Friday, June 19, 2015

பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே!

ஊரைப்பத்தி விமர்சிக்க முன்னாலே வீட்டைப் பார்ப்போம் எங்க வீட்டில், சொந்தத்தில்,  கல்யாணப்பட்டுப் புடவைனு எடுக்கும்போது என்ன செய்கிறார்கள்னு சொல்லிடுறேன். இப்போலாம் 30,000, 50,000 ரூபாய்னு கொடுத்து ஒரிஜினல் பட்டு எடுக்கிறதாத்தான் வாட்ஸப் முகநூலிலெல்லாம் எழுதுறாங்க. ஆனால் இந்தப் பட்டுப்புடவை எத்தனை பட்டுப் பூச்சிக்களை கொன்னு தயாரிக்கப் பட்டதுனு தெரிந்ந்தால் அதுக்கு ஒரு பைசா கொடுக்கக்கூட மனம் வராது. அறியாமை! அறியாமை! வேறென்னத்தைச் சொல்ல?

ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 10 ஆயிரம் பட்டுப்பூச்சிக் குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல்  கொல்கிறாங்களாம்ப்பா!

வாழு, வாழ விடு!  என்பது மனிதர்கள் பேசும் வியாக்யாணம்.  நீங்க கவனிச்சுப் பார்த்தால்  மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும்  வாழ விடுவதில்லை!

மனிதனைப் பொருத்தவரையில் உலகில் வாழும் மற்ற உயிர்கள் எல்லாம் நாசமாகப் போகணும்! இவனுக மட்டும் வாழணும்!  இவனுகள் சந்தோஷமாக வாழ யாரை வேணா,  எந்த உயிரை வேணா கொல்லலாம். யாரை வேணா காவு கொடுக்கலாம். அதில் தப்பே இல்லை!! இதுதான் மனிதனுடைய வாழ்க்கைத் தத்துவம்!

இன்னும் கொஞ்சம் யோசிச்சா மனிதனைவிட கேவலமான ஒரு ஜன்மம் உலகில் இல்லை என்பது தெளிவுபடும்! இதில் மானிடனாகப் பிறப்பது அரிது..மனிதம் மண்ணாங்கட்டினு அப்பப்போ இவனுகளுக்குள்ளேயே தத்துவம் பேசிக்கொண்டு இவனுகளையே ஏமாத்திக்குவானுக! ஒரு பூச்சி, புழுவைக்கூட நிம்மதியாக வாழவிடாமல் தன் தேவைக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுவார்கள், துன்புறுத்துவார்கள்! இவர்கள்தான் மனிதர்கள்!  இவனுக ஒரு பட்டுப்பூச்சியைக்கூட வாழ விடமாட்டானுகன்னா வேற யாரை வாழ விடுவானுக?

கடவுளைக்கூட மனிதன்  தன் வசதிக்குத்தான் படைச்சிக் கொண்டு வந்து. விலங்குகளை கொல்வதிலோ, அல்லது பலி கொடுப்பதில் எதுவும் பாவம் இல்லைனு கடவுளையே சொல்ல வச்சிடுவாணுக! மற்ற உயிர்களை தன்னைப்போல் மதிக்காமல் வாழும் மனிதனையும் அவன் சிந்தனைகளையும் அவன் நியாயப்படுத்தலையும் கவனித்துப் பார்த்தாலே அவன் படைத்த "கடவுள்" அவனுக்காக அவனே உருவாக்கிய ஒரு கற்பனை  என்பதையும் அழகாகப் புரிந்து கொள்ளலாம்!

தீபிகா! பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே! இருந்தாலும் அந்த "ஸ்மைல்" அடேங்கப்பா!8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகளை புட்டு புட்டு வைச்சிட்டீங்க...

ஸ்மைல் மயக்கி விட்டதே... ஹிஹி..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ விடுவதில்லை! //
உண்மை உண்மை. இந்த உலகம் மனிதனுக்காக மட்டும்தான் என்ற சுயநலம்

KILLERGEE Devakottai said...


//மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ விடுவதில்லை//
மனிதன் மனிதனையும் வாழ விடுவதில்லையே நண்பரே.. சிந்திக்க வேண்டிய விடயமே... அழகாக போட்டு உடைத்தீர்கள்.
குறிப்பு – இதில் தெய்வங்களுக்கு சாத்துவதும் பட்டுப்புடவையே...

Angelin said...

உண்மை ! விலை உயர்ந்த புடவை தான் வேணும்னா Antique Zardosi and Resham Work ஸ்டோன் வொர்க் புடவைகள் தான் லேட்டஸ்டா பிரபலம்னு கேள்விப்பட்டேன் ..30,000 ரூபாய்க்கு கூட இருக்காம் !
பட்டுபுடவைக்கு பதில் இதை கட்டலாம் ..

Yarlpavanan Kasirajalingam said...

நம்ம மனித ஆள்கள்
தமக்கு ஏற்றால் போல
கிடைக்காட்டி
தமக்கு ஏற்றால் போல ஆக்கி
கடவுளையே
தோற்கடிப்பாங்க போல

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான்..இப்பொழுது எடுப்பதில்லை, ஆனால் ஏற்கெனவே இருப்பதை என்ன செய்வது.. :)(புடவை கட்டுவதே அரிதாகிப் போனது வேறு விசயம்)

உங்களுக்கு தீபிகா பிடிக்கும் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன் ..shhhhhhhhhh :)

ஆரூர் பாஸ்கர் said...

வருண் ,

வரி வரியா படிச்சு
கடைசியில் அந்த போட்டோவ பார்த்ததும்
முன்ன படிச்ச எல்லாம் மறந்துட்டு
போங்க... :)

பழமைபேசி said...

வந்தமா, படம் பார்த்தமான்னு போகணும்; போறோம்!! இஃகிஃகி!!