Tuesday, July 19, 2016

அமெரிக்காவில் கபாலி திருவிழா!

சரியாத்  தமிழ்ப் பேசத்தெரியாது. தமிழனும் இல்லை. மராத்திக்காரனா? இல்லைனா கன்னடிகாவா? அப்படியொண்ணும் சி வா ஜியைப்போல் திறமைமிக்க ந டி க ர் னும் யாரும் ஏற்றுக்க மாட்டாங்க.

 வயதும் 65 ஆயிடுச்சு.

போன ப ட ம் சரியாப் போகலை.

இதோட இவன் அவுட்டுதான்னு சொன்னார்கள்.

பெரிய இயக்குனர் இல்லை.

பெரிய இசையமைப்பாளர் இல்லை.

 பெரிய ஹீ ரோ யினும் இல்லை.

ஆனாலும் ஹைப் வானுயரத்திற்கு உருவாகியுள்ளது.

இது யார் தப்பு? அந்தாளு தப்பா? இல்லை அவரை ரசிக்கும் ர சி கர் களின் தப்பா? இல்லைனா பொதுமக்கள் தப்பா?

மீடியாதான்  இப்படி பண்ணுது. மீடியாதான் காரணம் என்பார்கள்.

ஆனால் மீடியா விற்கக் கூடிய பொருளைத்தான் விளம்பரப்படுத்துவாங்க. சத்தியராசு இதே படத்தில் நடித்தால் மீடியா இதேபோல் விற்க முன்வரமாட்டார்கள். ஏன் என்றால் வாங்க ஆள் கிடையாது. மீடியா ஹைப்க்கு காரணம் பொதுமக்கள். அவங்களுக்குப் பிடிக்கிது. அதனால்த்தான் மீடியா ர ஜி னி என்கிற ட்ரேட் மார்க்கை மேலும் மிகைப்படுத்துகிறது.


ஆனால், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் டிக்கட் விலையைப் பற்றி கவலையே பட்ட மாதிரித் தெரியவில்லை. சல்மான் கானில் சுல்த்தான், சாருக் கான் சென்னை எக்ஸ்ப்ரெஸ், அமீர்கான் பி கே எல்லாவற்றிற்கும் டிக்கட் விலை எட்டு டாலர்தான்.

கபாலிக்கு மட்டும் 25-20 டாலர்கள், இதை சந்தோஷமாகக் கொடுத்து வாங்கி (தீபாவளிக்கு பட்டாசுக்கு செலவழிப்பதுபோல்- காசை கரியாக்குவதுபோல்) செலவழிக்கிறாங்க அமெரிக்கத் தமிழர்கள்.




 



http://i2.wp.com/kollywood7.com/wp-content/uploads/2016/07/img_20160719_095219.jpg
அமெரிக்காவில் ஒரு குழந்தைக்கு பொறந்தநாள் பார்ட்டில இப்படி!


ஒரு நாலு ஸ்டில்ஸ், ஒரு ட்ரைலெர். அதிலொரு ர ஜி னி காந்த். அவ்வளவுதான் தேவை. மக்கள் திருவிழா கொண்டாடுவதுபோல் திரையரங்குகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி கபாலியைத் திரையில் முதல்க் காட்சி பார்ப்பதில்.

இவங்க எல்லாம் படிச்சவங்கதான். நாகரிகம் தெரிந்தவங்கதான். பட்டிக்காடு இல்லை. இருந்தும் ர ஜி னி காந்த் படம்னா சிறு குழந்தையாக மாறி விடுகிறார்கள்!

நான் இந்தப் படத்தை எஃப் டி எஃப் எஸ் பார்க்க முடியாது. இந்தியாவில் எங்க ஊரில் இருந்தால் நிச்சயம் பார்ப்பேன். இப்போ அதைவிட முக்கிய வேலைகள் இருப்பதால் இன்னொரு நாள்தான் பார்க்கணும்.

"சின்னப்பசங்க எல்லாம் அஜீத் விஜய் ரசிகராயிட்டாங்க, ரஜினி அவ்ளோதான்" ணு, மேதாவி கருந்தேள்ல இருந்து சினிமா ட்ரேட் அனலிஸ்ட்னு சொல்லிக்கொண்ட அலைகிற அன்னக்காவடிகள்  எல்லாம் ஆளாளுக்கு ஒரு "கதை" விட்டுக்கொண்டு திரிந்தார்கள். அவனுக எல்லாம் இப்போ பொத்திக்கிட்டு எங்கே போனானுகனு தெரியலை. அவனுக மொகரைக்கட்டையை இப்போப் பார்க்கணும்! அவனுக எடுத்த வாந்தியை எல்லாம் இப்போ அவனுகளே இப்போ நக்கி நக்கி சாப்பிட வேண்டிய சூழல்!

சிறுவர்கள் பார்க்கலைனா என்ன? அவர்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டியெல்லாம் ரஜனி படம் வெளிவரும்போது குழந்தையாகிவிடுறாங்க என்பதே உண்மை.

மும்பையில் கபாலி பஸ் விளம்பரம்


இது மும்பையில் ஃபாக்ஸ் ஸ்டுடியோ கமர்ஷியல்


4 comments:

Yaathoramani.blogspot.com said...

நான் தற்சமய்ம் நியூஜெர்ஸியில்
இங்கும் இந்தக் கதைதான் நடக்கிறது
நீங்கள் சொன்னதும் ஒரு வகையில் சரிதான்
கூந்தலுள்ள மகராசி... டிமாண்ட் உள்ள ப்ராண்ட் ரஜினி
வாழ்த்துக்களுடன்

வருண் said...

வாஙக ரமணி சார், அமெரிக்காவில்தான் இருக்கீங்களா?!! தங்கள் வரவால் அமெரிக்க மண்ணுக்கு பெருமைதான்! :)

கிரி said...

வருண் செம :-)

'பரிவை' சே.குமார் said...

ரஜினிக்கு இருக்கும் வால்யூவை வைத்து பணம் பண்ண நினைத்த தாணுவுக்கு படத்தின் ரிசல்ட் பெரிய அடிதான்... இருப்பினும் ரஜினி என்னும் மனிதனின் ஸ்டைலில்லாத அந்த நடிப்பை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்க முடிவதில் சந்தோஷமே.