Tuesday, January 12, 2016

வாழ்க்கையில் பயணங்கள்?

 பயணங்கள் பற்றி தொடர்பதிவு. அதற்கு தகுதியே இல்லாத நான் எழுதினால் எப்படி இருக்கும்? னு பாருங்க. இதுவும் ஒரு வகையான பாடம் அல்லது அனுபவம்தான் உங்களுக்கு. வெங்கட் ஃபட் னு ஒரு கன்னட பிராமின் சமையல் பத்தி பேச வருவான்(ரு) தெரியுமா? அவரு என்னனா சுத்தமான வெஜிட்டேரியனாம், ஆனால் நான்வெஜ் சமைப்பதில் எக்ஸ்பர்ட்! சமைப்பாரு ஆனால் டேஸ்ட்கூட பண்ணிப் பார்க்க மாட்டாரு. அவரையே கட்டி அழும் நம் மக்கள் (நீங்கதான்) இருக்கும்போது நான் பயணம் பற்றி எழுதுவதை நீங்க வாசிப்பதில் தப்பே இல்லை!


1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

 சிறு வயதில் ராமேஸ்வரம் போனதுனு நினைக்கிறேன். பாம்பன் பாலத்தின் மேலே போகும்போது அந்த வயதில் த்ரில்லாக இருந்துச்சு..

 2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

 சிறுவயதிலிருந்து ஆரம்பிக்கிறேன். நாங்க லோவர் மிடில் க்ளாஸ். அப்படினா? நாகரிகமாக ஏழைனு சொல்லுவது. ஏழைகள் எப்படி வாழணும்? பொதுவாக ஊர் சுத்துவது எக்ஸ்கர்ஷன் போவதெல்லாமல் என் அம்மாவைப் பொருத்தவரையில் "லக்ஸுரி" "வீண் செலவு". செலவைக் கட்டுப்படுத்த சாப்பாட்டையோ, தேவையான ஆடைகள் வாங்குவதையோ நிறுத்த முடியாது.. ஆனால் ஊர் சுத்துவதை, அதற்காக ஆகும் செலவை  தவிர்க்கலாம்.

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, நாம் எப்படி நம்மைப் பழக்கப் படுத்தப்படுகிறோமோ, அதேபோல் நாம் நாளடைவில் மாறி விடுவோம். சிறு வயதிலேயே இப்படிப் பழக்கப்படுத்திவிட்டதால், இப்போவும் பயணம் செய்வதில் ஆர்வக் குறைவாகிவிட்டதோ என்னவோ தெரியவில்லை.

பாவம் ஏழை வருண் என்று எனக்காக கண்ணீர் விட்டு அழாதீங்க! :) என் சுற்றத்தார் எல்லோருமே பணக்காரங்கதான். அம்மாவின் அப்பா பெரிய பணக்காரர் மேலும் மாமாக்கள் எல்லாம் மிகவும் வசதியானவங்க. எங்க வீட்டில் மட்டும்தான் வசதி கிடையாது. இருந்தாலும் சொத்துப் பத்து இருந்ததாலும் பணக்கார மாமாக்கள் இருந்ததாளும் நான் ஏழைனு ஒரு உணர்வு ஒரு போதிலும் எனக்கு வந்ததில்லை.

ஏழைகள்தான் திருடுவாங்க, அவங்க வாழக்கைத் தரம் கீழிருக்கும் போன்ற வியாக்யாணக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை எல்லாம் என் அம்மா சரியாகத்தான் வளர்த்தாங்க.

