ஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது! தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்பதாக சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த எந்திரனை, வசூலில் விஸ்வரூபம் மிஞ்சிவிட்டதாக பல செய்திகள் வந்துவிட்டன!
 |
உலகநாயகன் கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம்! |
வசூலில் எந்திரனை மிஞ்சிவிட்டதா விஸ்வரூபம்?? இது உண்மையா? இல்லை, கட்டுக்கதையா? இல்லை ஓரளவுக்கு உண்மையா? இல்லை அப்பட்டமான பொய்யா? என்பதைப் பார்ப்போம்! இது ரொம்ப இப்போ அவசியமாக்கும்? னு ஒரு சிலர் கேலியாகக் கேட்பதுண்டு! ஒரு சிலர் மனதுக்குள்ளே கேட்டுக்கொள்வதும் உண்டு.
நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருக்கேன். மறுபடியும் இன்னொரு முறை சொல்றேன்.. வலையுலகில் பலவிதமான பொய் செய்திகள் பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்தப் பொய்கள், விக்கிப்பீடியா போன்ற பல தளங்களில் பல விசமிகளால் பதிக்கப்படுகினறன. வருங்காலத்தில் இந்தப்பொய்கள் உண்மையாக மாற்றப்படுகிற/மாறுகிற அபாயம் உள்ளது. அதனால் சில உண்மைகளை நாம் நம் தளத்திலாவது பதித்து வைக்க வேண்டிய கட்டாய சூழல்!
உலகநாயகன் கமல்ஹாசன்!
விஸ்வரூபம் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நம்ம கமல்ஹாசனுக்கு எப்போவுமே தன்னம்பிக்கை மிகவும் அதிகம். தாந்தான்
தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே சிறந்த கலைஞன் என்று முழுமையாக
நம்புபவர் இவர்! மூன்று முறை தேசிய விருது வாங்கியவர் அல்லவா நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன்
அவர்கள்? நெனைப்பு இருக்கத்தான் செய்யும்! அது பாட்டுக்கு இருக்கட்டும்!
கமலஹாசனை
உலக நாயகன்னு தான் அவருடைய விசிறிகள் எல்லாரும் சொல்றாங்க! இந்த கணிணி மற்றும் இணையதள உலகில் அவருக்கு யாருக்குமே கெடைக்காத அளவுக்கு "இண்டெர்நேஷனல் ரெகக்னிஷன்" அதிகமாகிவிட்டதாக அவர் விசிறிகள் பலரும் நம்புவதால் இந்தப் பெயர் அர்த்தமானதாக கருதுகிறார்கள்.
"மேலும் இந்த உலகமகா கலைஞன் ஹாலிவுட் போயி பெரிய பெரிய சாதனைகள் சாதிக்காமல் ஏன் இப்படி தமிழ்நாட்டிலிருந்து தன்னை அழித்துக்கொள்கிறார்?" என்றெல்லாம் கமல் விசிறிக்கள் பலரும் கவலைப் பட்டு நொந்து நொந்து சாகிறாங்க, பாவம்! இப்படி எண்ணுவதற்கு தற்போதைய காரணம்,
பேர்ரி ஆஸ்பான் என்னும் ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர். இவர் கமலின் விஸ்வரூபத்தை திரும்பத் திரும்ப 4 தடவை பார்த்துப்புட்டு, கமலை புகழ்ந்து தள்ளியதாகவும், கமலை வைத்து தான் படம் தயாரிக்கப் போவதாகவும் பேசிவிட்டதாகவும், கமலே பரப்பிவிட்ட ஒரு உண்மை செய்திதான் முக்கியக்காரணம். இந்த செய்தியை கமல் பரப்பிவிட்டதுக்குக் காரணமே தான் தயாரித்த விஸ்வரூபத்தை உலகமெங்கும் பிரபலப்படுத்த என்கிறார்கள் ஒரு சிலர்.
ஹாசன் குடும்பம் என்றாலே ஒரு தனி ரகம்தான். நடிப்பிலும் சரி, வார்த்தை ஜாலங்களிலும் சரி, சாதனைகளிலும் சரி, தான் சாதித்தாக சொல்லப்படுவதிலும் சரி! சகோதரி அணுஹாசனை வேண்டுமானால் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்! சமீபத்தில் சுஹாஷினி ஹாசன் விஜய் டி வி லே எதிலோ சொன்னார், அவர் கணவர்
"மண்ணாப்போன கடல்" மணிரத்னத்திற்கு ஹாலிவுட்ல இருந்து பல "ஆஃபர்கள்" வந்ததாம். அதை எல்லாம் மணி தட்டிக் கழிச்சுட்டார்னு அடக்கமாக பெருமையாகவும் சொன்னார் இந்த ஹாசன். பாவம் இதை மணிரத்னம் ஒருபோதும் வெளியே சொன்னதில்லை! இதையும் இன்னும் ஒரு ஹாசன் தான் தன்னக்கடத்துடன் அம்பலப்படுத்தியது! என்னமாரி ஆஃபர்கள் அவை என்பது மிகப்பெரிய கேள்வி! என்னைக்கேட்டால் ஒருவழியா கமலும் மணியும் ஹாலிவுட்க்கு போய் தொலைஞ்சா அவங்களும் நல்லா இருப்பாங்க. நம்மளும் நிம்மதியா இருக்கலாம்! ஏன் இப்படி இங்கேயே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்குறாங்கனு தெரியலை.
கமல் விசிறிகள்!!!
எனக்கு ஒரு பெரிய சந்தேகம்..
கமலஹாசனுக்கு அவர் தீவீர விசிறிகள் அவருக்கு பெரிய பலமா இல்லை பலவீனமா? னு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.சினிமா விசிறிகளில் இவர்கள் ஒரு தனி வகை. அதென்ன?னு கேக்குறீங்களா? ஏதோ கமல்ஹாசன் என்கிற சினிமா நடிகனின் ரசிகரா இருப்பதே ஒரு பெருமை என்பதுபோல் இவர்கள் பிதற்றுவதைப் பார்த்து நம்மல மாரி ஒரு சிலர் சிரித்தாலும், உலக அனுபவம் இல்லாதவங்க, கொஞ்சம் படிப்பு ஞானமில்லாதவங்க எல்லாம் இவர்கள் பிதற்றல்களைக் கேட்டு என்னவோ ஏதோனு பயந்துவிடுவார்கள். அந்தளவுக்கு தரித்திரமாப் பேசுவார்கள் இந்த அதிமேதாவியின் விசிறிகள்!
மனித இயல்பு எப்படினா, ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.
விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை நிலவரம்!
சரி, இவ்வளவு பப்ளிசிட்டிக்கு அப்புறம், டி ட்டி எச் ல அல்மோஸ்ட் சாதனை புரிந்த, ஹாலிவுட் ஜாம்பவான் பேர்ரி ஆஸ்பானால் கண்டுகொள்ளப்பட்ட, உலகமகாக் கலைஞன், மறத்தமிழன் கமலஹாசனுடைய சமீபத்திய மெஹா பட்ஜெட் விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்
மை நிலவரத்தை கவனிப்போம்!
********************************
அமெரிக்கா & கனடா: விஸ்வரூபம் மற்றும் எந்திரன்
VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected $
59,953 on 32 screens, with the per screen average working out to $
1,874. Total: $ 9,98,802 [
Rs. 5.38 crores].
VISHWAROOPAM [Telugu]: In its third weekend, the film has collected $
16,047 on 15 screens, with the per screen average working out to $
1,070. Total: $ 1,90,441 [
Rs. 1.03 crores].
அமெரிக்க கண்டத்தில் விஸ்வரூபம் வசூல் எம்பூட்டுனு ரெண்டையும்
கூட்டினால், 6.41 கோடிகள்!
சரி, இதே நாடுகளில்
எந்திரன் வசூல் செய்தது எம்பூட்டுனு பார்ப்போம்!
account @taran_adarsh 18 Oct 10 Endhiran [Tamil+Telugu]
official figures:
US 20 cr (20 கோடிகள்), https://twitter.com/taran_adarsh/status/27720616820
அதாவது, அமெரிக்காவில்
எந்திரன், விஸ்வரூபத்தை விட, 3 மடங்குபோல் வசூல் செய்துள்ளது. இதுதான் அமெரிக்கா உண்மை நிலவரம்!
****************************************
சரி, அமெரிக்காவை விட்டுவிட்டு,
யு கேல எப்படினு பார்ப்போம்!
யு கே வில்: விஸ்வரூபம் மற்றும் எந்திரன்
VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected £
30,231 on 21 screens, with the per screen average working out to £
1,440. Total: £ 2,75,318 [
Rs. 2.33 crores].
விஸ்வரூபம் வசூல்: £ 2,75,318 (அதாவது 2.33 கோடிகள், 3 வார வசூல்)
எந்திரன் வசூல்: £ 625, 404 (தமிழ் ஹிந்தி)(அதாவது 5 கோடிக்கு மேலே, இரண்டுவார வசூல்)
17 |
11 |
Endhiran |
Ayngaran |
$172,555 |
-63.1% |
34 |
+4 |
$5,075 |
$785,837 |
2 | | |
யு கேவில் மட்டும் சுமார் 2 மடங்குக்கு அதிகமாக எந்திரன் வசூல் செய்துள்ளது!
எந்திரன் ஐரோப்பா முழுவதும் எம்பூட்டு வசூல் செய்ததுனு பார்த்தால்.
UK-Eur 8 cr, 8 கோடிகள் https://twitter.com/taran_adarsh/status/27720616820
*************************
மலேசியா சிங்கப்பூரில்: எந்திரன் வசூல்:
SE Asia [incl
Malaysia, Singapore] 21 cr, (21 கோடிகள்)
விஸ்வரூபம், இஸ்லாமியர்கள் பிரச்சினையால், மலேசியாவில் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. சிங்கப்பூரில் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. என்ன வசூல்னு இனிமேல் தெரியும்!
*****************************
மத்திய கிழக்கு (இஸ்லாமிய) நாடுகளில்: எந்திரன் வசூல்:
Gulf 7 cr, rest 5 cr.( 12 கோடிகள் வசூல் ஆகியுள்ளது)
மத்தியகிழக்கு நாடுகளில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகுமா என்னனு தெரியலை!
***********************************
வடநாட்டில் ஹிந்தி விஸ்வரூப் எப்படி?
* முதல் வார வசூல் எந்திரனும், விஸ்வரூபமும் சுமார் 11.5 கோடிகள் (நெட்)
* ரெண்டாவது வாரத்தில் என்ன ஆச்சுனா, விஸ்வரூபம் எந்திரனைவிட மோசமான அளவுதான் வசூல் செய்துள்ளது!
ஆக, ஹிந்தியிலும் விஸ்வரூப், ரோபாட் வசூலை முறியடிக்கவில்லை!
*************************
ஆந்திராவில் எப்படி?
*ரோபோ வசூலை விஸ்வரூபம் முறியடிக்கவில்லை என்பது உலகுக்கே தெரியும்!
*************************
கேரளா எப்படி?
கேரளாக்கு எல்லாரும் பறந்து போய் விஸ்வரூபம் பார்த்ததென்னவோ உண்மைதான். ஆனால், டி ட்டி எச் பிரச்சினையால், நல்ல தரமான தியேட்டர்களில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகவில்லை! அதனால் எந்திரன் வசூலை முறியடிப்பது என்பது நடக்கிற காரியம் இல்லை!
******************************
தமிழ் நாடு!
சென்னையில் முதல்வார கடைசி வசூல்னு பார்த்தால் விஸ்வரூபம் எந்திரன் வசூலை முறியடித்துவிட்டது என்பது உண்மைதான்..
விஸ்வரூபம் முதல் வார சென்னை வசூல்
Week : 1
Total collections in Chennai : Rs. 4,10,26,576
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 891
Average Theatre Occupancy (Weekend): 99%
Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101
எந்திரன் முதல் வார சென்னை வசூல்
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 894
Average Theatre Occupancy over this weekend: 99%
Collection over this
weekend in Chennai: Rs.
2,02,38,075
Verdict: Grand
Openingஆனால்.. எந்திரன் 4 வாரம் முடிந்த பிறகு வசூல்:
No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore
Verdict: Blockbuster
எந்திரனைப் போல் விஸ்வரூபமும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் 10 நாட்களாவது தாக்குப் பிடிச்சா, சாண்ஸ் இருக்கு..
இன்னும் ரெண்டு வாரத்தில் விஸ்வரூபம் எவ்ளோ அள்ளுதுனு பார்ப்போம்! :)