Showing posts with label எ வி எம். Show all posts
Showing posts with label எ வி எம். Show all posts

Monday, May 4, 2009

“ரஜினி - எ வி எம்” மின் கெமிஸ்ட்ரி!

திரையுலகில் எ வி எம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். இவர்கள் சிவாஜி, எம் ஜி ஆர், கமல், ரஜினி என்று எல்லா பெரிய நடிகர்களையும் வைத்து படம் தாரித்துள்ளார்கள்.

அமரர் எம் ஜி ஆர், எ வி எம் முடன் ஒரே ஒரு படம்தான் செய்தார். (சுரேஷ் பின்னூட்டத்தில் சொன்னதற்கு அப்புறம், சரிசெய்யப்பட்டது :-))) )

* அன்பே வா (1966).

அன்பே வா எம் ஜி ஆர் படங்களில் வித்தியாசமான படம் மட்டுமன்றி இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். இருந்தபோதும் அதன்பிறகு எம் ஜி ஆர் படம் எதுவும் எ வி எம் எடுக்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி யே எ வி எம் தயாரிப்புதான். பிறகு

* பார்த்தால் பசி தீரும் (1962, வெற்றிப்படம்),

* பச்சை விளக்கு (1964, வெற்றிப்படம்),

* உயர்ந்த மனிதன் (1968, வெற்றிப்படம்)

போன்ற படங்களை எ வி எம் சிவாஜியை கதாநாயகனாக வைத்து தயாரித்தது. உயர்ந்த மனிதனுக்குப் பிறகு வேறு படம் எடுத்ததாக தெரியவில்லை.


கமலுடைய முதல்ப் படம் * களத்தூர் கண்ணம்மா எ வி எம் தயாரிப்பு. பிறகு

* சகலகலா வல்லவன் (1982, வெள்ளிவிழாப்படம், வசூலில் சாதனை புரிந்தது)

* தூங்காதே தம்பி தூங்காதே (1983, வெற்றிப் படம்) போன்ற பெரிய வெற்றிப்படங்களை எ வி எம் தயாரித்தது.

அதன் பிறகு

* பேர் சொல்லும் பிள்ளை (1987) என்கிற படம் தயாரித்தது. இது அவ்வளவு வெற்றியடைய வில்லை. அதன் பிறகு கமல் எ வி எம் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கமல் மசாலா படமே நடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.


எ வி எம் ரஜினியை வைத்து எடுத்த முதல்ப்படம் * முரட்டுக்காளை. இது மிகப்பெரிய வெற்றிப்படம். ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் எ வி எம் தயாரித்த இந்தப் படம் முக்கியமான இடம் பெறும். நீண்ட இடைவெளிக்குப்பிறகு படம் தயாரிக்க முடிவு செய்த எ வி எம் ரஜினியை வைத்து எஸ் பி எம் இயக்க, இளையராஜா இசையமைக்க, ஜெய்சங்கர் முதல் முறையாக வில்லனாக அறிமுகமாக வெளிவந்த படம்தான் * முரட்டுக்காளை! இது வரலாறு காணாத வெற்றி பெற்றது! ரஜினிக்கும் சரி, எ வி எம் க்கும் சரி இது ஒரு பெரிய வெற்றிப்படம். இதை அடுத்து ரஜினியை வைத்து எ வி எம் தயாரித்த படங்கள்,

* போக்கிரி ராஜா (1982, வெற்றிப்படம்)

* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)

* நல்லவனுக்கு நல்லவன் (1984, பெரிய வெற்றிப்படம்)

* மிஸ்டர் பாரத் (1986, வெற்றிப்படம்)

* மனிதன் (1987, வெள்ளிவிழா கொண்டாடிய படம்)

* ராஜா சின்ன ரோஜா (1989, வெற்றிப்படம்)

* எஜமான் (1993, ஓரளவுக்கு வெற்றிப்படம்)

* சிவாஜி (2007, வெள்ளிவிழா கொண்டாடியபடம்)

இதில் ராஜா சின்ன ரோஜா வரைக்கும் ரஜினியின் 7 படங்களுக்கு எஸ் பி முத்துராமன் தான் இயக்குனர். மேலும் கமல் நடித்த 3 படங்களுக்கும் எஸ் பி எம் தான் இயக்குனர்.

எஜமான் படத்தை ஆர் வி உதயக்குமார் இயக்கினார். சிவாஜி யின், இயக்கம் சங்கர்!

1980 ல இருந்து 2007 வரை 9 படங்கள் ரஜினியை வைத்து தயாரித்துள்ளனர். இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எ வி எம் சரவணனுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் “கெமிஸ்ட்ரி” எப்போதுமே நன்றாக வொர்க் அவுட் ஆச்சு என்பதுதான் இதற்கு காரணம்! இது சினிமா உலகில் மிக அரிய விசயம்.