ஏ ஆர் இரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசை அமைத்து, பாடியதற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியதை பாராட்டிய கமல், ஆஸ்கர் என்பது ஒலிம்பிக் போல அல்ல அமெரிக்கன் ஸ்டாண்டர்டை பொறுத்தது என்று சொல்லியுள்ளார்.
என்னைப்பொறுத்த வரையில் இது தேவை இல்லாத ஒரு கம்பாரிஷன். தேவையே இல்லாத ஒரு ஸ்டேட்மெண்ட். சும்மா அவரை வாழ்த்திவிட்டு அதோட நிறுத்தி இருக்கலாம். பாவம், ஆஸ்கர் என்றாலே இவர் ஏதாவது இப்படி சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள் எல்லோருமா க சேர்ந்து. அதனால்தான் இப்படி ஏதாவது சொல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
ஒரு இந்திய நடிகர் ஆஸ்கர் (பெஸ்ட் ஆக்டர்) வாங்குவது சான்ஸே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு நல்ல ஆங்கிலப்படத்தில் நடித்தால், நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஹாலிவுட் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.
நடிகர் கமலஹாசனால், ஒரு பாலா, அமீர், மணிரத்னம் படங்களில் கூட நடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஒரு “பெரிய ஆள்” ஆகிவிட்டார். இவர் எப்படி ஆங்கில டைரக்டர் கீழ் நடிப்பார்? ஆஸ்கரை மறந்து சில நல்ல படங்கள் தமிழிலேயே தந்தால் போதும்.
8 comments:
சரியாக சொன்னீர்கள், கமல் எப்போதும் ச்சீ சீ இந்த பழம் புளிக்கும் ரகம்!
வெறும் நடிகனாக இருந்திருந்தால் நல்ல புகழ் அடைந்திருப்பார்!
U are absolutely right... Kamal should do only acting.
இந்த சமயத்துல இந்த ஸ்டேட்மேன்ட் தேவை இல்ல தான். அதே தான் நான் கூட உங்களுக்கு சொன்னேன் ! ஜெயகாந்தன் அவார்ட் வாங்கினபோது !
நன்றி, சிவாஜி த பாஸ், கோபிநாத் & மணிகண்டன் :-)
வருண் அம்மா திறமாக எழுதுறீங்க --- மத்தவங்களுக்கும் கருத்து
சுதந்திரத்தை கொஞ்சமா இளக்கி கொடுங்களேன் --- கமல் சார்
சொன்னது ஏன் சுடணும் ?
ஒலிம்பிக்ஸ் ல நூத்தி சொச்ச நாடுகள் போட்டி போடுகின்றன ---
ஹாலிவுட் அவார்ட் ஆங்கில சினிமால இங்கிலாந்தும் சேருது ---
அவ்வளவுதானே ?
இதை நாமதானே மிகை படுத்துகிறோம் ?
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லறேன் --- கமல் சொன்னது யதார்த்தம் --- இன்னொரு முஸ்லிம் தளம் சொல்லுது '' ரஹ்மான் எமது சமுதாயத்தை
இழிவு படுத்திவிட்டார்'' என்று !
கமல் தேவலையா ?
****ஒலிம்பிக்ஸ் ல நூத்தி சொச்ச நாடுகள் போட்டி போடுகின்றன ---
ஹாலிவுட் அவார்ட் ஆங்கில சினிமால இங்கிலாந்தும் சேருது ---
அவ்வளவுதானே ?****
உண்மைதான், நோபல் பரிசு வாங்கக்கூட உங்கள் உழைப்பை பொதுவாக ஆங்கிலத்தில்தான் வெளிப்படுத்தனும்.
நம்ம தமிழ்ப்படங்கள்ல இப்போ பாதிக்கு மேலே அங்கிலம்தானே இருக்கு?
ஏன் முழுசா ஆங்கிலத்திலேயும் ஒரு பிரதி விட வேண்டியதுதான் :-)
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லறேன் --- கமல் சொன்னது யதார்த்தம் --- இன்னொரு முஸ்லிம் தளம் சொல்லுது '' ரஹ்மான் எமது சமுதாயத்தை
இழிவு படுத்திவிட்டார்'' என்று !
கமல் தேவலையா ?
வருனுக்கு கமலை திட்டலைனா தூஉக்கம் வராது போல
பாவம்.....
ரசினியை பாரட்டிய பதிவும் , கமலை கேலி செய்யும் பதுவுமே இங்கு அதிகம் ஆக இனியும் வேலையத்து இங்கே வந்து படிப்பது வீண்
வாங்க வக்கில்லை அவருக்கு... சோ அந்த பேச்சை கண்டு கொள்ள தேவை இல்லை நண்பரே...
Post a Comment