திரையுலகில் எ வி எம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். இவர்கள் சிவாஜி, எம் ஜி ஆர், கமல், ரஜினி என்று எல்லா பெரிய நடிகர்களையும் வைத்து படம் தாரித்துள்ளார்கள்.
அமரர் எம் ஜி ஆர், எ வி எம் முடன் ஒரே ஒரு படம்தான் செய்தார். (சுரேஷ் பின்னூட்டத்தில் சொன்னதற்கு அப்புறம், சரிசெய்யப்பட்டது :-))) )
* அன்பே வா (1966).
அன்பே வா எம் ஜி ஆர் படங்களில் வித்தியாசமான படம் மட்டுமன்றி இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். இருந்தபோதும் அதன்பிறகு எம் ஜி ஆர் படம் எதுவும் எ வி எம் எடுக்கவில்லை.
நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி யே எ வி எம் தயாரிப்புதான். பிறகு
* பார்த்தால் பசி தீரும் (1962, வெற்றிப்படம்),
* பச்சை விளக்கு (1964, வெற்றிப்படம்),
* உயர்ந்த மனிதன் (1968, வெற்றிப்படம்)
போன்ற படங்களை எ வி எம் சிவாஜியை கதாநாயகனாக வைத்து தயாரித்தது. உயர்ந்த மனிதனுக்குப் பிறகு வேறு படம் எடுத்ததாக தெரியவில்லை.
கமலுடைய முதல்ப் படம் * களத்தூர் கண்ணம்மா எ வி எம் தயாரிப்பு. பிறகு
* சகலகலா வல்லவன் (1982, வெள்ளிவிழாப்படம், வசூலில் சாதனை புரிந்தது)
* தூங்காதே தம்பி தூங்காதே (1983, வெற்றிப் படம்) போன்ற பெரிய வெற்றிப்படங்களை எ வி எம் தயாரித்தது.
அதன் பிறகு
* பேர் சொல்லும் பிள்ளை (1987) என்கிற படம் தயாரித்தது. இது அவ்வளவு வெற்றியடைய வில்லை. அதன் பிறகு கமல் எ வி எம் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கமல் மசாலா படமே நடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.
எ வி எம் ரஜினியை வைத்து எடுத்த முதல்ப்படம் * முரட்டுக்காளை. இது மிகப்பெரிய வெற்றிப்படம். ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் எ வி எம் தயாரித்த இந்தப் படம் முக்கியமான இடம் பெறும். நீண்ட இடைவெளிக்குப்பிறகு படம் தயாரிக்க முடிவு செய்த எ வி எம் ரஜினியை வைத்து எஸ் பி எம் இயக்க, இளையராஜா இசையமைக்க, ஜெய்சங்கர் முதல் முறையாக வில்லனாக அறிமுகமாக வெளிவந்த படம்தான் * முரட்டுக்காளை! இது வரலாறு காணாத வெற்றி பெற்றது! ரஜினிக்கும் சரி, எ வி எம் க்கும் சரி இது ஒரு பெரிய வெற்றிப்படம். இதை அடுத்து ரஜினியை வைத்து எ வி எம் தயாரித்த படங்கள்,
* போக்கிரி ராஜா (1982, வெற்றிப்படம்)
* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)
* நல்லவனுக்கு நல்லவன் (1984, பெரிய வெற்றிப்படம்)
* மிஸ்டர் பாரத் (1986, வெற்றிப்படம்)
* மனிதன் (1987, வெள்ளிவிழா கொண்டாடிய படம்)
* ராஜா சின்ன ரோஜா (1989, வெற்றிப்படம்)
* எஜமான் (1993, ஓரளவுக்கு வெற்றிப்படம்)
* சிவாஜி (2007, வெள்ளிவிழா கொண்டாடியபடம்)
இதில் ராஜா சின்ன ரோஜா வரைக்கும் ரஜினியின் 7 படங்களுக்கு எஸ் பி முத்துராமன் தான் இயக்குனர். மேலும் கமல் நடித்த 3 படங்களுக்கும் எஸ் பி எம் தான் இயக்குனர்.
எஜமான் படத்தை ஆர் வி உதயக்குமார் இயக்கினார். சிவாஜி யின், இயக்கம் சங்கர்!
1980 ல இருந்து 2007 வரை 9 படங்கள் ரஜினியை வைத்து தயாரித்துள்ளனர். இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எ வி எம் சரவணனுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் “கெமிஸ்ட்ரி” எப்போதுமே நன்றாக வொர்க் அவுட் ஆச்சு என்பதுதான் இதற்கு காரணம்! இது சினிமா உலகில் மிக அரிய விசயம்.
8 comments:
நல்ல ஆய்வு:)!
//* பெரிய இடத்துப் பெண் (1963) //
இது ஆர்.ஆர் தயாரிப்பு என்று நினைக்கிறேன் தல..
டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.ராமண்ணா இணைந்து தயாரித்தது.
ராமண்ணா இயக்குநர்.
//* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)//
????
***ராமலக்ஷ்மி said...
நல்ல ஆய்வு:)!
4 May, 2009 7:45 PM**
நன்றிங்க, ராமலக்ஷ்மி :-)
SUREஷ் said...
***//* பெரிய இடத்துப் பெண் (1963) //
இது ஆர்.ஆர் தயாரிப்பு என்று நினைக்கிறேன் தல..
டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.ராமண்ணா இணைந்து தயாரித்தது.
ராமண்ணா இயக்குநர்.
5 May, 2009 4:29 AM***
சுரேஷ்: தமிழ்நேசன் ல யும் விக்கிலயும் அப்படித்தான் போட்டிருக்காங்க.
அனேகமாக தவறுதலாக எழுதி இருக்கேன் னுதான் தோனுது.
இருந்தாலும், தமிழ்நேசன் லிஸ்ட்ல சிவாஜி படத்தை எம் ஜி ஆர் படமாகவும், எம் ஜி ஆர் படத்தை சிவாஜி படமாகவும் பல தவறுகள் இருக்கு.
அதனால் இதை, கவனமாக சரி பார்த்து திருத்துகிறேன் சுரேஷ்.
என்னை சரி செய்ததற்கு நன்றி :-)
***SUREஷ் said...
//* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)//
????
5 May, 2009 4:29 AM***
சகலகலாவல்லவனை கம்ப்பேர் பண்ணினால் (அதற்கு அடுத்து வந்த எ வி எம் படம்) இது தோல்விப்படம்போல் தோனும். ஆனால், இது கமர்ஷியல்லா நல்லா போச்சுனு சொல்றாங்க சுரேஷ்.
பி அண்ட் சி செண்டர்லயும் நல்லாப்போச்சுனு சொல்றாங்க.
நிச்சயமா, கமர்ஷியலா இது வெற்றிப்படம்தான் சுரேஷ். நம்புங்க
:-))
சுரேஷ்:
"பெரிய இடத்து பெண்" ணை சரி செய்துவிட்டேன். நன்றி :-))
உயர்ந்த உள்ளம் என்ற படம் கூட ஏ.வி.எம்.தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் அவர்கள் நடித்தது தான்...
Post a Comment