ...

வருண் said...

***இக்பால் செல்வன் said...

கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் பாடை கட்டி பால் ஊற்றி கருமாதி பண்ணி சிலை வைத்து மாலை போட்டு, ஏண்டா மாலை போட்டே அவருக்குத் தான் கடவுள் நம்பிக்கை இல்லை என கல்லால் எறிந்து போற வற காக்கா எல்லாம் அச் சிலையில் எச்சம் போட பண்ணி வேடிக்கைப் பார்க்கும் உலகம்.. ஷப்பா ... ***

வாங்க, இக்பால்!

பதிவுலகம் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கையே அது அல்ல! என்னை வைத்தே உங்க "தற்காலிக ப்ரேக்கை" புரிந்துகொண்டு பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். "எங்கே இவரை ஆளக் காணோமே?" என்று மனப்பதிவில் கேட்டுக்கொண்டு..

பதிவுலகம் பற்றியும், இணையம் பற்றியும் பலருக்குப் புரிவதில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்பதுபோல்தான் யார் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறார்கள். நீங்கள் வரும் வரையில் எனக்கு "பைத்தியக்காரன்" பட்டம் கொடுத்திருந்தார்கள். அதை தற்காலிய பட்டம் ஆக்கிவிட்டது உங்கள் பின்னூட்டம்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி, இக்பால்! :)

S.P. Senthil Kumar said...

இவர்தான் அந்த உண்மையான இக்பால் செல்வனா அல்லது அதுவும் போலி ஐடி-யா? இக்பால் செல்வன் என்று ஒரு புதிய ப்ளாக் இருக்கிறதே அதுவும் ஒரிஜினலா அல்லது அவர் பெயரில் தோன்றிய போலியா? அவர் இப்படித்தான் எழுதுவார..!

விவரமாக சொல்லுங்கள் வருண் ! அவர் எழுத்து உங்களால்தான் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் மீண்டும் ஒரு முறை போலிகளிடம் ஏமாறக்கூடாது.

வருண் said...

*** S.P. Senthil Kumar said...

இவர்தான் அந்த உண்மையான இக்பால் செல்வனா அல்லது அதுவும் போலி ஐடி-யா? இக்பால் செல்வன் என்று ஒரு புதிய ப்ளாக் இருக்கிறதே அதுவும் ஒரிஜினலா அல்லது அவர் பெயரில் தோன்றிய போலியா? அவர் இப்படித்தான் எழுதுவார..!

விவரமாக சொல்லுங்கள் வருண் ! அவர் எழுத்து உங்களால்தான் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் மீண்டும் ஒரு முறை போலிகளிடம் ஏமாறக்கூடாது.***

இவர்தான் இக்பால் செல்வன் என்கிற பழைய பதிவர்ங்க.

அவர் பதிவுகள் எல்லாம் தரமானதாகத்தான் இருக்கும். வாசிச்சுப் பாருங்க! :)