Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் எந்திரனை வென்றதா? உண்மைகள்!

ஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும்  வெளிவந்துவிட்டது! தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்பதாக சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த எந்திரனை, வசூலில் விஸ்வரூபம் மிஞ்சிவிட்டதாக பல செய்திகள் வந்துவிட்டன!

vishwaroopam-makes-profit-joins-the-elite-group-photos-pictures-stills
உலகநாயகன் கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம்!
வசூலில் எந்திரனை மிஞ்சிவிட்டதா விஸ்வரூபம்?? இது உண்மையா? இல்லை, கட்டுக்கதையா? இல்லை ஓரளவுக்கு உண்மையா? இல்லை அப்பட்டமான பொய்யா? என்பதைப் பார்ப்போம்!  இது ரொம்ப இப்போ அவசியமாக்கும்? னு ஒரு சிலர் கேலியாகக் கேட்பதுண்டு! ஒரு சிலர் மனதுக்குள்ளே கேட்டுக்கொள்வதும் உண்டு.

நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருக்கேன். மறுபடியும் இன்னொரு முறை சொல்றேன்.. வலையுலகில் பலவிதமான பொய் செய்திகள் பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்தப் பொய்கள், விக்கிப்பீடியா போன்ற பல தளங்களில் பல விசமிகளால் பதிக்கப்படுகினறன. வருங்காலத்தில் இந்தப்பொய்கள் உண்மையாக மாற்றப்படுகிற/மாறுகிற அபாயம் உள்ளது. அதனால் சில உண்மைகளை நாம் நம் தளத்திலாவது  பதித்து வைக்க வேண்டிய கட்டாய சூழல்!

நாகன் மல்ஹாசன்!

விஸ்வரூபம் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நம்ம கமல்ஹாசனுக்கு எப்போவுமே தன்னம்பிக்கை  மிகவும் அதிகம்.  தாந்தான் தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே சிறந்த கலைஞன் என்று முழுமையாக நம்புபவர் இவர்! மூன்று முறை தேசிய விருது வாங்கியவர் அல்லவா நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்? நெனைப்பு இருக்கத்தான் செய்யும்!  அது பாட்டுக்கு இருக்கட்டும்!

கமலஹாசனை உலக நாயகன்னு தான் அவருடைய விசிறிகள்   எல்லாரும் சொல்றாங்க! இந்த கணிணி மற்றும் இணையதள உலகில் அவருக்கு யாருக்குமே கெடைக்காத அளவுக்கு "இண்டெர்நேஷனல் ரெகக்னிஷன்" அதிகமாகிவிட்டதாக அவர் விசிறிகள்  பலரும் நம்புவதால் இந்தப் பெயர் அர்த்தமானதாக கருதுகிறார்கள். "மேலும் இந்த உலகமகா கலைஞன் ஹாலிவுட் போயி பெரிய பெரிய சாதனைகள் சாதிக்காமல் ஏன் இப்படி தமிழ்நாட்டிலிருந்து தன்னை அழித்துக்கொள்கிறார்?" என்றெல்லாம் கமல் விசிறிக்கள் பலரும் கவலைப் பட்டு நொந்து நொந்து சாகிறாங்க, பாவம்!  இப்படி எண்ணுவதற்கு தற்போதைய காரணம், பேர்ரி ஆஸ்பான் என்னும்  ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர். இவர் கமலின் விஸ்வரூபத்தை திரும்பத் திரும்ப 4 தடவை பார்த்துப்புட்டு, கமலை புகழ்ந்து தள்ளியதாகவும், கமலை வைத்து தான் படம் தயாரிக்கப் போவதாகவும் பேசிவிட்டதாகவும், கமலே பரப்பிவிட்ட ஒரு உண்மை செய்திதான் முக்கியக்காரணம். இந்த செய்தியை கமல் பரப்பிவிட்டதுக்குக் காரணமே தான் தயாரித்த விஸ்வரூபத்தை  உலகமெங்கும் பிரபலப்படுத்த என்கிறார்கள் ஒரு சிலர்.

ஹாசன் குடும்பம் என்றாலே ஒரு தனி ரகம்தான். நடிப்பிலும் சரி, வார்த்தை ஜாலங்களிலும் சரி, சாதனைகளிலும் சரி, தான் சாதித்தாக சொல்லப்படுவதிலும் சரி! சகோதரி அணுஹாசனை வேண்டுமானால் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்! சமீபத்தில் சுஹாஷினி ஹாசன் விஜய் டி வி லே எதிலோ சொன்னார், அவர் கணவர் "மண்ணாப்போன கடல்" மணிரத்னத்திற்கு ஹாலிவுட்ல இருந்து பல "ஆஃபர்கள்" வந்ததாம்.  அதை எல்லாம் மணி தட்டிக் கழிச்சுட்டார்னு அடக்கமாக பெருமையாகவும் சொன்னார் இந்த ஹாசன். பாவம் இதை மணிரத்னம் ஒருபோதும் வெளியே சொன்னதில்லை! இதையும் இன்னும் ஒரு ஹாசன் தான் தன்னக்கடத்துடன் அம்பலப்படுத்தியது! என்னமாரி ஆஃபர்கள் அவை என்பது மிகப்பெரிய கேள்வி! என்னைக்கேட்டால் ஒருவழியா கமலும் மணியும்  ஹாலிவுட்க்கு போய் தொலைஞ்சா  அவங்களும் நல்லா இருப்பாங்க. நம்மளும் நிம்மதியா இருக்கலாம்! ஏன் இப்படி இங்கேயே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்குறாங்கனு தெரியலை.

கமல் விசிறிகள்!!!

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்..

கமலஹாசனுக்கு அவர் தீவீர  விசிறிகள் அவருக்கு பெரிய பலமா இல்லை பலவீனமா? னு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.சினிமா விசிறிகளில் இவர்கள் ஒரு தனி வகை. அதென்ன?னு கேக்குறீங்களா? ஏதோ கமல்ஹாசன் என்கிற சினிமா நடிகனின் ரசிகரா இருப்பதே ஒரு பெருமை என்பதுபோல் இவர்கள் பிதற்றுவதைப் பார்த்து நம்மல மாரி ஒரு சிலர்  சிரித்தாலும்,  உலக அனுபவம் இல்லாதவங்க, கொஞ்சம் படிப்பு ஞானமில்லாதவங்க எல்லாம் இவர்கள் பிதற்றல்களைக் கேட்டு என்னவோ ஏதோனு பயந்துவிடுவார்கள். அந்தளவுக்கு தரித்திரமாப் பேசுவார்கள் இந்த அதிமேதாவியின் விசிறிகள்!

 மனித இயல்பு  எப்படினா, ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட  நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.


விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை நிலவரம்!

சரி, இவ்வளவு பப்ளிசிட்டிக்கு அப்புறம்,  டி ட்டி எச் ல அல்மோஸ்ட் சாதனை புரிந்த, ஹாலிவுட் ஜாம்பவான் பேர்ரி ஆஸ்பானால் கண்டுகொள்ளப்பட்ட, உலகமகாக் கலைஞன், மறத்தமிழன் கமலஹாசனுடைய சமீபத்திய மெஹா பட்ஜெட் விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை  நிலவரத்தை கவனிப்போம்!

********************************

அமெரிக்கா &  கனடா: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்

 VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected $ 59,953 on 32 screens, with the per screen average working out to $ 1,874. Total: $ 9,98,802 [Rs. 5.38 crores].

VISHWAROOPAM [Telugu]: In its third weekend, the film has collected $ 16,047 on 15 screens, with the per screen average working out to $ 1,070. Total: $ 1,90,441 [Rs. 1.03 crores]. 

மெரிக்க கண்டத்தில் விஸ்ரூபம் வசூல் எம்பூட்டுனு ரெண்டையும் கூட்டினால், 6.41 கோடிகள்!

சரி, இதே நாடுகளில் எந்திரன் வசூல் செய்தது எம்பூட்டுனு பார்ப்போம்!

account ‏@taran_adarsh 18 Oct 10 Endhiran [Tamil+Telugu] official figures: US 20 cr (20 கோடிகள்),  https://twitter.com/taran_adarsh/status/27720616820

அதாவது, அமெரிக்காவில்

எந்திரன், விஸ்வரூபத்தை விட, 3 மடங்குபோல் வசூல் செய்துள்ளது. இதுதான் அமெரிக்கா உண்மை நிலவரம்!

