என்ன செய்றது..எதுவுமே எழுத "மூட்" வர மாட்டேன்கிறது. பொதுவாக என்னுடைய பதிவுகள் எல்லாம் (காதல் கதைகள்கூட) இண்ஸ்டன்டேனியஸாக வரும் சிந்தனைகள்தான். நான் பதிவெழுதனு உக்காந்து யோசிச்சு எழுத்துப்பிழையில்லாமல், கருத்துப்பிழை இல்லாமல் எழுதுவதில்லை! பதிவெழுத ரொம்ப நேரமே எனக்கு எடுக்காது! அப்படியே ஒரு பதிவு ரொம்ப நேரம் எடுத்தால் அது "ட்ராஃப்ட்"லயே வாழ்ந்து செத்துடும்! சரக்குத் தீர்ந்ததாலேயோ என்னவோ இப்போ எல்லாம் அதுபோல் பதிவழுத முடியவில்லை. எதையாவது எழுதுவோமா?னு கஷ்டப்பட்டு எழுத ஆரம்பித்தால்..
சமீபத்தில் பதிவுலகம் எத்தனை அமைதியா இருக்கு. பதிவர்கள் அனைவரும் எவ்வளவு நிம்மதியா இருக்காங்க. நிம்மதியாக இருக்கும் பதிவுலகில் எதுக்குப் போயி கஷ்டப்பட்டு பதிவெழுதி எல்லாரையும் கஷ்டப்படுத்த? னு ஒரு ஞானோதயம் வருது..
இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)
மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்!
*****************
அது யாரு ஜெஸிக்கானு ஒரு பொண்ணு! அதான்ப்பா இந்த சூப்பர் சிங்கர்ல வந்த ஜெஸிக்கா என்கிற சிறுமிதான்.
சூப்பர் சிங்கரில் பாடிக் கிடைத்த மரியாதை மதிப்பை எல்லாம் இந்த கனடா வில் நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் கமர்சியலில் வந்து நாசமாக்கிட்டார்ப்பா இந்தச் சிறுமி!
"நான் உங்க ஜெஸிக்கா பேசுறேன். நீங்கள் லெல்லாரும் மறக்காமல் இந்த் ஷோக்கு வந்து..உங்க ஆதரவு தருவீங்கணு நான் நம்றேன்..அது ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். ஐ அம் வெர்ரி வெர்ரி எக்சைட்டெட் டு சி யு ஆல்"
உங்களுக்கெல்லாம் என்னதான் வேணும், ஜெஸிக்கா? Beats me!
Seriously you are getting on in my nerve when I see you in that Vijay TV commercial for the forthcoming super singer event in Canada!
***************
"அண்ணே! எனக்கு ஒண்ணு புரியல.."
"ஒண்ணே ஒண்ணுதானா? எனக்கெல்லாம் புரிகிறதே ஒண்ணு ரெண்டுதான்"
"ஏன்ண்ணே நீங்க வேற?"
"சரி, என்னனு சொல்லு! நெஜம்மாவே புரியலையா? இல்லைனா புரியலைனு சொல்லி என் வாயைப் புடுங்குறியா?"
"நெஜம்மாவே புரியலைண்ணே"
"சரி சொல்லு!"
"யாரென்பதெல்லாம் முக்கியம் இல்லை! இவர் ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதர். இவருக்கு நம்ம ரசினிகாந்த்னா சுத்தமாகப் பிடிக்காது. முள்ளும் மலரும் காளி ரஜினி, 16 வயதினிலே பரட்டை ரஜினியைக்கூட இவரால பாராட்ட முடியாதுனு பார்த்துக்கோங்க! ரஜினி பொறந்தநாள், ரஜினி படம் ரிலீஸ்னு ஆச்சுனா புலம்ப ஆரம்பிசுடுவாரு! தூங்க மாட்டாரு.."
"இதெல்லாம் ஒரு மேட்டரா? ஒரு சிலருக்கு, இல்லை இல்லை பலருக்கு ஒரு சில நடிகரைக் கண்டாலே பிடிக்காது. இவருக்கு ரஜினி பிடிக்காதுபோல! இதெல்லாம் பெரிய மேட்டர் இல்லை! இவர் என்ன கமல் சிவாஜி ரசிகரா?"
"தெரியலண்ணே! ஆனால் இவர் ஒரு அந்தக்காலத்து எம் சி யாரு விசிறினு அவரே பெருமையா சொல்லிக்கிறாரு! அனேகமாக கமல் விசிறினுதான் நினைக்கிறேன்"
எம் சி ஆர் விசிறிகள் எல்லாம் உயர்தரமானவர்களாம்ப்பா! |
ரஜினி விசிறி எல்லாம் தரக்குறைவான ஆட்கள்.. அப்படித்தானே? |
"எம் ஜி ஆர்.. கமல்..இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை? ரெண்டு பேருக்கு வெள்ளைத்தோல்.. மூனு மனைவிகள்..இதுபோல் ஒற்றுமையைத் தவிர வேறென்ன இருக்கு? நடிப்புனு வந்துவிட்டால் சம்மந்தா சம்மந்தம் இல்லாத ஆட்கள், எம் ஜி ஆரும், கமலும்!
ரஜினிக்காவது முள்ளும் மலரும், 16 வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி காயத்ரினு ரஜினி நல்ல நடிகனும்கூட னு சொல்லிக்க ஒரு நாலு படம் இருக்கும். எம் ஜி ஆர் அதுபோல் எந்தவித குணச்சித்திர வேடங்களில் நடிச்சதே இல்லை! எம் ஜி ஆர் எப்போதுமே ஒரு ஸ்டார்தான். "ஆக்டர்" கெடையாது! உடனே மதுரை வீரனில் ஒரு கையில்லமல ஒரு காலில்லாமல் "கடைசியில்" நடிச்சாரு சொல்லிடாதீங்கப்பா எம் சி ஆர் விசிறிகள்!
முள்ளும் மலரும் |
முள்ளும் மலரும் 2 |
முள்ளும் மலரும் 3 |
புவனா ஒரு கேள்விக்குறி |
எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்? அதென்னனு தெரியலை ஒரு சில பெரிய மனிதர்கள் இப்படித்தான். இவங்க எம் சி யார் ரசிகரா இருந்தது இந்த நாட்டுக்கே பெருமை. இன்னைக்கு ஒருத்தன் ரஜினி ரசிகனாகவோ இல்லை விஜய் ரசிகனாகவோ இருந்தால், அது கேவலம் என்பதுபோல் அபத்தமான ஒரு நியாயம் பேசுறது.. தான் அன்றைக்கு இருந்தது போலதான் இன்று இவர்கள் இருக்காங்கனு சகிச்சுக்க முடியாத சிறுபிள்ளைத்தனம் இவர்களிடம் இருக்கும். எனக்கும்தான் இவங்க தர்க்கம் புரியலை! "
"என்னண்ணே முடிவா சொல்றீங்க?.."
"இந்தப் பெரிய மனிதர்கள் எப்படினா தனக்கென்று (எம் சி ஆர் விசிறி) ஒரு தராசு! மற்றவர்களுக்கு ( ரஜினி, விஜய் விசிறிகள்) ஒரு தராசுனு வச்சுக்குவாங்க. வயதுனு பார்த்தால் பெரிய மனிதர்கள்தான். அதனாலென்ன? அவர்கள் பேசும் நியாயம் எல்லாம் அநியாயமாகத்தான் நமக்குத் தெரியும். பாவம் பெரிய மனுஷன் போறான்னு சிறுவர்கள் நம்மதான் சகிச்சுட்டுப் போகணும்!"
அப்புறம் அந்தக்காலத்து எம் ஜி ஆர் விசிறிகள் இன்னைக்கு ரஜினியையும் ரஜினி விசிறிகளையும் மட்டமாகப் பார்க்கும் பெரிய மனுஷர்களா!!
இந்த நாதாரி வருண் என்னைத்தான் திட்டுறான்னு மண்டை காய்ந்து போயி இவனைப் "பழி" வாங்க நினைக்காமல் உக்காந்து ஒரு நிமிடம் யோசிச்சுப் பாருங்க! சாகிறதுக்குள்ளயாவது திருந்தப் பாருங்க! Your stand is unjustifiable! Better understand that!
