கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனை வழக்கம்போல மறுபடியும் பதிவுலகில் காணவில்லை. இதுபோல் அவர் மறைவது இது மூனு அல்லது நாலாவது முறை! பொதுவாக இவர் தளமும் இவரோட சேர்ந்து மறைந்து போகும். அதே நிலைதான் இப்போதும்! நண்பர் இக்பால் செல்வன் நடத்திய கோடங்கித் தளமும் முடக்கப் பட்டதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் அக்கவுண்டும் வேலை செய்யவில்லை!
இக்பால் செல்வனுடன் அதிகமாக விவாதம் செய்தவன், அவருடன் அதிகம் சண்டை போட்ட ஆட்களில் நானும் ஒருவன் னு சொல்லலாம். இருந்தாலும் இக்பால் செல்வன் மேல் ஒரு தனி தமிழன்பு உண்டு எனக்குனு உங்களுக்குத் தெரியுமா என்னனு தெரியவில்லை!
.
என்னடா இக்பாலை ஆளையே காணோமே? னு நினைத்துக் கொண்டு இருக்கையில் அனானியாக ஒரு ஆள் வந்து இக்பால் செல்வன் பற்றி மிகவும் அதிர்ச்சியான செய்தியைச் (ஒரு புரளியைப் பரப்பிக்கொண்டு) சொல்லிக் கொண்டு அலைகிறார். எப்பொழுதுமே பதிவுலகில் இக்பாலின் எதிரிகளுக்குப் பஞ்சமில்லை! அதனால் இந்த அனானி சொல்வதையெல்லாம் நான் நம்புவதாக இல்லை.
தயவு செய்து சகோ இக்பால் செல்வன் எங்கிருந்தாலும் வந்து ஒரு பின்னூட்டம் இடவும். ஒருவேளை அவர் பதிவுலகில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துவிட்டாரென்றால் அவருடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், தயவு செய்து அவரை இங்கே அனுப்பி வைக்கவும்.
நன்றி, வணக்கம்! :)