****************************************

 சரி, அமெரிக்காவை விட்டுவிட்டு, யு கேல எப்படினு பார்ப்போம்!

யு கே வில்: விஸ்ரூபம் மற்றும் எந்திரன்


VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected £ 30,231 on 21 screens, with the per screen average working out to £ 1,440. Total: £ 2,75,318 [Rs. 2.33 crores].

விஸ்வரூபம் வசூல்:  £ 2,75,318 (அதாவது 2.33 கோடிகள், 3 வார வசூல்)


   எந்திரன் வசூல்:  £ 625, 404  (தமிழ் ஹிந்தி)(அதாவது 5 கோடிக்கு மேலே, இரண்டுவார வசூல்)

17 11 Endhiran Ayngaran $172,555 -63.1% 34 +4 $5,075 $785,837 2

26 - Endhiran (Hindi) n/a $38,482 - 23 - $1,673 $191,357 2

 யு கேவில் மட்டும் சுமார் 2 மடங்குக்கு அதிகமாக எந்திரன் சூல் செய்துள்ளது!

எந்திரன் ஐரோப்பா முழுவதும் எம்பூட்டு வசூல் செய்ததுனு பார்த்தால். 
UK-Eur 8 cr, 8 கோடிகள் https://twitter.com/taran_adarsh/status/27720616820

*************************

மலேசியா சிங்கப்பூரில்: எந்திரன் வசூல்:  

SE Asia [incl Malaysia, Singapore] 21 cr, (21 கோடிகள்)

விஸ்வரூபம், இஸ்லாமியர்கள் பிரச்சினையால், மலேசியாவில் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. சிங்கப்பூரில் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. என்ன வசூல்னு இனிமேல் தெரியும்!

*****************************
த்திகிழக்கு (இஸ்லாமிய) நாடுளில்: எந்திரன் வசூல்: 

Gulf 7 cr, rest 5 cr.( 12 கோடிகள் சூல் கியுள்து)

த்திகிழக்கு நாடுளில் விஸ்ரூபம் ரிலீஸ் குமா என்னு தெரிலை!

***********************************

வடநாட்டில் ஹிந்தி விஸ்வரூப் எப்படி?

* முதல் வார வசூல் எந்திரனும், விஸ்வரூபமும் சுமார் 11.5 கோடிகள் (நெட்) 

* ரெண்டாவது வாரத்தில் என்ன ஆச்சுனா, விஸ்வரூபம் எந்திரனைவிட மோசமான அளவுதான் வசூல் செய்துள்ளது!

ஆக, ஹிந்தியிலும் விஸ்வரூப், ரோபாட் வசூலை முறியடிக்கவில்லை!

*************************

ஆந்திராவில் எப்படி?
 

*ரோபோ வசூலை விஸ்வரூபம் முறியடிக்கவில்லை என்பது உலகுக்கே தெரியும்!

*************************
 கேரளா எப்படி?

கேரளாக்கு எல்லாரும் றந்து போய் விஸ்ரூபம் பார்த்தென்வோ உண்மைதான். னால், டி ட்டி எச் பிரச்சினையால், நல்மாதியேட்டர்ளில் விஸ்ரூபம் ரிலீஸ் வில்லை! அனால் எந்திரன் சூலை முறிடிப்து என்து டக்கிகாரியம் இல்லை!

******************************

தமிழ் நாடு!  

சென்னையில் முதல்வாடைசி சூல்னு பார்த்தால் விஸ்ரூபம் எந்திரன் சூலை முறியடித்துவிட்து என்து உண்மைதான்..

 விஸ்ரூபம் முதல் வாசென்னை சூல்


Week : 1
Total collections in Chennai : Rs. 4,10,26,576
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 891
Average Theatre Occupancy (Weekend): 99%
Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

எந்திரன் முதல் வாசென்னை சூல்
Endhiran
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 894
Average Theatre Occupancy over this weekend: 99%
Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

Verdict: Grand Openingனால்..
 
எந்திரன் 4 வாரம் முடிந்பிகு சூல்:

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Verdict: Blockbuster

எந்திரனைப் போல்  விஸ்ரூமும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் 10 நாட்களாவது தாக்குப் பிடிச்சா, சாண்ஸ் இருக்கு..


இன்னும் ரெண்டு வாரத்தில் விஸ்வரூபம் எவ்ளோ அள்ளுதுனு பார்ப்போம்! :)







Sunday, October 24, 2010

எந்திரன், மருதநாயகத்துக்கு வழிகாட்டி?



கமல், ரஜினியை தொழிலில் போட்டியாளராக, ரைவலாக நினைப்பது என்றுமே (இன்றும்) மறுக்கமுடியாத உண்மை. ஏன் ரஜினி, கமலை நினைப்பதில்லையா? னு கேக்காதீங்க. ரெண்டும் ஒண்ணுதான்! கமல், படையப்பா இருநூறாவது நாள் வெற்றிவிழாவில் பேசும்போது சொன்னார். ரஜினிக்கும் எனக்கும் நட்பும் உண்டு, அதே சமயத்தில் போட்டியும் உண்டு! என்று . ஆமா சொன்னார்! தொழிலில் போட்டி இருந்தாலும் எங்களுடைய போட்டி, ஒரு ஹெல்த்தியான ஒண்ணு என்றும் அதே விழாவில் தெளிவு படுத்தினார். அதுக்கப்புறம் கே எஸ் ரவிக்குமாருடன் சேர்ந்து தெனாலியுடன் வந்து வெற்றியடைந்தார், கமல்.

அந்தப் போட்டி மனப்பாங்கு, கமலிடம் எப்போவுமே, அதாவது இன்றும் இருக்குனு நான் நம்புகிறேன். அதெப்படிப் போகும்? கூடவே பிறந்ததாச்சே! இதை மூடிமறைக்காமல் தெளிவாக கமல் ஒத்துக் கொளவது பாராட்டுக்குரியது.

கடந்த 2007 லில் எ வி எம் மின் சிவாஜி த பாஸ், மிகப்பெரிய பொருட்செலவில் (70 கோடியில்) தயாரித்து முதல் முறையாக, புது மாதிரியாக ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கான பிரதிகள் (படப் பொட்டிகள்) வெளியிடப் பட்டது. அந்த ஃபார்முலாவில் முதல்முறையாக சிவாஜி மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

கமல், சும்மா இருப்பாரா? அடுத்த வருடமே (2008 ல்) , சிவாஜிக்குப் போட்டியாக, கமல் உயிரைக்கொடுத்து நடித்து, ஆஸ்கர் ரவி தயாரிக்க மிகப் பெரிய பொருட்செலவில் தசாவதாரம் படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்தார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம், 70 கோடி தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. 1000 பிரதிகள் ஒரே நேரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. இந்த முறையும் இந்த ஹெல்த்தியான போட்டியில் கமலும் வெற்றிதான் அடைந்தார்!

இப்போ, சிவாஜி, தசாவதாரம் எல்லாவற்றையும் சாப்பிடும் அளவுக்கு, ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் 150 கோடி செலவில் எடுக்கப்பட்டு, எந்திரன் த ரோபாட், இரெண்டாயிரம் பிரதிகளுடன் உலகளவில் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. எந்திரன் படத்தின் வெற்றி பற்றி மற்றவர்கள் எப்படியோ, கமல் நிச்சயம் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் என்றால் மருதநாயகத்துக்கும் இதே போல் பெரிய இன்ஸ்வெஸ்ட்மெண்ட் மற்றும் வெற்றியும் தேவை! நிச்சயமாக எந்திரனுக்கு பயன்படுத்திய இதே வியாபாரத் தந்திரம் செய்து (அவர் எந்திரன் வழிநடந்துதான் ஆக வேண்டும்) மருதநாயகம் எடுத்து வெளியிட்டால் - போட்ட காசை எடுக்க முடியும். மேலும் ஒரு லாண்ட் மார்க் தமிழ்ப் படத்தையும் தரமுடியும்.

இதுபோல் பணத்தைக்கொட்டி படம் தயாரிக்கும்போது திரைப்படம் ஒரு கலை, சினிமா என்பது வியாபாரம்னு கமல் நெனைக்கக்கூடாது, அது இதுனு பிதற்றும் மேதாவிகளை எல்லாம் கமல் திருப்திப்படுத்த நெனச்சுக்கூடப் பார்க்கக் கூடாது!

எந்திரன், மூன்று மொழியில் வெளிவந்தாலும், ஹிந்தியில் வெளியான ரோபாட் ஒண்ணும் மிகப்பெரிய வெற்றியல்ல! சுமார் 25 கோடிபோல் ஹிந்தியில் மொத்தக் கலக்சன் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுகு மற்றும் ஓவெர் சீஸ் கலக்சனே எந்திரன் வெற்றிக்கு போதுமானதாகிவிட்டது.

அதேபோல் மருதநாயகம் மும்மொழியில் வெளிவந்தால் ஹிந்தியில் வெற்றியடையாவிட்டாலும் (வெற்றியடைந்தால் இன்னும் நல்லது), தமிழ் , தெலுகு பிரதிகளே வெற்றிக்குப் போதுமானது. ஹிந்தியில் பெருசா சாதிச்சுத்தான் பணத்தை எடுக்கனும்னு இல்லை, என்பது ஒரு நல்ல விசயம்.

கமல், மருதநாயகத்தையோ அல்லது மர்மயோகியையோ விரைவில் ஆரம்பிப்பாரா? ஆஸ்கர் ரவிச்சந்திரனுடனோ அல்லது சன் நெட்வொர்க் உடனோ சேர்ந்து மருதநாயகத்துடன் விரைவில் வருவார் என நம்புவோம்! If he follows endhiran/robot business strategy I dont see him failing!

Thursday, October 21, 2010

எந்திரன் விவாதம்: ஞாநி நெறைய பொய் சொல்லுகிறார்.

விவாதம்னு வரும்போது நிச்சயம் விதண்டாவாதம் பேசலாம். ஆனால் உண்மை பேசனும் என்பது தெரியாதா இந்த ஞானிக்கு? நேஷனல் டி வி யில் தன் வாதத்தை நியாயப்படுத்த நெறையா பொய் சொல்லுகிறார்!

· ரஜினி தன் காசைக் கொடுத்து பால், பீர் அபிஷேகம் செய்ய சொல்றதா சொல்றார். இதெல்லாம் இவருக்கே டு மச் தெரியலை? அப்போ நம்ம ரசிகர்களை ஏன் திட்டனும்? காசு வாங்கித்தான் வேலை செய்றானுக என்றால்?

· இதைவிட பச்சைப் பொய் என்னனா, உலகம் சுற்றும் வாலிபன் வந்த போது எம் ஜி ஆர்க்கு 62 வயதாம். எம் ஜி ஆர் பிறந்தது 1917னு தான் எல்லா எடத்திலும் போட்டிருக்கு. அப்போ 55-56 தானே ஆகியிருக்கும்? எனக்கே கூட்டக் கழிக்கத் தெரியுது. இவருக்கு? இப்படிப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல¨! இல்லை இவர் பொய் சொல்றாருனு இவருக்கே தெரியலையா?

· ஜப்பான்ல முத்து ஓடக்காரணம் மீனாவாம்! அப்புறம் ஏன் வீரா ஓடலையாம்? ஜப்பான்ல இருந்து ரசிகர் ரசிகைகள் எல்லாம் வந்தாங்களே, ரஜினியைப் பார்க்க! தெரியாதா இவருக்கு? ஒரு படம்னா எல்லாருடைய காண்ட்ரிப்யூஷன் இருப்பது உண்மைதான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவரு முத்து மீனாக்கு விழுந்துட்டாரு போல இருக்கு!

· எம் கே டி யுடைய கடைசி காலம், அவர் கொலை வழக்கில் மாட்டியதெல்லாம், அப்புறம் ஜெயிலுக்குப் போய் வந்ததெல்லாம் இவருக்கு தெரியாது போல. சும்மா எம் கே டி எம் கே டினு உளறுகிறார். எம் கே டி பத்தி கொஞ்சம் இவர் படிக்கனும்.

· அப்புறம் என்னனு தெரியல எதுக்கெடுத்தாலும் எம் ஜி ரை இழுத்து வந்துடுறார். எம் ஜி ஆரை கொண்டுவராமல் இவரால் பேசமுடியாதா? எம் ஜி ஆர் ஒரு ஆக்டரை கொன்னு ஸ்டார் ஆகலையா? கொஞ்ச வயது ஹீரோயின் பார்முலா கொண்டுவந்ததே எம் ஜி ஆர் தான். எம் ஜி ஆருக்கு இஅவர் அடிக்கும் ஜால்ராதான் இவரை ரொம்பக் கீழே இறக்குது!

· ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி. இதெப்படி இருக்கு? சரி ஆக்கலாம்னே வச்சுக்குவோம். ஆனால், சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ்லயே நிலைத்து நிக்கனும்! எவனால நிலைத்து நிக்க முடியும்? ரஜினிகாந்துக்கு ஒரு கோடி இல்லை ஒருலட்சம் கூட இல்லை மெட்ராஸ் வந்தபோது. தெரியாதா இவருக்கு?

Gnani’s debating ability was not that impressive as he does not want to accept some facts about Rajni’ charishma and star power!

சாதங்கன், ரஜினி வில்லன் மற்றும் ஹீரோவா நடிச்ச மாதிரி எம் ஜி ஆர் நீரும் நெருப்பில் பண்ணியிருக்கார்னு சொன்னாரு. உண்மைதான். ஆனால் எந்திரன் மிகப் பெரிய வெற்றிப்படம். நீரும் நெருப்பும் எம் ஜி ஆர் படங்களிலேயே படு தோல்விப்படம். இது தெரியுமா சாதங்கனுக்கு? தெரிந்திருந்தால் இந்த உதாரணத்தை தனக்கு சாதகமா சொல்லியிருக்க மாட்டார்.

Anyway, I believe, it is the combined effect, both star power and marketing strategy played a role. It is not just the star power or just the marketing muscle power!

Wednesday, October 13, 2010

எந்திரன் வசூல் சாதனை! நன்றி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!


நூத்தியம்பது கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் இது! இந்தியாவிலேயே இவ்வளவு பொருட்செலவில் இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை! நூத்தம்பது கோடியா? போட்ட காசை எடுக்க முடியுமா? என்கிற கேள்விகள் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எழாமல் இல்லை.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் ஓடும். சன் டி வி மீடியாவை வைத்து சாதிக்கலாம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் உண்மை என்பது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து ஆண்டியான தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்.

ஏன் ப்ரமீட் சாய்மீரா குசேலன் ரைட்ஸ் 60 கோடிக்கு வாங்கி வம்பில் மாட்டியது நமெக்கெல்லாம் தெரியாதா?.

ஒரு படம் வெற்றியடையனும்னா படம் பொதுஜனங்களுக்குப் பிடிக்கனும்! சந்திரமுகியின் வெற்றிக்குக் காரணம் படத்தை குடும்பத்தோட போய்ப் பார்த்தார்கள்! அதுபோல் குடும்பம் குடும்பமாக போய் பார்ப்பதுபோல பொதுஜனங்களுக்கு பிடிப்பதுபோல படம் வந்தாத்தான் போட்ட காசை எடுக்கமுடியும். இல்லனா ஒரு வாரத்தில் தியேட்டர்பக்கம் ஆளே இருக்காது!

சரி, எந்திரனின் உண்மையான நிலைமை என்ன? கலக்சன் கீழே கொடுத்துள்ளேன்

North America - $2,400,000 (10 Days): 12 கோடி

United Kingdom - $780,000 (10 Days) : 3.5 கோடி

Malaysia -$2,900,000 (17 days) : 13 கோடி

வட இந்தியாவில் கலக்சன்: 15 கோடிகள்

கேரளாவில் கலக்சன்: 5 கோடிகள்

கர்நாடகாவில் கலக்சன்: 10 கோடிகள்

ஆந்திராவில் கலக்சன்: 30 கோடிகள்

தமிழ்நாடு கலக்சன் (குறைந்தது): 60 கோடி

UAE: 2 கோடி

ஆக மொத்தத்தில் 150 கோடியை 10 நாட்களில் எடுத்துட்டாங்க!

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ல ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு அதையும் பாருங்க!

Endhiran: Biggest hit in the history of Indian cinema


Namita Nivas


It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient.

In two weeks, the film has collected a never-before Rs 200 crore.

Rajinikant may not have been a big favourite earlier other than in Tamil Nadu, but the success of Robot has proved that the superstar is a big craze even in other centres and especially in the North.

Endhiran (the Tamil version) and Robot (the dubbed version in Hindi), starring Rajinikant-Aishwarya Rai Bachchan, has surpassed all box-office collections thus making it the biggest -ever grosser in the history of Indian cinema, according to trade analyst N.P. Yadav. He asserts that 3 Idiots was the last film to net Rs.150 crores while Endhiran/ Robot has had a net collection of Rs 200-225 crore worldwide since its release on October 1, which is nearly double of Dabangg and is still going strong.

The film made at the whopping budget of Rs.170 crore, had screening starting as early as 5 a.m. in certain places of Tamil Nadu, and in this state alone, it collected Rs. 150 crore with an approximate Rs 50 crore in other South centres while the dubbed version has made Rs 15 crore in India. “It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient, the lavish locations and extravagant special effects,” he states.

According to trade analyst Amod Mehra, the opening week of Robot was “good” while the second week was “much better” and it is still growing. “It has broken all the norms of a dubbed film. There has never been any dubbed film that has crossed even the one crore mark. There was Shankar’s earlier film Jeans with Aishwarya, but that did not do all that well,” he recalls adding that the release of the Shankar-directed Sun Pictures’ venture has cast a shadow on all the recent releases. However, he points out that it was possible because there was no competition whatsoever “with Crook flopping and Do Dooni Char also not faring too well at the b-o. Endhiran, that opened in 2,200 screens all over as compared to 1,400 for Dabangg and crossed the two-week net collection of the Salman Khan- starrer in its first week itself. However, Dabanng has managed to rake in its moolah during its five weeks of release and the DVD of the film will be out soon. Moreover, it is being telecast on TV some time later this month.” says Mehra.

Rajinikant has done many Hindi films earlier, but the reason Mehra attributes for this mad craze for his recent release, is the new generation of movie lovers which has rediscovered a new 61-year old star. “His fan following is unbelievable and the film is sure to affect other films at least till Diwali,” he asserts.

--------------------

நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!

Monday, September 14, 2009

ஐஸ்-ரஜினி- சன் பிக்சர்ஸ் எந்திரன்! (ஒரு முன்னோட்டம்)



தமிழ் வலையுலகில், ரஜினி படத்தை கீழே கொண்டுவர ஒரு பெரிய கூட்டமே உண்டு! இருக்ககூடாதா என்ன? தப்பே இல்லை! பிடிக்காத நடிகரின் படத்தை அந்த நடிகரின் ரசிகர்கள் பார்க்குமுன்னால் பார்த்து வந்து மனசாட்சியே இல்லாமல் ஒரு மட்டமான விமர்சனம் எழுதும் "பிரபலப் பதிவர்கள்" நிறைந்ததுதான் இந்த வலையுலகம்! ஆனால் அப்படிப்பட்ட வலைபதிவர்களுக்கு எந்திரன் ஒரு "சேலஞ்ச்"தான்!

ரஜினியின் சந்திரமுகி மிகப்பெரிய வெற்றியடைந்தது! இதனுடையை டி வி ரைட்ஸ் சன் டி வி வாங்கியது! அதனால் சன் டி வி மற்றும் மீடியா இந்தப்படத்தை கொஞ்சம் அதிகமாகவே வெற்றியடைய வைத்தார்கள். அடுத்து வந்தது மிகப் பிரம்மாண்டமான எ வி எம் தயாரித்த சிவாஜி. இதனுடைய டி வி ரைட்ஸ் கலைஞர் டி விக்கு போனது. சன் டி வி, சன் மீடியா இந்தப் படத்தை, சந்திரமுகி அளவுக்கு தூக்கிவிடவில்லை! வண்ணத்திரை, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் சில நெகட்டிவ் விமர்சனங்களும் கொடுத்தன.

ஒண்ணுமில்லாத படத்தையெல்லாம் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பாக இருந்தால் அதை சன் டி வி மிகப்பெரிய வெற்றியடைய வைத்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். 100 கோடி பொருட்செலவில், சங்கர் டைரக்ஷனில், ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார்- ஐஸ்வர்யா நடித்து வெளிவரும் எந்திரனை சன் மீடியா எப்படி தூக்கி விடும்? வானளவில்!

எந்திரன் கமர்ஷியலாக தோல்வியடைய வாய்ப்பு மிக மிக குறைவு! அதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்டில்ஸே சொல்கிறது!