Monday, May 27, 2019

அரசியல் எனக்குத் தொழில் அல்ல?!

ஆக, மோடி ஆட்சிக்கு வந்தாச்சு. இனிமேல் தமிழ்நாட்டு எம் பி க்கள் மோடி ஆட்சிக்கு அவசியம் இல்லை. இது ஒருவகைக்கு நல்லதுதான். மோடியைப் பொருத்தவரையில் தமிழ் நாட்டு அரசியலில் உள் நுழைந்து யாரையும் மிரட்டாமல், ஒரு நல்ல ஆட்சி நடத்த விடலாம். அல்லது இவனுக என்னனு போறானுகனு கண்டுக்காமல் விட்டு விடலாம். மோடியின் மிகப்பெரிய வெற்றீக்கு என்ன காரணம்னு யோசித்துப் பார்த்தால்..உலகம் முழுவதும் இப்போது ரைட் விங் பாலிட்டிக்ஸ்தான் வொர்க் அவ்ட் ஆகுது. இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கானு தெரியவில்லை, ஆனால் அதுதான் இன்றய நிலைப் பாடு. மேலும் தனிப்பட்ட முறயில் மோடி எந்த ஊழல்லயும் மாட்டியதாகத் தெரியவில்லை.

2000 ரூபாய் ஒழிப்பு, அதார் அட்டை, ஜி எஸ் டி என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் நம் நாட்டுக்குத் தேவையான ஒன்னு.
நம்ம நாட்டில் கரப்ஷனை ஒழிக்க இதெல்லாம் ஒரு சின்ன முயற்சினு பாசிடிவாக்கூட எடுத்துக்கலாம். வரிப் பணம் இருந்தால்தான் நாட்டுக்கு ஏதாவது செய்ய முடியும். ஆக மோடியின் இதுபோல் செயல்பாடுகள் வடநாட்டவரை கவர்ந்துள்ளது. எது எப்படியோ மோடி 5 ஆண்டு ஆளட்டும்னு மெஜாரிட்டி இந்திய மக்கள் விருபுறாங்க. சரி ஆளட்டுமே?னு பெரியமனதோடு ஒத்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

************************

தலைப்புக்கு வருவோம். அரசியல் எனக்குத் தொழில் இல்லை? அப்போ அரசியல் என்ன உனக்கு? எனக்குப் புரியவில்லை. நடிப்புதான் எனக்குத் தொழில். இந்தியன் 2, பிக் பாஸ் 3னு நான் தொழில் நடத்தினால், எனக்கு வருமானம் மட்டுமே வரும். நஷ்டம் வராது. அதே நேரத்தை நான் அரசியலில் செலவழித்தால் (நேரம் செவழிப்பதே பணம் செலவு செய்வது போல்தானே?), தோல்வியைத் தழுவும்போது எனக்கு நஷ்டம் மட்டுமே வருகிறது? 

சரி உன்னை விடு. உன்னை நம்பி கட்சில சேர்ந்து  எலக்சன்ல நின்னு டெபாசிட் போனவன் எல்லாம்? அவனுக்கும் இது தொழில் இல்லையா? சப்போஸ் அவன் வெற்றீ பெற்றூ எம் எல் எ அல்லது எம் பி ஆகியிருந்தால்? அவனுக்கு அது தொழில் தானே? ஆக இப்போ மண்ணக் கவ்வியதால் இது உங்க யாருக்கும் தொழில் இல்லை? தொண்டா? சரி என்ன எழவோ. வாங்கின அடியில் உளற ஆரம்பிச்சுட்ட!

*************************

ஆமைக்கறீ சாப்பிட்டேன்னு சொன்னவன் என்ன சொல்றான்.  
ம நீ ம தலைவர் வெள்ளயா இருக்கனால அவருக்கு ஓட்டுப் போட்டுட்டாங்களாம்ப்பா?  

"நாம் தமிழர்"ணு நீயும் கழுதை மாதிரி கத்தினாலும்.  


கொஞ்சம் இரு! நான் தமிழ்ந்தான் அதனால என்ன இப்போ? தமிழுணர்வ தூண்டிவிட்டு அரசியல் பண்ற உன்னைப்போல் ஈனத்தமிழனுக்கெல்லாம் ஓட்டுப் போட மாட்டோம். மேலும் ஆமைக் கறீ தமிழர்கள் உணவு கெடையாது. உன் டி என் எ வை அனலைஸ் பண்ணீ நீ தமிழனானு மொதல்ல பார்க்கணூம். எங்கேயோ தவறூ நடந்து இருக்குனு தமிழ் மக்கள் நம்புறாங்க.

ஆமா சப்போஸ் ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு 5% ஓட்டு வாங்கினால் என்ன சொல்லுவ? வெள்ளனு சொல்ல முடியாதே? உன்னைவிட் வெள்ளனு சொன்னாலும் சொல்லுவ? ஆமக்கறீ சாப்பிட்டு ஆம மாதிரியே ஆயிட்ட!



No comments: