Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Wednesday, February 25, 2009

ஆஸ்கர், ஒலிம்பிக் அல்ல- கமல்!

ஏ ஆர் இரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசை அமைத்து, பாடியதற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியதை பாராட்டிய கமல், ஆஸ்கர் என்பது ஒலிம்பிக் போல அல்ல அமெரிக்கன் ஸ்டாண்டர்டை பொறுத்தது என்று சொல்லியுள்ளார்.

என்னைப்பொறுத்த வரையில் இது தேவை இல்லாத ஒரு கம்பாரிஷன். தேவையே இல்லாத ஒரு ஸ்டேட்மெண்ட். சும்மா அவரை வாழ்த்திவிட்டு அதோட நிறுத்தி இருக்கலாம். பாவம், ஆஸ்கர் என்றாலே இவர் ஏதாவது இப்படி சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள் எல்லோருமா க சேர்ந்து. அதனால்தான் இப்படி ஏதாவது சொல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.

ஒரு இந்திய நடிகர் ஆஸ்கர் (பெஸ்ட் ஆக்டர்) வாங்குவது சான்ஸே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு நல்ல ஆங்கிலப்படத்தில் நடித்தால், நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஹாலிவுட் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.

நடிகர் கமலஹாசனால், ஒரு பாலா, அமீர், மணிரத்னம் படங்களில் கூட நடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஒரு “பெரிய ஆள்” ஆகிவிட்டார். இவர் எப்படி ஆங்கில டைரக்டர் கீழ் நடிப்பார்? ஆஸ்கரை மறந்து சில நல்ல படங்கள் தமிழிலேயே தந்தால் போதும்.