Wednesday, January 11, 2017

கல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்

ஆமா நம்ம உலகநாயகர் எத்தனை மாட்டை  இதுவரை அடக்கி இருக்காராம்??. சும்மா சபாஷ் நாயுடு வேலையைப் பார்க்காமல்.. ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்னு இவரும் இவரோடைய தொண்டர்களும் அட அட அட.

ஏன்னா இது தமிழர் காலாச்சாரமாம். தமிழர் அடையாளமாம்! ஆமா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தமிழர் கலாச்சாரமா என்ன? அதெல்லாம் தமிழர் கலாச்சாரப்படி சரியா செய்ய மாட்டீங்க?  உடனே வைப்பாட்டி வச்சிக்கிறதுகூட தமிழர் கலாச்சாரம்னு சொல்லிடாதீங்கப்பா.

எனக்கு என்ன புரியலைனா அந்த மாட்டுக்கு என்னப்பா தெரியும்? அது என்ன உங்கிட்ட வந்து என்னை நீ அடக்க முடியாதுனு சொல்லுச்சா? இவனுகளா, சும்மா இருக்க மாட்டைக் கூட்டி வந்து நான் வீரத்தைக் காட்டுறேன் பாருனு வீரத்தைக் காட்டுறாங்களாம். 

 வீரம் பொங்கி வந்தா ஆர்மில போயிச் சேரு.

உடனே இவரு பிரியாணிக்கு தடை விதிக்கணும்னு ஒரு விதண்டாவாதம்.

நீர் ஒரு பெரிய ராசனலிஸ்ட்னு சொல்லிக்கிட்டு அலைகிறீர். பாவம் அந்த மாட்டுட்டப் போயி வீரத்தைக் காட்டுறதை எந்த மூளையுள்ள பகுத்தறிவு வாதியும் சரினு சொல்லமாட்டான். நீர் என்னத்தை பகுத்தறிஞ்சு..

தமிழர் கலாச்சாரம்னா என்ன? மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்!

உயிரினத்தைக் கொல்வது தப்பா? ஆமா தப்புத்தான்.  ஆனால் நீர்தான் தப்பில்லை என்பதுபோல் அசைவம் சாப்பிட ஆரம்பிச்சுட்டீர்? ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும்போதுதான் உம் அறிவுக்கு அதெல்லாம்கூட தப்புதான்னு எட்டுதாக்கும்.

It is not a bad idea preaching people to become vegetarian either. But your intention is just for the sake of argument!

Yeah, I am against jallikkattu! It is idiotic to go show your "braveness" to an animal who hardly knows what the hell you are doing to it!


14 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

"மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்!" எனச் சிந்திக்வைக்கிறியளே!
நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜல்லிக்கட்டு, எதிர்காலத்தில் என்னவாகுமோ தெரியவில்லை.

Alien said...

Yes. I agree.

Jallikattu is an entertainment. That's all. Not a Mandatory thing. When so mandatory things are there for protesting, some of our people are unnecessarily protesting for this. And some Tier-3 actors are also using this opportunity to get limelight. When more than 100 farmers have died, these stupids don't open their mouth and help them.

I think except you and me, almost all support this useless thing.

G.M Balasubramaniam said...

ஜல்லிக் கட்டு விளையாட்டுக்கு நானும் எதிரிதான்

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

"மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்!" எனச் சிந்திக்வைக்கிறியளே!
நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜல்லிக்கட்டு, எதிர்காலத்தில் என்னவாகுமோ தெரியவில்லை.***

எனக்கென்னவோ இது வீரவிளையாட்டு மாதிரி தெரியலைங்க. நான் ஓட்டப்பந்தயம், கால்ப்பந்து, கைப்பந்து போன்றவைகளில் மிகவும் பிந்தாங்கி இருக்கிறோம். அதுபோல் போட்டிகள் நடத்தலாம். சும்மா மாட்டை கூட்டிவந்து அதோட வம்பு பண்ணிக்கிட்டு..

பாகுத்தறிய தெரிந்த ஒர் ஆள் மாட்டுட்ட வீரம் காட்டுவதுக்கு வக்காலத்து வாங்குவது சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது!

வருண் said...

***Alien said...

Yes. I agree.

Jallikattu is an entertainment. That's all. Not a Mandatory thing. When so mandatory things are there for protesting, some of our people are unnecessarily protesting for this. And some Tier-3 actors are also using this opportunity to get limelight. When more than 100 farmers have died, these stupids don't open their mouth and help them.

I think except you and me, almost all support this useless thing.***

I think lots of people are against this but they dont have the courage to speak out their opinion in Public. They will secretly appreciate if someone protests with valid reasons.

Kamal Haasan support to this is the most ridiculous thing! I dont know what kind of rationalist he is!

வருண் said...

***G.M Balasubramaniam said...

ஜல்லிக் கட்டு விளையாட்டுக்கு நானும் எதிரிதான் ***

நல்லது ஜி எம் பி சார்!

Packirisamy N said...

ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களை அதில் கண்டிப்பாக கலந்துகொள்ள செய்தால் நன்றாக இருக்கும். கலந்துகொண்டு காளையை அடக்க சொல்லவேண்டும்.எவனோ சாவுறான் என்ற எண்ணம்தான். கௌரவக் கொலையை ஒழிக்க ஏன் இவ்வளவு பேர் வீதிக்கு வரவில்லை?

நிஷா said...

நமக்கு அத்தியாவசியமாக எது தேவையோ அதைக்கேட்க இத்தனை ஒற்றுமையாக எவரும் ஒன்றுபடத்தயாராக இல்லை. பதிவுகளை இட்டு சுட்டிக்காட்டினால் சமுகத்தில் துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுவோம். நம் மக்களுக்கு எது அவசியமோ அதன் அவசரம் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று தான் வருமோ?

