Friday, June 23, 2017

ப ச் ச அருளின் சாதீய ஆராய்ச்சி!

ப ச் சயா? பசுமையை அழகான கலோக்கியல் தமிழில் சொல்லணும்னா அது "ப ச் ச" தானே?! விசயத்துக்கு வருவோம்.

 நம்ம ரசினி அரசியலில் நுழைந்து படு தோல்வி அடைவார்னுதான் பலர் ஆரூடம் சொல்றாங்க. உண்மை நிலவரம் அப்படி இருக்கும்போது இங்கே என்ன நடக்குதுனா..

ஒரு பக்கம் நம்ம தலித் வீரர் மதிகெட்டமாறன் ரசினி பத்தி உளறித் தள்ளுறாரு. அதான் புல்லு வைக்கோல், புண்ணாக்குனு பதிவெழுதி வழக்கம்போல ஒரே உளறல்.

இன்னொரு பக்கம் நம்ம பச்சை அருள், அதான் பசுமை அருள், வன்னியர் குல வீரர்   இவரு. நம்ம  வன்னியர் அருளுக்கு என்ன பயம்னு தெரியலை. சமிபத்தில் ரசினி அரசியல் பிரவேஷம் பற்றிய பயத்தில் பா ம க வின் தூண்டதலில் ரசினி பற்றி முழுக்க முழுக்க உளறல் பதிவா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு.

இவரோட ஐயா மகன், தலித்தான ர சி னி (நீதான சொல்லிக்கிட்டு இருக்க?) உயர்சாதியான வன்னிய சாதிக் கட்சி பா ம க க்குத்தான் பிரச்சாரம் பண்ணி ஒரு வன்னிய சாதி வெறியனைத்தான் முதல்வராக்கணும்னு தலித் ரசினிட்ட பிச்சை கேட்கிறாரு! வன்னியர் குல வீரர் ஏன் தலித்ட்ட தனக்கு பிரச்சாரம் பண்ணணும்னு கேக்கிறாருனு விளங்கவில்லை. அதாவது சாதிவெறி இருந்தால் தப்பில்லையாம்? அவன் தமிழனா இருக்கணுமாம்!  தமிழன் தமிழன் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லைனு பலமுறை சொல்லியாச்சு! தமிழர் அடையாளம் பத்தி பேசுவது ஒரு சுத்தமான வே ஷி த் தனம்! சாதிவெறிதான் தமிழனிடம் இருக்கு. வன்னியர், தலித், மறவர், அகம்படியர், கள்ளர், வெள்ளாளர், முதலியார், ரெட்டியார், நாடார், மல்லர்னு னுதான் தமிழர் தன்னை அடையாளப் படுத்துகிறார்களே ஒழிய தமிழர் என்றல்ல!

என்ன புரியலைனா, முடிச்சவிக்கி, மொள்ளமாரி, கூட்டிக்கொடுக்கிறவன் எல்லாரும்தான்தான் தமிழர்களில் இருக்கானுக. தமிழன் என்பதால் அவனுகளும் தமிழ்நாட்டை ஆளலாமா? ஆக தமிழன்னு ஒரு முத்திரை இருந்தால் போதுமா?

ஆக பதிவுலகில் ஒரு தலித்தும், ஒரு வன்னியரும் ஒண்ணு சேர்ந்து ரசினியைப் பத்தி உளறித் தள்ளுகிறார்கள். ஆமா, இவனுக சாதியெல்லாம் எனக்கெப்படித் தெரியும்? நான் என்ன இவங்க சாதிச் சான்றிதழையா பார்த்தேன்? பார்ப்பான் மட்டுமில்லை, இவனுகளும் பதிவுலகில் தங்கள் கூட்டத்தைச் சேர்க்க சாதியை அப்படி இப்படி ஜாடை மாடையா சொல்லிக்கிட்டுத்தானே அலையிறானுக. இவனுக சொல்லித்தான் இவனுக சாதி எல்லாம் நமக்குத் தெரிய வருது. இவனுக ரெண்டு பேரும் முழுக்க முழுக்க சாதியில் ஊறி வளர்ந்த தமிலர்கள். ஆனால் ஊருப்பயலுகளை சாதிய வச்சு அரசியல் பண்ணுவதாக கையைக் காட்டிக்கிட்டு அலையுதுக மரமண்டைகள்!

மரமண்டை அருளின் சமீப ஆராய்ச்சி என்னனா, ரசினி ஒரு தலித்தாம்.  திருமாவளவன் ஆதரவு, அப்புறம் கபாலி, ரஞ்சித் அடுத்த படம்னு நடிப்பதால் ர சி னி தலித்னு கண்டு பிடிச்சுட்டாரு இந்த வன்னியகுல மஹாத்மா! ஆமா, இணையதளத்தில் அல்லது விக்கில நக்கி நக்கிப் பார்த்து  சாதி கண்டுபிடிச்சால் அப்படித்தான் ஏதாவது வரும்.

சரி அப்படியே தலித்தா இருந்துட்டு போகட்டும். நல்லதாப்போச்சு, தமிழ்நாட்டை ஒரு தலித் ஆளட்டுமே? நிச்சயம் தமிழ்நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழ் தலித் தமிழ்நாட்டை இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு ஆள முடியாது. இப்படி யாராவது  வந்து சினிமா மோகத்தை பயன்படுத்தி ஆண்டால்த்தான் உண்டு.  ர ஜ் னி யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, காமராஜ், கருணாநிதி, பன்னீர் செல்வம், எடப்பாடி போன்ற மேட்டுக்குடியிலிருந்து வராதவர்கள் ஆண்டதுபோல் ஒரு தலித் ஆள வழியுண்டாகியிருக்கிறது  நல்லதுதானே?. ஆக, அருளின் இந்தப் பொய்ப் பிரச்சாரம் 100% தலித் ஓட்டுக்களை ரசினி பக்கம் திசை திருப்பியதுபோல் ஆகப்போது. What a loser this guy is!

வேடிக்கை என்னனா, தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க சாதி அரசியல் பண்ணியது அருளின் வன்னியசாதிதான். சாதி வெறி நாடி நரம்பெல்லாம் ஊறியவர்கள் இவர்கள்னு நான் சொல்லணுமா என்ன? ரெண்டு நிமிடம் ஒருத்தனிடம் பேசினால் அவன் சாதிவெறி எந்தளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கும் மறத்தமிழ் சமுதாயத்தில் பொறந்து வளர்ந்தவன் நான் என்பதால், இவனுக மொகரைக்கட்டையைப் பார்த்தாலே தெரியும்.ஆனா இவனுகதான் "அவன் இந்த சாதி" "இவன் அந்த சாதி" தமிழ்நாட்டை வன்னியசாதிதான் ஆளனும்னு பதிவெழுதிக்கிட்டு திரிகிறானுக, வீணாப்போனவனுக!

Friday, June 2, 2017

பிராமண யோக்கியர்கள்!

பரமசிவம் சார் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கோபால கிருஷ்ண கோகலே நல்ல பிராமணர்னு காந்தி சொன்னதாக முடித்துள்ளார். பிராமணர்களில் யோக்கியர்களே இல்லையா?

சோ ராமசாமி, ஜெயலலிதா, ராஜாஜி, கமல்ஹாசன்,  டோண்டு ராகவன், சங்கராச்சார்யா, பாரதியார்  இவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான்.

இதில் யாரையுமே சுத்தமான யோக்கியன்னு சொல்லமுடியாதுதான்

சரி, பிராமணர்களை விட்டுவிட்டு திராவிடர்களில் சுத்தமான யோக்கியர்கள் இருக்காங்களா? னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா? கவனிக்கவும், அதுவும் கஷ்டம்தான்.

பிராமணர்கள் யோக்கியர்களாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு தேவையற்றது.

பிராமணர்களுடன் சேர்ந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனா என்ன இவர்களோடு வாழ்ந்து கொண்டே இவர்களை நம்பாமல், எந்நேரமும்  சந்தர்ப்பவாதியாக எப்படியும் சுயநலமாக மாறலாம் என்பதை மனதில் வைத்து இவர்களை நம்பாமலே இவர்களோடு "நண்பர்களாக" நடித்துக் கொண்டே வாழலாம். Keep your friends close but your enemies closerனு சொல்வதுபோல். நம்மில் பலர் அப்படித்தான் நடித்துக்கொண்டே இவர்களை நம்பாமல் இவர்களுடன் வாழ்கிறார்கள்.

அல்லது

இவர்களிடம் நேரிடையாகவே சொல்லிவிடலாம்.  வீணாக நடிக்காமல், நட்பு பாராட்டாமல், ஒதுக்கி வைத்து, "நமக்கும் உங்களுக்கும் ஆகாதுங்க. நீங்க ஏதாவது நாளைக்கு செய்யும்போது  நான் எதையாவது சொல்லிவிடுவேன். இதெதுக்கு நாம் பேசாமல் ஒதுங்கியே வாழுவோமே?  நீங்க, நீங்களாவே இருங்க! நான் நானாவே இருக்கேன். நடிக்காமல், ஒருவரை ஒருவர் நம்பாமல், பிடிக்காமலே சேர்ந்து வாழுவோமே?" என்று  தெளிவு படுத்திவிட்டு எதையும் மூடி மறைக்காமல், "அவர்களைப் பிடிக்காது" என்று அவர்களுக்குத் தெளிவாக சொல்லிவிட்டு எதிரிகளாகவே தொடர்ந்து  வாழலாம். பெரியார் வாழ்ந்ததுபோல்.


அல்லது மூனாவது வகை,

இவர்களை எந்த வகையிலும் பிரிக்காமல், நம்மைப் போலவே இவர்களையும் எண்ணி பிராமண முத்திரையைத் தவிர்த்து வாழலாம். அப்படி யாரும் வாழ்றாங்களா? னு எனக்குத் தெரியவில்லை! அப்படி வாழ்வதாகச் சொன்னாலும் நான் அதை நம்புவேனா? னு எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்டியாவது ஒரு வகையில் "தங்களை" நம்மிடம் இருந்து பிரித்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் னு நான் நம்புகிறேன். இந்த "நம்பிக்கை" என்னுடைய குறைபாடாகவும் இருக்கலாம் அல்லது  என் நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.

இன்னொரு உண்மை என்னவென்றால்

எந்த ஒரு நல்லவனும் அல்லது நண்பனும் ஒரு சில நேரம் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் தவறாகத்தான் தோனும். அந்த "நல்ல நண்பன்" பிராமணன் என்றாகிவிட்டால்  நம்மிடம் ஊறிப்போயி உள்ள "ப்ரிஜடிஸ்" "இவன் பிராமணன் என்பதால்தான் இப்படி நடந்து கொண்டான்" என்கிற ஒரு முத்திரையை நாம் குத்துவோம். நான் பார்த்தவரைக்கும் இதுபோல் எல்லா சாதியிலும் உள்ள நண்பர்கள் ஒரு நேரம் இல்லைனா இன்னொரு நேரம் நாம் எதிர்பார்ப்பது போலல்லாமல் "சுயநலமாக" நடந்து கொள்வது இயல்பு. அவர்கள் பிராமணரல்லாததால் நாம் அவர்களை "பிராமண முத்திரை" பதிக்க முடியாமல்ப் போய்விடுகிறது.

எப்படியோ நம்மிடம்  பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள்  அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும். திராவிடர்களைவிட "உயர்ந்த மனிதனாக" நம்மிடம் அவர்கள்  பல தருணங்களில் நடந்து கொண்டால்..

அப்படி எதுவும் அவர்கள் செய்வார்களா?

இல்லை "மனிதர்களைவிட பகவாந்தான் எனக்கு முக்கியம்" என்று இதுபோல் ஒரு "பிரமணத் துவேச ப்ரிஜடிஸை" அகற்ற முயலாமல், அதை சட்டை செய்யாமல்  இதேபோலே தொடர்வார்களா? என்பதை காலம்தான் சொல்லும்.