 எனவே, இதுபோல் ஃபனன்ஸியல் நிலைமை இருந்ததால் பள்ளியில் போகும் டூர் எல்லாம் சாண்ஸே இல்லை. ஒரு முறை கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் குற்றாலம் போனது நேற்று நடந்ததுபோல் ஞாபகம் இருக்கு. மறக்கவே முடியாத பயணம்னு சொல்லலாம். அதற்கு மட்டும் எப்படி அம்மா போகவிட்டாங்கனு தெரியலை. ஆமா எங்க வீட்டில் "அம்மாதான் எல்லாம்"! :)


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

நண்பர்களுடன்! முகநூல் நண்பர்களல்ல!  நமக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்கள். ரெண்டு உயிர் இருந்தால் ஒண்ணைக் கொடுப்பாங்களா?னு கேக்காதீங்க! என்னோடு சிறு வயதிலிருந்து என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்ந்த நண்பன் அப்துல் ரகுமான் போன்ற நண்பர்களுடன். ரயிலில் செக்கன்ட் க்ளாஸ்ல உக்காந்து,  சீட்டு விளையாடிக் கொண்டே, அரட்டை அடித்துக்கொண்டே  பயணம் செய்யணும்.அப்படித்தான் குற்றாலம் பயணம் செய்தோம்.

 4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

நான் ஒரு வினோதப்பிறவி. என் ரசனையும் ஒரு மாதிரிதான். அந்தக்காலத்து அடுத்த வீட்டுப்பெண்  படத்தில் வரும் "கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே" பாட்டையும் ரசிப்பேன். இப்போ வர்ர நிக்கி மினாஜ் உடைய அனக்கோண்டா பாட்டையும் ரசிப்பேன். "mood டைப் பொருத்து".

  5. விருப்பமான பயண நேரம்.

நான் ட்ரைவ் பண்ணனும்னா அதிகாலையிலிருந்து அஸ்தமிக்கிறவரை. ஆனால் ஸ்பீட் லிமிட்க்கு மேலே ஒரு 10 மைலாவது அதிகமாகப் போனால்த்தான் திருப்தியாவும்,ஒரு த்ரில்லாவும் இருக்கும். அங்கிட்டு இங்கிட்டு "காப்" தெரியும்போது மட்டும் ஸ்பீட் லிமிட்ல போற மாதிரி நடிக்கிறது. ஆனால் ஒண்ணு, இதுவரை ஸ்பீடிங் டிக்கட் வாங்கியது இல்லைனு பெருமையாக சொல்லிக்கிறது. :)

ட்ரெயின், பஸ்ல என்றால் இரவு நேரங்களும் பரவாயில்லை.

 6. விருப்பமான பயணத்துணை.

இங்கே என்ன மாதிரி பயணம் என்பதைப் பொருத்து "விருப்பமான பயணத்துணை" யாரா இருந்தால் நல்லாயிருக்கும் என்பது மாறுபடும்.

சொர்க்கத்துக்குப் போகணும்னா யாரோடனாலும் போகலாம். நரகத்துக்கு போகணும்னா  ஒரு சிலரோடதான் போக முடியும்.அப்போத்தான் அதுவும் சொர்க்கமாகும்.

 7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

ஒண்ணு  தெரிஞ்சுக்கோங்க, எனக்கு எந்த நேரத்தில் எதைப் படிக்கணும்னு கூறே கிடையாது. சமீபத்தில் அதிகமாகப் படிப்பது என்னுடைய "ஐ ஃபோன்" ல ஆன்லைன்மூலம் அதிகமாகப் படிப்பதெல்லாம் கெமிஸ்ட்ரியும் பயோ கெமிஸ்ட்ரியும்தான். இல்லைனா அமெரிக்கன் ஃபுட்பால் சம்மந்தப்பட்ட செய்திகள்.

இன்னைக்கு காலையில் திடீர்னு நான் எழுதிய பழைய பதிவை ஒண்ணைத் தோண்டி எடுத்து வாசிச்சேன்..


அதாவது யோகா, தியானம் செய்றவங்க, நமக்கு எதுவும் வராதுனு கவனக்குறைவா இருந்துடுறாங்க. கார்டியாக் அர்ரெஸ்ட் ஒரு சிலருக்கு வந்து விடுகிறது. இவர்களும் டாக்டர்களை வருடம் ஒரு முறை சந்தித்து உடல் நலம் தெரிந்து கொள்வது நல்லதுனு எழுதிய பதிவு.

