Wednesday, July 27, 2016

வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது! கபாலியின் தாக்கம்?

கபாலி சம்மந்தமான அரசியல் என்னவென்று புரியவில்லை. தாணு, கபாலியை செயா சே ன லுக்கு விற்றதுடன் ஜாஸ் சி னி மா வுக்கு தமிழ்நாட்டு ரைட்ஸையும் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதற்கு காரணம், அப்போத்தான் சிங்காரவேலன்கள் அக்கப்போர் இல்லாமல் படம் விதிப்படிப் போகும் என்பது.

ஆக படத்துக்கு எதிர் விமர்சனம் என்பது வடிகட்டப் படும் மறைமுகமாக "அரசாங்க" உதவியுடன்.

இந்த ஒரு சூழலில், படத்தைப் பற்றி எதுவும் புரளி கிளப்பப்படாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.


* அரிமா சங்கத்தில் பேசிய வைரமுத்து..

கபாலி கோட் பத்தி பேசுகிறார், கபாலி தோல்வி என்கிறார்..  

 யு ட்யூப் வீடியோவில் அவரே தான் பேசியதைப் பார்த்தால்.. "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?" னு அவரே அவரைப் பார்த்து வியக்கும் அளவுக்கு தேவையே இல்லாத உளறல்.

* பாதிக்கப்பட்ட தாணு வைரமுத்துவை சாடுகிறார்

* தாணு ஜாஸ் சினிமாவுக்கு ரைட்ஸ் வித்துள்ளார். செயா வுக்கு சாட்டலைட் ரைட்ஸ். அது மட்டுமல்லாமல், கபாலி டிக்கட்ஸ் நெறையவே வைரமுத்துக்கு கொடுத்துள்ளார்.

தான் வைரமுத்துக்கு டிக்கட் ஃப்ரியா கொடுத்ததையெல்லா போட்டு உடைத்துத் தள்ளுகிறார், அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுக்கவில்லைனு கோபம் என்கிறார்.


Rajinikanth's 'Kabali' Opens Strongly Worldwide



* வைரமுத்து தான் பேசியதை, தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் கொடுக்கிறார்..

 Image result for வைரமுத்து

"அதாவது தான் "வெற்றி தோல்வி"னு சொல்ல வந்தேன். "வெற்றி" எப்படியோ விடுபட்டுவிட்டது. " என்பது  இவர் கொடுக்கும் விளக்கம்!

------------------------------------------

ஆக, கவிப்பேரசர் வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது என்பதென்னவோ உண்மமைதான்!  என்ன கொடுமை இது! :(
 

7 comments:

ஆரூர் பாஸ்கர் said...

நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது!! :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அந்த வீடியோவில் வைரமுத்துவின் முக அசைவுகளைப் பார்த்தால் வழக்கமானதாக இல்லை. வயது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தன்னையும் அறியாமல் வேலையில் வந்து விட்டது.
ஆனால் க்பாலியில் வைரமுத்து பாடல எழுதி இருந்தால் நன்றாகாத் தான் இருந்திருக்கும். ஆனால் இளைய தலைமுறை அதனை விரும்பவில்லை என்பதை வைரமுத்து புரிந்து கொள்ளவேண்டும்

Nambikkai Kannan said...


”எம் ஜி ஆர் அவர்களுக்கு வாலியை போல, எனக்கு வைரமுத்து” என்று ரஜினி சில வருடங்களுக்கு முன் வைரமுத்துவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

66 வயதில் அவர் ஹீரோவாக நடிக்க வைக்கிறார்கள். என்னை ஏன் பாட்டு எழுத வைக்கவில்லை என்று தானு மீது தான் கோபம் இருக்கும்.

முதிர்ச்சி அடைந்த பிறகும் பெருந்தன்மை இல்லை என்றால், மீதி வாழ்வு கடினம் தான்.

கபாலி படம் பார்த்த பிறகு மனதில் இருந்து வந்த சிந்தனைகள்
http://vaangapesalamvaanga.blogspot.com/2016/07/blog-post.html

Unknown said...

this guy vairamuthu ia an avaricious jealous man all know that

Unknown said...

தன் பெயரில் தானே விருது அறிவித்து கொண்டவர்தானே அவர்...

வருண் said...

ஆரூர் பாஸ்கர், முரளி, வாங்க பேசலாம், நடராஜன் சந்தர், மதி சுஜா..

உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி..

உண்மையிலேயே இவர் தேவையே இல்லாமல் இப்படி ஒரு இழுக்கைத் தேடிக்கொண்டார். இவர் இதை எப்படித்தான் சமாளித்தாலும் நியாயப் படுத்த முடியாதபடி உள்ளது நிலைமை. பாவமாக இருக்கிறது இவர் நிலைமை! :(

SathyaPriyan said...

Watched Kabali today. They charged me 28$ earlier and was trying to avoid the mad rush. I must say, it’s an exceptional movie. No wonder hard core Rajini fans are disappointed. No one could have pulled it off other than thalaivar.

Amazing performance. I enjoyed each and every scene. Thank you Ranjith……….. And thank you Soundarya………