விவாதம்னு வரும்போது நிச்சயம் விதண்டாவாதம் பேசலாம். ஆனால் உண்மை பேசனும் என்பது தெரியாதா இந்த ஞானிக்கு? நேஷனல் டி வி யில் தன் வாதத்தை நியாயப்படுத்த நெறையா பொய் சொல்லுகிறார்!
· ரஜினி தன் காசைக் கொடுத்து பால், பீர் அபிஷேகம் செய்ய சொல்றதா சொல்றார். இதெல்லாம் இவருக்கே டு மச் தெரியலை? அப்போ நம்ம ரசிகர்களை ஏன் திட்டனும்? காசு வாங்கித்தான் வேலை செய்றானுக என்றால்?
· இதைவிட பச்சைப் பொய் என்னனா, உலகம் சுற்றும் வாலிபன் வந்த போது எம் ஜி ஆர்க்கு 62 வயதாம். எம் ஜி ஆர் பிறந்தது 1917னு தான் எல்லா எடத்திலும் போட்டிருக்கு. அப்போ 55-56 தானே ஆகியிருக்கும்? எனக்கே கூட்டக் கழிக்கத் தெரியுது. இவருக்கு? இப்படிப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல¨! இல்லை இவர் பொய் சொல்றாருனு இவருக்கே தெரியலையா?
· ஜப்பான்ல முத்து ஓடக்காரணம் மீனாவாம்! அப்புறம் ஏன் வீரா ஓடலையாம்? ஜப்பான்ல இருந்து ரசிகர் ரசிகைகள் எல்லாம் வந்தாங்களே, ரஜினியைப் பார்க்க! தெரியாதா இவருக்கு? ஒரு படம்னா எல்லாருடைய காண்ட்ரிப்யூஷன் இருப்பது உண்மைதான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவரு முத்து மீனாக்கு விழுந்துட்டாரு போல இருக்கு!
· எம் கே டி யுடைய கடைசி காலம், அவர் கொலை வழக்கில் மாட்டியதெல்லாம், அப்புறம் ஜெயிலுக்குப் போய் வந்ததெல்லாம் இவருக்கு தெரியாது போல. சும்மா எம் கே டி எம் கே டினு உளறுகிறார். எம் கே டி பத்தி கொஞ்சம் இவர் படிக்கனும்.
· அப்புறம் என்னனு தெரியல எதுக்கெடுத்தாலும் எம் ஜி ரை இழுத்து வந்துடுறார். எம் ஜி ஆரை கொண்டுவராமல் இவரால் பேசமுடியாதா? எம் ஜி ஆர் ஒரு ஆக்டரை கொன்னு ஸ்டார் ஆகலையா? கொஞ்ச வயது ஹீரோயின் பார்முலா கொண்டுவந்ததே எம் ஜி ஆர் தான். எம் ஜி ஆருக்கு இஅவர் அடிக்கும் ஜால்ராதான் இவரை ரொம்பக் கீழே இறக்குது!
· ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி. இதெப்படி இருக்கு? சரி ஆக்கலாம்னே வச்சுக்குவோம். ஆனால், சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ்லயே நிலைத்து நிக்கனும்! எவனால நிலைத்து நிக்க முடியும்? ரஜினிகாந்துக்கு ஒரு கோடி இல்லை ஒருலட்சம் கூட இல்லை மெட்ராஸ் வந்தபோது. தெரியாதா இவருக்கு?
Gnani’s debating ability was not that impressive as he does not want to accept some facts about Rajni’ charishma and star power!
சாதங்கன், ரஜினி வில்லன் மற்றும் ஹீரோவா நடிச்ச மாதிரி எம் ஜி ஆர் நீரும் நெருப்பில் பண்ணியிருக்கார்னு சொன்னாரு. உண்மைதான். ஆனால் எந்திரன் மிகப் பெரிய வெற்றிப்படம். நீரும் நெருப்பும் எம் ஜி ஆர் படங்களிலேயே படு தோல்விப்படம். இது தெரியுமா சாதங்கனுக்கு? தெரிந்திருந்தால் இந்த உதாரணத்தை தனக்கு சாதகமா சொல்லியிருக்க மாட்டார்.
Anyway, I believe, it is the combined effect, both star power and marketing strategy played a role. It is not just the star power or just the marketing muscle power!
54 comments:
டிவி யில பாத்ததும் நானும் கிட்டதட்ட இதேத் தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிட்டேன்.
நைஸ் போஸ்ட்.
சாணியா..? யார் போட்ட சாணி..?
***VJR said...
டிவி யில பாத்ததும் நானும் கிட்டதட்ட இதேத் தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிட்டேன்.
நைஸ் போஸ்ட்.
21 October 2010 7:05 AM***
நான் சத்தியமா உங்க பதிவை இப்போத்தான் பார்த்தேன்! :)))
அப்படியே இதிலே உள்ளதெல்லாம் இருக்கு!
***ராவணன் said...
சாணியா..? யார் போட்ட சாணி..?
21 October 2010 7:29 AM**
It is a debate, he can certainly argue to strengthen his part but WITHOUT LIES!
//ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி. இதெப்படி இருக்கு?//
நல்லா கேட்டீங்களா? 3-ஆ இல்ல 30-ஆ? யாரையும் வேணாம் அவரையே ஆகச்சொல்லுங்க பாஸ்.
ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி
....மூணு கோடி, பெரிய அமௌன்ட் ஆச்சே! இவரை நம்பி கொடுக்கிறதுக்கு, எத்தனை பேரை இவர் சூப்பர் ஸ்டார் ஆக்கி இருக்கார்னு லிஸ்ட் கொடுத்தால் உதவியாய் இருக்குமே.
***அரசூரான் said...
//ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி. இதெப்படி இருக்கு?//
நல்லா கேட்டீங்களா? 3-ஆ இல்ல 30-ஆ? யாரையும் வேணாம் அவரையே ஆகச்சொல்லுங்க பாஸ்.
21 October 2010 9:17 AM ***
அவருக்கு என்ன பிரச்சினையினு தெரியலை, நெறையாவே சொதப்பி இருக்கார் இந்த விவாதத்தில்
***Blogger Chitra said...
ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி
....மூணு கோடி, பெரிய அமௌன்ட் ஆச்சே! இவரை நம்பி கொடுக்கிறதுக்கு, எத்தனை பேரை இவர் சூப்பர் ஸ்டார் ஆக்கி இருக்கார்னு லிஸ்ட் கொடுத்தால் உதவியாய் இருக்குமே.
21 October 2010 10:17 AM***
வாங்க சித்ரா!
பிரசாந்த், அரவிந்தசாமி எல்லாம் கோடிஸ்வரர்கள்தான். ஆனா சூப்பர் ஸ்டாரான மாதிரி தெரியலை!
என்னவோ போங்க!
நண்பர்களே,
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதை அல்ல.
முத்து படத்தைப் பார்த்துவிட்டு ஜப்பானியர்கள் சென்னை வந்தார்கள் என்பது பற்றி வெளியான முதல் செய்தியில், பழைய பத்திரிகைகளைத்தேடினால் பார்க்கலாம், அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னரே ரஜினியைக் காணச் சென்றார்கள். ரஜினிக்காக இயங்கும் மார்க்கெட்டிங் டீம், அதை சிரப்பாக பயன்படுத்திக் கொண்டது. மீனாவுக்கு அப்படிப்பட்ட டீமும் தேவையும் இருக்கவில்லை.
ரஜினி நல்ல நடிகர். ஆனால் நடிகரைக் கொன்றுதான் இங்கே ஸ்டார் உருவாக்கப்படுகிறார். இதைப்பற்றிய என் விரிவான கட்டுரை இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.அந்தக் கட்டுரையை ரஜினியும் பாராட்டியிருக்கிறார்.
மார்க்கெட்டிங் இல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் பெரும் வெற்றியடைந்தது.( போஸ்டர் கூட கிடையாது. அப்போது டி.வியும் இல்லை.) எந்திரன் சன் குரூப்பின் மார்க்கெட்டிங் இல்லாவிட்டால் சாதாரண படமாகவே ஓடியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது.
அன்புடன் ஞாநி
ஒரு கூடுதல் தகவல்: ரசிகர் மன்றங்கள் எல்லாமே எம்.ஜிஆர் காலத்திலிருந்தே, நடிகரும் தயாரிப்பாளரும் கொடுக்கும் பணத்தில்தான் இயங்குகின்றன என்பது மீடியாவில் உள்ளவர்கள் எல்லாரும் அறிந்த உண்மை. மன முதிர்ச்சி எற்படாத பருவத்தில் ஒரு சிலர் மட்டுமே சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள். நடிகர்கள் பலரும் வருமானவரிக்கு தரும் கணக்கில் ரசிகர் மன்ரத்துக்கு கொடுத்த பணத்தை பிரமோஷன் செலவுக் கணக்கில் காட்டுகிறார்கள். பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.
ஞாநி
ok Gnani Sir.. When MGR was acting, you know how tamil people were.. I read somewhere. .during his election campaign, one old lady advised him not to keep namiar next to him. do u think in this 21st century are so insane..
Its inevitable to use the available media.. During MGR time, he dint such opportunites and he dint do it.
A corporate house which invests 150 crores would like to take the money asap and they are running the media and rajini is just part of it. Giving a 5 mins inverview is a big marketing strategy?
Do you think MGR is a mahatma? answer honestly, do u think MGR was a clean politician?
Marketing alone cant make a superstar.If so, Rithish (DMK MP) should be the superstar of tamil cinema.
I agree, every actor pay to his fans club. Does rajini do? Do you have any substantial proof?
if MGR was alive, he cant win an election as he did earlier. There are different factors in politics.
When MGR was 60+, and he always used to give public appearance with proper make up and get up. He never had the guts to show his original bald head? But today rajini has the guts.
and why do you talk about MGR to prove that rajini is not a star power..
I respect ur views on differnt issues. But i feel, wat you talk abt rajini is jst mere personal score...
Endhiran is not lived upto the Marketing expectations created by Sun Team. This is the truth.
//உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது. // இதனால்தான் ஞானியை எனக்குப் பிடிக்கும்.
அருண், தவறாக நினைக்கவேண்டாம். ஒரு நடிகன் மேல் இந்த அளவுக்கு affection தேவைதானா? ஞானி சொன்னதுபோல ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.
ஸ்டார் கொன்ற நடிகன்
ஞாநி
இந்தியாவின் குறிப்பாக தமிழ் வர்த்தக சினிமாவில் ஸ்டார் என்பவன் வேறு. நடிகன் என்பவன் வேறு. இரண்டுமாக ஒருவரே இருக்க முயற்சிப்பது மிகக் கடினம் என்பதுதான் சினிமா உலகத்தின் வியாபார விதி.
இந்த விதியின்படி தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாரானதுதான் சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்தின் 32 வருட சினிமா வாழ்க்கைக் கதையின் ஒன் லைன்.
பள்ளிப் படிப்பைத் தாண்டாமல், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகராக ஆனது முதல் பார்வையில் பிரமிப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து யோசித்தால், வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், எல்லா சினிமா ஸ்டார்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ரஜினியை விட ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். உலக அளவில் சார்லி சாப்ளின் முதல் இந்தியாவின் பிருத்விராஜ் கபூர், எம்.ஆர்.ராதா, கமல்ஹாசன் வரை ஸ்கூல் டிராப் அவுட்டுகள்தான்.
கலை உலகத்தின் வலிமையே அது முறையான கல்வியை விட அனுபவத்தில் உருவான செழுமைப்படுத்தப்பட்ட திறமைக்கே அதிக முக்கியத்துவமும் வாய்ப்பும் தருவதுதான். முறையான படிப்பாளிகள் இன்றைய வணிக சினிமா இயந்திரத்தின் வீல் பெல்ட், நட்டு, போல்ட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். மெஷின் ஆபரேட்டர் ஆகிறவர்கள் குறைவு.(தொடர்கிறது)
ரஜினி 1975ல் நடிக்க வந்த போது சென்னையில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தார். ஆனால் அது அடையாறில் இருக்கும் அரசின் திரைப்படக் கல்லூரி போல பாரம்பரியமும், கல்வி முறைமையும் கொண்டதல்ல. திரைப்பட வர்த்தக சபையின் ஆதரவில் நடத்தப்பட்டு சில வருடங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. ரஜினி நடிக்கக் கற்றுக் கொண்டதில் அதன் பங்கு கணிசமானது என்று நிச்சயம் சொல்ல முடியாது. அவர் பெங்களூரின் பஸ்களிலும் சினிமா கொட்டகைகளிலும் படித்ததுதான் கூடுதலாக இருக்க முடியும்.
முதல் சில வருடங்களில் ரஜினி வில்லன் பாத்திரங்களில் நடித்தபோதும், குணச்சித்திர பாத்திரங்களில் ( ஹீரோவும் அல்ல வில்லனும் அல்ல ) நடித்தபோதும்தான் அவருடைய நடிப்பு ஆற்றல் வெளிப்பட்டது. ஆனால் தமிழ் வணிக சினிமாவின் வியாபாரிகள் நடிகர்களை வளர்ப்பதை விட, அவர்களை ஸ்டார்களாக உருமாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள். நடிகராக பலவகைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனை ஸ்டாராக்குவதற்கு ஒரு சகலகலா வல்லவன். ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை. சேது, காசி போன்ற படங்களில் நடித்த விக்ரமுக்கு ஒரு ஜெமினி.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை இருந்த நடிகர்களாக எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ரஜினியும் கமலும். அதே போல அடுத்த தலைமுறையில் விக்ரமும் சூர்யாவும். ஆனால் எல்லாரையும் ஸ்டார்களாக்கும் சினிமா ஃபேக்டரி இவர்களையும் ஸ்டார்களாக்கி தமிழ் சினிமாவின் தடத்தை மாற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.
முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.
ஸ்டாரானபிறகு படங்களுக்கிடையே பெரும் வித்யாசம் இல்லை. காரணம் ஸ்டாருக்கென்றே இருக்கும் கதைப்பின்னல் ஃபார்முலாதான். சிவாஜி வரை அதே ஸ்டார் ஃபார்முலாதான் தொடர்கிறது.
தமிழ் சினிமாவின் அத்தனை கோளாறுகளாலும் லாபம் நஷ்டம் இரண்டையும் அடைந்தவர் ரஜினி என்று சொல்லலாம். மசாலா பட ஸ்டார் என்பதால் வாழ்க்கையில் யாரும் எளிதில் அடையமுடியாத பொருளாதார உச்சத்தை அவ்ர் அடைந்தார். அதே சமயம் ஆரம்ப ஆண்டுகளில் அவரை வைத்து வசூலைக் குவிக்க துடித்த தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தத்தால், ஒரு காலத்தில் நாகேஷுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ரஜினிக்கும் ஏற்பட்டது.
(தொடர்கிறது)

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை இருந்த நடிகர்களாக எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ரஜினியும் கமலும். அதே போல அடுத்த தலைமுறையில் விக்ரமும் சூர்யாவும். ஆனால் எல்லாரையும் ஸ்டார்களாக்கும் சினிமா ஃபேக்டரி இவர்களையும் ஸ்டார்களாக்கி தமிழ் சினிமாவின் தடத்தை மாற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.(தொடர்கிறது)
முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.
ஸ்டாரானபிறகு படங்களுக்கிடையே பெரும் வித்யாசம் இல்லை. காரணம் ஸ்டாருக்கென்றே இருக்கும் கதைப்பின்னல் ஃபார்முலாதான். சிவாஜி வரை அதே ஸ்டார் ஃபார்முலாதான் தொடர்கிறது.
தமிழ் சினிமாவின் அத்தனை கோளாறுகளாலும் லாபம் நஷ்டம் இரண்டையும் அடைந்தவர் ரஜினி என்று சொல்லலாம். மசாலா பட ஸ்டார் என்பதால் வாழ்க்கையில் யாரும் எளிதில் அடையமுடியாத பொருளாதார உச்சத்தை அவ்ர் அடைந்தார். அதே சமயம் ஆரம்ப ஆண்டுகளில் அவரை வைத்து வசூலைக் குவிக்க துடித்த தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தத்தால், ஒரு காலத்தில் நாகேஷுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ரஜினிக்கும் ஏற்பட்டது.
தூங்கவும் சிந்திக்கவும் நேரம் இல்லாமல் மூன்று ஷிப்டுகள் வேலை செய்த நாகேஷ் ஒரே ஆறுதலாக மதுவில் மூழ்கி சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார். மருத்துவமனையில் இருந்த அவர் இன்று இரவைக் கடப்பது கஷ்டம் என்று தினசரி மாலைப் பத்திரிகைகள் சுமார் முப்பதாண்டுகள் முன்பு அவரது மரணத்துக்கு நேரம் குறித்துக் கொண்டிருந்தன. அதே போல வேலை பளுவில் நசுக்கப்பட்ட ரஜினி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பத்திரிகையாளர்களை அடிப்பது முதல் மிதமிஞ்சிக் குடிப்பது வரை பல சிக்கல்களுக்கு தன்னைத் தானே உள்ளாக்கிக் கொண்டார்.(தொடர்கிறது)
அதிலிருந்து மீண்டு வந்தபின், நடிகனாக, கலைஞனாக தனக்கென்று ஏதேனும் ஆசைகள் இருந்தால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, பூரணமாக மசாலா சினிமாவுக்கு தன்னை சரணாகதி செய்துகொண்டார். இந்த ஃபார்முலாவுக்குள் அவர் வித்யாசமாக செய்து பார்த்து வெற்றியடையும் அம்சம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் காமெடி. பாலச்சந்தரின் தில்லுமுல்லுவில் முழுமையாக அதை சாதித்துக் காட்டிய ரஜினிதான்,இன்றும் தமிழ் சினிமாவில் காமெடி கலந்த ஒரே சூப்பர்மேன் ஹீரோ.
ரஜினியின் அண்மை ஆண்டுகளில் சினிமாவுக்கு வெளியே அவர் செய்த காமெடியாக அவரது அரசியலைக் குறிப்பிடலாம். 1996ல் மக்கள் ஏற்கனவே ஜெயலலிதா எதிர்ப்பில் இருந்த மன நிலையில் அதை ரஜினி எதிரொலித்ததுதான் இன்று வரை அவருடைய மிகப் பெரிய அரசியல் சாதனையாக தவறாக சொல்லப்பட்டுவருகிறது. மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிர் மன நிலையில் இருக்கையில், ரஜினி ‘பரவாயில்லை ஒரு முறை அவரை மன்னிப்போம். மீன்டும் வாய்ப்பு தருவோம் ’ என்று சொல்லி அதைக் கேட்டு மக்கள் ஜெவை ஆதரித்திருந்தால்தான், ரஜினியின் வாய்சுக்கு நிஜமாகவே செல்வாக்கு இருப்பதாகக் கருத முடியும்.
அரசியலில் ரஜினியின் வாய்சுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பது அடுத்த சில வருடங்களில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ரஜினியை வைத்து காங்கிரசை வளர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவில் மூப்பனாரும் சிதம்பரமும் ஒரு பக்கமும், பி.ஜே.பி தமிழகத்தில் வளர ரஜினி பயன்படுவார் என்ற கணக்கில் சோ மறுபுறமுமாக செயல்பட்டார்களே தவிர, ரஜினியிடம் எந்த அரசியல் பார்வையும் தெளிவாக இல்லை.
(தொடர்கிறது)
ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.
ரஜினியின் அண்மைக்கால சினிமா வெற்றிகளில் அவ்ருக்கு பயன்பட்ட இன்னொரு அம்சம் & பலமான பெண் பாத்திரங்கள். விஜயசாந்தி, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகிய திறமையான நடிகைகள் ஏற்ற பாத்திரங்களின் உதவியால் அந்தப் படங்களில் ரஜினியும் ஜொலிக்க முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் இல்லாத அவருடைய படங்கள் & பாபா போன்றவை & அடி வாங்கியிருக்கின்றன.
ரஜினியின் அரசியலைப் போலவே குழப்பமானது அவருடைய ஆன்மிகம். ஹரே கிருஷ்ணா இயக்கம், பாபா, ராகவேந்திரர் என்று வெவ்வேறு வகையான பக்தி மார்க்கங்களை முன்வைத்து வரும் ரஜினி நடைமுறையில் பின்பற்றுவது ரஜினீஷின் சில கோட்பாடுகளைத்தான். ஆனால் ரஜினீஷைப் போல உல்லாச வாழ்க்கையிலேயே உன்னதத்தைக் காணலாம் என்ற கோட்பாடும் அவருக்கு இல்லை. ஒரு பக்கம் வாழ்க்கையின் உல்லாசங்களை கைவிடாதிருப்பது, மறுபக்கம் இவற்றை நிராகரிக்கும் ஆன்மிகவாதிகளைப் போற்றுவது என்ற முரண்பாடு நிறைந்தது ரஜினியின் ஆன்மிகம். அரசியலில் மதவெறியை ஊக்குவிக்கும் அத்வானி, தயானந்த சரஸ்வதி போன்றோர்தான் ரஜினியின் ஆதர்சங்கள் என்பது இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டியதாகும்.
(தொடர்கிறது)
ரஜினியின் குடும்ப வாழ்க்கை எல்லா சராசரி மனிதர்களின் வாழ்க்கையைப் போன்றதாகவே தோன்றுகிறது. விரும்பிய பெண்களை மணம் செய்ய முடியாமல் போகும்போது கிட்டிய பெண்ணை ஏற்றுக் கொண்டு சமாதான சகவாழ்வு வாழும் சராசரி மன நிலையே அது. ‘வாழு. வாழவிடு. தலையிடாதே. தலையிட மாட்டேன்’ என்பதுதான் ரஜினியின் வாழ்க்கைத்தத்துவம் போல் தோன்றுகிறது.
அதே சமயம் ரஜினியின் படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் பெண்களை பழைய நிலையிலேயே வைத்திருப்பதை ஊக்குவிக்கும் பாத்திரங்கள்தான். இதுதான் மசாலா சினிமாவின் பொதுத்தன்மை என்றாலும், அத்துடன் இயைந்துபோவதில் ரஜினிக்கு சிரமம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
பணம், புகழ், அதிகாரம், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்று ஒரு சராசரி மனதில் அதிகபட்ச உச்சமான ஆசைகளை எல்லாம் அடைந்துவிட்ட ரஜினி இனி என்ன செய்யப் போகிறார் ? என்ன செய்ய முடியும் ? என்ன செய்ய வேண்டும் ?
அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்ற தமிழ் சினிமாவுக்கு அவர் பதிலுக்கு ஏதாவது செய்யலாம். ஹிந்தியில் ரஜினியின் வயதை ஒத்தவரான அமிதாப் பச்சன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து மேலும் புகழ் சம்பாதித்து வருவது போல, ரஜினியும் தன் ஸ்டார் முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு, உள்ளுக்குள் உறங்கும் (?) கலைஞனுக்கு இன்னொரு உயிர் கொடுக்கலாம். புதிய கருத்துக்கள், புதிய சிந்தனையுடன் வரும் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ரஜினி வருடத்துக்கு நான்கு லோ பட்ஜெட் படங்களைத் தயாரிப்பாளரக இருந்து தயாரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ‘ நான் நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்று அறிவித்துவிடலாம். இவை எல்லாமே அவரால் செய்ய முடிந்தவைதான். செய்வாரா ? செய்தால் நான் ரஜினியைப் பாராட்ட மூன்றாவது விஷயம் எனக்குக் கிடைக்கும். ஓ....முதல் இரண்டு விஷயங்களை இன்னும் சொல்லவில்லையோ ? தன் படங்களில் ஜாதிப் பெருமையை முன்வைத்து மக்களிடையே வெறி ஏற்றும் பாத்திரங்களில் அவர் நடிக்காதது முதல் விஷயம். படத்தில் காட்டும் இளமை இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல், நேரில் வரும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அசல் வழுக்கை மண்டை நரை முடி தோற்றத்துடன் அவர் வருவதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த இரண்டாவது விஷயம்.
(இந்தியா டுடே 14.7.2007 ரஜினி சிறப்பு மலர்)
ஞாநி உண்மையாக எழுதியிருக்கிறார் என்று அடுத்த இந்தியா டுடே இதழில் ரஜினியின் கருத்து வெளியிடப்பட்டது.
ஞானி ரஜினியை மட்டம் தட்டுவதாகவே படுகிறது. 3 கோடி ரூபாயால் சூப்பர் ஸ்டாரை உருவாக்க முடியுமானால் 3 கோடி என்ன, 30 கோடி ரூபாய் செலவழிக்க நம்ம டாக்டர் விசய், ரேஸர் அஜீத, லிட்டில் சூப்பர் ஸடார்(!) சிம்பு போன்றவர்கள் கியுவில் நிற்க மாட்டார்களா :)
எம்.ஜி.யாரின் popularity க்கும் ரஜினியின் popularityக்கும் பெரும் வித்தியாசம் ஒன்று உண்டு, உலகம் சின்ன கைபேசியில் இருக்கும் இந்த காலகட்டத்திலும் 3 தலை முறை ரசிகர்கள் ரஜினிக்கு உண்டு, நேற்றுப் பிறந்த குட்டிப் பாப்பா முதல்!
டிஸ்கி: நான் ரஜினி ரசிகன் இல்லை
நான் ரஜினி ரசிகன் இல்லை
gnani sir....
- Rajini's politics: I agree.. he doesn't have a political view.. Dont u think, its insane to ask him to prove his popularity by supporting an evil then (jayalalitha)
- Its funny to say, his movies are hit because he has a powerful female character.. How come, nobody else knows this secret. Let kamal try his luck with a powerful lady character .. (he will be lost..only rajini has the guts)
- his spiritual things.. I too agree with you. hez confused. hez searching.. hez not a saint or he never claimed so.. he wants to earn money.. its up to him. how many times do u stopped making briyani at home when you write abt kids dying of hunger?
1) பாகவதர், எம்.ஜி.ஆர் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் அவர்களது படங்கள் ஓடியதாக கூறு கிறீர்களே; அவர்கள் காலத்திலும் இன்றுபோல மூன்றாம் நாளே திருட்டு vcd வெளியாகி, இப்போதுள்ளதுபோல வீட்டுக்குவீடு தொலைக்காட்சி, cd/dvd ப்ளேயர், கம்பியூட்டர் என்பன இருந்திருந்து, படம் திரையிட்டு அடுத்த மூன்று நாட்களில் இணையத்தில் படம் வெளியாகியிருந்தால் அவர்கள் படம் விளம்பரம் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும்?
2) அன்று திரையரங்கில் சினிமா பார்ப்பதுதான் 90 வீதமானவர்களது ஒரே பொழுதுபோக்கு, கரணம் வீதிக்கொரு டிவி கூட இல்லை, அப்படியே இருந்தாலும் புதுப்படத்திற்கான திருட்டு vcd இல்லை. ஆனால் இன்று பொழுதுபோக்கிற்கு வீட்டிலேயே டிவி அதில் நூற்றுக்கணக்கில் சானல்கள் குறிப்பாக சினிமா மற்றும் விளையாட்டு சானல்கள், கம்பியூட்டர், இணையம், ஸ்போர்ட்ஸ், சுற்றுலா வசதிகள்; இவைதாண்டி இயந்திரத்தனமான வாழ்க்கை. இப்படியாக இன்றைய இதேநிலை அன்றிருந்திருந்தால் பாகவதரும் எம்.ஜி.ஆரும் என்ன செய்திருப்பார்கள்?
3 ) ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்?
பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி மூவரும் தத்தமது காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள், இம்மூவரையும் ஒருவரோடொருவரை ஒப்பிடுவது தவறானது; ஏனெனில் சமூக, தொழில்நுட்ப, வணிக, அறிவியல் காரணிகள் மூவரது காலங்களிலும் வெவ்வேறானவை. பாகவதர், எம்.ஜி.ஆர் எப்படி காலத்தால் அழியாத நட்சத்திரங்களோ அதேபோல சந்தேகமில்லாமல் ரஜினியும் காலத்தால் அழியாத அவர்களுக்கு இணையான நட்சத்திரம்தான். அனால் வேற்று மொழிக்காரர்களையும் வேற்று நாட்டுக்காரர்களையும் கவர்ந்தவகையில் ரஜினி முதலிருவரையும்விட ஒருபடி உசத்தி என்றே சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் உடன் ரஜினியை ஒப்பிடுமுன் சென்ற ஆண்டு நான் எழுதிய 'எம்.ஜி.ஆரும் ரஜினியும்' பதிவை பார்த்துவிட்டு பின்னர் உங்கள் பதிலைகூறுங்கள்
http://eppoodi.blogspot.com/2009/12/blog-post_10.html
திரு. ஞாநி அவர்களுக்கு,
NDTV-HINDUவில் நீங்களும், சுதாங்கனும் ரஜினி இரசிகர்களுடன் மல்லு கட்டியதை நானும் பார்த்தேன்.
நடுநிலையாளராக வேஷம் போடுவது எவ்வளவு கடினம் என்று அன்று நீங்களும் சுதாங்கனும் உணர்ந்திருப்பீர்கள்.
ரஜினியே என் கருத்துகளை பாராட்டியிருக்கிறார் என்று நீங்கள் இங்கு எழுதியிருப்பது கூட உங்களை நடுநிலையாளராக காட்டிக் கொள்ள நீங்கள் போடும் மேக்கப்தான். நீங்கள் எழுதியிருக்கிற கருத்துக்களில் உங்களுக்கு சந்தேகம் இல்லையென்றால், அதற்கு ஏன் ரஜினியின் பாராட்டை எதிர்பார்க்கிறீர்கள்?
3 கோடி இருந்தால் நான் யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக்கிவிடுவேன் என்று நீங்கள் சொன்னீர்கள். அந்தோ பரிதாபம். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது அறியாமை.
பணத்தால் ”இட்லி கடையை” வேண்டுமானால் வாங்கலாம். ”இட்லி சாப்பிடுபவர்களை” வாங்க முடியாது. அதே போல பணம் கொடுத்து டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என்று யார் வேண்டுமானாலும் டைட்டில் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை ஒப்புக் கொள்கிற ஒரே ஒரு இரசிகனைக் கூட உருவாக்க முடியாது. இது உங்களுக்கும் தெரியும்.
மற்ற விஷயங்களில் எப்படியோ? ரஜினி விஷயத்தில் அவர் மேல் உள்மனதில் உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பதை அன்றைய டிவி பேட்டி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அப்படி இருப்பதில் தவறில்லை. ஆனால் நான் அப்படியில்லை என்று வேஷம் போடும்போதுதான் பேச்சு அர்த்தங்கள் அற்ற வெற்று ஒலிகளாகிவிடுகிறது.
எனவே ”ரஜினியை எனக்கு பிடிக்காது. அதனால் அவர் படங்களும் பிடிக்காது” என்று ஒரு வரியில் உங்கள் மன நிலையை சொல்லிவிட்டீர்கள் என்றால் இப்படி மாங்கு மாங்கென்று ஒரு நீண்ட பின்னூட்டம் எழுத வேண்டியிருந்திருக்காது.
(இங்கு உங்கள் பெயரில் வெளியாகியுள்ள கருத்துகளை எழுதியது உண்மையிலேயே நீங்கள்தானா என்ற சந்தேகம் இருந்தாலும், என்னுடைய பதில்கள் உங்களுக்கானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை)
***நண்பர்களே,
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதை அல்ல**
வணக்கம், ஞாநி அவர்களே!
நீங்க எம் ஜி ஆர் உண்மையான வயசு உ சு வா பொழுது 70னு சொன்னாலும் நான் உங்களை டிஸ்ப்ரூவ் பண்ண முடியாது! நீங்களும் ப்ரூவ் பண்ண முடியாது.
இது உண்மையாவே இருக்கட்டும். ஆனால், எம் ஜி ஆர் ஒரு ஃபினாமினா னு சொல்றீங்க! அவருடைய உண்மையான வயதைக்கூட அவர் மானிபுலேட் பண்ணியிருக்கார் பாவம்னு சொல்றீங்க!
எதுக்காக?
Because all he (எம் ஜி ஆர்) cared about is his image- not about truth, ever.
He preached in his movies that one should not drink. But he is the one who opened "சாராயக்கடை" when he was the CM!
எம் ஜி ஆர் படத்தை சாதங்கன் 100 தரப் பார்த்தால் அது கலைச் சேவை! ரஜினி படத்தை படித்தவர்கள் பார்த்தால் அவர்கள் முட்டாள்கள்!
Your debate partner sadhangan was worst of all when you talk about Tamil movie fans! He loved only masala movies! He watched those movies 100s of times!
Anyway, I can go on like this..
ஒரு வேளை பொய் சொல்ல சொல்லி இருப்பார்களோ? இது கூட மார்கெட்டிங் முறை தான்.
***gnani said...
ஒரு கூடுதல் தகவல்: ரசிகர் மன்றங்கள் எல்லாமே எம்.ஜிஆர் காலத்திலிருந்தே, நடிகரும் தயாரிப்பாளரும் கொடுக்கும் பணத்தில்தான் இயங்குகின்றன என்பது மீடியாவில் உள்ளவர்கள் எல்லாரும் அறிந்த உண்மை. மன முதிர்ச்சி எற்படாத பருவத்தில் ஒரு சிலர் மட்டுமே சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள். நடிகர்கள் பலரும் வருமானவரிக்கு தரும் கணக்கில் ரசிகர் மன்ரத்துக்கு கொடுத்த பணத்தை பிரமோஷன் செலவுக் கணக்கில் காட்டுகிறார்கள். பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.
ஞாநி
21 October 2010 8:25 PM***
So, according to you, even if it is true, it was MGR who started all these!!!
You seem to worship one who started this practice and blame Rajni!
Why is that?! Beats me!
***Blogger V.Radhakrishnan said...
ஒரு வேளை பொய் சொல்ல சொல்லி இருப்பார்களோ? இது கூட மார்கெட்டிங் முறை தான்.***
According to gnaani MGR never ever did any marketing at all. he was exceptional. It is all done by others (esp Rajni). MGR did not fall for all these.
So, Mr. VR, I believe, mr. gnaani would disagree with you! :))))
//அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. //
சூப்பர் !!
அப்புறம் ஏன் அந்த படம் dancing maharaja என்று கூறிப்பிடப்பட்டது
மீனா என்றால் dancing maharani என்றல்லவா இருக்க வேண்டும்
என்ன கொடுமை சார் இது
gnani said...
ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//
இந்த ஒரு விசயத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. சன் பிக்சர்ஸ் படமாக இல்லாவிட்டால் படம் ரிலீசுக்கு முன்னர் ரசிகர்களை உசுப்பேற்றும் அரசியல் குழப்ப அறிக்கை வெளியிட்டிருப்பார்.
எந்திரனோ/முத்துவோ ரஜினி இல்லாவிட்டால் மூன்று நாள்கூட ஓடாது.
***gnani said...
ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//***
முரட்டுக்காளையில் அரசியல் பயன்படுத்தித்தான் சூப்பர் ஸ்டார் ஆனாரா?
சிகரெட் குடிச்சுதான் ரசிகர்களை கவர்ந்தார்னும் சொன்னாங்க, சிகரெட் தொடாத படங்களும் வெற்றியடைந்தது.
பஞ்ச் டயலாக் இல்லைனா இவர் படம் பார்க்க மாட்டார்கள்னு சொன்னாங்க..
இப்போ எந்திரனின்ல் சிகரெட்டும் இல்லை பஞ்சும் இல்லை.
அதுக்கும் ஏதாவது ஒண்ணோட வரத்தான் செய்றீங்க! LOL
Ravanan: I am sorry, you should not attack him like that. He was a debater and he did his "job". Personal attack is not necessary! Thanks for understanding. :)
தளபதி, இதுக்கும் வந்தும் ஒன்னும் சொல்லலையா?? நீர் ஒரு சோம்பேறியர்!
மாற்றுக் கருத்துகள் வேறு; பொய்மை வேறு!!
உண்மை X இன்மை
மெய் x பொய்
இந்தியாவுக்கு வடக்கே இமயம் - உண்மை
இந்தியாவில் கங்காரு - இன்மை
கதிரவன் கிழக்கில் உதயம் = மெய்
கதிரவன் தெற்கில் உதயம் = பொய்
அவருக்கு வயது நாற்பது - கருத்து
அவருக்கு வயது அறுபது - மாற்றுக் கருத்து
The quality of many japanese movies are terrible and so we should not add them to the mix i guess. They liking Rajini or not should not have any value to this discussion, I think
***பழமைபேசி said...
மாற்றுக் கருத்துகள் வேறு; பொய்மை வேறு!!
உண்மை X இன்மை
மெய் x பொய்
இந்தியாவுக்கு வடக்கே இமயம் - உண்மை
இந்தியாவில் கங்காரு - இன்மை
கதிரவன் கிழக்கில் உதயம் = மெய்
கதிரவன் தெற்கில் உதயம் = பொய்
அவருக்கு வயது நாற்பது - கருத்து
அவருக்கு வயது அறுபது - மாற்றுக் கருத்து***
அவருக்கு வயது தொன்னூறு னு சொன்னாலும் அது மாற்றுக் கருத்தா எனப்து கேள்வி! :)))
***புருனோ Bruno said...
//அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. //
சூப்பர் !!
அப்புறம் ஏன் அந்த படம் dancing maharaja என்று கூறிப்பிடப்பட்டது
மீனா என்றால் dancing maharani என்றல்லவா இருக்க வேண்டும்
என்ன கொடுமை சார் இது
22 October 2010 7:47 AM***
வாங்க, டாக்டர் ப்ரூனோ! :)
மீனா வாலதான் முத்து ஜப்பானில் ஓடுச்சுனு சொல்றது என்னவோ விதண்டாவதம் தான்! This point only scores -ve marks for mr. Gnani whether he admits or not! :)
***குடுகுடுப்பை said...
gnani said...
ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//
இந்த ஒரு விசயத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. சன் பிக்சர்ஸ் படமாக இல்லாவிட்டால் படம் ரிலீசுக்கு முன்னர் ரசிகர்களை உசுப்பேற்றும் அரசியல் குழப்ப அறிக்கை வெளியிட்டிருப்பார்.***
தங்கள் கருத்துக்கு நன்றிங்க குடுகுடுப்பை :)
***bandhu said...
The quality of many japanese movies are terrible and so we should not add them to the mix i guess. They liking Rajini or not should not have any value to this discussion, I think
22 October 2010 12:41 PM****
ஜப்பானியர்கள் மேலே நமக்கு மதிப்பு ஜாஸ்திங்க! அவங்க சினிமா ரசைனை மட்டமாயிருந்தாலும், ஜப்பானியர்கள் நம்ம படத்தை ரசிக்கிறாங்கனு சொல்றதை பொதுவா பலரும் பெருமையாத்தான் நினைக்கிறாங்க!
***Robin said...
//உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது. // இதனால்தான் ஞானியை எனக்குப் பிடிக்கும்.
அருண், தவறாக நினைக்கவேண்டாம். ஒரு நடிகன் மேல் இந்த அளவுக்கு affection தேவைதானா? ஞானி சொன்னதுபோல ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.***
Robin: ஞாநி/சாதங்கன் வாதங்கள் எல்லாம் பெரிய அறிவுப்பூர்வமா இல்லை!
சினிமா என்பதே அபத்தம், ரஜினி என்பதே கெட்ட வார்த்தை என்றால், இந்த விவாத்த்தை வைத்து இவர்கள் ஏன் பிழைப்பு நடத்துறாங்க?
They could have turned down the invitation from NDTV or not?
It is easy to advise someone to be sensible. These debaters are not being sensible and talk nonsenses if you carefully look at their argument.
BTW, who is ARUN?????
Varun,
It is too much. I think you are little bid different but you are also same old same TN guy.
Your arquements are cheap and has no logic. Eveny one knows that MGR's date of birth is not correct and he is older than what he claimed officially.
I am not 100% agreed with Gnani, but he is right in more than 60%.
I am a regular reader of your blog and now I know that what ever you try to establish in the past (intelectual, non biases etc..) are questionable and you are the same or equal to Political party follower who is always supporting their leaders.
Subu
/BTW, who is ARUN?????//
It is a typo. It should be Varun. Sorry for the typo.
Cool.
***Santhose said...

Subu***
Hey!!!
Are you santhose or subu? LOL
***Robin said...
/BTW, who is ARUN?????//
It is a typo. It should be Varun. Sorry for the typo.
Cool.
23 October 2010 3:14 AM ***
:)
ஞாநி,
3 கோடி விசயம் போல சில எனக்கும் விதண்டாவாதமாக தோன்றினாலும், உங்கள் பேச்சில் இருந்த உண்மைகளை ஏற்கிறேன்.
உங்கள் நேரத்தை இங்கு பதில் சொல்வதில் வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
வருணுக்கு ஒரு கேள்வி..
@@”எம் ஜி ஆருக்கு அவர் அடிக்கும் ஜால்ராதான் இவரை ரொம்பக் கீழே இறக்குது!”
அப்படியானால் நீங்கள் ரஜினிக்கு ஜால்ரா அடிப்பதாக நான் சொன்னால் உங்களால் அதற்கு பொறுமையாக பதில் சொல்லும் பக்குவம் உண்டா?
***Blogger கிறுக்கன் said...

23 October 2010 12:05 PM***
ஆக,
* நான் எம் ஜி ஆர் படங்கலெல்லாம் உலகத் தரம் வாய்ந்தது.
* மஞ்சுளா லதாவை அவுத்துப்போட்டு ஆட வச்சு அவர் படத்தை ஓட்டல
* முத்து காந்திமதிக்காக ஓடியது
* சதாங்கன் எம் சி ஆருக்க்கு விசிலடிச்சான் குஞ்சியா இருக்கது பெருமைப்பட வேண்டிய விசயம்
போன்ற "உண்மைகளை" நான் மனசாற ஏற்றுக்கொண்டால் நான் ரசினிக்கு சாலரா அடிக்கலைனு "கிறுக்கன்" ஒத்துக்குவாரா?
இங்கு ஞாநி என்னும் பெயரில் இடப்பட்டவை நிஜ ஞாநியே எழுதியதாக எடுத்துக்கொள்கிறேன்.
ரஜினி பற்றி தொடர்ந்து நீங்கள் எழுதவேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. ரஜினி பற்றி 15 வருஷங்களாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்னும் யதார்த்ததுககு நெருக்கமாக நீங்கள் வரவேயில்லை.
//Hey!!!
Are you santhose or subu? LOL//
Varun,
Don't think I am stupid. My google id is subu.santhose when I publish my comment with google id it displays under the name "Santhose". I am not afraid of you or any one if you want I can send you my personal address with phone number. I can face any thing and I have the guts to face it. I am not posting comments as annonymous. Don't deviate my question answer straight whether you are the worshiper of "Rajini" or not?
***முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.***
UNTRUE! I dont know why you are saying this..
Rajni started doing masala movies, LONG BEFORE murattu kaaLai.
* dharma yudhdham
* shankar saleem simon
* aadu puli aattam
* thaay meethu sathyam
* annai oor aalayam
* billa
are all came before murattu kaaLai. They are all some sort of masala movies only.
I dont know whether you really know about progress of rajni's career in Tamil movies.
***I am a regular reader of your blog and now I know that what ever you try to establish in the past (intelectual, non biases etc..) are questionable and you are the same or equal to Political party follower who is always supporting their leaders.***
Sure, you tell me what I am and let me tell what Gnani & sAdhangan are!
* In a debate like this, Gnani's MGR worshiping makes him an ugly critic!
Bcos, he himself says that MGR started paying money to fans for building cut-outs for him!
MGR was also a star who killed the actor in him! Gnani does not seem to know this as he is ignorant about himself!
That makes Gnani a hypocrite!
------------
* sAdhangan says he has seen yodhongi bharat 100 times! LOL We all should be proud of him as YBis not a rajni starer!
He thinks being an MGR-fan is an honor! why is that? LOL
//J. Ramki said...
இங்கு ஞாநி என்னும் பெயரில் இடப்பட்டவை நிஜ ஞாநியே எழுதியதாக எடுத்துக்கொள்கிறேன்.
ரஜினி பற்றி தொடர்ந்து நீங்கள் எழுதவேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. ரஜினி பற்றி 15 வருஷங்களாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்னும் யதார்த்ததுககு நெருக்கமாக நீங்கள் வரவேயில்லை//
ராம்கி.....
சூப்பர்.... இதை தான் நானும் நினைக்கிறேன்.... ஞானி அவர்கள் பேச வேண்டுமே என்பதற்காக எதையும் பேசக்கூடாது....
Aryan,
YOur point is taken but if you personally attack him then your points carry no strength. Please criticize him without personal attack.
Thanks for the understanding.
//எந்திரன் சன் குரூப்பின் மார்க்கெட்டிங் இல்லாவிட்டால் சாதாரண படமாகவே ஓடியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.// பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.//very true!!!!reporters will also get covers to boast the heros! it is all in the game.but today so many competitions in so many ways!in this situation HE IS THE MOSS!!!NOT BY HIS ACTION. BY HIS SIMPLICITY!!!HUMANITY!!!ETC....noDOUBT ABOUT IT.
Post a Comment