****************
அமெரிக்காவில் போன மாதம் ஓரினச்சேரக்கையில் உள்ளவங்க எந்த மாநிலத்தை சேர்ந்தவங்களும் திருமணம் செய்துக்கலாம்னு சுப்ரீம் கோர்ட் முடிவு செய்து தீர்ப்பளித்துவிட்டது. அதாவது ஃபெடடெரல் கவன்மண்ட்டே அறிவித்து விட்டது! இனிமேல் இதுபோல் திருமணங்கள் ஒரு சாதாரண விசயம் ஆகிவிடும்!
சரி நம்ம நாட்டில் இதுபோல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் "சாதாரணம்" ஆக இன்னும் எவ்ளோ நாட்கள் ஆகும்? ஒரு 50 வருடங்கள் ஆகலாம்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல் லிபெரல்க்கும், கன்சர்வேட்டிவ்க்கும் என்ன பெரிய வித்தியாசம்?
இவன் (லிபெரல்) இன்னைக்கு செய்றதை அவன் இன்னும் 50 வருடம் சென்று செய்வான். அவன்ந்தான் கன்சர்வேட்டிவ்!
உடனே அமெரிக்கானா "க்ரேட்"னு நெனச்சுடாதீங்க..
ஒரு மாதத்துக்கு முன்னா அமெரிக்காவில் ஒரு 21 வயது வெள்ளைக்காரப் பையன் ஒரு கருப்பர்கள் வழிபடும் தேவாலத்தில் நுழைந்து சுட்டுத் தள்ளிவிட்டான். 10 பேருக்கும் மேலே படுகொலை செய்யப் பட்டார்கள்!
இதுவும் அதே அமெரிக்காதான்! இந்த மாதிரி கேவலமான செயல்கள் நடப்பதும் இங்கேதான்!
********************************
ஒரு 8 வருடத்துக்கு முன்னால ஒரு அமெரிக்கன் ஃபுட் பால் ப்ளேயர், நாய்களை சண்டை போடவிட்டு அது ஒண்ணை ஒண்ணு கொல்லுவதைப் பார்த்து ரசித்ததுக்காக, அவனைப் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க.
மைகேல் விக் என்னும் ப்ளேயர் அவர். அதிலிருந்து வெளிவந்தும் அவர் ஃபுட் பால் வாழ்க்கையில் மேலும் மிளிர முடியவில்லை.
உடனே விலங்குகளைக்கூட மதிப்பவர்கள் அமெரிக்கர்கள்னு தப்புக் கணக்குப் போட்டுறாதீங்க!
எங்க விட்டில் இப்போ நெறையா பறவைகள் வருது. அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் சரியா இருக்கு. இதில் என்ன வசதினா, யாரைப்பத்தியும் பொறணி பேச வேண்டியதில்லை. இதுக்குப்பதிலா நம்ம மனித நண்பர்களை அழைத்து விருந்தளித்தால் அன்னைக்கு இன்னும் நாலு இந்தியர்கள் தலை உருளும். என்ன சொல்வார்கள்? "எல்லாரும் அயோக்கியன்! நான் மட்டும் யோக்கியன்!" என்பதுபோல் கூசாமல் பேசுவார்கள்! எங்க வீட்டுக்கு வரும் பறவைகளில் முக்கியமான ஒண்ணு, இந்தப் புறா. இதைப்பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் கூகுல் பண்ணி எடுத்தேன்.
mourning dove |
morning dove |
புறாக் குஞ்சு |
புறாக்களின் வாழ்க்கையில் என்ன ஷ்பெஷல்னா இவைகள் ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்பவைகள்!
நாய் நேயம் பேசும் அமெரிக்கர்கள், மேலே உள்ள புறாக்களை பல லட்சகணக்கில் வேட்டையாடி சுட்டுக் கொல்லுகிறார்கள். இதற்கு சட்டம் அனுமதியளிக்கிறது.
புறாக்களை சுட்டுக் கொல்றது இவளுக்குப் பொழுது போக்கு! |
இது போதாதுனு எல்லா அராஜகமும் பண்ணிட்டு In God we trust னு வேற சொல்லிக்குவார்கள் வெட்கமே இல்லாமல்!!
*************************