Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Saturday, January 21, 2017

பீட்டா வுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டால் யாருக்கு அதிக இழப்பு?மாடு பாவமா? இல்லை மனுஷன் பாவமா? என்கிற ஒரு விஷயம் சரியாக கவனிக்கப் படவில்லை.

ஜல்லிக்கட்டால் மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு தடை செய்யணும் என்பது PETA வின் பக்க வாதம்.

இவனுக என்ன சொல்றது நாம் என்ன கேக்கிறது? மாட்டை அப்படியெல்லாம் நாங்க சித்ரவதை செய்யவில்லை. மாட்டை மதிக்கிறோம். என்பதெல்லாம் நம் மக்களின் வாதம். இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம்தான். ஏனென்றால் ஸ்பெய்ன் நாட்டில் போல் நாம் மிருகத்தனமாக நடந்துக்கவில்லை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Let us look at the facts from Tamil wikipedia!

ஜல்லிகட்டால் மனிதனக்கு நடக்கும் தீங்குகள்.

ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்

ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன[26].

சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை.

ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

 சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.
  • தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
  • கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
  • தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
  • நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
  • அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
  • பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
  • கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.

கமலாஹாசனோ இல்லை ரஜினிகாந்தோ அல்லது விஜய் யோ அல்லது  சூரியாவோ  இதில் கலந்து கொண்டு ஆண்மை இழப்பதில்லை. அல்லது படு காயமடைவது கெடையாது . முரட்டுக்காளை, விருமாண்டி போன்ற படங்களிலும் டூப் போட்டுத்தான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

நம் சமூகத்தில் ஒருவன் இதுபோல் ஆண்மையிழந்து வாழ்ந்தால் அவன் வாழ்க்கை  நரக வாழக்கைதான்னு நான் உங்களுக்கு சொல்லணுமா?

ஏதோ ஒரு வேகத்தில் மாட்டை அடக்கப் போய்விட்ட்டு இதுபோல் ஒரு
"பரிசை" பெற்று வந்தால் அவர்கள் பெற்றோர்கள் கண்ணீரை யாரு துடைப்பது?

மேதாவி கமலஹாசானா? இல்லைனா எவன் செத்தால் எனக்கென்ன? நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர்ரேன்னு வந்து நிற்கும் ரசினிகாந்தா?

அடுத்தவனை நீ இதுபோல் ஊக்குவிப்பது எப்போது சரியென்றால், நீயும் எதைச் செய்ய தூண்டி விடுகிறாயோ, அதைச் செய்ய தயாராக இருக்கும்போது மட்டும்தான்.

தமிழ் கலாச்சாரம்,  உன் பொண்டாட்டி தாலினு  எதையாவது உளறி எவன் பெத்த பிள்ளையோ இது போல் ஆண்மை இழந்து தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்??

My question is,

Is this worth losing your "potency" and become "impotent" at this age,  just because idiots like actors Kamal Haasan, Rajinikanth, Surya and Vijay  encourage you to do some worthless "fight" with poor bulls?? 

I DONT THINK SO!  Remember! They wont dare to do what they preach you to do-in the name of protecting your culture!

Mr Kamal Haasan!

You like jallikkattu? Go, participate in Alanganalloor every year! But Dont misdirect uneducated people in the name of your " tamil culture".

We know how selfish you are and how careful you would be protecting yourself when it comes to you and your life! Let others live too!

Wednesday, January 11, 2017

கல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்

ஆமா நம்ம உலகநாயகர் எத்தனை மாட்டை  இதுவரை அடக்கி இருக்காராம்??. சும்மா சபாஷ் நாயுடு வேலையைப் பார்க்காமல்.. ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்னு இவரும் இவரோடைய தொண்டர்களும் அட அட அட.

ஏன்னா இது தமிழர் காலாச்சாரமாம். தமிழர் அடையாளமாம்! ஆமா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தமிழர் கலாச்சாரமா என்ன? அதெல்லாம் தமிழர் கலாச்சாரப்படி சரியா செய்ய மாட்டீங்க?  உடனே வைப்பாட்டி வச்சிக்கிறதுகூட தமிழர் கலாச்சாரம்னு சொல்லிடாதீங்கப்பா.

எனக்கு என்ன புரியலைனா அந்த மாட்டுக்கு என்னப்பா தெரியும்? அது என்ன உங்கிட்ட வந்து என்னை நீ அடக்க முடியாதுனு சொல்லுச்சா? இவனுகளா, சும்மா இருக்க மாட்டைக் கூட்டி வந்து நான் வீரத்தைக் காட்டுறேன் பாருனு வீரத்தைக் காட்டுறாங்களாம். 

 வீரம் பொங்கி வந்தா ஆர்மில போயிச் சேரு.

உடனே இவரு பிரியாணிக்கு தடை விதிக்கணும்னு ஒரு விதண்டாவாதம்.

நீர் ஒரு பெரிய ராசனலிஸ்ட்னு சொல்லிக்கிட்டு அலைகிறீர். பாவம் அந்த மாட்டுட்டப் போயி வீரத்தைக் காட்டுறதை எந்த மூளையுள்ள பகுத்தறிவு வாதியும் சரினு சொல்லமாட்டான். நீர் என்னத்தை பகுத்தறிஞ்சு..

தமிழர் கலாச்சாரம்னா என்ன? மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்!

உயிரினத்தைக் கொல்வது தப்பா? ஆமா தப்புத்தான்.  ஆனால் நீர்தான் தப்பில்லை என்பதுபோல் அசைவம் சாப்பிட ஆரம்பிச்சுட்டீர்? ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும்போதுதான் உம் அறிவுக்கு அதெல்லாம்கூட தப்புதான்னு எட்டுதாக்கும்.

It is not a bad idea preaching people to become vegetarian either. But your intention is just for the sake of argument!

Yeah, I am against jallikkattu! It is idiotic to go show your "braveness" to an animal who hardly knows what the hell you are doing to it!