Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Friday, June 20, 2008

மேலும் எங்களைப்பற்றி...

எங்களுக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. :) முக்கியமாக இங்கே லதானந்த் சாரை குறிப்பிட வேண்டும், அவர் தான் முதன் முதலில் வரவேற்பளித்து இந்த வலைப்பூவை அவருடைய வலைப்பூவில்:lathananthpakkam.blogspot.com அறிமுகப்படுத்தினார். ஆனந்த் சாரின் வலைப்பூவை படித்து தான் எங்களுக்கும் இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் எண்ணம் வந்தது. மேலும் நான் எழுதிய பல பதிவுகளுக்கு டிப்ஸ் கொடுத்ததும் லதானந்த் சார் தான். அவர் மீண்டும் எழுத ஆரம்பித்தால், அவருடைய வாசகி என்ற முறையில் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.

இங்கே காதலர்கள் எழுதுகிறோம் என்பதால் சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கிறது, அப்படி வருவது இயல்பு தான். அனைவர் சந்தேகத்தையும் உடனடியாக தீர்ப்பது கடினம், ஏனென்றால் இது வலையுலகம். வலையுலக கருத்து சுதந்திரம் தந்த தைரியத்தில் நாங்களும் எங்களைப்பற்றி எழுத வலைப்பூவை தேர்ந்தெடுத்தோம். பிறகென்ன, காதல் அனுபவங்களை வீட்டிலா சொல்ல முடியும்? நண்பர்களிடமும் முழுவதுமாக பகிர்ந்துக்கொள்வது கடினம். காதலைப்பற்றி மட்டும் அல்ல, எங்களை பாதித்த அனைத்து எண்ணங்களைப்பற்றியும் எழுதலாம் என நினைக்கிறோம்.

எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் நிச்சயம் எங்கள் இரண்டு பேரையோ அல்லது என்னை மட்டுமோ(வழக்கமா வருணை விட என்னை தான் நிறைய பேருக்கு பிடிக்கிறதாம் - ஒரு மரத்தடி ஜோசியர் சொன்னார் :)) பிடிக்கும். மேலும் எங்களுடைய தனித்துவம் புரியும். நாங்கள் இருவருமே ஒருவர் கருத்தை மற்றொருவர் மீது திணிப்பதில்லை. அவருக்கென்று தனி கருத்துக்களும் எனக்கென்று தனி கருத்துக்களும் இருக்கின்றன.

எனவே, கொஞ்சம் தயவு செய்து பொறுமை தேவை வலையுலக மகாஜனங்களே!பொறுமை எருமையை விட பெரியது. எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும், அது மட்டும் உறுதி. முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யலாமே? எங்களை தொடர்ந்து கவனியுங்கள் பிடிச்சிருந்தால் பழகலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் :) என்ன சொல்றீங்க?

Monday, June 2, 2008

வணக்கம்: வருண்

வணக்கம்!

உன்னுடைய அழகான அறிமுகத்திற்கு நன்றி, கயல்!

கயல் கூறியதுபோல், இணையதளங்களின் மூலம் எங்கள் கருத்துக்களை சொல்வதற்காக இந்த ப்ளாக். கயலைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அது போல் வாசகர்களை கஷ்டத்திற்கு ஆளாக்க இஷ்டமில்லை.

எனக்கு தற்போது கொஞ்சம் வேலைப்பளு அதிகம். ஆதலால், அதிகமாக எழுத இயலவில்லை.

மற்றபடி என் என்புக்குரிய கயலுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வணக்கம்!

-வருண்

Friday, May 30, 2008

வணக்கம்: கயல்விழி

இது என்னுடைய முதல் அறிமுகப்பதிவு. வருணும், நானும் உயிருக்கு உயிரான(வழக்கமாக எல்லா காதலர்களும் இதையே தான் சொல்வார்கள் இல்லையா? :)) காதலர்கள். இரண்டு பேருக்குமே நிறைய பொதுவான இண்ட்ரெஸ்ட்ஸ் உண்டு. அதில் ஒன்று, எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இப்படி இணையதளத்தில் எழுதுவது. இங்கே எங்களின் காதல் நிகழ்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். வருண் தற்போது ஊரில் இல்லாததால், திரும்பியப்பிறகு எழுதத்துவங்குவார். என்னை விட வருணின் பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கும், அவர் இயல்பிலேயே ரொம்ப சுவாரஸ்யமான மனிதர். வேலைகளும், பொறுப்புகளும் மட்டும் தடுக்கவில்லை என்றால் இருபத்தி நாலு மணி நேரமும் இவருடன் பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் என்ன செய்ய, நேரம் தான் எனக்கு எதிரியே.
- கயல்