Monday, January 4, 2016

உளறலில் ஆரம்பிக்கும் புத்தாண்டு 2016!

இது ஆங்கிலப் புத்தாண்டு! ஆம், ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்தப் புத்தாண்டை கொண்டாடணுமா? இதையெல்லாம் கண்டுக்காமல் விட்டுப் போக வேண்டாமா? வெள்ளைக்காரன் நம்மிடம் வலுக்கட்டாயமாகத் திணித்த ஒன்றாச்சே இது! புறக்கணிப்போம்!

சரி, ஆங்கிலத்தை விடுங்க! தமிழ்ப் புத்தாண்டாணு கொண்டாடும் ஏப்ரல் 14 புத்தாண்டாவது  தமிழர்களின் புத்தாண்டா? இல்லை சமஸ்கிரதத்தைக் கொண்டு வந்த ஹிந்துக்களால் திணிக்கப் பட்ட ஒன்றா அதுவும்? அப்படியென்றால் அதையும் கொண்டாடவோ இல்லை பெரிது படுத்தவோ தேவையில்லையே? அதையும் புறக்கணிப்போம்!

ஆமாம், தமிழரின் புத்தாண்டுணு தை மாதத்தில்  பொங்கல் தினம்தான். ஆனால் தைத்திருநாளும் தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் பல பகுதிகளில் பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றனவே? இதையும் எப்படி தமிழர் திருநாள் என உரிமை கொண்டாட முடியும்? என்றெல்லாம் பதிவெழுதி விவாதித்து வெட்டு குத்து, கெட்ட வார்த்த சண்டை எல்லாம் போட்டாச்சு..

இதெல்லாம் விதண்டாவாதமோ இல்லைனா விவாதிக்க வேண்டியதோ தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால்,

 நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மிடம் பல விசயங்கள் திணிக்கப் படுகின்றன. அப்படி நாம் விரும்பாத, நம்மிடம் திணிக்கப்பட்ட, விசயங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு   நம் கலாச்சாரமாகி விடுகிறது!  இப்படி எங்கிருந்தோ வந்த ஒன்று, நம்மிடம் திணிக்கப்பட்டுத்தான் பிறகு அது நாமே பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் நம் கலாச்சாரமாகி வந்து நிற்கிறது.

புரியலையா?

சிங்கம் இருக்கு இல்லை? அதாங்க "சிங்கிளா" வரும் சிங்கம்? :) அதில் ஆண் சிங்கம் தனக்கென்று ஒரு குடும்பம் வைத்துக்கொண்டு தாந்தான் ராஜாவாக ஒரு சின்ன கூட்டமாக வாழுமாம். வாழுதா? அந்த ராஜா வீரசிங்கத்திற்கு வயதாக ஆக, வலிமை குறையுமாம். அப்போது இன்னொரு வலிமையுள்ள இளம் சிங்கம் அதை அடித்து கொன்று விட்டு அல்லது துரத்திவிட்டு அதன் ராணியை/மனைவியை தான் அபகரித்துக்கொண்டு தன் மனைவியாக்கிக் கொள்ளுமாம். அதுமட்டுமல்ல அப்படி ஆக்கிக்கொண்டு, அதன் மாஜி கணவனுக்குப் பெற்ற அந்த ராணியின் பச்சைக்குழந்தைகளையும் இரக்கமே இல்லாமல் கொன்றுவிட்டு, அதனுடன் புதிய வாழக்கை ஆரம்பிக்குமாம். மறுபடியும் தன் குழந்தைகளை அப்பெண் சிங்கத்துடன் உறவுகொண்டு பெற்றுக்கொண்டு அவைகளை வளர்க்குமாம்.  அந்த பரிதாபத்க்குரிய பெண் சிங்கமும் அந்த கொலைகாரப் புருசனுடன் பழசை மறந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து முடிக்குமாம். நான் சிங்கம்டா னு அடிச்சுக்கிறவா எல்லாம் சிங்கம் ரொம்ப அசிங்கமான மிருகம்னு தெரிந்து கொண்டாச்சா?

சிங்கம் ஒரு மிருகம், அதான் இப்படினு சொல்லுவான் மனிதன்.  நாம் மனிதம் உள்ள மனிதன் என்பான். ஆனால், உண்மை என்னனா மனிதனும் சிங்கம் போலவே  அதே வகை  மிருகம்தான். ஆனால் என்ன ஒண்ணு, இவன் சிங்கம் செய்வதையே, நியாயப்படி, தர்மப்படிசெய்வதாக  பகவத்கீதை எல்லாம் பாடி, சட்டம், அது இதுனு பல பொய்களைச் சொல்லி சோடிச்சு,   நாகரிகமாகச் செய்வான். அதிலும்  முழுக்க முழுக்க சுயநலம்தான் இருக்கும்.

அப்படித்தான் நம் விருப்பத்திற்கு எதிராக பல விசயங்கள் நமக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு அதையே நாம் நாளடைவில் நம் கலாச்சாரம், நம் தனித்துவம் என்று அதைப் போற்றி, பெருமை பேசி, நாமும்  வாழ்ந்து மடிகிறோம். இதுதான் உண்மை.

நீங்கள் இன்று உடுத்தியுள்ள உங்கள் உடையைப் பாருங்க! நான் சொல்வது புரியும்! இல்லை இப்போவும் வேட்டிதான்/சேலைதான் கட்டியிருக்கீங்களா? ஏன் அந்த உடைகளும்  தமிழர்கள்தான் கண்டுபிடிச்சாங்கனு எப்படி சொல்ல முடியும்? இன்றைய முழுக்கால் சட்டை, சல்வார் காமிஸ் போல் அன்று நம்மிடம் வந்து ஒட்டிக்கொண்ட ஒன்றாகத்தான் அதுவும் இருக்க வேண்டும்!

திறந்த மனதுடன் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீங்கனா இதுபோல் உண்மைகள் புலப்படும். அதன் பிறகு நீங்க பெருமையாகவும், அகந்தையுடனும் செய்த எதுவுமே பெரிதாகவோ, அர்த்தமுள்ளதாகவோ தோனாது.

அதனால..

அதனால?

நம் கலாச்சாரம்தான் உலகில் முதலில் தோன்றியது என்கிற எண்ணத்தை விடுங்கள். விட்டுவிட்டு  பல உயிருக்கு நீங்கள் வாழ்வதற்காக அன்றாடம் தீங்கு செய்வதுபோல் இன்னொரு பக்கம்  உங்களால் முடிந்த நன்மையும் பல உயிர்களுக்கு செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்கள் வாழ்க்கை "தெர் மோ டைனமிக்ஸ் முதல் விதிபோல் அமையும்"  அதாவது ஓரளவுக்கு அர்த்தமுள்ளதான அமையும்.

அதில் பாதகமில்லை!

அதாவது நீங்கள் செய்த தீமைகளை, நீங்கள் செய்த நன்மைகள் சமன் செய்துவிடும்!


 Around 1850 Rudolf Clausius and William Thomson (Kelvin) stated both the First Law - that total energy is conserved. 
Later, 

“Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another.”― Albert Einstein


 இப்போ ஐண்ஸ்டைன் சொன்னது, க்ளாசியஸ் மற்றும் கெல்வின் சொன்னதுதான். சரியா?

சரி, க்ளாசியஸ்க்கு முன்னாலே இதே சிந்தனை வேற யாருக்கும் வராமல் இருந்து இருக்கணும்னு இல்லை. ஆக அறிவியல் கலாச்சாரம் போலதான். இன்னொருவருடையதை நாம் தழுவி நம்முடையதாக பெருமை பேசுகிறோம்.:)

அதை விடுத்து, எனக்கு அது வேணும், இது வேணும், "நான்" "நான்"னு  சுயநலமாகவே சாதாரண மனுஷ சென்மமாக வாழ்ந்து முடித்தால்?

அப்படி வாழ்ந்து மடிந்தால்?  தெர்மோடைனமிக்ஸ் ரெண்டாம் விதிப் படி உங்க வாழ்க்கை முடியும்.

அதாவது உலகை உங்களால் முடிந்தளவுக்கு இன்னும் கொஞ்சம் நாசமாக்கிவிட்டு செல்வீர்கள். அதை முடிந்தால் தவிருங்கள்!

The second law of thermodynamics states that the degree of disorder is always increasing in the universe.
அதாவது, உலகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. மனிதனின் சுயநல இழிச் செயல்களால்!

வருண்!!

இப்போ எதுக்கு ஃபிசிக்ஸ்/கெமிஸ்ட்ரி எல்லாம்? 

தலைப்பின் முதல் வரியை இன்னொரு தர வாசியுங்கள்! 

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சொல்வதை அதிரடியாக சொன்னாலும் சொன்ன கருத்துக்கள் சிந்தையில் கொள்ளவேண்டியவையே

saamaaniyan saam said...

பதிவின் தலைப்பை படித்துவிட்டு இறுதியில் நீங்கள் குறிப்பிட்டப்படி மீன்டும் ஒரு முறை படித்தேன்... வருணின் உளறல்களே இவ்வளவு யோசிக்க வைப்பவை என்றால்... :-)))

மிக உண்மையான வார்த்தைகள் வருண் ! நாம் கொண்டாடும் அனைத்துமே இடையில் நம்முடன் ஒட்டிக்கொண்டு, போகும்போது நம் இடையிலிருந்து விடை பெறுபவைதான் ! இதில் உன் கலாச்சாரம் என் கலாச்சாரம் என்ற பம்மாத்து, ஜல்லியடி !!!

" நீங்கள் இன்று உடுத்தியுள்ள உங்கள் உடையைப் பாருங்க! நான் சொல்வது புரியும்! இல்லை இப்போவும் வேட்டிதான்/சேலைதான் கட்டியிருக்கீங்களா? ஏன் அந்த உடைகளும் தமிழர்கள்தான் கண்டுபிடிச்சாங்கனு எப்படி சொல்ல முடியும்? இன்றைய முழுக்கால் சட்டை, சல்வார் காமிஸ் போல் அன்று நம்மிடம் வந்து ஒட்டிக்கொண்ட ஒன்றாகத்தான் அதுவும் இருக்க வேண்டும்! "

உண்மையில் வேட்டி யவணர்கள் காலத்தில் ரோமாபுரியிலிருந்து இங்கு வந்ததான ஒரு கருத்து உண்டு ! அவர்களின் பருத்தி துணிகளுக்கு மாற்றாக இங்கிருந்து வாசனை பொருட்கள் பண்டமாற்றிள்ளார்கள் ! ( ஜீலியஸ் சீசர் போர்த்தியிருந்தது நம்ம ஊரு வேட்டி என இங்கு ஒரு கோஷ்டி கிளம்பிவிடபோகிறது... ! )

புத்தாண்டில் மனித நேயம் உணர்த்திய பதிவுக்கு வாழ்த்துகள்.

நன்றி
சாமானியன்

வருண் said...

***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சொல்வதை அதிரடியாக சொன்னாலும் சொன்ன கருத்துக்கள் சிந்தையில் கொள்ளவேண்டியவையே***

வாங்க முரளி. நான் சாதாரண்மாக சொன்னாலும் அது அதிரடியாகத்தான் வந்து நிக்கிது. என்ன பண்ணுறது? :)

வருண் said...

*** saamaaniyan saam said...

பதிவின் தலைப்பை படித்துவிட்டு இறுதியில் நீங்கள் குறிப்பிட்டப்படி மீன்டும் ஒரு முறை படித்தேன்... வருணின் உளறல்களே இவ்வளவு யோசிக்க வைப்பவை என்றால்... :-)))

மிக உண்மையான வார்த்தைகள் வருண் ! நாம் கொண்டாடும் அனைத்துமே இடையில் நம்முடன் ஒட்டிக்கொண்டு, போகும்போது நம் இடையிலிருந்து விடை பெறுபவைதான் ! இதில் உன் கலாச்சாரம் என் கலாச்சாரம் என்ற பம்மாத்து, ஜல்லியடி !!!

" நீங்கள் இன்று உடுத்தியுள்ள உங்கள் உடையைப் பாருங்க! நான் சொல்வது புரியும்! இல்லை இப்போவும் வேட்டிதான்/சேலைதான் கட்டியிருக்கீங்களா? ஏன் அந்த உடைகளும் தமிழர்கள்தான் கண்டுபிடிச்சாங்கனு எப்படி சொல்ல முடியும்? இன்றைய முழுக்கால் சட்டை, சல்வார் காமிஸ் போல் அன்று நம்மிடம் வந்து ஒட்டிக்கொண்ட ஒன்றாகத்தான் அதுவும் இருக்க வேண்டும்! "

உண்மையில் வேட்டி யவணர்கள் காலத்தில் ரோமாபுரியிலிருந்து இங்கு வந்ததான ஒரு கருத்து உண்டு ! அவர்களின் பருத்தி துணிகளுக்கு மாற்றாக இங்கிருந்து வாசனை பொருட்கள் பண்டமாற்றிள்ளார்கள் ! ( ஜீலியஸ் சீசர் போர்த்தியிருந்தது நம்ம ஊரு வேட்டி என இங்கு ஒரு கோஷ்டி கிளம்பிவிடபோகிறது... ! )

புத்தாண்டில் மனித நேயம் உணர்த்திய பதிவுக்கு வாழ்த்துகள்.

நன்றி
சாமானியன்***

வாங்க சாம். ஆமாம், மனிதம் மலரட்டும் சாம். :)

Mythily kasthuri rengan said...

வாவ்!! மறுபடியும் உளறல்கள். நானும் என் கைப்பையை மாத்திட்டு உளறல்னு வைக்கலாமா ன்னு யோசிக்கிற அளவு உங்க உளறல் தொடரின் விசிறி நான்(நம்பனும். அதுதான் நட்புக்கு அழகு) ஓகே வருண் உங்களை ஒரு தொடர்பதிவில் சேர்த்திருக்கிறேன். http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html படிச்சுட்டு தொடர்வீர்கள் தானே?