Friday, November 2, 2018

பசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்?

ஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால்!

அதாவது  அந்தப் பாவத்தைக் கழுவ!  நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை! உன்னை ஏமாற்றாமல் எங்களால் வாழ இயலாது என்று வணங்குகிறார்கள்.

இந்த உண்மை, பல இந்துக்களுக்குத் தெரியாது. என்னவோ நம்மதான் ரொம்ப யோக்கியம், ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு அறியாமையில் வாழ்கிறார்கள். என்னவோ தன் கன்றை விட்டுவிட்டு இவர்கள் மேல் உள்ள அன்பால் பசு தன் பாலை இவர்கள் வாயில் வந்து ஊட்டிவிடுவதுபோல் எண்ணிக்கொள்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானத்தில் "மாடல் அனிமல்ஸ்" என்பார்கள்.  அதாவது "மனித இனத்தை" காக்க (இந்த நாசமாப் போன இனம் கூண்டோட செத்தால் என்ன இப்போ?) பல உயிர்களை பலிகொடுப்பது, சித்ரவதை பண்ணுவது, ஜெனெடிக்ஸ் ரிசேர்ச் செய்கிறேன் என்று இன்செஸ்ட் உறவு கொள்ள விடுவது. இத்தனை கேவலமான விசயங்களையும் மற்ற உயிரினங்களை தம்மைப்போல் எண்ணாமல் செய்வது கொடூரமான அறியாமையின் உச்சத்தில் வாழும் மனித இனம்.

யாரைக் காப்பாத்த எலியைப் பலி கொடுக்கிறார்கள்? மனிதனையும் மனிதத்தையும்? இல்லை, உங்களையும் என்னையும்தான்.

Monument to lab mouse-1.JPG
தன்னை பலிகொடுத்து உங்களை வாழ வைக்கும் "யோடா"



 .

Image result for experimental mice
என்ன அநியாயம்!! இவன் வாழனும்னு எத்தனை எலிகளை பலிகொடுக்கிறார்கள் படுபாவிகள்!

யாரும் யோக்கியன் இல்லை!

உயிர்வாழ இன்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மருந்துகள் இதுபோல்  லட்சகணக்கான எலிகள், முயல்கள் போன்றவைகளை பலிகொடுத்து, அந்தப் பாவத்தில் உருவான மாத்திரைகள்தான் உங்கள் வாழ்நாளை அதிகப்படுத்தி மனித இனத்தை வாழ வைக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்!


Image result for mouse tortured in experiments
மற்ற உயிரினங்களின் உயிர் மனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல ! என்ன ஒரு சுயநலம்!



நீங்கள் உயிர்வாழ, உங்களுக்காக பலி கொடுக்கப்பட்ட எலிகளை வணங்கினால் உங்க பாவத்தைக் கொஞ்சம் கழுவலாம்.

நாளையிலிருந்து நீங்கள் உருவாக்கிய பகவானை ஒதுக்கி வைத்துவிட்டு எலிகளை வணங்குவது கொஞ்சமாவது அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது.

தான் உயிர்வாழ பல உயிர்களை பலிகொடுத்து, சித்ரவதை செய்யும் மனித இனம், மனிதம், கடவுள், சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றுவது சுத்தமான உளறல்!

1 comment:

G.M Balasubramaniam said...

ராஜஸ்தானில் எங்கோ எலிகளுக்காக கோவில் கட்டி வழிபாடு உண்டாமே