இதை எதுக்கு இப்போ தோண்டி எடுத்தேன் என்றால்.. ராஜ நடராஜன் யோகா எல்லாம் செய்வார்னு எழுதியிருந்தார்கள் ..ஒருவேளை அதனால்தான் கவனக்குறைவாக நமக்கு என்ன வரப்போது? னு இருந்துட்டாரோ னு ஒரு சிந்தனை வந்தது அதன் விளைவுதான்.

உங்களையெல்லாம் காப்பத்தணும்னு பெரிய அறிவுரை எல்லாம் இல்லை.


 8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அதென்னவோ அமெரிக்கால இருக்கும்போதுதான் இந்தியாவில் ட்ராவல் பண்ணனும்னு ஆசை வருது. அம்மா அப்பாவுடன் ஏதாவது சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போவது நல்லாயிருக்கும்னு தோனுது. கடல்கடந்து  இருப்பதால் அப்படிப்போனால் நல்லாயிருக்கும்னு தோனுது.
  
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
 Again it depends on my mood and what kind travel it is, honestly. 

  10. கனவுப் பயணம் ஏதாவது ?
 கனவுப் பயணமா? அப்படினா?

சில ஆண்டுகள் முன்னால தோழி ஒருத்தி "world cruise" போக ஆசை னு சொன்னாள். ஒரு சிலர் அவங்க ஹவாய்யி போகணும், கனடா பக்கம் உள்ள நயாகரா போகணும்,  யூரோப் போகணும் னு சொல்லிக் கேட்டு இருக்கேன்.

"ஏன் நமக்கு மட்டும் இப்படி ஆசை எதுவும் இல்லை?" னு நான் யோசிப்பதுண்டு.

-----------------

சரி மைதிலி, என்னை இந்த வம்பில் மாட்டி விட்டதுக்கு நன்றி சொல்லிடுறேன்.

கேள்விகளை, கிரேஸ் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணினேன். நன்றி.

13 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வெங்கட் ஃபட் நிகழ்ச்சி பார்த்ததில்லை, அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். உங்கள் பயணப் பதிவு நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது! :)
பாம்பன் பாலம் கப்பலுக்குத் திறக்கும் என்று பார்த்து அதிசயித்து நின்றது நினைவு வருகிறது. உயிர் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே செல்வது இனிமைதான். //ஸ்பீட் லிமிட்க்கு மேலே ஒரு 10 மைலாவது அதிகமாகப் போனால்த்தான்// அதுதான் ஸ்பீட் லிமிட் என்று ஆகிவிட்டதே :) அப்பொழுதும் பத்திற்கு மேல் அதிகரிக்காமல் செல்வது த்ரில் தான். //இதுவரை ஸ்பீடிங் டிக்கட் வாங்கியது இல்லைனு பெருமையாக சொல்லிக்கிறது.// high-five :))
// நரகத்துக்கு போகணும்னா ஒரு சிலரோடதான் போக முடியும்.அப்போத்தான் அதுவும் சொர்க்கமாகும்.// அட, சூப்பர்!
//கேள்விகளை, கிரேஸ் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணினேன்// அவ்வ்வ்வ்!! இதைச் சொல்லணுமா? நான் மைதிலி பதிவிலிருந்து காபி அடித்ததைச் சொல்லவில்லையே!!
வாக்கு போட்டாச்சு :)

ஊமைக் கனவுகள் said...

வணக்கம்.

ஏதோ உங்களைக் கொஞ்சம் நெருங்கி வந்திருப்பதுபோலத் தோன்றுகிறது . :)

உங்களின் சில அனுபவங்கள் என் அனுபவங்களோடும் பொருந்தி வருகின்றன என்பதாலும் இருக்கலாம்.

மைதிலி சகோவிற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

4 பதில்கள் என்னோடு ஒத்துப் போகிறது... நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்... அப்போது அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

‘தளிர்’ சுரேஷ் said...

பயண தொடர் பதிவிலும் சில நல்ல உபயோகமான தகவல்களையும் தந்து உங்கள் பாணியில் அசத்திவிட்டீர்கள்! நன்றி!

Mythily kasthuri rengan said...

உங்க ஸ்டைலில் பதிவு பொறி பறக்கிறது. ஏதேதோ ஆசைப்பட்டு பின் மனம் பின்லாந்து பயணத்தில் நிலைபெற்றது என்றேன் இல்லையா, know s.t ஒரு காலத்தில் நானும் world cruise போக ஆசைபட்டிருக்கிறேன். பள்ளிநாளில் என்னையும் எங்கள் வீட்டில் சுற்றுலா போக அனுமதித்ததே இல்லை. பணம் அப்போ பிரச்சனை இல்லை. safety தான் அப்பாவுக்கு முக்கியமா தோனுச்சு. ஆனா அப்பா கூட சேர்ந்து நிறைய சுத்திருக்கேன்:)

விஜூ அண்ணா கமெண்டை படித்தீர்களா? உங்க கூட ரொம்ப க்ளோஸ் ஆகிடாராமே!!! வாழ்க! வாழ்க!

உங்களின் இதுபோலும் நேர்மையான, சின்சியரான பதில்கள் தான் மைதிலியின் தொடர்பதிவுகளில் உங்களை தொடர்ந்து சிக்கவைகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா:))))

அழைப்பை ஏற்று பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க .....நன்றி வருண் (last line ரொம்ப formal ஆ இருக்கோ?!)

பழமைபேசி said...

எனக்கு உங்களுடன் பயணம் மேற்கொள்ளணும்னு விருப்பம். கால்சீட் கெடிக்குமா??

நிஷா said...

என்னை வாழ்க்கைப்பயணம் எழுதுவதா எதிர்பார்த்தேன் என சொல்லி விட்டு இந்தப்பக்கம் பாம்பண் பாலத்தில் பயணம் செய்த கதையும்,ஸ்பீட் லிமிட்டுக்கு மேல போனதையும் போட்டிருக்கிங்களே சார்? இது மட்டும் நியாயமா?

உங்கள் வாழ்க்கைப்பயணத்திலாவது நான்கு நல்ல ஆலோசனை கிடைக்கும் என எதிர்பார்த்தேனே! சிறுவயதில் கஷ்டப்பாட்டால் வளர்ந்த பின் வசதியா இருப்பார்களாம் எனும் செண்டிமெண்ட் உங்களுக்கும் டச் ஆகி விட்டது.

SathyaPriyan said...

//
சொர்க்கத்துக்குப் போகணும்னா யாரோடனாலும் போகலாம். நரகத்துக்கு போகணும்னா ஒரு சிலரோடதான் போக முடியும்.அப்போத்தான் அதுவும் சொர்க்கமாகும்.
//
Unique thought. It never came to my mind until I read this. Thank you.

S.P.SENTHIL KUMAR said...

அனைத்து அனுபவங்களும் அருமை. தங்கள் தளத்திற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இனி தொடர்கிறேன்.

தவறு said...

இதான் வருண் அப்படின்னு டப்புன்னு உடைச்சிட்டீங்க..வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு பயண அனுபவ பதில்களிலும் ஏதாவது ஒன்றிரண்டு ஒத்துப் போனாலே பின்னால் பதிவிடுபவர்கள் பதிலையே காபி பேஸ்ட் செய்தாற்போல ஆகி விடும்!!

உங்கள் பதில்களை ரசித்தேன்.

Mythily kasthuri rengan said...

சொல்ல மறந்துட்டேன் வருண். ஆனா நினைத்துக்கொண்டே இருந்தேன். சொர்க்கத்துக்கு யாரோடு வேண்டுமானாலும் போகலாம். ஆனா நரகத்துக்கு .....ஒரு கவிதையின் சாயலில் Awesome!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!