Friday, May 30, 2008

வணக்கம்: கயல்விழி

இது என்னுடைய முதல் அறிமுகப்பதிவு. வருணும், நானும் உயிருக்கு உயிரான(வழக்கமாக எல்லா காதலர்களும் இதையே தான் சொல்வார்கள் இல்லையா? :)) காதலர்கள். இரண்டு பேருக்குமே நிறைய பொதுவான இண்ட்ரெஸ்ட்ஸ் உண்டு. அதில் ஒன்று, எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இப்படி இணையதளத்தில் எழுதுவது. இங்கே எங்களின் காதல் நிகழ்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். வருண் தற்போது ஊரில் இல்லாததால், திரும்பியப்பிறகு எழுதத்துவங்குவார். என்னை விட வருணின் பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கும், அவர் இயல்பிலேயே ரொம்ப சுவாரஸ்யமான மனிதர். வேலைகளும், பொறுப்புகளும் மட்டும் தடுக்கவில்லை என்றால் இருபத்தி நாலு மணி நேரமும் இவருடன் பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் என்ன செய்ய, நேரம் தான் எனக்கு எதிரியே.
- கயல்

28 comments:

லதானந்த் said...

அன்புடையீர்! தங்கள் மின்மடல் கண்டேன். உங்களுடைய காதல் கல்வெட்டு 1 ன் ஒரு பகுதியை எனது பிளாக்கில மறு பதிவு செய்துள்ளேன்.
பார்க்கவும்்

Kayal said...

நன்றி லதானந்த் சார். எதற்காக என்னை "அன்புடையீர்" என்று ஏதோ கல்யாண பத்திரிக்கையில் போடுவது மாதிரி விளித்திருக்கிறீர்கள்? :):)என் வலைப்பூவை உங்கள் ப்ளாக்கில் குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி.

varuN said...

வணக்கம் கயல்!!!

வாழ்த்துக்கள்!

-வருண்

Kayal said...

எதுக்காக எனக்கு வாழ்த்து?

கயல்விழி said...

எதற்கு எனக்கு வாழ்த்து?

varuN said...

Kayal:
I am not able to type in thamizh for now! :(

The blog looks great, kalyal.

I just formally wished you for that! :)

varuN said...

வணக்கம்!

நான் வருண். கயல், என் உயிருக்குயிரானவள்.

நான் எழுதிய கதையை அழகாக திருத்தம் செய்து, எழுத்துப்பிழைகளை சரிசெய்து மற்றும் என் அரைகுறைத்தமிழையும் சரி செய்து பதிவு செய்திருக்கிறாள், கயல்.

நன்றி கயல்! :)

---------
லதானந்த் அவர்கள் இதை தன் பிளாக்கில் பதிவு செய்தமைக்கும் நன்றி

-வருண்

கயல்விழி said...

Hold your நன்றி please. அதற்கு பதில் வேறு ஏதாவது கேட்கட்டுமா?

varuN said...

என்ன வேண்டும் கயல்?

ஒரு நல்ல கதை எழுதட்டுமா? உன்னையும் என்னையும் கற்பனை நாயகி நாயகர்களாக வைத்து?

இல்லைனா வேற என்ன வேணும், கயல்?

Ask me! :)

கயல்விழி said...

கைகேயி மாதிரி தேவையான நேரத்தில் கேட்கிறேன் :)

varuN said...

இது நியாயமா, கயல்?

நான் என்ன தசரதனா?

அது சரி, கைகேயி உன்னைப்போல் பேரழகியா என்ன? :)

varuN said...

இது நியாயமா, கயல்?

நான் என்ன தசரதனா?

அது சரி, கைகேயி உன்னைப்போல் பேரழகியா என்ன? :)

நிலா said...

உஸ்ஸ் அப்பா லவ்ஸ்க்கு ஒரு ப்ளாக்கா? சூப்பரா இருக்கு...தூள்...

சரி குட்டிபாப்பாவுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை. வருண் மாமா அண்ட் கயல் அத்தை வாழ்த்துக்கள்,

பை பை

கயல்விழி said...

//அது சரி, கைகேயி உன்னைப்போல் பேரழகியா என்ன? :)//

வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே இவளுக்கு எப்படி எல்லாம் ஐஸ் வைக்கலாம் என்று உட்கார்ந்து யோசிப்பீங்களோ :)

கயல்விழி said...

//உஸ்ஸ் அப்பா லவ்ஸ்க்கு ஒரு ப்ளாக்கா? சூப்பரா இருக்கு...தூள்...

சரி குட்டிபாப்பாவுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை. வருண் மாமா அண்ட் கயல் அத்தை வாழ்த்துக்கள்,

பை பை//

நன்றி குட்டிப்பாப்பா :). சரி, உங்க வீட்டில் பேரண்ட்ஸ் யாராவது இருந்தால் அனுப்பு ஓகேவா?

