Sunday, February 27, 2022

கல்லாததும் பெறாததும் (2)

 எப்போ உங்களுக்கு போர் அடிக்கும்? பொதுவாக லைக்-மைண்டெட் ஆட்கள்தான் நண்பர்களாக முடியும். நம்ம பக்கத்தில் வீட்டில் வளர்ந்தவராக இருந்தாலும் கொஞ்சமாவது டேஸ்ட் ஒத்துப் போகணும். 

அப்படினா?

"ஒரு சிலருக்கு க்ரிக்கட்தான் பிடிக்கும். அவங்க க்ரிக்கட் பிரியர்களோடதான் விரும்பி பேசுவாங்க பழகுவாங்க. கால்ப்பந்து அல்லது அமெரிக்கன் ஃபுட்பால் விரும்பிப் பார்க்கிறவங்க கூட பேச இண்டெரெஸ்ட் இருக்காது"

அது தெரியும்.

"ஒரு சிலருக்கு அழகுக்குறிப்புகள், மேக் அப், இப்படிதான் பேசப் பிடிக்கும். அதேபோல் இண்டெரெஸ்ட் உள்ளவங்களோட ஒரு பார்ட்டி அல்லது கெட் டுகெதெர்ல பேசுவாங்க. ஸ்போர்ட்ஸ்னா என்ன?னு கேப்பாங்க"

அதுவும் தெரியும்

"ஒரு சிலர் இந்துமதப் பெருமை. அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம மதம்தான் உயர்வு னு சொல்லிக்கொண்டு  போர் அடிப்பாங்க. ஐயா எனக்கு கடவுள் அல்லது மத நம்பிக்கை இல்லைங்க  னு சொன்னாலும் இவனுக விடாமுயற்சி மாளாது. போட்டுக் கொல்லுவானுக. பகவத் கீதைல சொல்லியிருக்கு, அங்க சொல்லியிருக்கு இங்க சொல்லி இருக்கு னு"

அதுவும் தெரியும்.

இதுபோல் நாம் ஒன்னுகூடும் இடத்தில் லைக்-மைண்டெட் மக்களோடதான் நாம் பொதுவாகப் பழகுவோம்.

பொதுவாக தாய் தந்தையரை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை. நண்பர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஓரளவுக்கு லைக்-மைன்டெட் ஆட்களோடதான் பழகுவோம்.

இருந்தாலும் விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு உள்ளவங்க, கவிதை கட்டுரையில் ஆர்வம் உள்ளவர்களோடு நண்பர்காக இருக்க முடியாதுனு சொல்லீட முடியாது. நிலவு என்றால் கவிஞர் பார்க்கும் விதம் வேறு. விஞ்ஞானி பார்க்கும் விதம் வேறு. எனக்கு இங்கே பெரிய மிஸ்மேட்ச்தான் தெரியுது.

ஆனால் ஒரு சில வியோடோக்களும் உண்டு..

ஃபட் னு ஒரு சமையல் சம்மந்தமா வீடியோ வெளியிடுறவன் இருக்கான். கன்னடிகா, ஆனால் தமிழ்ல்ல பேசுவான். அவன் வந்து வெஜிடேரியன், ப்ராமின்னு நினைக்கிறேன். ஆனால் நான்-வெஜிடெரியன் எல்லாம் குக் பண்ணுவான். ஆனால் நான்-வெஜிட்டேரியனை குக் பண்ணி டேஸ்ட் பண்ணி பார்க்க மாட்டான்!! இவன் எதுக்கு நான் வெஜிடேரியன் குக் பண்ணுறான். தன் சமையலை டேஸ்ட் பண்ணிப் பாக்கக்கூட அருகதை இல்லை? எல்லாம் பணத்துக்காகத்தான் . பிஸினெஸ். வயித்து பிழைப்பு. அவனை பார்க்கும்போது எனக்கெல்லாம் ஓங்கி அறையணும் போல இருக்கும். 

எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பக்கா வெஜிடேரியன். நம்ம ஊர் ப்ராமின். நான் எங்கேயாவது ட்ரிப் போகும்போது ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்ட்ல நிறுத்தி ஏதாவது சாண்ட்விச் அல்லது பர்கர் சாப்பிடுவதுண்டு. இவர் என்ன பண்ணுவார்னா, ட்ரிப் பத்தி சொல்லும்போது.  என்ன சாப்பிட்டீங்க என்பார். பர்கர் கிங் ல நிறுத்தினேன். சாப்பிட்டேன்னா..பர்கர் கிங்ல என்ன சாப்பிட்டீங்க?னு கேப்பார்.

எனக்கு கடுப்பாகும்.. You are a PROUD vegetarian.  You look down on people who eat meat. I KNOW THAT. Then why the fuck you care what I eat?!! You fucking IDIOT! 

இப்படித்தான் என் மனதில் தோணும். இருந்தாலும் நினைக்கிறதை எல்லாம் சொல்ல முடியாது இல்லையா? நடிப்பதே வாழ்க்கை. நான் பதில் சொல்லாமல் அடுத்த டாப்பிக் போயிடுவேன். அல்லது ஏதோ சாப்பிட்டேன் விடுங்க னு சொல்லுவேன். பிடிக்காத ஒண்ணை தவிர்க்காமல் ஏன் இப்படி அநாகரிகமாக நடந்துக்கிறாங்க னு கடுப்பாகும். இவனுகள  புரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆமா நண்பர்னு சொன்ன? னு கேக்கிறீங்களா? 

இதுபோல் உங்களுக்கும் நண்பர்கள் இருக்கத்தான் செய்வாங்க. இல்லையா? நான் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும்?

---------------------------

பெற்றவர்கள் நடத்தை பிள்ளைகளை பாதிக்குமா?"

நான் பார்த்த வரைக்கும் தான் உயர்வாக நினைக்கும் தன்னைப் பெற்றவர்கள் மிஸ் காண்டக்ட் பிள்ளைகளை அதிகம் பாதிக்கும்.

அப்பா சிகரெட் குடிப்பார், தண்ணி அடிப்பார் னா பலருக்கும் இது இரண்டும் பெரிய கெட்ட பழக்கமாகத் தோணாது. 

ரஜினி ஸ்டைலா சிகரெட் குடிச்சதாலதான் எல்லாரும் கெட்டுப் போயிட்டானுகனு சொல்றதெல்லாம் புல்ஷிட். என் வாதம். நான் ஸ்மோக் பண்ணுறது இல்லை. நீ கமல், எம் ஜி ஆர் ரசிகன் என்ன மயிறுக்கு ஸ்மோக் பண்ணுறனு கேட்டால் இவனுகள்ட்ட இருந்து பதில் வராது. எவனையாவது கையை காட்டணும், தானே அதற்கு விதிவிலக்காக இருந்தாலும். இவனுகள என்ன பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு சிலர் இப்படித்தான் இருப்பாணுக. சகிச்சுக்கிட்டுப் போப்பா.

எனக்குத் தெரிய ரெண்டு மூனு கேஸ் இருக்கு.அப்பா அம்மா செக்சுவல் மிஸ்காடக்ட் ஆல் பிள்ளைகள் பயங்கரமாக பாதிக்கப்பட்டு  இருக்காங்க. அவங்க வாழ்க்கை கம்ப்ளீட்லி ருய்ண்ட் னு சொல்லலாம். எதை எதையோ நியாயப் படுத்துவாங்க. முக்கியமாக அவங்க  மாரல்ஸே "பக்ட் அப்"  ஆன மாதிரி தோணும். 

பெற்றவ்ர்களுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கு, மனம்போல் வாழ முடியாது. வாழ்ந்தால் உன் பிள்ளை வாழ்க்கை நாசமாப் போயிடும். 

இருந்தாலும் அவன் அவன் செய்றதைத்தான் செய்வான். தவறுனு தெரிந்தாலும் சிற்றின்பத்திற்காக  இதுபோல் தவறுகள் செய்வதுதான் இயற்கை. வீக்னெஸ் என்பார்கள். அது மனிதர்களுக்கு நெறையவே உண்டு. .பகுத்தறிதல் எல்லாம் ஸ்ளோ ப்ராசஸ். ஹார்மோன்ஸ் வேலை செய்யும் விதம் ரொம்ப ரொம்ப ஃபாஸ்ட். என்ன செய்றது? செய்றதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ பக்தி, பாவியாயிட்டேன்னு குஞ்சி எந்திரிக்காத வயதில் திருந்தி அறிவுரை சொல்றத்? என்னை மாதிரி இருக்காதே னு. ஆக இவனுகளால கட்டுப்படுத்த முடியாது, இவனுக ஆடி அடங்கியவுடன் இது சரியில்லைனு அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுறது. இதுதான் சாதாரண மனிதர்கள் காலங்காலமாக வாழும் வாழ்க்கை. இது தொடரும்..

No comments: