Thursday, December 7, 2017

க்ரிஸ்பர் பன்றி! Xenotransplant

இது ஒரு ஜெனடிக் டெக்னாலஜி. ஆமா திடீர்னு எனக்கு ஜெனடிக்ஸ்ல கன்னா பின்னானு ஆர்வம் வந்துவிட்டது. அதனால் இப்பதிவில் க்ரோமோசோம் உள்ளே நுழைந்து, அடினைன், குவானைன், தைமின், சைடோசைன் என்றெல்லாம் ஆரம்பிக்காமல் விசயத்தை சொல்லிடுறேன்.

கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட், ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்னு உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதுவும் அந்த ஃபீல்ட்ல ஏற்பட்ட முன்னேற்றம்தான்.

xenotransplant  என்றால்???

 மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் உடலுறுப்பை ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணிக்கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது.

இப்போ என்ன முயற்சி செய்றாங்க என்றால், மற்ற விலங்குகளின் உடலுறுப்பை மனிதனுக்கு ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண முயல்றாங்க. அதுதான் xenotransplant .

* பன்றிக்கு 19x2 =38 chromosomes.  மனிதனுக்கு  23x2 =46 chromosomes. அப்படி இருக்கும்போது இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்கிற கேள்வி உங்களுக்கு எழவேண்டும்.

* நம்முடைய உடலுறுப்புகள் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் 46 க்ரோமோசோம்கள் உண்டு. ரத்தம், தசை, முடி, கிட்னி, இதயம் எல்லாமே செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் 46 க்ரோமோசோம்கள் உண்டு. அதேபோல் பன்றியின் உடலை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு செல்லிலும் 38 க்ரோமோம்கள் உண்டு. இப்போ, ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு ட்ராண்ஸ் ப்ளாண்ட் பண்ணும்போதுகூட நெறையவே "மிஸ் மாட்ச்" ஆகிறது. அப்படியிருக்கும்போது  எப்படி 38 க்ரோமோசோம்கள் கொண்ட பன்றியின் கிட்னியை 46 க்ரோமோசோம்கள் கொண்டுள்ள மனிதனுக்கு எப்படிப் பொறுத்தமுடியும்?  என்றறெல்லாம் அவ நம்பிக்கையுடன் நீங்கள் கேள்விகள் எழுப்பலாம்.

 இன்றைய ஜெனட்டிக் இஞ்சினியரிங்க்ல நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைகிறது. ஏற்கனவே பன்றியின் இதய வால்வ் வை மனிதருக்கு பயன்படுத்துகிறார்கள்.

அதேபோல் பன்றியின் ஜீன்களை க்ரோமோசோம்களை மாற்றியமைக்க முடியுமா? ட்ரன்ஸ்ஜெனிக் விலங்குகள் உண்டு. எலிகளில் ஒரு சில ஜீன்களை அகற்றுவதெல்லாம் சாதரணமாக செய்கிறார்கள்.  மேலும் அறிவியலைப் பொறுத்தவரையில்  "optimism" மிகவும் அவசியம்

இதுபோல் தசைகளை, உடலுறுப்புகளை ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்ய முக்கியப் பிரச்சினை,  PERV என்கிற ஜீன்கள். Porcine endogenous retroviral elements (PERVs)  விலங்குகள் க்ரோமோசோம்களில் உண்டு. ஆனால் இந்த ஜீன்கள்  பன்றியின் உடலுறுப்பை மனிதனுக்கு பொறுத்தும்போது  மனித உடம்பில்  பன்றியின் க்ரோமோசோம் மூலம் நுழைந்துவிட்டால் மனிதனுக்கு பல பிரச்சினைகள். அதனால் இந்த ஜீன்களை அகற்ற வேண்டும். அப்படி, அகற்றப்பட்டு உருவாக்கப் பட்ட பன்றியின் படம்தான் கீழே உள்ள பன்றியின் படம்.
Image result for crispr pig science

அதை எப்படி உருவாக்கினார்கள் என்பது கீழே சொல்லப் பட்டிருக்கு

என் தோழி ஒருத்தி சொல்லுவாள்.  intelligent அப்படினா என்ன? என்றால் one it destroys its surroundings. மனிதந்தான் இப்போதைக்கு அந்த இண்டெல்லிஜென்ட். அவனுக்கு பன்றியெல்லாம் ஒரு உயிர் இல்லை. அதை என்ன வேணாப் பண்ணி, இவன் வாழணும். மனித உயிர்தான் முக்கியம்! அதைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் செய்கிறார்கள். I love genetics but I find human beings (including geneticists) are really funny! :)

4 comments:

Angelin said...

so now humans are going to use pigs as source of their organs :(
shame on these Homo sapiens :(
மனுஷன் மோசமான வேட்டை மிருகம் இன்னிக்கு பன்றி நாளைக்கு சக மனுஷனையே கொன்னுபோட்டு ஹெட் ட்ரான்ஸ்பிளான்ட் செஞ்சி வாழத்துடிப்பான்

G.M Balasubramaniam said...

அண்மையில் ஒவரி ட்ரான்ஸ்ப்லாண்ட் செய்து குழந்தை பிறந்த செய்தி படித்தேன்

வருண் said...

***Angelin said...

so now humans are going to use pigs as source of their organs :(
shame on these Homo sapiens :(
மனுஷன் மோசமான வேட்டை மிருகம் இன்னிக்கு பன்றி நாளைக்கு சக மனுஷனையே கொன்னுபோட்டு ஹெட் ட்ரான்ஸ்பிளான்ட் செஞ்சி வாழத்துடிப்பான் ***

வாங்க ஏஞ்சலின்! உண்மைதாங்க, மனிதன் ஒழிந்தால் இவ்வுலகில் எல்லாப் பிரச்சினைகளும் பறந்து போயிடும்.

இதில் வேடிக்கை என்னனா இவந்தான் உலகைக் காப்பதுபோல் நினைத்துகொண்டு அறியாமையில் வாழ்கிறான் மனிதன்! :)

வருண் said...

***G.M Balasubramaniam said...

அண்மையில் ஒவரி ட்ரான்ஸ்ப்லாண்ட் செய்து குழந்தை பிறந்த செய்தி படித்தேன் ***

பகிர்தலுக்கு நன்றி, ஜி எம் பி சார்! :)