தமிழன்... said...

வாழத்துக்கள் காதலர்களே...

துளசி கோபால் said...

இது என்னம்மா புதுசா இன்னொரு 'கயல்'?

வலை உலகில் வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

வரட்டுமா கயலம்மா?:-)))

கயல்விழி said...

நன்றி தமிழன் :)

//இது என்னம்மா புதுசா இன்னொரு 'கயல்'?

வலை உலகில் வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

வரட்டுமா கயலம்மா?:-)))//

உலகத்தில் ஒரே ஒரு கயல் தான் இருக்கனுமா துளசி சார்? :)

வருகை தந்ததுக்கு நன்றி

துளசி கோபால் said...

//துளசி சார்? :)//

இப்படிப் 'பால்' மாறாட்டம் பண்ணிட்டயேம்மா......(-:

இரண்டாம் சொக்கன்...! said...

மேட்டர் நல்லாருக்கு..ஆனா பேக்கிரவுண்ட் சரியில்லையே....

பின்னூட்ட கலர மாத்தலாமே...ஒரே வெள்ளெழுத்தா இருக்கு.

லவ்வோ லவ்வுன்னு லவ்வி...அதையெல்லாம் இங்கன போட்டு நெறயப்பேர் வயித்தெறிச்சல கொட்டிக்க வாழ்த்துகள்....

நல்லாருங்கப்பா.....

இரண்டாம் சொக்கன்...! said...

அப்பால, உங்க பேர்ல ஏற்கனவே ஒரு சீனியர் இருக்காங்க...

பெயர் குழப்பம் வராம இருக்க ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிங்க...

கயல்விழி said...

//இப்படிப் 'பால்' மாறாட்டம் பண்ணிட்டயேம்மா......(-://

சாரி துளசி மேடம், கொஞ்சம் குழம்பிட்டேன். :)

கயல்விழி said...

//மேட்டர் நல்லாருக்கு..ஆனா பேக்கிரவுண்ட் சரியில்லையே....

பின்னூட்ட கலர மாத்தலாமே...ஒரே வெள்ளெழுத்தா இருக்கு.

லவ்வோ லவ்வுன்னு லவ்வி...அதையெல்லாம் இங்கன போட்டு நெறயப்பேர் வயித்தெறிச்சல கொட்டிக்க வாழ்த்துகள்....

நல்லாருங்கப்பா.....//

பின்னூட்ட கலரை மாத்தியாச்சு. :)

வயிறெரிச்சலா? வீட்டில் தான் சொல்ல முடியாது, அதற்கு தான் ப்ளாகிலாவது சொல்லலாம் என்ற புது முயற்சி. :)

மேலும் அதுக்காக மட்டும் இல்லை, அது தவிர நிறைய மேட்டர்ஸ் எழுதலாம் என்று நினைக்கிறோம்.

கயல்விழி said...

//அப்பால, உங்க பேர்ல ஏற்கனவே ஒரு சீனியர் இருக்காங்க...

பெயர் குழப்பம் வராம இருக்க ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிங்க...//

சில இடத்தில் பார்த்தேன், அவங்க கயல்விழி முத்துலட்சுமி. நான் வெறும் கயல்விழி தானே? வேண்டுமானால் கயல்விழி ஜூனியர் என்று அழைக்கலாம். :)

மங்களூர் சிவா said...

/
இது என்னம்மா புதுசா இன்னொரு 'கயல்'?

வலை உலகில் வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

வரட்டுமா கயலம்மா?:-)))
/

/
அப்பால, உங்க பேர்ல ஏற்கனவே ஒரு சீனியர் இருக்காங்க...

பெயர் குழப்பம் வராம இருக்க ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிங்க...

/


நானும் எங்க அக்கா ப்ளாகுனு நெனைச்சிதான் எட்டி பாத்தேன்.

வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

எனக்கு என்னமோ இது சரியா படலயே :)))

எதாவது ஸ்பிலிட் பர்ஸனாலிட்டி மேட்டரா ???

செந்தழல் ரவி said...

ஏன் அப்படி சொல்றேன்னா...

லவ் பன்றவன் எதுக்கு ப்ளாக் எல்லாம் ஆரம்பிச்சு டைமை வேஸ்ட் பண்ணனும் :) கிகிகி

கயல்விழி said...

வணக்கம் செந்தழல் ரவி

இந்த கேள்விகள் முன்பே வந்து, விளக்கம் அளித்தேன்.

நேரம் இருக்கும் போது சில பதிவுகளை படித்துப்பார்த்தீர்கள் என்றால் இருவருக்கும் இருக்கும் வித்யாசம் புரியும். வருகைக்கு நன்றி