Showing posts with label இக்பால் செல்வன். Show all posts
Showing posts with label இக்பால் செல்வன். Show all posts

Friday, March 27, 2015

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனுக்கு அழைப்பு!

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனை வழக்கம்போல மறுபடியும் பதிவுலகில் காணவில்லை. இதுபோல் அவர் மறைவது இது மூனு அல்லது நாலாவது முறை! பொதுவாக இவர் தளமும் இவரோட சேர்ந்து மறைந்து போகும். அதே நிலைதான் இப்போதும்! நண்பர் இக்பால் செல்வன் நடத்திய கோடங்கித் தளமும் முடக்கப் பட்டதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் அக்கவுண்டும் வேலை செய்யவில்லை!

இக்பால் செல்வனுடன் அதிகமாக விவாதம் செய்தவன், அவருடன் அதிகம் சண்டை போட்ட ஆட்களில்  நானும் ஒருவன் னு சொல்லலாம். இருந்தாலும் இக்பால் செல்வன் மேல் ஒரு தனி தமிழன்பு உண்டு எனக்குனு உங்களுக்குத் தெரியுமா என்னனு தெரியவில்லை!
.
என்னடா இக்பாலை ஆளையே காணோமே? னு நினைத்துக் கொண்டு இருக்கையில் அனானியாக ஒரு ஆள் வந்து இக்பால் செல்வன் பற்றி மிகவும் அதிர்ச்சியான செய்தியைச் (ஒரு புரளியைப் பரப்பிக்கொண்டு) சொல்லிக் கொண்டு அலைகிறார். எப்பொழுதுமே பதிவுலகில் இக்பாலின் எதிரிகளுக்குப் பஞ்சமில்லை! அதனால் இந்த  அனானி சொல்வதையெல்லாம் நான் நம்புவதாக இல்லை.

தயவு செய்து சகோ இக்பால் செல்வன் எங்கிருந்தாலும் வந்து ஒரு பின்னூட்டம் இடவும். ஒருவேளை அவர் பதிவுலகில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துவிட்டாரென்றால்  அவருடன்  தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், தயவு செய்து  அவரை இங்கே அனுப்பி வைக்கவும்.

நன்றி, வணக்கம்! :)

Thursday, August 15, 2013

கோடங்கி தளம் இக்பால் செல்வன் மறைந்துவிட்டாரா?

இக்பால் செல்வன் என்கிற பதிவர் ஒரு வலைதளம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருந்தார். கனடாவிலிருந்து எழுதுகிறேன் என்பார். சென்னைதான் தன் சொந்த ஊர் என்பார். இவர் ஒரு நாத்திகர். இஸ்லாமியர் அல்ல! இஸ்லாம் மேல் உள்ள காதலால் "இக்பால்" ஆனேன் என்றார். திடீர்னு டொரொண்டோவில் ஃபெட்னா நடந்த சமயத்திலிருந்து இவர் பதிவுலகில் இருந்து மறைந்துவிட்டார் ! சரி, அவர் மறைந்தார் பரவாயில்லை,  அவர் தளமும் மறைந்துவிட்டது!!

என்ன நடக்கிது இங்கே???

When you go to  http://www.kodangi.com/

It says this DOMAIN is FOR SALE? Is this some kind of business he is doing???

இவர் வந்த புதிதில் ஏற்கனவே இதேபோல் ஒரு தளம் (கோணங்கியோ என்னவோ? )  நடத்தியதாகவும், அதை யாரோ முடக்கிவிட்டாதாகவும், புதிதாக இந்த "கோடங்கி" ஆரம்பித்துவிட்டதாகச்  சொல்லிக்கொண்டு இருந்தார்.
 இவருக்கு மூத்த பதிவர் தருமி மொதல்க்கொண்டு பல நாத்திக நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் பர்சனலாகத் தெரிந்தும் இருக்கலாம்.

என்ன ப்பா நடக்குது? திடீர்னு ஒருத்தர் வர்ராரு. ஒரு நாளைக்கு 2 பதிவு எழுதுறாரு. பதிவுலகில் பல நண்பர்களை சந்திக்கிறார், நட்பு பாராட்டுகிறார். திடீர்னு இருந்த சுவடே தெரியாமல்  மறைந்துவிட்டார். அதைவிட மர்மம் என்னனா அவரோட தளத்தையும் காணவே காணோம்!!! அதைவிடக் கொடுமை என்னனா என்னைத் தவிர யாருக்குமே அப்படி ஒரு ஆள் இருந்தாரா என்னனு ஞாபகம் இருக்குமா என்னனு தெரியவில்லை!

கோடங்கி தளம் பற்றி எனக்கு ஏதாவது விபரம் சொல்லுங்க.

நம்ம நண்பர், இக்பால் செல்வன் என்ன ஆனாரோ? உயிரோடதான் இருக்காரா? என்கிற கவலையில் நான் வாடுகிறேன். தயவு செய்து இக்பால் செல்வனுடைய நெருங்கிய  நண்பர்கள் எனக்கு ஆறுதல் தரும் வகையில் நல்ல பதில்கள் ரெண்டைச் சொல்லவும்!