நிஷா said...

எளிதில் உணர்ச்சிவசப்படும் எமது மக்களின் முன்
தினம் செத்து மடியும் விவசாயிகளின் மரணம் மற்றும்
பணப்பிரச்சனையை முன் வைத்து போராட்டம் ஊர்வலம் என ஆரம்பிக்க கூடாது என்பதற்கான திசை திருப்பும் கருவியாக ஜல்லிக்கட்டை கையாண்டிருப்பதாகவும் தோன்றுகின்றது. கடந்த வருட மழைவெள்ளத்தில் சிலிர்த்தெழுந்த உணர்வு பீப் பாடலால் அமுங்கி அடங்கி போனது போல்.... எப்போதும் அத்தியாவசியப்பிரச்சனையை அடக்கி ஆள அவசியமானது போல் இன்னொன்று முளைத்த்தெழுப்பப்படுகின்றது. இதை புரியாத எம்மக்களும் அதை தம் வெற்றியாக்கி திருப்திப்பட்டுக்கொள்கின்றார்கள். இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் விவசாயம், நீர் மேலான்மை ,இயற்கைப்பாதுகாப்பு என முன் நின்று போராடும் ஆர்வலர்களும் தம் மன உணர்வுகள் திசை திருப்பப்படுதல் புரியாமலே இழுபட்டு செல்வது தான் கவலைக்குரியதாக இருக்கின்றது.

பரிவை சே.குமார் said...

சல்லிக்கட்டு விஷயத்தில் நமக்குள் ஒத்துப் போகாதுன்னு போன வருடமே சொல்லிட்டிங்க... அதனால எஸ்கேப்...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

வருண் said...

***Packirisamy N said...

ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களை அதில் கண்டிப்பாக கலந்துகொள்ள செய்தால் நன்றாக இருக்கும். கலந்துகொண்டு காளையை அடக்க சொல்லவேண்டும்.எவனோ சாவுறான் என்ற எண்ணம்தான். கௌரவக் கொலையை ஒழிக்க ஏன் இவ்வளவு பேர் வீதிக்கு வரவில்லை?***

வாங்க திரு பக்கிரிசாமி. உலகம் எத்தனையோ மாறிக்கொண்டு போகுது. தமிழர் கலாச்சாரத்தைப் பத்தி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் வருடா வருடம் செய்து கொண்டு வந்த ஒண்ணை நிறுத்தும்போது இதுபோல் எதையோ இழந்ததுபோல் தோன்றும். முக்கீயமாக அது நடக்கும் ஊர்களில் உள்ள மக்களுக்கு.

ஒயிலாட்டம், முளைக்கொட்டு, பங்குனி உத்திரம் போன்ற்வைகளை யாரும் தடை செய்யவில்ல்லை. ஏற் தழுவலால், பலர் காயப்படுகிறார்கள், ஒரு சிலர் ஆணமையை இழப்பதும் உண்டு என்கிற காரணத்தால் அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

கமலஹாசன், சிம்பு போன்ற ஆட்கள் வாய்யை மூடிக்கொண்டு இருக்கலாம். இவர்கள் இதுபோல் விளையாட்டை வேடிக்கை பார்த்து இருப்பாஅர்களே ஒழிய கலந்து கொண்டு அப்பாவி மாட்டிடம் உதை வாங்கி இருக்க மாட்டார்கள்.

ஊருக்கு உபதேசம் என்பதுபோல் எதையாவது தூண்டி விட வேண்டியது. ஒரு ட்விட்டர் ஹாண்டிலை வச்சுக்கிட்டு...

வருண் said...

**நிஷா said...

நமக்கு அத்தியாவசியமாக எது தேவையோ அதைக்கேட்க இத்தனை ஒற்றுமையாக எவரும் ஒன்றுபடத்தயாராக இல்லை. பதிவுகளை இட்டு சுட்டிக்காட்டினால் சமுகத்தில் துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுவோம். நம் மக்களுக்கு எது அவசியமோ அதன் அவசரம் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று தான் வருமோ?***

அதெல்லாம் வராதுங்க நிஷா. நம்ம சொல்ல வேண்டிய கருத்தை சொல்லிட்டுப் போயிகிட்டே இருக்கணும். அவ்ளோதான் நம்மால் முடிஞ்சது

வருண் said...

***பரிவை சே.குமார் said...

சல்லிக்கட்டு விஷயத்தில் நமக்குள் ஒத்துப் போகாதுன்னு போன வருடமே சொல்லிட்டிங்க... அதனால எஸ்கேப்...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.***

வாங்க குமார். நேத்துத்தான் இதைப் பத்தி கருத்துப் பரிமாறியதுபோல் இருக்கு! அதுக்குள்ள ஒரு வருடம் கடந்து விட்டது போலும்! :)

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள், குமார். :)

Ponniyinselvan/karthikeyan said...

அந்த காலத்தில் ட்ரெக்டர் எல்லாம் இல்லை.காளைகள் தான் உழவு வேலைகள் செய்தன.
அந்த காளைகளை வேலை செய்ய பழக்க கொடுக்கப் பட்ட பயிற்சிதான் (just to train the bulls the farmers used these techniques. ).மாடுகள் கஷ்டப்பட்டதாக தெரியவில்லை.பொங்கல் அன்று எல்லோரும் அவைகளை சிறப்பாக அலங்காரம் செய்து அவற்றுடன் விளையாடுவோம்.அந்த அலங்காரத்தை ஊருக்கு காட்ட ஊர்வலம் வருவோம்.மாடுகளும் சந்தோஷமாக வரும்.அதுதான் ஏறு தழுவுதல் just to control them
karthik amma
KALAKARTHIK